8/31/2013
TNPTF - மாவட்ட மறியல் - 30/08/2013
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம் - போட்டோஸ்
புதிய பென்சன் திட்ட மசோதா நிறைவேறுமா?
லேபிள்கள்:
PFRDA
ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஞகுசுனுஹ) புதிய பென் சன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதுதான் ஓய்வூதிய நிதியை கையாளு வதற்கான அறக்கட்டளை வங்கியையும், பதிவேடுகள் காப்பக நிறுவனத்தையும், அம லாக்க அறக்கட்டளையையும், ஓய்வூதிய நிதி நிர்வாக அமைப்புகளையும் (ஞகுஆ), பென் சன் வழங்கும் ஆனுவிட்டி கம்பெனிகளையும் நியமித்து செயல்படுத்துகிறது.
இந்த ஆணையம் இப்போது இடைக்கால ஆணையமாக செயல்படுகிறது. அதன் பதவிக் காலம் இரண்டாண்டுகள்தான். அதன் பின் சட்டப்படியான ஆணையம் வந்துவிடும் என்று பாஜக மத்திய அரசு போட்ட இடைக் கால ஆணைய அமைப்பு உத்தரவு 2003ல் கூறியது.ஆனால், சட்டப்படியான ஆணையமில் லாமலே நிர்வாக உத்தரவு மூலம் புதிய பென் சன் திட்டம் 22.10.2003ல் பாஜக அரசு போட்ட உத்தரவு மூலம் மத்திய அரசு 1.1.2004 முதல் அமல்படுத்தி வருகிறது.அதன்பின் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு முதலில் ஒரு அவசரச் சட்டம் மூலம் இந்தஆணையத்தை சட்டப்பூர்வமாக்கமுயன் றது. 6 மாதம்தான் அது செல்லுபடியாகும்.
அதற்குள் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அந்த ஆணையத்தையும் புதிய பென்சன் திட்டத்தையும் சட்டப்பூர்வ மாக்கிவிடலாம்என்றுகாங்கிரஸ்ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அவசரச் சட்டம் காலாவதியாகும் முன் ஒரு மசோதா கொண்டுவர முடியவில்லை. 2005 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் “ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2005” என்பதை அறிமுகப்படுத்தியது. இடது சாரிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா 14வது நாடாளுமன்றம் முடியும்வரை சட்டமாக நிறை வேற்ற முடியவில்லை. அந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது.
மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு 2011 மார்ச்சில்தான் அதே மசோதாவை சில திருத்தங்களுடன் தேசிய பென்சன் திட்டம் என்று (பெயர் மாற்றி) அறிமுகப்படுத்தியது. அப்போது அதற்கு பாஜக முழு ஆதரவும் அளித்தது.அந்த மசோதாதான் “ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011” என்று அழைக்கப்படுகிறது. ஐ.மு.கூட்டணி இதை நிறைவேற்ற போதிய உறுப்பினர் இல்லாததால் அது பாஜகவின் ஆதரவை நாடியுள்ளது. பல அரசியல் காரணங் களால் மசோதா நிறைவேற்ற பாஜக ஆதரவை தராமல் இழுத்தடித்து வந்தது.இதனால் இம்மசோதா நிதி அமைச்சகத் தின் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப் பப்பட்டது.
நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு பாஜக வின் யஷ்வந்த்சின்கா தலைவர். அந்த நிலைக்குழு 3 திருத்தங்களை முன்வைத்தது.
1. ஓய்வூதிய நிதியிலிருந்து முக்கிய தே வைகளுக்கு பணம் எடுக்க வழிவகை செய்ய வேண்டும்
2. ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்கள் குறைந்தபட்ச லாபத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
3. மசோதாவில் ஓய்வூதிய நிதி கம்பெனி களுக்கு அந்நிய மூலதனம் வரலாம் என்றும் அது எந்த அளவு வரலாம் என்பது இன்சூர ன்ஸ் திருத்த மசோதாவில் இருக்கும் உச்ச வரம்பைப் பொருத்திருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.இதன்படிஉடனடியாக26சதவீதம் வரலாம். அதற்கு ஏற்கனவே சட்டம் உள்ளது. திருத்த மசோதா 49 சதவீதத்தை இப்போது பிறப் பித்துள்ளது. சட்டம் நிறைவேறினால் ஓய் வூதிய நிதிக் கம்பெனிகளிலும் அந்நிய மூல தனம் 49 சதவீதம் வரலாம். நாளைக்கு 74 சத வீதம், 100 சதவீதம் என்று அந்த சட்டம் திருத் தப்பட்டால் அதுவும் இதற்குப் பொருந்தும்.
அந்நிய கம்பெனிகளின் பங்குக்கு உச்ச வரம்பு ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011க்கு வெளியே இருக்கக் கூடாது. அந்த மசோதாக்குள்ளேயே அது நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நிலைக்குழுவின் பரிந்துரை.
அதாவது மசோதாவுக்குள் 26 சதவீதம் உச்சவரம்பு வைத்தால் அதை உயர்த்த விரும்பினால் ஓய் வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய சட்டத்தை தனியாக திருத்தினால் தான் உயர்த்த முடியும்.முதலில் காங்கிரஸ் ஐ.மு.கூட்டணி அரசின் அமைச்சரவை இந்த திருத்தங்களை நிராகரித்துவிட்டது. பாஜக இந்த திருத்தங் களை ஏற்றதால்தான் ஆதரவு என்றது.
இப்போது மத்திய அமைச்சரவை இரு திருத்தங்களை ஏற்க முடிவு செய்துவிட்டது. அதன்படி
1. ஊழியரின் பங்கிலிருந்து 25 சதவீதம் வரை கடன் பெறலாம். அரசின் பங்கில் கடன் கோர முடியாது. எதற்காக, எத்தனைமுறை, எவ்வ ளவு வரை கடன் பெறலாம் என்பதை ஆணை யம் முடிவு செய்யும்.2. மசோதாவுக்குள்ளேயே ஓய்வூதிய நிதி கம்பெனிகளில் அந்நிய மூலதனம் 26 சதம் வரை வரலாம் என்று சேர்க்கப்படும்.
இன்சூரன்ஸ் திருத்த மசோதா அந்த உச்ச வரம்பை 49 சதவீதமாக்க ஆகஸ்ட் 14 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக என்று முன்வைக்கப்பட்டது. பட்டியலில் இருந்தது.ஆனால், அரசியல் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் எதிர்ப்பால் அது பின் வாங்கப்பட்டது. சிதம்பரம் கருத்தொற்றுமை இல்லாததால் பின்வாங்கப்பட்டதாகவும் கருத்தொற்றுமை ஏற்பட்டால் நாளையே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
PFRDAமசோதா 19.8.2013 அன்று முதல் தினந்தோறும் பட்டியலில் வைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் பல காரணங் களால் முடங்கி நேரமின்றி நிறைவேற்றப் படாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.30.8.2013 வரைதான் நாடாளுமன்றக் கூட் டத்தொடர். இரு கட்சிகளும் விவாதத்தைத் தவிர்க்க நாடாளுமன்றத்தை முடக்கி சதி செய்துவிட்டு கடைசியில் குரல் வாக்கெடுப் பில் நிறைவேற்ற சதி செய்கிறார்களா என்பது பரிசீலனைக்குரியது.பாஜகவின் திருத்தங்களை ஏற்றாலும் மசோதா சட்டமானால் புதிய பென்சன் திட்டம் ஒழியாது. திருத்தங்கள் புதிய பென்சன் திட் டத்தை ஒழித்து பழைய பென்சனை கொண்டு வரும் நோக்கில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் பாஜகவும் காங்கிரசும் ஒண்ணு உழைப்பவன் வாயில் மண்ணு என்பதை புரிந்துகொள்ளலாம்.
அறக்கட்டளை வங்கி : இதுவரை பேங்க் ஆஃப் இந்தியாதான் அரசு ஊழியர் நிதிகளை கையாண்ட வங்கியாக இருந்தது. இது தேசிய வங்கி என்று அனைவருக்கும் தெரியும். இந்த சட்ட விரோத இடைக்கால ஆணையம் இப் போது தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியை 2013 ஜூலை 1 முதல் அறக்கட்டளை வங்கி யாக நியமித்துள்ளது.
ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்களும் அறக்கட்டளை வங்கியும் தனியாரானால், பின் அந்நிய மூலதனமும் வந்தால் வெனிசுலாவில் ஓய்வூதிய நிதியை எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்தது போல போய்விடும்.
பங்குச்சந்தையில் மூல தனமிடவே பணமிருக்காது.மேற்கு வங்கம், திரிபுரா தவிர அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் மேற்குவங்கம் கேரளா, திரிபுரா அரசில் இருந்த போது தடுத்துவைத்தனர். கேரளாவில் 1.4.2013 முதல் புதிய பென்சன் திட்டம் அமலாகிறது. அந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கூட செய்துவிட்டனர்.ஆணைய தலைவரின் கூற்றுப்படி இந்தி யாவில் இதுவரை 53 லட்சம் பேர் இந்த திட் டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் கட்டாயமாக சேர்க்கப்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள்தான். அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டாலும் அவர்கள் விரும்பி னால்தான் சேரலாம் என்பதால் மற்றவர்கள் யாரும் தங்கள் அசலை இழக்க விரும்ப வில்லை. ஆதலால் சேரவில்லை.நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி அமைச்சர் கொடுத்த ஒருபதிலில் 2012-13ல் 47,70,503 பேர் சேர்ந்திருப்பதாகவும் அவர் களின் மொத்த ஓய்வூதிய நிதி ரூ.29852 கோடி என்றும் கூறியுள்ளார்.17.8.2012ல் ரூ.17,623 கோடி இந்த நிதியாக இருந்தது என்றும் அதில் மத்திய அரசு ஊழியர்களின் பங்கு ரூ.11,315 கோடி என் றும் மாநில அரசு ஊழியர்களின் பங்கு ரூ.5500 கோடி என்றும் மற்ற தனியார் கம்பெனிகளிடம் இருந்து வந்தது வெறும் ரூ. 801 கோடி என்றும் தெரிகிறது.
கட்டாயமாக்கப்பட்ட மத்திய- மாநில அரசு ஊழியர்களின் பங்குதான் கூடி வருகிறது என் பதை பார்க்கலாம்.இப்படி மசோதா நாடாளுமன்றத்தில் உட னடியாக நிறைவேறாமல் இழுக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. நாடாளுமன் றத்திற்குள் காங்கிரசும் பாஜகவும் கூட்டு சதி செய்தாலும் வெளியே அவர்களின் ஐ.என்.டி. யு.சி.யும். பி.எம்.எஸ்-சும் இடதுசாரி மற்றும் போராடும் சங்கங்களுடன் இணைந்து தேசிய அளவில் 2012 பிப்ரவரி 28லும் 2013 பிப்ரவரி 20-21லும் செய்த வேலைநிறுத்தங்கள். அவர் களுக்கு முழுவதுமாக ஆதரிக்க தைரியத்தை அளிக்கவில்லை.
வெளியே போராட்டம் தீவிர மானால் மசோதா இந்த 15வது மக்களவை யிலும் நிறைவேறாது. மத்திய அரசு ஊழியர்கள் வாக்கெடுப்பு வரும் தினத்தில் 2 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். ரயில்வேயும் சேர்ந்தால் பலன் அதிகம் இருக்கும்.
தமிழக அரசு : அனைவருக்கும் 1.1.2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமலானால் தமிழகத்தில் மட்டும் 1.4.2003 முதலே அமல்படுத்தப்பட்டு விட்டது. அமல்படுத்தியது அண்ணாதிமுக அரசு. அதன் பின் வந்த திமுக அது நல்லது என்று கண்டது. அதைத்தொடர்ந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கடைசி தினத்தில் ஜெயலலிதா அவர்கள் புதிய பென்சன் திட்டத்தை வாபஸ் வாங்குவேன் என்று அறிவித்தார். அதற்கேற்றாற்போல மசோதா 2011 மார்ச்சில் அறிமுகப்படுத்தப் பட்டபோது இடதுசாரிகளோடு சேர்ந்து அதிமுக எதிர்த்து வாக்களித்தது.
ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் அறக்கட்டளை வங்கிக்கு இப்போது அனுப்பப்பட்டு எல்லா ஊழியர்களிடமும் நிரந்தர ஓய்வுக் கணக்கு எண் (ஞசுஹசூ) வழங்க கையெழுத்து வாங்கப்படுகிறது. தமிழக அரசு மசோதாவை எதிர்ப்பது நல்லது. ஆனால் தமிழகத்திலும், மேற்கு வங்கம், திரிபுரா போல திட்டத்தைக் கைவிடாமல் மறுப்பது சரியா? என்று சிந்திக்கவேண்டும்.
கட்டுரையாளர்: செயல்தலைவர், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி மறியலில் ஈடுபட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 285 பேர் கைது
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி
மறியலில் ஈடுபட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 285 பேர் கைது
சிவகங்கை,ஆக.31- மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி சிவகங்கையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட ஆரம்ப பள்ளி ஆசி ரியர் கூட்டணியினர் 285 பேர் கைது செய்யப் பட்டனர். மறியல் மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும் என்பதுஉ ள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கையில் மாவட்ட தலைவர் முத்து பாண்டி யன் தலைமையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தாக மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன், மாநில துணை தலைவர் சந்திரசேகரன் மற்றும் 146 பெண்கள் உள்பட 285 பேர்கள் கைது செய்யப் பட்டனர். முன்னதாக போராட்டத்தை வாழ்த்தி சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் மற் றும் நகராட்சி தலைவர் அர்ச் சுனன் ஆகியோர் பேசினர். |
ஆசிரியர் கூட்டணி மறியல்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்
இரண்டு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. இடைநிலை
ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மறியல் நடந்தது. மாவட்டத் தலைவர்
முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். சிவகங்கை எம்எல்ஏ குணசேகரன்,
நகர்மன்றத்தலைவர் அர்ச்சுணன் வாழ்த்திப் பேசினர். இதில் மாநில துணைத்தலைவர்
சந்திரமோகன், மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட
செயலாளர் மெய்யப்பன், சிஐடியூ மாவட்ட செயலாளர் வடிவேலு உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என மத்திய அரசு உறுதி
லேபிள்கள்:
DA news
மத்திய
அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன்
இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித்
துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:
"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன்
இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க
வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள
கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது.
ஆறாவது சம்பள
கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது.
அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு
சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள
கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என மத்திய அரசு உறுதி
லேபிள்கள்:
DA news
மத்திய
அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன்
இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித்
துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:
"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன்
இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க
வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள
கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது.
ஆறாவது சம்பள
கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது.
அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு
சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள
கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சிவகங்கையில் மறியல் 300 ஆசிரியர்கள் கைது
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
சிவகங்கை : மத்திய அரசுக்கு இணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டம்,
டி.இ.டி., தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில்,300க்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே கூடினர். மாவட்ட தலைவர்
முத்துப்பாண்டி தலைமையில் கோஷம் எழுப்பினர்.
மாநில துணை தலைவர் சந்திரமோகன், நகராட்சி தலைவர் அர்ச்சுனன்,அரசு ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ.,நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
* அரண்மனைவாசல் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இணை செயலாளர் சரோஜினி தலை மை வகித்தார். 200 பெண்கள் உட்பட 300 பேர் பங்கேற்றனர்.
மாநில துணை தலைவர் சந்திரமோகன், நகராட்சி தலைவர் அர்ச்சுனன்,அரசு ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ.,நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
* அரண்மனைவாசல் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இணை செயலாளர் சரோஜினி தலை மை வகித்தார். 200 பெண்கள் உட்பட 300 பேர் பங்கேற்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
மத்திய
அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி தமிழகம்
முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
சென்னை,
புதுக்கோட்டை, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு
மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மறியலிலும்,
ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டனர்.
இதில்
வேலுரில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கைதாகினர். இதில்
ஆண்கள் 300 பேரும் பெண்கள் 300க்கு மேற்பட்டோரும் கலந்துக்கொண்டனர்.
இவர்களை கைது செய்து காலை 11.00 அம்மையப்பர் மண்டபத்தில் வைத்திருந்தனர்.
பின்னர் மாலை 05.00 மணிக்கு விடுவித்தனர்.
புதுக்கோட்டையில்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 120 பெண்கள்
உள்பட மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மறியல்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்
2 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சிவகங்கையில் மறியல்
போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 400 ஆசிரியைகள் உள்பட 700
பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்ற 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ். குணசேகரன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் எம். அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டணியின் மாநில துணைத் தலைவர் செ. சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் தாமஸ் அமல்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மெய்யப்பன், சிஐடியு. மாவட்டச் செயலாளர் பி. வடிவேலு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார், கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் போஸ், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்ற 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ். குணசேகரன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் எம். அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டணியின் மாநில துணைத் தலைவர் செ. சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் தாமஸ் அமல்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மெய்யப்பன், சிஐடியு. மாவட்டச் செயலாளர் பி. வடிவேலு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார், கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் போஸ், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
8/30/2013
டிஇடி தேர்வு கீ ஆன்சரில் குளறுபடி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
TET
8/29/2013
உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற கோட்பாட்டை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்”
லேபிள்கள்:
PFRDA
இந்திய
அரசு கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற
நாம், ஓய்வூதியத்தின் கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமெனக்
கருதுகிறேன்.
வெறும் 33 ரூபாய்க்கு மேலே ஒருவர் சம்பாதித்தால்,
அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலானவர் என வரையறுத்துள்ள இந்தியத்
திட்டக்குழுத் துணைத் தலைவராக உள்ள மாண்டேக் சிங் அலுவாலியா, தன்னுடைய
அலுவலக கழிப்பறையை சீரமைப்பதற்கு மட்டும் 66 இலட்சம் ரூபாயை
செலவழித்துள்ளார்.
அவர் கேட்கிறார், தொழிலாளர்களுக்கு வெறும்
சம்பளம் மட்டும் போதுமே, வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும்
உங்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? எதற்காக உங்களுக்கு
ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனக் கேட்கிறார். உங்களால் நாட்டுக்கு என்ன
செல்வமதிப்பு சேர்க்கப்படுகிறது எனக் கேட்கிறார். இது கோட்பாட்டுப்
பிரச்சினை.
ஓய்வூதியம் குறித்த கோட்பாட்டை நாம் ஆழமாகப் புரிந்து
கொண்டால் தான் அவருக்கு நாம் பதிலளிக்க முடியும். நாம் வாங்குகின்ற
சம்பளத்தின் ஒரு பகுதி தான் ஓய்வூதியமாக நமக்கு வழங்கப்படுகின்றது என்ற
உண்மையை அவருக்கு புரிய வைக்க வேண்டும்.
1976ஆம் ஆண்டு இந்திரா
காந்தி பிரமராக இருந்த போது, இந்தியாவில் அவசரநிலைச் சட்டம்
பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது போனஸ் வழங்குவது நிறுத்தப்பட்டது.
நிறுவனத்திற்கு இலாபம் இருந்தால் மட்டும் தான், அதன் ஒரு பகுதி
தொழிலாளர்களுக்கு போனசாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இலாபமில்லையெனில்
போனஸ் கேட்க முடியாது என்றும் சொல்லப்பட்டது.
இதனை எதிர்த்து
நீதிமன்றத்தில் முறையிட்ட போது, நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு
சிறப்பானத் தீர்ப்பை வழங்கினார். போனஸ் என்பது நிறுத்தி வைக்கப்பட்ட
சம்பளம் (Deffered Wage) என அவர் தீர்ப்பு வழங்கினார். போனஸ் என்பது
சம்பளத்தின் ஒரு பகுதிதான் என்பதை அத்தீர்ப்பின் மூலம் அவர் உறுதி
செய்தார்.
அதே போல ஓய்வூதியம்(Pension) என்பது உழைப்புச்
சக்திக்கான தேய்மானம் (Labour Power depreciation). ஒரு எந்திரம்
இருக்கிறதென்றால் அதற்கென்று உள்ள வாராண்டி(Warranty) தனியாக
வழங்கப்பட்டும் கூட, இருப்பு நிலைக்குறிப்பில்(Balance Sheet) அதன்
தேய்மானமும் குறிப்பிடப்படுகின்றது. கட்டிடத்திற்கு தேய்மான நிதி
வழங்கப்படுகிறது. அதே போல, உழைப்புச் சக்தியை வெளியிடும் தொழிலாளர்களுக்கான
தேய்மானம் தான் ஓய்வூதியம். இதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு பணி ஓய்வுக்குப்
பிறகு வழங்கப்பட வேண்டும். இதை எல்லா நிலைகளிலும் தொழிற்சங்கத் தோழர்கள்
வலியுறுத்த வேண்டும். இதில் உணருவதில், உணர்த்துவதில் எவ்வித சமரசமும்
கூடாது.
ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலையில்(Automated
Industry) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, உடல் உழைப்பாக இருக்கட்டும்
அல்லது மூளை உழைப்பாக இருக்கட்டும், நாளொன்றுக்கு சராசரியாக 3200 கலோரிகள்
சக்தி தேவைப்படுகின்றது. வயது முதிரும் போது இது நாளொன்றுக்கு 2100 ஆக
தேய்கிறது.
ஒரு இயந்திரத்திற்கு பதில் இன்னொரு இயந்திரத்தை
அவர்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தொழிலாளர்களை அப்படி தூக்கிப்போட்டுவிட
முடியாது. எனவே தான், தொழிலாளர் சக்தியின் (Labour power) இந்தத்
தேய்மானத்தையே நாம் ஓய்வூதியமாகக் கேட்கிறோம். இந்தக் கோட்பாட்டை நாம்
அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.
தொழிற்சங்கங்கள் சமூக
உணர்வுடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. பொதுப் பிரச்சினைகளில், பொது
உரிமைச் சிக்கல்களில் தொழிற்சங்கங்கள் பங்களிப்பு செய்தல் வேண்டும். ஆனால்
நடப்பதென்ன? தொழிற்சங்கங்கள் நடைமுறையில் கூட்டு சுயநலமாக (Collective
Selfishness) மாறிவிட்டன. தொழிலாளர்களின் இது போன்ற பலவீனங்களை வாய்ப்பாக
பயன்படுத்திக் கொள்கின்ற ஆட்சியாளர்கள், அதற்கென அவர்கள் காலம் எடுத்துக்
கொண்டாலும் நம்மை பிளவுபடுத்தி காரியம் சாதிக்கின்றனர்.
அதனால்
தான், தொழிற்சங்கங்கள், இரசிகர்களுக்கு ஏற்ப கச்சேரி வாசிக்கும்
மன்றங்களாகச் சுருங்கி விட்டன. எனவே, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின்
கோரிக்கைகளை மட்டுமின்றி, பொதுப் பிரச்சினைகளிலும் ஆர்வம் செலுத்த
வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய
ஓய்வூதியத் திட்டத்தை எதிர்க்கின்ற நாம், அதற்கு அடிப்படையான புதிய
பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்தாக வேண்டும். அதை எதிர்க்காமல் இதை
மட்டும் எதிர்க்க முடியாது. நம்முடைய ஞாயங்களை வலிமையாக உணர்த்த வேண்டும்.
நாம் போராடுவது வீணல்ல. நம் போராட்டங்களுக்கு வலிமையுண்டு. நம்முடைய
ஞாயங்களுக்கும் வலிமையுண்டு. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற
நம்பிக்கையோடு போராடுவோம்!”
-----------------தோழர் கி.வெங்கட்ராமன்-----------------------------
80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன்
லேபிள்கள்:
அறிவிப்பு,
Educational News
நாடு முழுவதிலும் உள்ள 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
அனைத்திந்திய சேவை விதிகளின் இறப்பு மற்றம் ஓய்வு பலன்கள் தொடர்பான
பிரிவில் திருத்தங்களை கொண்டு வர அரசு பணியாளர் நலவாரியத்துறை முடிவு
செய்துள்ளது. இதன்படி அனைத்திந்திய சேவை துறைகளைச் சேர்ந்த 80 வயதிற்கு
மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் அடிப்படை ஓய்வூதிய தொகையை விட
கூடுதலாக 20 சதவீதம் ஓய்வூதிய தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் ஓய்வூதிய தொகை ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை அதிகரிக்கப்பட
உள்ளது. ஓய்வூதியதாரர் 85 வயதை கடக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும்
கூடுதல் ஓய்வூதிய தொகை 30 சதவீதமாக அதிகரிக்கும். இதே போல் 90 வயதை
கடக்கும் போது 40 சதவீதமும், 95 வயதை கடக்கும் போது 50 சதவீதமும் கூடுதல்
ஓய்வூதிய தொகை வழங்கப்படும். ஓய்வூதியதாரர் 100 வயதை எட்டும் போது அவருக்கு
வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதிய தொகை, அடிப்படை ஓய்வூதிய தொகையின்படி 100
சதவீதமாக்கப்படும்.
குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த
கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான மருத்துவ சலுகை தொகையும் கூடுதலாக்கப்படும்
என அரசு ஊழியர்களுக்கான துறை தெரிவித்துள்ளது.
பள்ளி மூடப்பட்டாலும் ஊதியம் வழங்கவேண்டும்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
court news
டி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்
லேபிள்கள்:
TET
சென்னை: டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை,
டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. "தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை,
செப்., 2ம் தேதிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி.,
கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த,
17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, ஏழு லட்சம் பேர்
எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், "ஸ்கேன்" செய்யும் பணி முடிந்ததை
அடுத்து, டி.இ.டி., முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய, இரு
தேர்வுகளுக்குரிய தற்காலிக விடைகளை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.
"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை,
செப்., 2ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்கலாம்.
ஆட்சேபனைக்குரிய விடை குறித்து தெரிவிப்பதுடன், சரியான விடைக்கான சான்றுகளை
இணைத்து, டி.ஆர்.பி.,க்கு தபால் அனுப்பலாம். டி.ஆர்.பி., அலுவலகத்தில்
வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும், கடிதங்களை சமர்ப்பிக்கலாம்" என, டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகள்
குறித்து, பாட வாரியான நிபுணர் குழு, விரிவாக ஆய்வு செய்து, இறுதி முடிவை
அறிவிக்கும். இதன் அடிப்படையில், இறுதி விடைகள், மீண்டும், டி.ஆர்.பி.,
இணையதளத்தில் வெளியிடப்படும்.
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு
லேபிள்கள்:
Educational News,
TET
சென்னை: கடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி.,
தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள்,
உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக,
மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி,
செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என,
டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக
டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆண்டு,
ஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள்
நடந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8
மற்றும் நவம்பர், 6 முதல் 9ம் தேதி வரை நடந்தன.
இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும்
சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய
தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும்,
செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்
நடத்தப்படும்.
கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று,
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை
பெற்றிருந்து, உரிய பட்டயச் சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான
சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத்
தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள்
அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி.,
இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில்,
தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, சான்றிதழ்களை
சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில்
அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
தற்காலிக அடிப்படையில் தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர்
விடுபட்டு இருந்தால், டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ்
சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன.
அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை
முறையிட்டும், அவர், தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை
வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை
வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள், கண்ணீர் விட்டு கதறினர். எனினும்,
தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள், கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை.
இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின்,
டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி
வாய்ந்த தேர்வர்களுக்கு, விபு நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை
வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.
பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு
லேபிள்கள்:
court news,
Educational News
தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த,
2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி
பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட காலியிடங்களை நிரப்புவதற்கான,
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில்
பதிவு செய்த, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் பதிவில், மாநிலங்கள் அளவில்,
பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல், மாவட்ட பதிவு மூப்பு
அடிப்படையில் தேர்வு செய்ய, மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக
அரசின் கல்வித் துறை, 2007ம் ஆண்டு, அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
"உரிமைக்கு எதிரானது':
இதனால், பாதிப்புக்கு உள்ளான வேலையில்லாத இடைநிலை ஆசிரியர்கள், இந்த ஆணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், "ரிட்' மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, பின், இரு நபர் அடங்கிய அமர்வு முன், மேல் முறையீடு செய்யப்பட்டு, விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால், இடைநிலை ஆசிரியர் தேர்வு முறையானது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் உத்தரவிட்டது. கடந்த, 2008ம் ஆண்டில் பிறப்பிக்கப் பட்ட இந்த உத்தரவில், "தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர், மற்றொரு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, அரசியல் அமைப்புச் சட்டத்தின், 14, 16 - 2 மற்றும் 19 - 1 பிரிவுகளுக்கு எதிரானது. எனவே, ஒட்டுமொத்த மாநில அளவில் தான், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்' என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது. அந்த மேல் முறையீட்டு, சிறப்பு அனுமதி மனுவை அனுமதித்து, சுப்ரீம் கோர்ட், 2008ம் ஆண்டு, அக்டோபர், 28ம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில், அதிக காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியை நிரப்ப, தமிழக அரசுக்கு அனுமதியளித்தது. மேலும், ஒரு மாவட்டத்தில் தேர்வாகும் ஆசிரியர்கள், தன் சொந்த மாவட்டத்தில் தான் பணியிடம் வேண்டும் என்றோ அல்லது தன் சொந்த மாவட்டத்திற்கு இட மாறுதல் வேண்டும் என்றோ கோரக் கூடாது எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
7,000 பேர் நியமனம்:
இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு, ஓர் அரசாணை பிறப்பித்து, மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 7,000 ஆசிரியர்களை நியமனம் செய்தது. அதில், 5,000 ஆசிரியர்கள், தங்களின் சொந்த மாவட்டங்கள் தவிர்த்து, தொலைதூர, பிற வெளி மாவட்டங்களில், எங்கெல்லாம் காலியிடங்கள் உள்ளதோ அங்கு பணியமர்த்தப்பட்டனர். இதில், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளைக் கொண்டிருந்தவர்கள், கருவுற்றிருந்த பெண்கள் என பலரும், தொலைதூரங்களில் ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டனர். இதனால், அவர்கள் பெரும் சிரமத்தை அடைந்தனர். இந்நிலையில், கடந்த, 2009ம் ஆண்டு மத்திய அரசால், குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 அமலுக்கு வந்தது. இதையடுத்து, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, நல்ல தகுதியான கல்வி வழங்க வேண்டும் என்பதால், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தகுதி தேர்வு முறை:
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர். இதையடுத்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது; தகுதித் தேர்வு முறை நடைமுறை படுத்தப்பட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, மேற்படி, 2009ம் ஆண்டு சட்டப்படி, தேவையற்றதாகி விட்டது. இதற்கிடையே, மேற்படி சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவால் பாதிக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தனியாகவும், தாங்கள் சார்ந்த அமைப்புகளின் சார்பாகவும், தங்களையும் வழக்கின் தரப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு கோரி, மேற்படி உத்தரவை ரத்து செய்ய வேண்டி, மனு செய்துள்ளனர். இந்த வழக்கு, விரைவில், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதிகள், எச்.எல்.கோகலே மற்றும் ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, பிற மாவட்டங்களில் பணியாற்றும், இட மாறுதல் வேண்டி, தகுதியிருந்தும் அவதியுறும் ஆசிரியர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
8/28/2013
தோழனே ஒரு வேண்டுகோள்......
லேபிள்கள்:
அறைகூவல்,
TNPTF NEWS
கடந்த ஒரு மாத காலமாக போராட்ட உணர்வுகளை உன்னிடம் தூண்டுவதற்காக இதுவரை 13 கட்டுரைகளை எழுதியுள்ளேன். இதை உன் சக தோழனிடம், உன் வட்டார ஆசிரியர்களிடம் முக நூல் மூலமாகவோ, அல்லது அச்சு நகல் எடுத்தோ பரப்பினாயா? இந்த போராட்ட காலத்தில் உன்னால் ஆன களப்பணியை செய்ய மறவாதே. உன் நண்பர்களிடம் நமது வலைதள முகவரியிலேப அல்லது முக நூல் முகவரியிலோ சென்று பார்வையிடச்செய். இதனால் ஒரு சதவீத ஆசிரியர்கள் கிளர்ந்தெழுந்தால் கூட நமக்கு வெற்றியே. கீழ் கண்ட 13 தலைப்புகளையும் நகலெடுத்து நமது மாவட்ட மறியலில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு கொடுப்பாய் என நம்புகிறேன். நான் இந்தளவிற்கு உருமாற்றம் அடைய என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய டி.என்.பி.டி.எப். முன்னாள் பொறுப்பாளர்களுக்கும், முன்னனி தோழர்களுக்கும் என் நன்றியினை தோழமையுடன் பகிர்கிறேன். ஆகத்து -3 ஒரு யுகப்புரட்சி நடக்கும் நாள். வெற்றி நமதே! நான் ஒரு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர் என்பதில் பெருமையடைகிறேன். நீயும் பெருமை கொள்வாய் என நம்புகிறேன்.
தொடர்ந்து நட்பில் உன்னிடம்.............
வலைதளம: www.mptnptf.blogspot.com
மின்னஞ்சல்: tnptfmuthupandian@gmail.com
முகநூல்: www.facebook.com/tnptfmuthupandian
செல்லிடபேசி: 9486449129
தலைப்புக்கள்:-
1. ஒரு இடைநிலை ஆசிரியரின் ஏக்கம்!!! 1.8.2013
2. ஏன் இந்த தயக்கம்? 07.08.2013
3. இதுவும் கடந்து போகட்டும்... 11.8.2013
4. ஒரு இடைநிலை ஆசிரியரின் அறை கூவல் 11.8.2013
5. அச்சம் தவிர் 13.8.2013
6. முடுக்கு - முடங்காதே! 14.8.2013
7. உண்மைகள் - கசக்கும் 16.8.2013
8. அடலேறு வேங்கையே! தயாராகிவிட்டாயா? உன் அடுத்த கட்ட சுதந்திர போருக்கு!!! 21.08.2013
9. எழுந்திரு தோழா! விடியல் உனக்காக காத்திருக்கு....... 21.8.2013
10. கூட்டுப்போராட்டத்திற்கு வேட்டு வைப்பதா? 22.8.2013
11. தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்? 23.8.2013
12. கூட்டுப்போராட்டம் - சாத்தியப்படுமா? 26.8.2013
13. தியாக வேங்கையே! திரட்டு உன் வரிப்புலி கூட்டத்தை!! 27.08.2013
இந்த செய்தியை படித்தவுடன் மற்றவர்களுக்கு பகிரவும்
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com
தொடர்ந்து நட்பில் உன்னிடம்.............
வலைதளம: www.mptnptf.blogspot.com
மின்னஞ்சல்: tnptfmuthupandian@gmail.com
முகநூல்: www.facebook.com/tnptfmuthupandian
செல்லிடபேசி: 9486449129
தலைப்புக்கள்:-
1. ஒரு இடைநிலை ஆசிரியரின் ஏக்கம்!!! 1.8.2013
2. ஏன் இந்த தயக்கம்? 07.08.2013
3. இதுவும் கடந்து போகட்டும்... 11.8.2013
4. ஒரு இடைநிலை ஆசிரியரின் அறை கூவல் 11.8.2013
5. அச்சம் தவிர் 13.8.2013
6. முடுக்கு - முடங்காதே! 14.8.2013
7. உண்மைகள் - கசக்கும் 16.8.2013
8. அடலேறு வேங்கையே! தயாராகிவிட்டாயா? உன் அடுத்த கட்ட சுதந்திர போருக்கு!!! 21.08.2013
9. எழுந்திரு தோழா! விடியல் உனக்காக காத்திருக்கு....... 21.8.2013
10. கூட்டுப்போராட்டத்திற்கு வேட்டு வைப்பதா? 22.8.2013
11. தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்? 23.8.2013
12. கூட்டுப்போராட்டம் - சாத்தியப்படுமா? 26.8.2013
13. தியாக வேங்கையே! திரட்டு உன் வரிப்புலி கூட்டத்தை!! 27.08.2013
இந்த செய்தியை படித்தவுடன் மற்றவர்களுக்கு பகிரவும்
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com
8/27/2013
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013
லேபிள்கள்:
TRB
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click Here for Tentative Answer Key
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
TRB - TN TET Official Key Answers for Paper 1 and Paper 2 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்
லேபிள்கள்:
TET
Tamil Nadu Teachers Eligibility Test
- 2013 - Click Here for Tentative Answer Key Paper I and Paper II
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
தியாக வேங்கையே! திரட்டு உன் வரிப்புலி கூட்டத்தை!!
லேபிள்கள்:
அறைகூவல்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உன் உரிமை மீட்பிற்காக வருகிற 30.8.2013 அன்று நடத்தவிருக்கும் மாபெரும் மறியல் போருக்கு உன் வரிப்புலி கூட்டத்தை திரட்டி விட்டாயா?. திட்டமிட்ட செயல் கெட்டுப்போனதாக வரலாறு இல்லை. தமது திட்டம் நாளைய வெற்றியின் படிக்கல். மறந்த போன நினைவுகளை! மழுங்கி போன உணர்வுகளை!! தட்டி எழுப்பி தன்மானமுள்ள தியாக வேங்கையாக போருக்கு புறப்பட தயாராகயிரு. உனது வெற்றி முரசு சத்தம் சக ஆசிரிய சகோதரனை தட்டி எழுப்பும் சங்கொலியாக அமையட்டும். உனக்கு இந்த ஒரு மாத காலத்தில் 10க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். அனைத்தையும் உன் சக ஆசிரியனிடம் பகிர்ந்தாயா?. அடடா! எத்தனை விமர்சனங்கள். அந்த விமர்சனங்கள்தான் என்னை கூர் தீட்டின. இன்று பெறவில்லையென்றால் என்று பெறப்போகிறோம்? நீண்ட இரயில் பயணத்தில் பயணிகளை பத்திரமாக சேருமிடம் சேர்க்கும் தொடர் வண்டி போல் தமிழக ஆசிரியர்களை பாதிப்புக்களின்றி பயணிக்க செய்கின்ற தொடர் வண்டிதான் டி.என.பி.டி.எப். ஆகஸ்டு புரட்சி இந்திய வரலாற்றில் இன்றளவும் பேசப்படுகிறது. அதை போலத்தான் நமது ஆகஸ்ட் மறியல் இயக்க வரலற்றில் பேசப்படும். ஆள்பவர்களுக்கும், ஆண்டு முடித்தவர்களுக்கும் சேதாரம் இல்லாமல் போரடுவது போல் பாசாங்கு செய்ய தெரியாது நமக்கு. நெஞ்சில் மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதுமில்லை என்ற இலட்சிய வேட்கையை நெஞ்சில் ஏந்தி வெற்றி கிட்டும் வரை போராட மட்டுமே நமக்கு தெரியும். தங்கம் செய்யாததை தங்கம் செய்யும் என்பதில் உறுதியுள்ளவன் நான். ஆகத்து-30 இலட்சியவாதிகள் சங்கமிக்கும் நாள். ஆளும் அரசின் மனதை மாற்றப்போகும் நாள். மற்றவர்கள் துணிந்து செய்யாததை துணிச்சலுடன் எதிர்கொள்வதே எமது இயக்கத்தின் வழக்கம். இது நமக்கான பாதிப்பு. நாம் திரட்டவில்லையென்றால் யாரால் இயலும்? நாம் திரட்டுகின்ற கூட்டம் எதிர் கால ஆசிரிய சமுதாயத்தின் இயல்பு வாழ்க்கைக்கு இடக்கூடிய அடி உரம். கூட்டு போராட்டம் சாத்தியப்படவில்லையா? என்ற வினாவினை பலர் தொடுத்து வருகிறீர்கள். அதற்கான முயற்சியை நமது தலைமை செவ்வனே செய்து வருகிறது. நாம் தலைமையேற்கவும் தயார் அல்லது மற்ற தலைமையோடு கூட்டுச்சேர்ந்து களம் காணவும் தயார் என்பதே நமது தலைமையின் நிலை. எனவே இயக்கம் இட்ட கட்டளையை நிறைவேற்ற பல போராட்ட களம் கண்ட தியாக வேங்கைகளே திரட்டு உன் படைகளை. நம் பலம் என்ன என்பதை மற்றவர்களுக்கு புரியவைப்போம். போராட்ட களம் ஒன்றும் நமக்கு புதிதல்ல. புரட்சிகரமான கோஷங்களால் புது வரலாறு படைப்போம். குள்ள நரி கூட்டங்களை நம் கூட்டம் கூண்டோடு விரட்டட்டும். நம்மை எள்ளி நகையாடுபவர்கள் நடுங்கி ஓடட்டும். நல்லவர்கள் கூட்டம் நம்மோடு இணையட்டும். களத்தை சூடுபடுத்தி இலட்சிய வேட்கையுடன் மறியல் செய்ய அழைத்து வா! உன் வரவை ஆவலுட்ன எதிர்பார்க்கிறேன். இரண்டு அம்ச கோரிக்கை வெல்வதற்குத்தான் நமது மாநில முதல்வர் கூட இரண்டு விரல் காட்டகிறார் போல்? நேரம் இரவு 12 ஆகிவிட்டது நாளை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரத்திற்கும் சுற்று பயணம் திட்டமிட்டுள்ளோம். வட்டார நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்த நாளை நேரில் உன்னை நோக்கி எமது பயணம். தோழனே வாழ்வாதாரத்ததை மீட்டெடுக்க உன் வரி-புலி கூட்டத்தை திரட்டிடுக. வெற்றி நமதே!
தோழமையுடன்.........
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com
Location: சிங்கம்புணரி
Singampunari, Tamil Nadu, India
மதிப்பெண் சான்றுகளில் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு புது உத்தரவு
லேபிள்கள்:
Educational News
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம் நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், பெயர் திருத்தம், இன்ஷியல் திருத்தம் மற்றும் ஜாதி திருத்தம் உள்ளிட்ட திருத்தம் கோரும் மனுக்கள், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில், தினந்தோறும் ஏராளமாக குவிந்து வருகின்றன. இவற்றை தவிர்க்கும் வகையில், பள்ளியிலேயே நடவடிக்கை எடுக்க, தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி சேர்க்கையின் போது, மாணவர்களின் பெற்றோரால், சரியான விவரம் கொடுக்கப்பட்டு, பள்ளி பதிவில் தவறு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, திருத்தம் மேற்கொள்ளப்படும். இதில் தவறு ஏற்படாத வகையில், 10ம் வகுப்பு பெயர் பட்டியல் அனுப்பப்படும் முன், அனைத்து விவரங்களையும், தலைமை ஆசிரியர் சரிபார்க்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன், பிறந்த தேதி, பெயர், இன்ஷியல், ஜாதி திருத்தம் கோரும் மனுவுக்கு, உரிய சான்றிதழ்களை சரிபார்த்து, தலைமை ஆசிரியரே, திருத்தம் மேற்கொள்ளலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 10ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் சான்று பெற்ற பின், திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது.
நீதிமன்றங்களில், ஒரு தலைபட்ச தீர்ப்பின் அடிப்படையில், திருத்தம் கோரும் விண்ணப்பங்களை பரிந்துரைக்கக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பு பெற்றாலும், பள்ளிக்கல்வி இயக்குனரின் அனுமதி பெறாமல், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட பள்ளி ஆவணங்களில் எவ்வித திருத்தமும், தலைமை ஆசிரியர் மேற்கொள்ளக் கூடாது.
பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால், பிறந்த தேதி தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அசல் மதிப்பெண் சான்று, முதல் வகுப்பு முதல் பயின்ற பதிவுத்தாள், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், எஸ்.எஸ்.எல்.சி., உறுதிமொழிச் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்டவற்றுடன், பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர் வழியாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிரம்பாத மாணவர்களுக்கு சிக்கல்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
Educational News
தூத்துக்குடி: பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 14 வயது நிறைவு பெறதாவர்களுக்கு, தேர்வு எழுதுவோர் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் ஆன்- லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தவறுகள் ஏற்படாமல் இருக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதன்படி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30.09.1999 க்கு முன் பிறந்தவர்களுக்கு மட்டுமே 14 வயது நிறைவு பெறும்.
இந்த தேதிக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆன்- லைனில் பதிவு செய்ய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் பிறந்தவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. 01.10.1999 முதல் 31.12.1999 வரை பிறந்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களிடம், சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதலாம், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு பின்பு பிறந்தவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வயதுடைய மாணவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரகம் சென்று அனுமதி பெறுவதற்கு, சென்னைக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. பல பள்ளிகளில் பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள தேதியை வைத்து ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர்.
இதில் அந்த மாணவர் பிற்காலத்தில் பணிக்கு செல்லும் போது பிறப்பு சான்றிதழில் ஒரு தேதியும், மதிப்பெண் சான்றிதழில் வேறு தேதியும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
காற்று வாங்கும் தனியார் பி.எட்., கல்லூரிகள்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தனியார் பி.எட்., கல்லூரிகளில், ஒரு மாதமாக மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், 75 சதவீத கல்லூரிகளில், 10 இடங்கள் கூட நிரம்பாத அவல நிலை நிலவுகிறது.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில், மொத்தம், 2,118 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள, 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் உள்ள, 55 சதவீத இடங்களும், ஒற்றை சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடத்தி அரசு நிரப்புகிறது. அதுபோல, தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களை, அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே நிரப்பி கொள்கின்றன.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில், மொத்தம், 2,118 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள, 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் உள்ள, 55 சதவீத இடங்களும், ஒற்றை சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடத்தி அரசு நிரப்புகிறது. அதுபோல, தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களை, அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே நிரப்பி கொள்கின்றன.
மாணவர் சேர்க்கை:
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்குவதற்கு முன், தனியார் கல்லூரிகள், பி.எட்., மாணவர் சேர்க்கை நடத்தி இடங்களை நிரப்ப துவங்கின. குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள், தனியார் கல்லூரிகளை சேர துவங்கினர். ஒரு மாத கலந்தாய்வில், தமிழகத்தில், 450க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில், 10 இடங்கள் கூட நிரம்பாத அவல நிலையே உள்ளது. முதுகலை பி.எட்., பட்ட படிப்பிலும், மொத்தமுள்ள, 35 இடங்களில், பல கல்லூரிகளில், 10 இடங்களுக்கே விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. அதிலும் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தால், இந்த இடங்களில் சேர, மாணவர்கள் முன் வருவதில்லை. சில கல்லூரிகளில், ஒரு பி.எட்., இடம் கூட போதாத நிலையும் நிலவுகிறது.
கலந்தாய்வுக்கு பின்...:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, பி.எட்., படிப்பிற்கான ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை நடக்கிறது. மொத்தமுள்ள, 2,118 இடங்களுக்கு, 11,950 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இக்கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்களே, பெரும்பாலும் தனியார் கல்வியியல் கல்லூரிகளையே நாடுவர். எனவே, கலந்தாய்வுக்கு பின், தனியார் கல்லூரி இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது: அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளிட்ட, பல பல்கலைக் கழகங்களில் இன்னும் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவரும் பட்சத்திலும், பி.எட்., படிப்பிற்கான ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த பின்னும், தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பும். கடந்தாண்டு துவக்கத்திலும், இதே நிலை நிலவியது. பின், தனியார் கல்லூரிகளில் உள்ள, 75 சதவீத இடங்கள் நிரம்பின. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது: அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளிட்ட, பல பல்கலைக் கழகங்களில் இன்னும் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவரும் பட்சத்திலும், பி.எட்., படிப்பிற்கான ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த பின்னும், தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பும். கடந்தாண்டு துவக்கத்திலும், இதே நிலை நிலவியது. பின், தனியார் கல்லூரிகளில் உள்ள, 75 சதவீத இடங்கள் நிரம்பின. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம்:அரசு புது உத்தரவு!
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
சென்னை: தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், தாசில்தார், உதவிப் பொறியாளர் உட்பட, பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால், "இம்மாதம் சம்பளம் குறைப்பு செய்ய வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ல், தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ல், தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
அறிக்கை:
இதுகுறித்து விசாரிக்க, கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், அரசு செலவினத் துறை முதன்மை செயலர் கிருஷ்ணன் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவினர், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் மற்றும் சங்கங்களிடம், கருத்து கேட்டனர். அதன் அடிப்படையில், அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர்.
அரசாணை வெளியீடு:
குழு அறிக்கை அடிப்படையில், கடந்த மாதம், 22ம் தேதி, துறை வாரியாக, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு, 200 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் வரை, ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.அதேநேரம், இன்ஸ்பெக்டர், தாசில்தார், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் உட்பட பலருக்கு, சம்பளம் குறைக்கப்பட்டது. "புதிய சம்பளம், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
தடை:
சம்பளம் குறைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர். அதைத் தொடர்ந்து, "இம்மாதம் பழைய சம்பளம் வழங்க வேண்டும்; சம்பளத்தை குறைக்கக் கூடாது' என, துறை அதிகாரிகள் மூலம், கருவூலத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கருவூலத் துறை அதிகாரிகள், "கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும், அதே சம்பளம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கப்படும்' என, தெரிவித்தனர். இதனால், ஊழியர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இவ்விவரத்தை, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கோர்ட் தடை உத்தரவு காரணமாக, சம்பளம் குறைக்கப்பட்டவர்களுக்கு, பழைய சம்பளத்தையே, இம்மாதம் வழங்க வேண்டும் என, நேற்று, அரசாணை வெளியிடப்பட்டது. புதிய அரசாணை, அனைத்து கருவூலத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆகத்து -30ல் மாவட்டம் குலுங்கும் TNPTF மறியல் போர்
லேபிள்கள்:
TNPTF NEWS
8/26/2013
ஆக.30-ல் மறியல் போராட்டம் : 50 ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு
லேபிள்கள்:
TNPTF NEWS
மத்திய அரசுக்கு இணையாக தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம்
வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ம் தேதி
நடைபெறும் மறியல் போராட்டத்தில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற் குழு
முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 25.8.2013
அன்று குற்றாலத் தில் மாநிலத் தலைவர் தி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு, சங்கத்தின் மாநிலத் தலைவர் தி.கண்ணன், பொதுச்
செயலாளர்(பொறுப்பு) செ.பாலச்சந்தர், பொருளாளர் ச.மோசஸ் ஆகியோர் கூட்டாக
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’ஜாக்டி அரசு ஊழியர் பேரமைப்பின்
ஒன்றுபட்ட தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக மத்திய அரசுக்கு இணையான
ஊதியம், தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஊதியம்
கடந்த 1.6.1988 முதல் 22 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டு ஆசிரியர்கள்
பெற்று வந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவிலும், ஒரு
நபர் குறை தீர்க்கும் குழுவிலும், மூன்று நபர் குறை தீர்க்கும் குழுவிலும்
இந்த ஊதிய விகிதம் மறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த
சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதிய
முரண்பாடுகள் சரிசெய்யப்படும் எனவும், தன் பங்கேற்பு ஓய்வூதியம் ரத்து
செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறையே அமுல்படுத்தப்படும் எனவும் அதிமுக
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தேர்தல்
வாக்குறுதியை நிறைவேற்றப் படவில்லை.
எனவே, அரசின் கவனத்தை
ஈர்க்கும் வகையில், மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென
வலியுறுத்தி வருகின்ற 30.08.2013 அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 50
ஆயிரத்தி ற்கும் அதிகமான ஆசிரியர்களைத் திரட்டி பெருந்திரள் மறியல்
போராட்டங்களை நடத்துவது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுப்போராட்டம் - சாத்தியப்படுமா?
லேபிள்கள்:
அறைகூவல்
இன்றைய சூழ்நிலையில் கூட்டுப்போராட்டம்தான் நம் துயர் துடைக்க சரியான பாதை என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் 7 இயக்கங்கள் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் அங்கம் வகித்தன. மூன்று நபர் குழு அறிக்கைக்கு பின்னர் வெளிவந்த அரசானைணளில் இடைநிலை ஆசிரியர்கள் திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்த உடன் அரசாணைகள் வெளிவந்த அன்றே தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார தலைநகங்களிலும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தி தமிழக அரசிற்கு தனது எதிர்ப்பை முதலாவதாகவும், மிகவும் கடுமையாகவும் பதிவு செய்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. அதன் பின்னரும் டிட்டோ - ஜேக் இயக்கத்தில் உள்ள எந்தவொரு அமைப்பும் கூட்டு நடவடிக்கை மூலம் இந்த அநீதியை எதிரப்போம் என்று குரல் கொடுக்கவில்லை. மற்ற இயக்கங்கள் செய்ய மறந்த, செய்ய மறுத்த பல விசயங்களை தன் ஆக்ரோஷமான இயக்க நடவடிக்கைகளால் டி.என.பி.டி.எப். செய்து முடித்து வெற்றி கண்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கடந்த 18ந் தேதி தனது தலைமை அலுவலகத்திற்கு கூட்டு நடவடிக்கை குறித்து விவாதிக்க டிட்டோ-ஜேக்கில் அங்கம் வகிக்கும் 7 சங்க தலைமைக்கும் எமது பொதுச்செயலாளர் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் பின்னாலும் இயக்க தலைமையால் தொலைபேசியிலும் அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் 18ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூட்டு நடவடிக்கையில் அங்கம் வகித்த சில இயக்கங்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்காத காரணங்கள் குறித்து நாம் அலச போவதில்லை. அதனால் சில தேவையில்லாத சச்சரவுகளே வலம் வரும். நாம் வேண்டுவதெல்லாம் என்ன காரணத்தால் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம். தயங்குவதால் தரத்தில் தாழ்வு நிலைக்கு தரம் தாழ்ந்து போகப்போவது இடைநிலை ஆசிரியர்கள்தான். ஒரு வேளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அழைத்து நாம் போவதா? என்ற ஈகோ மற்ற இயக்கங்களுக்கு இருந்தால் டிட்டோ-ஜேக் என்ற பதாகையின் கீழ் ஒன்று சேர்ந்து போராட நமக்கு அழைப்பு விடட்டும். எங்கள் தலைமைக்கு ஈகோவெல்லாம் கிடையாது. எங்களுக்கு கோரிக்கைதான் முக்கியம். கோரிக்கையின் தீவிரம் அறிந்து போராட எமது அமைப்பு தயாராகவே உள்ளது. அதற்கான வேண்டுகோளை எங்களால் எங்கள் தலைமைக்கு வைக்க முடியும். எங்கள் வேண்டுகோளை எங்கள் தலைமை நிச்சயம் ஏற்கும். அதற்கான உறுதியை எங்களால் தர இயலும். எமது வேண்டுகோள் மற்ற சகோதர இயக்கங்களை சார்ந்த தோழர்களும் தங்கள் தலைமைகளை ஏன் கூட்டுப்போராட்டத்திற்கு செல்ல மறுக்கிறீர்கள் என்று வினா தொடுத்து அவர்களையும் கூட்டு இயக்க நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். 18.8.2013 அன்று டி;டோ-ஜேக் அமைப்பில் உள்ள அனைத்து இயக்கஙகளும் ஒன்று சேர்ந்திருந்தால் 30.8.2013 டிட்டோ-ஜேக் மாவட்ட மறியலாகவும், 25.9.2013 மாநில மறியலாகவும் போராட்ட களம் தயார் படுத்தப்பட்டிருக்கும். தனிச்சங்க நடவடிக்கை என்பது பலம்பொருந்திய தனி மெஜாரிட்டி உள்ள ஆளும் அரசை அசைத்து பார்க்க இயலுமா? நாம் ஒன்று சேர்ந்து அசைத்தால் அம்மா அசைந்தே ஆக வேண்டும். அசைப்பதற்கு ஏன் இந்த தயக்கம். கோரிக்கை வென்றெடுத்தால் தம்மால்தான் வென்றெடுக்கப்பட்டது என்று தமது இயக்க வரலாற்றில் பதிவு செய்ய முயலும் இயக்கஙகள் கூட்டு வெற்றியை கொண்டாட மறுப்பது ஏன்? நெஞ்சில் மூண்ட நெருப்பிற்கு சமரசம் ஏதும் இல்லை என்ற இலட்சிய வேட்கையை எம் நெஞ்சில் நிறுத்தி போராட்ட களம் காணும் எங்களால் பொறுக்க இயலவில்லை. மற்ற இயக்கத்தினை குறை கூற இதை பதிவிட வில்லை. எமது ஆற்றாமையை, ஏக்கத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறோம். இது எமது சொந்த கருத்தே. எப்பாடுபட்டாவது இயக்கங்களை ஒன்றினைத்து வெற்றி கனியை பறித்து விட மாட்டோமா? என்ற அவாவே காரணம். ஆகவே தேழனே இடைநிலை ஆசிரியனின் இன்னல் தீர்க்க கூட்டு போராட்டத்திற்கு வித்திடுவோம். காலம் கடந்து எடுக்கப்படும் முடிவு விழலுக்கு இரைத்த நீராக அமைந்து விடும். இயக்க தலைமைகளை நிர்பந்திப்போம். இன்னல் தீர்க்க இணைந்து போராடுவோம். நீ முடிவெடுத்தால் அனைத்தும் சாத்தியமே!.
தோழமையுடன்.........
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com
இரட்டைப்பட்டம் - வழக்கு நாளை விசாரணைக்கு வருவது கேள்வி குறியே?
லேபிள்கள்:
court news,
dual degree
அனைத்து ஆசிரியர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஆனால் தலைமை நீதியரசர் மதுரை பலகைக்ககு மாற்று பணியாக இன்றும், நாளையும் இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் வழக்கு நாளை வருவது சந்தேகம்தான் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் வழக்கு 29.8.2013 அன்று வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ம்ம்ம்ம்ம்......... எப்ப விடியும்னு பார்க்கலாம்.
பதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2–க்கு சமமாக கருதலாம் ஐகோர்ட்டு உத்தரவு
லேபிள்கள்:
court news,
Educational News
ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர்
சென்னை
ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.
தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ
(டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.
ரத்து செய்ய வேண்டும்
பணி
மூப்பு அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடுநிலைப் பள்ளி தலைமை
ஆசிரியையாக பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால் பிளஸ்–2
படிக்காதவர்களுக்கு இந்தப் பதவி உயர்வு பெறத் தகுதி இல்லை என்று
கூறப்பட்டது. இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் 13.9.2011 தேதியிட்ட
வழிகாட்டி உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு உண்டு
இந்த
மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
தொடக்கக் கல்வி இயக்குனரின் அந்த உத்தரவை மற்றொரு வழக்கில் கடந்த 2.7.12
அன்று ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மற்றொரு
வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ
கல்வி, பிளஸ்–2 படிப்புக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த
உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும். எனவே மனுதாரருக்கு பதவி உயர்வு
பெறும் உரிமை உள்ளது. அதன்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக அவருக்கு
பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கேற்ற பணப் பலன்களையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு ஏன் நிராகரிக்கவேண்டும்?
லேபிள்கள்:
Educational News
ஓய்வூதியம்
என்றால் என்ன? நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும்
பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப்
பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான
மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே
தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல்
‘ஓய்வூதியச் சட்டம் 1871’ நிறைவேற்றப்பட்டது.
‘ஓய்வூதியம் என்பது
ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி
ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில்
சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த
நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர்
மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல்
சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த
அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று
தீர்ப்பு அளித்துள்ளது.
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத்
பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972)
நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை
இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு
வருகிறது. இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது.
ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும்
ஊழியருக்கு உண்டு.
ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40
ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது
எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில்
அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப்
பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து
ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித்
திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம் 1952
(Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும்
என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது
சட்டவிரோதச் செயலாகும்.mm
இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை
பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்
22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு
உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான்
பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ‘புதிய
ஓய்வூதியத் திட்டம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி
ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா
ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின்
புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .ஓய்வூதிய விதிகளில்தான்
பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும்
குடும்ப ஓய்வூதிய விதிகளும், பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை
இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன.
நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும்,
வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003 முதல் முன்தேதியிட்டு
நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும்
செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும்
சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். இது பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில்
நிதித்துறையின் செயல்பாடு.
2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ்
தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா.ஜ.க. கொண்டுவந்த
நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்று ‘ஓய்வூதிய நிதியை
ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund
Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த
அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க 2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill
–ஐ அறிமுகப்படுத்தியது. ஆனால், ஐ.மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து
ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை
14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க
முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது.
பி.எஃப்.ஆர்.டி.ஏ 2005 பில் –ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை
அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின்
பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு
நீட்டித்தது. 10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல்
8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த
காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது
8.4.2010 முதல் சட்டபூர்வத்
தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க ஐ.மு.கூட்டணி2 அரசு
24.3.2011ல் ‘.பி.எஃப்.ஆர்.டி.ஏ 2011 பில்’ என அறிமுகப் படுத்தியது.ஆனால்
இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத்
தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ‘இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான்
அறிமுகப்படுத்த வேண்டும்’ என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான
உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று
மசோதாவை அறிமுகப் படுத்தியது.
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா
சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப்
பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத்
திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில்
10% பிடித்தம் செய்யப்படும். இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த
ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு
செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின்
ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி
ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா?
புதிய ஓய்வூதியத்திட்டத்தில்
1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது.
2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது.
3.குடும்பஓய்வூதியம் கிடையாது.
4.பணிக்கொடை கிடைக்காது.
5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது.
-இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு
ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள்.
இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏற்பட உள்ள
ஆபத்துக்களையும், அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்ட தமிழக முதல்வர்
செல்வி.ஜெ.ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னும், தேர்தலில் வென்று
ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னும்’தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டமே
தொடரும்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்’ என்று
உறுதியளித்தார்.
அந்த உறுதிமொழியைத் தமிழக முதல்வர்
நடைமுறைப்படுத்தும் நாளைத்தமிழ் நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
செ.நடேசன் முன்னாள் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
8/24/2013
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கேள்விக்குறி.
லேபிள்கள்:
Educational News
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இம்மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டம் இருக்கும் வரை, அதன் நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படும்.எனவே, அதுவரை, பட்டதாரி ஆசிரியர்களின் சம்பள கணக்கு, தற்காலிகநிலையில் இருக்கும். திட்டம் முடிந்தபின், பொது சம்பள கணக்கிற்கு, ஆசிரியர்கள் மாற்றப்படுவர். இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., நிதியில் இருந்து, சம்பளம் வழங்குவதற்கு வசதியாக,பள்ளி கல்வித் துறை சார்பில், அரசாணை பிறப்பிக்கப்படும். ஏற்கனவே வெளியிட்ட அரசாணை, 2011 உடன் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அரசாணை இல்லாமல், ஒன்றரை ஆண்டுகளாக, ஆசிரியர்கள் சம்பளம் பெற்று வந்தனர்.இந்நிலையில், அரசாணை இல்லாததை காரணம் காட்டி, "நடப்பு மாதத்திற்கு, சம்பளம் வழங்க முடியாது' என, ஈரோடு மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார். இதை, சார் கருவூல அதிகாரிகளும், தெரிவித்துள்ளனர். இதனால், அம்மாவட்டத்தில் பணிபுரியும், 2,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல், பல்வேறு மாவட்டங்களில், "சம்பளம் வழங்க முடியாது' என, கருவூலஅதிகாரிகள், கை விரித்துள்ளதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரமண்ட் பேட்ரிக் தெரிவித்தார். பேட்ரிக், மேலும் கூறுகையில், ""இந்த பிரச்னையை, தொடக்க கல்வித் துறை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஓரிரு நாளில், பிரச்னையை தீர்ப்பதாக, இயக்குனர் உறுதி அளித்துள்ளார்,'' என, தெரிவித்தார்.
EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள்.
லேபிள்கள்:
Educational News
*2013~2014மாணவர் விபரம் ( தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.
*2013~2014முதல் வகுப்பு (மட்டும்) மாணவர் விபரம் படிவங்களில் நிரப்பி வைக்கவும்.
*2012~2013 கல்வியாண்டில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 2013 ஏப்ரல் 30 அன்று பள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை விவரங்களோடு ஒத்து போக வேண்டும்.
*விடுபட்டவர் விபரம் சேர்க்கவும், கூடுதலாக உள்ள தவறான விபரம் நீக்கிடவும் வேண்டும்.
*மாணவர் பெயர்,பிறந்த தேதி,இனம் ,தகப்பனார் பெயர் சரியாக உள்ளதா என சரி பார்க்கவும்.
*ரத்த வகை ,கைபேசி எண், சகோதரர்களின் பிறந்த நாள் விவரம் வேண்டி மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
*வருங் காலங்களில் பள்ளி மாற்றுச்சான்றிதல்களிலேயே மாணவருடைய
யுனிக்க்யூ கோட் குறிப்பிட்டு விடவும்.
*தங்களது பள்ளி U DISE எண்ணை கரும் பலகையில் குறிப்பிடவும்.
*அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி எண்ணை தெரியப் படுத்திடவும்.(3309040****)
*பள்ளிகளில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு EMIS இணைய தளத்தின் முதல் பக்கம் பதிவிறக்கம் செய்து குழுவினரிடம் அளிக்கவும்.
*அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டு..."அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டதென" சான்று தங்களுக்கு அளிக்கப்படும்.
அரசுக் கடித எண். 8764 நாள்: 18.4.2012-ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.
லேபிள்கள்:
Educational News
கடித எண்.8764 நாள் : 18.4.2012 பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.
இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர் தேர்வுநிலை/ சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.
(பார்வை 2 இல் அரசாணை 270 நாள்.26.8.2010. உள்ளது.)
இதன் படி சிறப்புபடி GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்ததால் இதனை பெற்றவர்கள் குறித்து நமது முந்தைய பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம். 1.8.2010 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அரசாணைப்படியான சிறப்புப்படியை டிசம்பர் 2010 வரை அனைத்துநிலை இடைநிலை ஆசிரியர்களும் பெற்றிருப்பர்.
பின்னர் அரசாணை 23 நாள் 12.1.2011 இன் படி(பத்தி 4) " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்று உள்ளது.
இவ்வாறு சிறப்புபடியினை தொடர்ந்துபெற அனுமதிக்கப்பட்டவர்கள், 1.1.2006 -க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களே.
இதனையே கடித எண் .8764 நாள்.18.4.2012 இல் " பார்வை இரண்டில் (அரசாணை 270) கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் (GRANTED TO SECONDARY GRADE TEACHERS) மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர் தேர்வுநிலை/ சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.
தணிக்கையில்
தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பது
சார்ந்து நமது விளக்கம்:
தணிக்கை தாளில் ஒரு பக்கத்தில் கீழ்காணும் வரிகள் உள்ளது:
"கீழ்வரும் ஆசிரியர்கள் அரசாணை எண். 270 நாள்.26.8.2010-ன்படி 1.8.2010 முதல் சிறப்புப்படியாக ரூ.500/- பெற்று வருகின்றனர். அரசு கடித எண். 8764/நாள் 18.4.2012 பத்தி 2 (இ ) இல் 1.1.2006 -க்கு முன்னர் தேர்வுநிலை/சிறப்புநிலை பற்றவர்களுக்கு மட்டுமே இச்சிறப்புப்படி அனுமதிக்கப்படவேண்டும் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் சிறப்புப்படி பெற தகுதியில்லை. 1.8.2010 முதல் சிறப்புப்படி தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும்."என்று உள்ளது.
இது தவறான புரிந்துகொள்ளுதலினால் எழுதப்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம்.
இங்கு நமது விளக்கம்:
இந்த தணிக்கைத் தாள்களில் பெரும்பாலும் 2009, 2010, 2011 ஆம் ஆண்டுகளில் தேர்வுநிலை முடித்தவர்களுக்கு தனிக்கைதடை என்று கூறியுள்ளதாக அறிகிறோம்.
கடித எண். 8764 ஐ, இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட G.O.270.Dt.26.8.10 மற்றும் G.O.23 Dt.12.1.11 இல் கூறப்பட்டுள்ளவைகளை பார்க்காமல் நடைமுறைபடுத்தியதால் தான் தணிக்கைதடை என்று கூறுகின்றனர்.
மிகவும் சுருக்கமான விளக்கம்:
அரசாணை 270 நாள்: 26.8.10 இன் மூலம் அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1.8.2010 முதல் தனி ஊதியம் அனுமதிக்கப்பட்டது.
அரசாணை 23 நாள்:12.1.11 இன் மூலம் தேர்வு/சிறப்பு நிலை பெற்று 9300-34800 + 4300 மற்றும் 4500 தர ஊதியம் பெறுபவர்களுக்கு சிறப்பு படி தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு சிறப்புபடிக்குப் பதிலாக தனி ஊதியம் வழங்கப்பட்டது. இதனையே கடிதம் 8764 இல் 1.1.2006 -க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே இச்சிறப்புப்படி அனுமதிக்கப்படவேண்டும் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் அரசாணை 23 இல் சிறப்புபடியை தொடர்ந்துபெற அனுமதிக்கப்பட்டவர்கள்.
============================== ==============================
அன்பு வேண்டுகோளும் எங்களின் ஆதரவும்:
அரசாணைகளை நன்றாக படியுங்கள். எங்களுக்கு தெரிந்தவரை விளக்கமளித்துள்ளதாக நம்புகிறோம். மீண்டும் மீண்டும் பொறுமையாக படியுங்கள். நம் ஆசிரியர் சமுதாய நண்பர்களுக்காக அதிக நேரம் செலவு செய்து பதிவு செய்துள்ளோம்.
அரசாணைகள் தெளிவாக உள்ளது. தைரியமுடன் இருங்கள். அரசாணைகளில் உள்ளவைகளை அறிந்து கொண்டால் எந்த தடை வந்தாலும் அரசாணைகளை வைத்து விளக்கி நாம் பெற்ற பயன்களை தொடர்ந்து பெறலாம்.
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)