பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/30/2012

மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த உத்தரவு

மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களின், தமிழ், ஆங்கில கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக கட்டுரையின் தலைப்பு மற்றும் அதற்கான முழு தகவல்களையும், ஆசிரியர்களே கொடுத்து விடுவார்கள். இதனால் மாணவர்களின் சிந்திக்கும், எழுதும் திறன் வளர்வதில்லை.
இனிமேல், கட்டுரையின் தலைப்பை மட்டுமே ஆசிரியர்கள் வழங்குவார்கள், அதற்கான அனைத்து தகவல்களையும் அவர்களே தொகுத்து, சொந்த நடையில் எழுத வேண்டும். கட்டுரையை மதிப்பீடு செய்து, அதற்கு மதிபெண் வழங்கப்படும்.
கட்டுரையின் நிறை,குறைகளை கூறி மாணவர்களின் எழுதும் திறனை மேம்படுத்த வேண்டும். சிறந்த கட்டுரையை வகுப்பறை மற்றும் கூட்டு பிரார்த்தனையின் போது மாணவர்களை வாசிக்க வைத்து உற்சாகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ. தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு



தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வின் முடிவுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார்.
   தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆயிரத்து 870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று போட்டித் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் பங்கேற்க 10ம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், பொறியியல் முடித்தவர்கள் அதிகளவில் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். 

   இவர்களுக்கு இன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை எழுத்து தேர்வு நடந்தது. 3483 தேர்வு மையங்களில் பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் 9 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

   இந்த தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்கள் வீடியோ கேமரா மற்றும் வெப்கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.

   இதுதவிர பறக்கும் படையினரும் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள், தாசில்தார்கள் இதில் இடம் பெற்று இருந்தனர்.

   வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. நேரடியாக வேலை கிடைத்து விடும். கடந்த ஆகஸ்டு மாதம் 12ம் தேதி ஆறரை லட்சம் பேர் தேர்வு எழுதிய குரூப்- 2 தேர்வின் போது விடைத்தாள் வெளியானதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதுபோன்ற சம்பவம் வி.ஏ.ஓ. தேர்வில் நடந்து விடக்கூடாது என்பதற்காக கேள்வித்தாள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு இருந்தது.

   இன்று நடந்த தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ் கூறியதாவது: வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு விடைகள் இன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வர்களின் விடைத்தாள் நகல்கள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியாகும். குரூப்- 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இனி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.

டி.இ.டி. மறுதேர்வு: 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்



டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.

பாரதிதாசன் பல்கலை.,யில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்

இளநிலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்களும், ஒரே துறையில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.திருச்சி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வியில் பி.எட். பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
 

விண்ணப்பங்களை www.bdu.ac.in எனும் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை அக்டோபர் 7ம் தேதிக்குள் கிடைக்குமாறு, The Director, Centre For Distance Education, Bharathidasan University, Palkalai perur Campus, Trichy-620024 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.bdu.ac.in எனும் இணையதளம் அல்லது 0431- 2407027, 0431- 2407054, 0431- 2407028, 0431- 2407072 எனும் தொலைபேசி எண்களையும் அணுகலாம்.

9/22/2012

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாததால் நடவடிக்கை

சென்னை, செப்.22-
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் இத்தேர்வை எழுதினர்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து மறுதேர்வு நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்தது.
அக்டோபர் 3-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத காலஅவகாசத்தை 3 மணி நேரமாக நீட்டிப்பு செய்தது. தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் இந்த தேர்வை தேர்வு கட்டணம் செலுத்தாமல் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமின்றி புதிதாக விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை ஏற்று தமிழக அரசு சார்பில் தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தேர்வை அக்டோபர் 3-ந்தேதிக்கு பதிலாக அக்டோபர் 14-ந்தேதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித்சவுத்ரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐகோர்ட்டு அறிவுரையின்படி புதிதாக தேர்வு எழுதுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். போட்டி பலமாக இருந்தால் தரமான ஆசிரியர்களை தேர்வு செய்யலாம், அந்த அடிப்படையில் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பதாரர்களுக்கு 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி பெற வேண்டும். விண்ணப்பிக்க 28-ந்தேதி கடைசிநாள். தேர்வு கட்டணம் எஸ்.சி.எஸ்.டி.பிரிவனருக்கு ரூ.250-ம், இதர பிரிவினருக்கு ரூ.500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்படும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்படும். 
 ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாததால் நடவடிக்கை
ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 2448 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதற்கு 37 பேர் வரவில்லை. எஞ்சிய 2411 பேரில் 202 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சிகளை முடிக்கவில்லை. மேலும் பலர் 2 பட்டங்களை பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 2209 பேரை பணியில் அமர்த்துவது குறித்து ஐகோர்ட்டு அறிவுரையின்படி கமிட்டி ஒன்று அமைக்கப்படுகிறது. பள்ளி கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில் பள்ளி கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக்கல்வி இயக்குனர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த வாரம் கூடுகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2209 ஆசிரியர்களை பணியில் எவ்வாறு நியமிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
 Logo

இரட்டைப்பட்டம் - நீதி மன்றத்தில் மேல் முறையீடு

இரட்டைப்பட்டம் பற்றிய தீர்ப்பு முறையாக நீதிமன்றத்தின்  மூலமாக 21.9.12 அன்று மாலை கிடைக்கப் பெற்றதாகவும், மேல் முறையீடு 24.9.12 அல்லது 25.9.12 அன்று செய்ய இருப்பதாகவும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.

 

புதிதாக பி.எட். படித்தவர்களும் டி.இ.டி மறுதேர்வு எழுத அனுமதி

சென்னை: "தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் மறுதேர்வில்(டி.இ.டி.,), புதிதாக பி.எட்., படித்தவர்களும் தேர்வு எழுதலாம் என்று, அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளையைச் சேர்ந்த யாமினி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகியோர், தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
யாமினி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. கடந்த ஜூலை, 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில், 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி மறுபடியும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், கடந்த ஆகஸ்ட், 26ம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.
கடந்த ஜூலை மாதத்துக்கு பின், என்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பி.எட்., படித்து காத்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு இந்தத் தேர்வை எழுத தகுதி உண்டு. என்னைப் போல் புதிதாக பி.எட்., படித்தவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன் ஆஜராகி, சில வாதங்களை முன் வைத்தார்.இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்தது. ஜூலைக்குப் பின் பி.எட்., முடித்தவர்களையும் இத்தேர்வில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வை, அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். மனுதாரர் விஜயராஜின் கோரிக்கை தொடர்பாக, அமைச்சர் தலைமையில், 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி, பரிந்துரைகளை குழு அளிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். இவ்வாறு அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இப்பிரச்னையில் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. கடந்த தேர்வில் விண்ணப்பிக்காதவர்களும் இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் "ஹால் டிக்கெட்&'டை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VAO Hall Ticket

9/21/2012

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7% உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7% உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம், திடீரென அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவே, இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

9/20/2012

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியருக்கு, அடிப்படை சம்பளத்தில், 65 சதவீதம் அகவிலைப்படியாக தற் போது வழங்கப்படுகிறது. இதை 72 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பபட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப் புதல் அளிக்கும் என, தெரிகிறது. இந்த உயர்வு, கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து, அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர் பயன்பெறுவர். கடந்த மார்ச் மாதம், அகவிலைப்படி, 58 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக, மத்திய அரசு அதிகரித்தது.

கட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 27ம் தேதி, வட்டார வள மைய அளவில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 28ம் தேதி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 29ம் தேதி நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் படி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
 
 இப்பயிற்சியில் ஆசிரியர்கள் மாநிலத்தில் எங்குவேண்டுமானாலும் கலந்து பயிற்சி பெற அனுமதி உண்டு

TNPTF NEWS



  1. 20.09.2012 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக பள்ளிகள் செயல்படுதுள் , காலாண்டு தேர்வுகள் நடத்துதல் மற்றும் அன்று வருகை புரிந்த / வருகை புரியாத மற்றும் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
  2. அரசுக் கடித எண். 32194 / இ1 / 2012-1, நாள்.17.09.2012 பதிவிறக்கம் செய்தது...இரத்து
  3. துரோகத்திற்கு பாடம் கற்பிக்கும் நாள்
  4. பள்ளிக்கல்வி- காலாண்டுத்தேர்வுகள்-20.09.2012 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் - தேர்வுத் தேதி மாற்றும் செய்ய அனுமதி வேண்டுதல் குறித்து
  5. செப்டம்பர் 20- ஆர்ப்பாட்டம்

9/18/2012

மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவு


டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, உடனே பணி வழங்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குரூப்-4 தேர்வு, கடந்தாண்டு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களை, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளில் பணியமர்த்தாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மறுத்தனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,யிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தமிழக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலர் குற்றாலிங்கம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடந்த, 12ம் தேதி, கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதி 22ன் படி, பணியாளர் தேர்வாணையம் மூலம், தேர்வு செய்யப்பட்ட பார்வையற்றவர்களை பணியமர்த்த மறுப்பது, அரசு விதிகளுக்கு எதிரானது. எனவே, உடனடியாக அவர்களை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

20-09-2012 அன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 015224/கே2/2012, நாள்: 18-09-2012ன் படி 20-09-2012 வியாழன் அன்று அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவங்கை ஆர்ப்பாட்டம்


பள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.

பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் இருவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்த கண்ணப்பன், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். பணியாளர் தொகுதி இணை இயக்குனராக இருந்த ராஜ ராஜேஸ்வரி, இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இருவரும், புதிய பொறுப்புகளை ஏற்றனர்.

CEO மாறுதல்

9/16/2012

பி.எல். படிப்பு: 20ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
   இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் டி.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் மூண்றாண்டு பி.எல். படிப்பில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. 

   இதில் சேருவதற்கு 6,110 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான கட் ஆப் மார்க் வெளியிடப்பட்டு இருக்கிறது. சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும், பல்கலைக்கழக தகவல் பலகையிலும் கட் ஆப் மார்க் பட்டியலை பார்க்கலாம். அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு - 71.033
பிற்படுத்தப்பட்டோர் - 64.090
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) - 63.217
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் - 63.478
ஆதி திராவிடர் - 56.807
ஆதி திராவிடர் (அருந்ததியர்) - 62.474
பழங்குடியினர் - 56.807

   சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வு, சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

  தகுதியுள்ள மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் கட் ஆப் மார்க்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட நாளில் கவுன்சிலிங்கிற்கு நேரடியாக மாணவர்கள் வந்துவிடலாம். இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் ரேங்க் பட்டியலை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.

  கலந்தாய்வின் போது காலி இடங்கள் ஏற்பட்டால் அவை காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களால் நிரப்பப்படும். இதற்கான கவுன்சிலிங் 22, 24, 25ம் தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ: இந்த ஆண்டு 60பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ்

சமச்சீர் கல்விக்குப் பிறகு ஏராளமான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் சி.பி.எஸ்.இ.யுடன் இணைப்புப் பெற 60 பள்ளிகள் தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுள்ளன.
சென்னை மண்டலத்தில் உள்ள 2,650 பள்ளிகளில் தமிழகத்தில் மட்டும் 327 பள்ளிகள் உள்ளன.

ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன், ஓரியண்டல் ஆகிய பாடத்திட்டங்களுக்குப் பதிலாக அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வியின் கீழ் பொதுப்பாடத்திட்டம் கடந்த ஆண்டு (2011-12) அறிமுகப்படுத்தப்பட்டது.

சமச்சீர் பாடத்திட்டத்தால் தங்களது கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக தனியார் பள்ளிகள் வழக்குகளைத் தொடர்ந்தன. ஆனால், அப்போதிருந்த பாடத்திட்டங்களைவிட, பொதுப்பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகக் கூறி அதையே பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. பள்ளிக் கட்டண முறைப்படுத்தும் சட்டம், சமச்சீர் பாடத்திட்டம் போன்ற காரணங்களால் தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பிரிவுக்கு மாறுவதில் ஆர்வமாக உள்ளன.

சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக தமிழகத்தில் 276 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இருந்தன. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 51 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. இணைப்புப் பெற்றுள்ளன.

வழக்கமாக ஆண்டுக்கு 10 பள்ளிகள் வரை புதிதாக சி.பி.எஸ்.இ. இணைப்பு வழங்கப்படும். ஆனால், ஒரே ஆண்டில் 51 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. இணைப்புப் பெற்றுள்ளது மிகப்பெரிய எண்ணிக்கைதான். தமிழக பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. ஆர்வம் அதிகரித்துள்ளதையே இது காட்டுவதாக சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இப்போது 327 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன. அடுத்த ஜனவரிக்குள் இந்த எண்ணிக்கை 400-ஐ நெருங்கும் வாய்ப்புள்ளது. இரண்டு ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான பள்ளிகள் சி.பி.எஸ்.இ.க்கு மாறுவது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ள 60 பள்ளிகள் தில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகத்தில் இணைப்புக் கோரி விண்ணப்பித்துள்ளன. தடையில்லாச் சான்றிதழ்கள் பெறாமலும் ஏராளமான பள்ளிகள் சி.பி.எஸ்.இ. இணைப்புக் கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 மாதங்களில் இணைப்பு கிடைக்கும்: சி.பி.எஸ்.இ. இணைப்புப் பெற விண்ணப்பித்துள்ள பள்ளிகளுக்கு ஆவணங்களைப் பரிசீலித்தவுடன் நேரடியாக ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும். இந்த நடைமுறைகள் முடிந்த பிறகு 2 மாதங்களில் சி.பி.எஸ்.இ. இணைப்பு கிடைக்கும் என்று சி.பி.எஸ்.இ. அமைப்பின் சென்னை மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன் ராவ் கூறினார்.

மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ், நில ஆவணங்கள், கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகள், உறுதித் தன்மை மற்றும் தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களோடு தில்லியிலுள்ள சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகத்தில் நேரடியாகவோ, ஆன்-லைன் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த ஓரிரு மாதங்களில் இந்தப் பள்ளிகளுக்கு ஆய்வுக் குழுவை சி.பி.எஸ்.இ. அமைப்பு அனுப்பும். அவர்கள் பள்ளியில் உள்ள விளையாட்டு வசதிகள், கல்வித் தரம், பள்ளி மேலாண்மைக் குழு, ஆசிரியர்களின் பணிபுரியும் சூழல், நிதி நிலைமை ஆகியவற்றை ஆராய்ந்து இந்தப் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. இணைப்பு வழங்குவது தொடர்பாக முடிவு செய்வார்கள் என்று சுதர்சன் ராவ் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான இணைப்பு படிப்படியாக வழங்கப்படுகிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் 6 முதல் 8 வகுப்புகளுக்கு இணைப்புப் பெற ஓராண்டுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், 9, 10 வகுப்புகளுக்கும் இணைப்புப் பெற பள்ளி மாணவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே விண்ணப்பிக்க வேண்டும். மொத்தமாக 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை இணைப்பு வழங்கும் நடைமுறையும் அமலில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கான(STUDENTS SMART CARD FORM) ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம்

9/15/2012

15.9.12 CRC-அலுவலர்கள் பார்வையிட உத்தரவு

முதன் முறையாக "ஆன்லைனில்' ஆசிரியர்கள் நியமன" கவுன்சிலிங்'

முதன்முறையாக "ஆன் லைன்' மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை நடக்கிறது.
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை காலியிடங்களில் நியமிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடவாரியாக முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் கண்டறியப்பட்டு, பட்டியல் பெறப்பட்டுள்ளது. 
இவர்களுக்கான கவுன்சிலிங் சென்னையில் நடத்துவதற்கு பதில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் "ஆன்லைனில்' நடத்த, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தகவல் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வந்துள்ளது.

சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், "" நியமன கவுன்சிலிங் சென்னையில் நடத்துவது வழக்கம். பெண்கள் சென்னைக்கு சென்று, வருவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, முதன் முறையாக ஆன்லைன் கவுன்சிலிங் நாளை (செப்.,15) அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. 
பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஆன்லைனில் அனுப்பும் காலியிடங்கள், கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கப்படும். இதை பார்த்து, பிடித்த இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம். உடனே உத்தரவு வழங்கப்படும். இதற்கான தகவல் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார். 

பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணை


பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன் விபரம்:
அக்., 4 தமிழ்- முதல் தாள்
அக்., 5 தமிழ்- 2ம் தாள்
அக்., 6 ஆங்கிலம்- முதல் தாள்
அக்., 8 ஆங்கிலம்- 2ம் தாள்
அக்., 9 இயற்பியல், பொருளியல்
அக்., 10 கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, உணவியல்
அக்.,11 வணிகவியல், மனையியல், புவியியல்
அக்., 12 வேதியியல், கணக்குப்பதிவியல்
அக்., 13 உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்
அக்., 15 தகவல் தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு (தமிழ்-ஆங்கிலம்)
அக்., 16 தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

9/14/2012

ஊதிய நிர்ணயம் - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றவருக்கு பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்த மண்டலக் கணக்கு தணிக்கை அலுவலரின் தெளிவுரை. ந.க.எண். 760 / அ4 / 2012, நாள். 02.05.2012.

கூட்டுறவு சங்க தேர்தல் பிப்ரவரிக்குள் முடிக்க உத்தரவு

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தலை, பிப்ரவரிக்குள் நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க தலைவர், இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக அனைத்து வங்கிகளிலும் மகாசபை கூட்டங்களை நடத்தி, உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் நடத்தப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, புதிய உறுப்பினர்களாக சேரவும், பழைய உறுப்பினர்களின் சந்தா தொகை ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இத்தொகை ரூபாய் நூறாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தலை வரும் பிப்ரவரிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு, மண்டல இணைபதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் திடீர் மறியல்

சிதம்பரம், செப். 14:
சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் நேற்று திடீரென மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பை முடித்த மாணவி ஒருவரை ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தாக கூறப்படுகிறது. இதனையறிந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பு பயிலும் சிதம்பரம் மாணவர்கள் ஆவேசமடைந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு நாங்கள் தகுதியில்லையா? எனக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டனர்.
பின்னர் ஊர்வலமாக சென்று சிதம்பரம் காந்தி சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் மாணவ, மாணவிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மறியலில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஏ ஆங்கிலம் முதலாமாண்டு பயிலும் பிரசன்னா என்ற மாணவி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மாணவிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அம்மாணவியை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
இதன்பின்னர் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் மாற்றுபாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. மதியம் 2 மணியளவில் சிதம்பரம் சப்&கலெக்டர் சுப்ரமணியம், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் மீனாட்சிசுந்தரம், முதல்வர் செல்வராஜ், மற்றும் அதிகாரிகள் மாணவ பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சப்&கலெக்டர் சுப்ரமணியம் பேசுகையில் �அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 24 ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை எண்.75 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வாணையத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை� என்றார். இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சிதம்பரம் காந்தி சிலை அருகே ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்தப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதி அளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு

சென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியராக பணியில் சேர தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வினை கடந்த ஜுலை மாதம் நடத்தியது.

இந்த தேர்வில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் கலந்துக் கொண்டனர். இதில், இடைநிலை, உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

மறுதேர்வு

இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் 26.8.2012 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு 3.10.2012 அன்று மறு தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்காக புதிதாக விண்ணப்பம் செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

நான் பி.எஸ்.சி., (கணிதம்) பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இந்த கல்வியாண்டில் புதிதாக பி.எட். படித்தவர்களும் அக்டோபர் 3-ந் தேதி நடக்கும் மறு தேர்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

உரிமை மறுப்பு

இதனால் அரசு வேலைவாய்ப்பை பெறும் உரிமை எனக்கு மறுக்கப்படுகிறது. எனவே, இந்த மறுதேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். அக்டோபர் 3-ந் தேதி நடக்க உள்ள தேர்வில் என்னை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, `அக்டோபர் 3-ந் தேதி நடக்கவுள்ள தேர்வுக்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. இந்த தேர்வில் புதிய விண்ணப்பத்தாரர்களுக்கு அனுமதி வழங்கினால், அதற்கு காலநேரம் போதாது' என்று வாதம் செய்தார்.

விரிவான பதில் மனு

மனுதாரர் சார்பில் வக்கீல் அருண்குமார் ஆஜராகி, `ஏற்கனவே விண்ணப்பத்தாரர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பது சட்டவிரோதமாகும்` என்று வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, `தேர்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிட்ட பின்னர், அதே விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வு நடத்த முடியாது. இந்த தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் கலந்துகொள்ள அனுமதி அளிப்பது குறித்து அரசுடன் கலந்து ஆலோசனை செய்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை வரும் 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.

சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களுக்கு - துறைகள் மாறி ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை புது உத்தரவு


பள்ளி கல்வி துறையில், ஆய்வு அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள், துறைகள் மாறி ஆய்வு செய்யும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பள்ளி கல்வி துறையில் தொடக்க கல்வி, மேல்நிலை கல்வி, கள்ளர் சீரமைப்பு, மாநகராட்சி போன்ற பிரிவுகள் உள்ளன.

இவற்றில், டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்கள் மற்றும் இணை இயக்குனர் அந்தஸ்தில், ஆய்வு அதிகாரிகள் உள்ளனர்.பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை, விடுப்பு, பள்ளிக்கான வளர்ச்சி திட்டம் போன்றவை குறித்து, ஒரு துறைக்கு உட்பட்ட ஆய்வு அதிகாரி, அத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் மட்டும் ஆய்வு செய்யலாம் என இருந்தது. ஆனால், புதிய உத்தரவால், தொடக்க கல்வி துறை ஆய்வு அதிகாரி, கள்ளர் சீரமைப்பு துறையோ அல்லது மாநகராட்சி பள்ளிகளிலோ ஆய்வு மேற்கொள்ளலாம். இதற்கான உத்தரவை, சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளி கல்வி துறை அனுப்பியது.

9/13/2012

TET - மறுதேர்வு புதிய எண் மற்றும் தேர்வு எழுதும் இடம் அறிய

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்ய அதிகாரப்பூர்வமான அமைப்பு, ஆனால் இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போதுள்ள மாநில பதிவு மூப்பு முறை செயல்ப்படுத்துதல் மற்றும் மாணவர் நலன் கருதி 12.07.2012 TET தேர்வில் தவறியவர்களுக்கும் மறுதேர்வு அக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாணை 222 வெளியீடு

தொடக்கக் கல்வி - 2012 - 2013ஆம் கல்வியாண்டு 2 ஆம் பருவத்திற்கான பாடநூல்கள் விநியோகம் செய்யப்படுவது சார்ந்த தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 14.09.2012 அன்று கூட்டம் நடத்துதல் சார்பு

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் கல்விச் இணைச்செயல்பாடுகள் மற்றும் அரசாணை 264-இன் பகுதிகளில் பயிற்சி பெற்ற உயர் தொடக்க வகுப்புகள் ஆசிரியர்களின் பட்டியல்

உதவித்தொடக்கக்கல்வி அலுவலரின் முன்னுரிமைப் பட்டியல்

http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gif AEEO 2012-13 முன்னுரிமை பட்டியல்  SET EXAM
http://www.webdeveloper.com/animations/latest/gifs/1aar029.gif இயக்குநரின் செயல்முறைகள்  SET EXAM     

ஏதேனும் முறையீடுகள் இருப்பின் 21.9.2012 - க்குள்  மாவட்ட 
தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் மூலம் இயக்குனர்
அவர்களுக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

ஆதிதிராவிடர் நலம் - சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்களுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - வெளியிடப்படுகிறது.

9/11/2012

சிவகங்கை ஆர்ப்பாட்டம்



சான்றிதழில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) முதல் தாளில், 1,735 பேர், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேர் என, 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, 7, 8ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதன்பின் நடத்திய ஆய்வில், இரு தேர்வுகளிலும் சேர்த்து, 50 பேருக்கு, உரிய தகுதிகள் இல்லை என்பது, கண்டறியப் பட்டுள்ளது. சான்றிதழ்கள் இல்லாதது, தேர்வுக்குரிய தகுதியில் பட்டம் பெறாமல், வேறு பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த 50 பேரும், தேர்ச்சிப் பட்டியலில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர். மேலும், 50 முதல், 75 பேரின் கல்விச் சான்றிதழ்கள் குறித்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.
பல தேர்வர்கள், வெளி மாநிலங்களில் உள்ள பல்கலையில் படித்துள்ளனர். அந்த பட்டங்கள், தமிழகத்தின் கல்வித் தகுதிக்கு நிகரானது தானா என்பதை, உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியல், 20ம் தேதிக்குப் பின் வெளியாகும் என, கூறப்படுகிறது.

ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?

மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர் தினம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன?
ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...
  கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.  
"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) என்று புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில், மாணவர்களுக்கு யோகாசனம், பாட்டு, நன்னெறி உட்பட பல திறமைகளையும் கற்றுத்தர வேண்டும். நல்ல விஷயம்தான். நிச்சயம் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அது பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் திடீர் திடீரென புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். பாடம் நடத்துவதைக் காட்டிலும், பதிவேடுகளைப் பராமரிப்பதுதான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் பாடம் நடத்துவதே பெரிய விஷயம் என்ற நிலைதான் இப்போது உள்ளது" என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன்.
கல்வித்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, உரிய முறையில் திட்டமிட்டு செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்படுவதும் ஆசிரியர்கள்தான். எப்படி? "மாவட்டக் கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு திடீரென எஸ்.எம்.எஸ். வரும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் பதிவேடுகளுடன் வரவேண்டும் என்று அதில் இருக்கும்.நான் ஒரு குக்கிராமப் பள்ளியில் பணியாற்றுகிறேன். 12 மணிக்கு கிளம்பினால்தான் 3 மணிக்குள் அங்கு போய்ச்சேர முடியும். மாதத்தில் பாதிநாள் இப்படி அலைந்து கொண்டிருந்தால் எப்படி என்னால் பள்ளியைக் கவனிக்க முடியும்?
அந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகச் செலவிடாமல், அதை வருஷக் கடைசியில் எப்படியாவது செலவழித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு. பிப்ரவரி, மார்ச் வந்து விட்டால் டிரெயினிங் டிரெயினிங் என்று எங்களை வாட்டி வதைக்கிறார்கள்" என்று புலம்புகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர். கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி.
ஆனால் இப்போது கல்விக்கு சம்பந்தமில்லாத பொறுப்புகளும் ஆசிரியர்களின் தலையில் சுமத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. "சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால், அந்தக் கட்டுமானப் பணிக்கான முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்தான். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பணிகளை மேற்பார்வையிடுவது, கணக்கு வழக்கு பார்ப்பது உட்பட எல்லா வேலைகளையும் தலைமையாசிரியர் செய்ய வேண்டும். அதுதவிர, கட்டிங் கொடு என்று அரசியல்வாதிகள்  வந்துவிடுகின்றனர். இதுபோன்ற சூழலில், தலைமை ஆசிரியரால் பள்ளிக்கூடத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது" என்று பொருமுகிறார், மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் ஒருவர். சினிமா, தொலைக்காட்சியின் தவறான கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்த பெஞ்ச்சைத் திருடி விற்று, அதில் மது வாங்கிக்  குடித்தனர் என்று ஓர் செய்தி வெளியானது. வகுப்பறைகளில் அம்மாதிரியான மாணவர்களைக் கையாளுவது ஆசிரியர்களுக்குபெரிய சவால்தான். "இப்போது கேமரா செல்போன், பள்ளி மாணவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அது அவர்களை மிகத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. ஒழுக்கம், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல் போன்ற பண்புகள் பொதுவாக இன்றைக்கு மாணவர்களிடம் அருகிவிட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், மாணவர்களைத் திட்டாதீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களை எப்படிச் சமாளிப்பது, அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லித் தருவது என்று எங்களுக்குப் புரியவேயில்லை" என்று வருத்தப்படுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் கல்யாணசுந்தரம். இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடும், திறமையோடும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலரைத் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது நம் அரசு. ஆனால், நல்லாசிரியர் என்ற விருதுகளை எதிர்பாராமலேயே, எத்தனையோ ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர்கள் பலரின் சிறப்புகளை வெளியிட்டு நமது ‘புதிய தலைமுறை’யும் கௌரவித்து வருகிறது.

ஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புது திட்டம் : அடுத்த ஆண்டு முதல் அமலாகும்ல

""ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியரின் சாதனைகளை, வரும் ஆண்டுகளில் வெளிப்படையாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், பாடத்தில் சிறப்பாக செயல்படுவதுடன், பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடும் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில், 370 பேருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. குற்றச்சாட்டு : ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும், விருதுக்கு பரிந்துரை செய்கின்றனர்.
இதனால், விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் முறை குறித்து, சர்ச்சை எழுந்து உள்ளது. திறமையான ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகளை, தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியருக்கும் பார்ப்பது கிடையாது என்றும், வேண்டப்பட்ட ஆசிரியராக இருந்தால், எவ்வித விதிமுறைகளையும் பார்க்காமல், கடைசி நேரத்தில் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும், ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
வெளிப்படை தன்மை :
நடப்பாண்டில், 80 சதவீத ஆசிரியர், முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 20 சதவீத ஆசிரியர், விதிமுறைப்படி தேர்வு செய்யப்படவில்லை. தகுதியற்றவர்களுக்கு, சிபாரிசுகளின் அடிப்படையில், விருதுகளை கொடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் பெயரில் அமைந்த விருதை, தகுதியான ஆசிரியருக்கு மட்டுமே வழங்க வேண்டும். விருதுக்குரிய ஆசிரியர் செய்த சாதனைகளை, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை, வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
வரும் ஆண்டுகளில்... : ஆசிரியர் விருது பெற்றவர் குறித்த புத்தகத்தில், ஆசிரியர் செய்த சாதனைகள் குறித்து, ஒரு தகவலும் இல்லை; வெறும், பெயர், பள்ளி ஆகிய விவரங்கள் மட்டுமே உள்ளன. இதனால், விருது பெற்ற ஆசிரியரின் சாதனைகளை, அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஆசிரியரின் செயல்பாடுகளை, புத்தகத்திலும், இணையதளத்திலும் வெளியிடலாம்.
விருதுக்கு, விண்ணப்பங்களை வரவேற்பது குறித்த அறிவிப்பையும், ஆசிரியருக்கான தகுதிகள், விதிமுறைகள் குறித்த தகவலையும், முன்கூட்டியே நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்பதும், ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் கருத்துகள் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது,
""தகுதியான ஆசிரியர்களுக்குத் தான், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெறும் ஆசிரியரின் சாதனைகளை, புத்தகத்தில் வெளியிடுவதில், எந்த பிரச்னையும் இல்லை. வரும் ஆண்டுகளில், ஆசிரியர் சாதனைகள், புத்தகங்களில் வெளிப்படையாக வெளியிடப்படும்,'' என்றார்.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு.முருக.செல்வராசன் கலந்து கொள்வதால் ஆசிரியப்பேரினமே திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச்செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் 20 பள்ளிக்கூடங்களில் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் - முதன்மை செயலர் சபீதா

மாதந்தோறும் 20 பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் என்று கல்வி அலுவலர்களுக்கு முதன்மை செயலர் சபீதா அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில், 8 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் டி.சபிதா பேசும்போது, பள்ளி கல்வித்துறை தொடர்பாக நாங்கள் எடுத்து செல்லும் திட்டங்கள், கோரிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் உடனடியாக கேட்டறிந்து அதற்கான தீர்வினை உடனடியாக வழங்குகிறார்.

இதன் விளைவாகத்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சுமார் ரூ.4 ஆயிரம் கோடி மாணவ-மாணவிகளுக்கு இலவச திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது முழுமையாக மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்பட்ட சலுகைகள் ஆகும்.

நீங்கள் ஒருமாதத்தில் குறைந்த பட்சம் 5 பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளது. ஆனால் மாதந்தோறும் 20 பள்ளிகள் வரை ஆய்வு நடத்தலாம். அதன் மூலம் கல்வி தரம் உயரும். அரசு பள்ளிகள் தவிர அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் ஆய்வு நடத்த வேண்டும்.

நீங்கள் அதிகமான பள்ளிகளை ஆய்வு செய்யும் போது மிக சிறப்பாக செயல்படும் பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக தேர்வு செய்து, மற்ற பள்ளிகள் அந்த பள்ளியை பார்வையிட செய்ய வேண்டும். மாணவர்களின் சேர்க்கை கணக்கெடுப்புகளை தயார் செய்து விரைவாக வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

9/10/2012

MEDICAL AID – New Health Insurance Scheme, 2012 for Government Employees and Organisations covered under this Scheme – Implemented – Constitution of an Accreditation Committee for empanelment of hospitals and also to monitor the quality of treatment - Orders - Issued.

தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 அங்கீகரிக்கப்பட்ட மருத்தவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் பட்டியல் கூடுதலாக மருத்துவமனை அங்கீகரித்து ஆணை

சி.பி.எஸ்.இ பள்ளிகள் கட்டண விவகாரம் - தீர்ப்பு தள்ளிவைப்பு

 
சென்னை: கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் நிர்வாக சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டமானது, மாநில பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு தான் பொருந்தும். சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வராது.
எனவே, கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டமானது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது. அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க, கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
ஆனால், அதிகாரவரம்பை மீறி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சிலவற்றுக்கு கட்டணத்தை குழு நிர்ணயித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கவோ, அதை அமல்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பிலும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசின் சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும் எனக் கூறி, பெற்றோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சந்திரன், சோமயாஜி, முத்துகுமாரசாமி, சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், பெற்றோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டப் பிரிவுகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். அந்தப் பள்ளிகள் மாநில பாடத் திட்டத்தை பின்பற்றினாலும் சரி, வேறு எந்த போர்டின் பாடத் திட்டத்தை பின்பற்றினாலும் சரி.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக இருந்தாலும், அதை துவங்க வேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதி பெறப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்" தள்ளிவைத்தது.
 

9/08/2012

Results of Departmental Examinations - MAY 2012 (Updated on 06 September 2012)

வகுப்பறை வழிபாடுகளைகண்காணிக்க அரசு உத்தரவு

மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், நடத்தப்படும் வகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன், அனைத்து மாணவர்களின் கூட்டு வழிபாடு நடைபெறும். இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதனால், மாணவர்களின் தனித்திறன் வளர வாய்ப்பில்லை; தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக தெரிவதும் இல்லை, என்ற குறைபாடு உள்ளது.
இதை போக்கும் வகையில், வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் கூட்டு வழிபாடு நடத்தவும், மற்ற நாட்களில் வகுப்பறை வழிபாடு நடத்தவும், பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூலை 7 முதல் வகுப்பறை வழிபாடு நடத்தப்படுகிறது.
இதில், தினமும் காலையில் ஒவ்வொரு வகுப்பிலும், வகுப்பு ஆசிரியர் தலைமையில், ஐந்து மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு மாணவன் தமிழ்தாய் வாழ்த்து படித்தும், அடுத்த மாணவன் திருக்குறள் படித்தும், மற்ற இரு மாணவர்கள் பழமொழி, நன்னெறி விளக்கம் படித்தும், ஐந்தாவது மாணவன் அன்றைய நாளிதழ் செய்திகளை வாசித்தும் வருகின்றனர்.
இதே போல், தினமும் வகுப்றை வழிபாடு நடைபெறுகிறதா, என கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

செப்.15 முதல் முப்பருவத்தின் இரண்டாம் பருவ கல்வி திட்டப் புத்தகங்கள் வினியோகம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 9.50 கோடி பாடப் புத்தகங்கள், 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

   நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடத் திட்டம், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
   முதல் பருவத்திற்கான பாடத் திட்டம், இந்த மாதத்துடன் முடியும் நிலையில், அக்டோபரில் இரண்டாம் பருவம் துவங்குகிறது. அதற்காக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, 9.50 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. இவை, 15ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
  அவர், மேலும் கூறியதாவது: மொத்தம், 140 அச்சகங்களில், இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், அச்சடித்து முடிக்கப்பட்டு, மாவட்டங்களில் உள்ள வினியோக மையங்களுக்கு, நேரடியாக அனுப்பப்பட்டு வருகின்றன. 15ம் தேதி முதல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கும் பணிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்வர்.
   ஒன்று முதல், ஆறாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், அதிக பக்கங்களைக் கொண்டதாக இருந்ததால், இரு புத்தகங்களாக பிரித்து வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம், 70 பக்கங்களாகவும், அதிகபட்சம், 170 பக்கங்களை கொண்டதாகவும், இந்த புத்தகங்கள் இருக்கும்.
  தனியார் பள்ளி மாணவர்களுக்காக, 30 சதவீத புத்தகங்கள், விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை, பாடநூல் கழக கிடங்குகளில் இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக அலுவலக கவுன்டர்களில், 15ம் தேதியில் இருந்து, இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாறு, கோபால் தெரிவித்தார்.

IGNOU - Online submission of TEE December 2012 Exam Form

இன்று அனைத்துலக எழுத்தறிவு நாள் !



கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்.,8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. 
என்ன பயன்:
எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.

ஆப்ரிகாவில் குறைவு:
வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு சதவீதம் 60க்கும் குறைவு. வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளி செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் நிலை:
2011 சென்சஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

அண்ணாமலைப் பல்கலை - இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

2,895 முதுநிலை ஆசிரியர் விரைவில் பணி நியமனம்

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார்.
   இதுகுறித்து, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா (மேல்நிலைக் கல்வி) கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 900 பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும்; 50 சதவீதம் நேரடி பணி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன.

   அந்த வகையில், பதவி உயர்வுப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அவர்களுக்கு, நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட்டு, சம்பளம் வழங்கப்பட்டு உள்ளன. எந்த மாவட்டத்திலும் பிரச்னை கிடையாது.

   காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், ஆறு பள்ளிகளில் சேர்ந்த முதுநிலை ஆசிரியருக்கு, சம்பளம் கிடைக்கவில்லை என, தகவல் வந்துள்ளது. அவர்களுக்கும், ஓரிரு நாளில் சம்பளம் வழங்கப்படும்.புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு உமா தெரிவித்தார்

டி.இ.டி-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கு, இன்றும், நாளையும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நான்கு இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
   டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 1,735 பேருக்கு இன்றும்; முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 713 பேருக்கு நாளையும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். 12ம் தேதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

   வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல்களை, சம்பந்தப்பட்ட மையங்களில் இருந்து, சென்னைக்கு கொண்டு வந்து, அதன்பின் இறுதிக்கட்டப் பணிகளை செய்து, பட்டியலை வெளியிடுவர்.

    இந்த முறை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களில் இருந்தே, தேர்வர் குறித்த விவரங்களை, டி.ஆர்.பி., இணைய தளத்தில் உடனுக்குடன் சேர்க்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் பணி வழங்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: மறுதேர்வு எழுதுவோருக்கு திங்கள்முதல் ஹால் டிக்கெட்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
   இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் மாற்றம் போன்ற தவறுகள் நடைபெற்ற 5 தேர்வு மையங்கள் இந்தமுறை மாற்றப்பட்டுள்ளன. 

  அதேபோல், புதிதாக 10-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 முதல் 600 தேர்வர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வுக்கான 90 சதவீதப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன.அரசாணை வெளியீடு: மறுதேர்வு நடைபெறும் அக்டோபர் 3-ம் தேதி புதன்கிழமை ஆகும். அனைத்து ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதும் வகையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

9/07/2012

பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் துவக்கம்

தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இணையதளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இந்த இணையத்தில் இடம் பெற்றுள்ளன. www.tnschools.gov.in என்பது அந்த இணையதளம்.
அனைத்து மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு" கொடுக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, முதல்வரின் தொகுதியில், ஐந்து பள்ளிகளை சேர்ந்த மாணவருக்கு, "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், விரைவில் இந்த கார்டு வழங்கப்படும்.
மாணவரின் புகைப்படத்துடன், அவர் பயிலும் பள்ளி குறித்த விவரங்கள், இந்த கார்டில் இருக்கும். இந்த கார்டை, "பார் கோடு ரீடர்" முறையிலோ அல்லது, கார்டில் உள்ள குறியீட்டு எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்தால், மாணவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த, ஐ.டி., கார்டு, "டிசி"க்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், பயிற்சி பெறும் ஆசிரியர், தன் அனுபவம் குறித்த தகவல்களை, இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அது குறித்து, மற்ற ஆசிரியர் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, இந்த இணைய தளம் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேவராஜன் கூறினார். மாநிலத்தின் வரைபடம், மக்கள் தொகை, மொத்தப் பள்ளிகள் எண்ணிக்கை, புதிய மாணவர் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரம், மாநிலத்தின் எழுத்தறிவு நிலவரம் உட்பட, 30 தலைப்புகளில், ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.

SCERT - CCE - தொகுத்தறித் தேர்வின் மாதிரி வினாத்தாள்கள்(QNS) மற்றும் வினாத்தாள் திட்ட வடிவமைப்புகள் (BLUE PRINT) வெளியீடு.

9/05/2012

தனியார் பள்ளி பணி நியமனம் - RTI - மூலம் பெறப்பட்ட தகவல்

இனச்சுழற்சி அரசாணை

இயக்குநரின் செயல்முறைகள்,