பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/27/2012

Tamil Nadu Teacher Eligiblity Test (TNTET) - 2012 - District wise Employment Office and Code for Filling TET Application Forms

அரசு இணையதளங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

கோவை :அரசு துறைகளில் புரையோடும் லஞ்சத்தை வேரறுக்கவும், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும், லஞ்ச ஒழிப்பு இயக்குனரின் இணையதள முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கட்டாயமாக வெளியிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் எந்த துறையிலும், லஞ்சம் ஆல விருட்சமாக ஊடுருவி வருகிறது. லஞ்சத்தை வேரறுக்க, எத்தனை முயற்சி எடுத்தாலும், அரசு துறைகளில் கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரை வியாபித்து, பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. குமஸ்தாக்கள், வி.ஏ.ஓ.,க்கள், தாசில்தார்கள் லஞ்சம் வாங்கி கைதாவது ஒருபுறம் இருக்க, இப்போதெல்லாம், பெரும் முதலைகளும் லஞ்ச வலைக்குள் விழுகின்றன. சுங்கத்துறை கூடுதல் இயக்குனர் ராஜன், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உட்பட உயர் அதிகாரிகளும் லஞ்ச வழக்குகளில் கைதாகியுள்ளனர். கர்நாடகாவில் ஒரு எம்.எல்.ஏ., லஞ்சம் வாங்கியபோது, கையும், கரன்சியுமாக கைதானார்.
லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, லஞ்சம் கொடுப்பதும் குற்றம். இது குறித்து பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை. தங்கள் காரியம் சாதித்தால் போதும்; அதற்கு சிறிதளவு செலவழித்தால், என்ன இழப்பு ஏற்படப்போகிறது என்ற மக்களின் சுயலாப சிந்தனையும் லஞ்சம் பெருக, முக்கிய காரணம்.
லஞ்சம் என்பது தீமையானது; அதை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற விழிப்புணர்வை, மக்கள் இடையே ஏற்படுத்தும் நடவடிக்கையை, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் எடுத்து வருகிறது. இதற்கான முதல்கட்ட முயற்சியாக, அரசின் பல்வேறு துறைகளின் இணையதளங்களில், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரின் இணையதள முகவரி மற்றும், தொலைபேசி எண்களை வெளியிடவும், இதற்கான இணையதள தொடர்பு (லிங்க்) அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை செயலகத்தின் அனைத்து துறைகள் மற்றும் துறை தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
ஊழல் என்பது ஒரு பாவம். அது ஆரம்ப நிலையிலேயே ஒழிக்கப்பட வேண்டும். லஞ்சம், ஊழல் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையர் அரசிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி, அரசின் அனைத்துத் துறை இணையதளங்களிலும் கீழ்கண்ட வாசகங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அந்த வாசகங்கள்:
லஞ்சம் சட்டவிரோதமானது; லஞ்சம் பற்றிய புகார்களை பின்வரும் முகவரிக்கு எழுதி அனுப்பவும். விழிப்புப் பணி, லஞ்ச ஒழிப்பு இயக்குனர், சென்னை - 28.
தொலைபேசி எண்: 2461 5989/ 2461 5929/ 2461 5949 இந்த கோரிக்கை குறித்து அரசு நன்கு பரிசீலித்தபின், தலைமை செயலக நிர்வாக துறை மற்றும் அனைத்து துறைகளின் தலைவர்களும் மேற்கண்ட வாசகங்களை தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரின் இணையதளத்துக்கு தொடர்பு (லிங்க்) ஏற்படுத்தி தருமாறு, உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, தலைமை செயலாளர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

3/26/2012

மாநிலச் செயற்குழு - 25.3.2012






தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி வழிக் கல்வி!

தமிழகத்தில், பரவலான அளவில், பள்ளிகளில், கணினி வழிக் கல்வியை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள்;
* அடுத்த 5 ஆண்டு காலங்களில், 1880 மேல்நிலைப் பள்ளிகள், 461 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 2341 பள்ளிகளில், கணினி வழிக் கல்வித் திட்டம் பூட் முறையில் செயல்படுத்தப்படும்.
* இத்திட்டத்திற்காக, முதல் தவணையாக 31 கோடியே, 21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையம், பெரியகுளம், விருதுநகர் மாவட்டம் வீரசோழன், பழனி மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் ஆகிய ஊர்களிலுள்ள 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் செலவில் ஸ்மார்ட் பள்ளிகள் நிறுவப்படும்.
* இதற்கடுத்த நடவடிக்கையாக, அதே 1 கோடியே 25 லட்சம் செலவில், திருச்சி மாவட்டத்திலுள்ள அயிலாப்பேட்டை, திருச்செந்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை மற்றும் இனாம்குளத்தூர் ஆகிய இடங்களிலுள்ள 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் பள்ளிகள் தொடங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
* மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க, பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும்பொருட்டு, தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
* நடுநிலைப் பள்ளி என்பதிலிருந்து, உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைக் கூடங்களைப் பராமரிக்க தேவையான 544 ஆய்வக உதவியாளர் பணிகளும், அலுவல் பணிகளை மேற்கொள்ள, தேவையான 344 அளவு இளநிலை உதவியாளர் பணிகளும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகல்வித் துறைக்கான அரசு அறிவிப்புகள்

தொடக்கப்பள்ளி துறையில் உள்ள 1044  இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தியும், பள்ளிகல்வித் துறையில் உள்ள 2341 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கணினி வழி கல்வியை BOOT  திட்டத்தின் மூலம் செயல் படுத்த ரூ. 32 .14 கோடி ஒதுக்கீடு செய்தும் , மேலும்  5  பள்ளிகளை தேர்ந்தெடுத்து அறிவுசார் பள்ளிகளை ( Smart School) அமைக்கவும் தமிழக அரசு ஆணை

3/25/2012

கணவனின் பென்ஷனை 2ம் மனைவி பெற முடியாது

சென்னை:கணவரின் பென்ஷன் தொகையைப் பெற, இரண்டாவது மனைவிக்கு உரிமையில்லை. ஆனால், அவருக்கு பிறந்த குழந்தைகள் பெற உரிமையுள்ளது என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில், போர்மென் ஆக சாய்ராம் என்பவர் பணியாற்றினார். இவர், கிருஷ்ணவேணி என்பவரை, 1983ம் ஆண்டு திருமணம் செய்தார். முதலில் ஒரு குழந்தை பிறந்தது. கணவன் தன்னை சரிவர நடத்தவில்லை எனக் கூறி, தாயார் வீட்டுக்கு கிருஷ்ணவேணி சென்றார்.
கிருஷ்ணவேணியின் சகோதரரின் திருமணத்தின் போது, இருவரும் ஒன்று சேர்ந்தனர். அதையடுத்து, ஒரு குழந்தை பிறந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின், மனைவியை விட்டு சாய்ராம் பிரிந்து சென்று விட்டார். அதன்பின், மீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, இரண்டு குழந்தைகள்.பணியில் இருந்த சாய்ராம், 1995ம் ஆண்டு இறந்தார். அதையடுத்து, சட்டப்பூர்வமான மனைவி என்றும், கணவருக்கு வர வேண்டிய பென்ஷன் சலுகைகளைப் பெற, தனக்கு உரிமையுள்ளது என்றும் கேட்டு, மத்திய அரசு நிறுவனத்துக்கு, கிருஷ்ணவேணி கடிதம் அனுப்பினார்.
அதற்கு, தனக்குரிய உரிமைகளைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தில் நாமினியாக மீராவை குறிப்பிட்டிருப்பதால், அவருக்கே பென்ஷன் தொகையை வழங்க முடியும் என, மத்திய அரசு நிறுவனம் பதிலளித்தது.சட்டப்படியான வாரிசு என்பதால், கணவருக்கு கிடைக்க வேண்டியதைப் பெற, தனக்கும், குழந்தைகளுக்குமே உரிமையுள்ளது எனக் கூறி, சென்னை குடும்ப நல கோர்ட்டில், கிருஷ்ணவேணி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த குடும்ப நல கோர்ட், விண்ணப்பத்தில், நாமினியாக மீராவை குறிப்பிட்டிருப்பதால், அவருக்கே கணவருக்கு வர வேண்டிய பலன்கள் சேரும் என உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணவேணி, அவரது குழந்தைகள் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, விமலா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கைப் பொறுத்தவரை, சாய்ராமுக்கும், மீராவுக்கும், 1987ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் நடக்கும் போது, சட்டப்பூர்வமாக, 1983ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணவேணி, உயிருடன் இருக்கிறார். இந்த திருமணம் நிலுவையில் உள்ள போது, இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் பெற உரிமையில்லை. எனவே,கிருஷ்ணவேணியும், அவரின் குழந்தைகளும், பென்ஷன் தொகையை பெற உரிமையுள்ளது.
தனது வாழ்நாள் முழுவதும், கிருஷ்ணவேணியும், 25 வயது வரை குழந்தைகளும், பென்ஷன் பெற உரிமையுள்ளது. அதே நேரத்தில், மீராவுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும், பென்ஷன் பெற உரிமையுள்ளது. ஆனால், மீராவுக்கு உரிமையில்லை.எனவே, கிருஷ்ணவேணி, அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் மீராவின் இரண்டு குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பென்ஷன் தொகையை, கணக்கிட்டு வழங்க வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

 Yahoo! தினமலர்

3/24/2012

ஒரே நாளில் 4 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை : கூட்டம் அலை மோத, அமாவாசை காரணம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே, நான்கு லட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. நேற்று அமாவாசை நல்ல நாள் என்பதால், விண்ணப்பங்களை வாங்க, பட்டதாரிகள் முட்டி மோதினர்.இவர்கள் மட்டும்விதிவிலக்கா என்ன?மாநிலம் முழுவதும் உள்ள, 66 மாவட்ட கல்வி அலுவலகங்களில், காலை 9.30 மணியில் இருந்து, விண்ணப்பங்களை வழங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியிருந்தது. விண்ணப்பங்களைப் பெற, நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும், பட்டதாரிகளும், காலையில் இருந்தே காத்திருந்தனர்.சென்னையில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களிலும், போதுமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனால், பெரிய அளவில் கூட்டம் இல்லை. விண்ணப்பங்களை எளிதில் பெற்றுச் சென்றனர்.நபர் ஒருவருக்கு, 10 விண்ணப்பங்கள் வரை வழங்கப்பட்டன. விண்ணப்பங்களை பெற வந்தவர்கள், "அமாவாசை நல்ல நாள் என்பதால், இன்றே வாங்க வந்தோம்' என்றனர்.2 லட்சம் கூடுதல்...சென்னையில் அதிகம் கூட்டம் இல்லாத போதும், தர்மபுரி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விண்ணப்பம் விற்பனை துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள், மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்ததாகவும்; மாலை 4 மணிக்குள், சென்னை தவிர்த்த இதர மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட, நான்கு லட்சம் விண்ணப்பங்களும், முழுமையாக விற்றுத் தீர்ந்ததாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இதனால், இரண்டாவது கட்டமாக, மூன்று லட்சம் விண்ணப்பங்களை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி, நேற்றே நடந்தது. மேலும், இரண்டு லட்சம் விண்ணப்பங்களை கூடுதலாக அச்சடிக்கவும், ஆசிரியர் தேர்வு வாரியம், "ஆர்டர்' வழங்கியுள்ளது. இதையடுத்து, மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 10 லட்சமாக உயர்ந்துள்ளது
நன்றி: தினமலர்

இதர அறிவிப்புகளை நிறைவேற்றுவது எப்போது?

சென்னை: கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது வெளியிட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளில், பெரும்பாலானவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு உள்ளிட்ட, நான்கு அறிவிப்புகள் மட்டுமே பாக்கி உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ளவை: கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 17 அறிவிப்புகளை, அப்போது பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் மற்றும் முதல்வர் வெளியிட்டனர். அமைச்சரின் அறிவிப்புகளில், நான்கு அறிவிப்புகள் மட்டுமே, இன்னும் நிலுவையில் இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
* சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு அமைப்பு.
* ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தை, அரசு மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாக தரம் உயர்த்துதல்.
* கல்வி தகவல் மேலாண்மை முறை.
* பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும், நமது குழந்தைகள் திட்டம்.
மற்ற திட்டங்கள்
* புதிய ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, 2,682 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள், தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
* 5,790 பட்டதாரி ஆசிரியர்கள், 4,342 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய, முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். இதற்கும், இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; 1,538 சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிந்த நிலையில், தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
* வேளாண் பயிற்றுனர், 25 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதா அல்லது எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்வதா என, அரசிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது.
* நூலகத் துறையில், 1,353 நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
* உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்களை தேர்வு செய்ய, விரைவில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.
* மாணவர்களுக்கான, ஸ்மார்ட் கார்டு திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
* அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதியும் கொடுக்கப்பட்டு வருகிறது. மற்ற திட்டங்களுக்கு அரசாணை வெளியாகி, முதல் கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலியல் தொழிலாளர் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுரை

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 7500 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக 60 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவார்கள்.

3/23/2012

துறைத் தேர்வுகள் அறிவிப்பு

சென்னை : வரும் மே மாதம் நடைபெறும் துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அரசுப் பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவருமே, இந்த துறைத் தேர்வுகளை எழுதலாம். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல்,பட்டதாரிகள் வரை இத்தேர்வை எழுதலாம்.
டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம்,இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி கடைசி நாள். தேர்வுகள், மே 24ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 32 மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் டில்லி ஆகிய 33 மையங்
களில் தேர்வுகள் நடைபெறும் என, டி.என்.பி. எஸ்.சி., தெரிவித்துள்ளது. முழு விவரங்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் (தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண) வெளியிடப்பட்டுள்ளன.

இளநிலை உதவியாளர்கள் 397 பேர் நியமனம்

சென்னை :பள்ளிக் கல்வித் துறையில், 397 இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்வதற்கான கவுன்சிலிங், 29ம் தேதி சென்னையில் நடக்கிறது.டி.என்.பி.எஸ்.சி., தொகுப்பூதிய பணியாளர்களுக்கு என, சிறப்பு போட்டித் தேர்வை (குரூப்-4) நடத்தியது. இதன்மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு, 397 இளநிலை உதவியாளர்கள் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., அளித்துள்ளது.இவர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதற்கான கவுன்சிலிங், சென்னை, அசோக்நகரில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 29ம் தேதி காலை, 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்பவர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யிடம் இருந்து பெற்ற அறிவிப்புக் கடிதம் மற்றும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Yahoo! தினமலர்

UNION CABINET APPROVES 7% HIKE IN DEARNESS ALLOWANCE

CABINET APPROVES 7% HIKE IN DEARNESS ALLOWANCE…
UNION CABINET APPROVED A PROPOSAL TO HIKE ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 7% FOR CENTRAL STAFF AND CENTRAL PENSIONERS…
THE CENTRAL GOVERNMENT ON FRIDAY APPROVED A SEVEN PER CENT HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JAN 2012…

THE DEARNESS ALLOWANCE AND DEARNESS RELIEF FOR CENTRAL GOVERNMENT SERVING EMPLOYEES AND PENSIONERS WILL INCREASE FROM 58% PER CENT OF BASIC EMOLUMENTS TO 65% PER CENT WITH EFFECT FROM 1.1.2012.

அகவிலை படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலை படி உயர்வு. 1.1.2012 முதல் வழங்கப்படும்.

3/21/2012

ஏப். 30 வரை பள்ளிகள் நடத்த அரசு உத்தரவு

தேனி: ஏப்ரல் இறுதி வரை அனைத்து பள்ளிகளையும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூனில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதை ஈடுகட்ட நடவடிக்கை பள்ளிகளின் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டு, ஏப்.,30 வரை பள்ளிகள் நடத்தப்பட உள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆசிரியர்களின் வேலை நாட்கள் ஆண்டிற்கு 200 நாட்கள் என்பதும் ஈடு செய்யப்படும். தேர்வுகள், ஏப்.,30ல் முடியும் வரை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது, என்றார்.

முதுநிலை ஆசிரியர் பணியிட விண்ணப்பத்தை நிரப்புவதில் சிக்கல்

முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான விண்ணப்பத்தில், அச்சுப் பிழை இருப்பதால், பட்டதாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், தற்போது காலியாக உள்ள, 2,895 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 16ம் தேதி முதல், அந்தந்த மாவட்டங்களில், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாட வாரியாக, அதிக அளவிலான பணியிடங்கள் நியமிக்கப்பட உள்ளதால், இதில் கலந்துகொள்ள, பட்டதாரிகளிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. பல மாவட்டங்களில், விண்ணப்பங்கள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன. இவ்விண்ணப்பம் ஓ.எம்.ஆர்., சீட் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கோடிங் ஷீட் என்பதால், இதில், அடித்தல், திருத்தல் இல்லாமல் நிரப்ப வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பத்தின் இரண்டாம் பக்கத்தில், எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்சி., - பி.எட்., பாடங்களில் தேர்ச்சியடைந்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவுசெய்த தேதியை நிரப்புவதற்காக கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில், முதல் இரண்டு கட்டங்களில் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 19 என நிரப்பப்பட்டுள்ளது. அதனால், 1999ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே, அடித்தல் - திருத்தல் இல்லாமல் பதிவு செய்ய முடியும்.
கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, இதை நிரப்பும்போது திருத்தம் செய்யும் நிலை உள்ளது. இதனால், விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யும் பட்டதாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கோடிங் ஷீட்டில், அடித்தல் - திருத்தல் செய்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடுமோ என்ற பயம், அனைவரிடமும் காணப்படுகிறது.
அதேபோல், பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆண்டு, தேதி குறிப்பிடும் கட்டங்களிலும், 19, 20 என இரண்டு விருப்பப் பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், 1999ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே, இதில் கலந்துகொள்ள வேண்டுமோ என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் கூறியதாவது: பதிவுசெய்த தேதி குறிப்பிடும் கட்டத்தில், 19 என தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது. 2000க்கு பின் பதிவு செய்தவர்கள் அதை, 20 என திருத்திக் கொள்ளலாம். இதற்காக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

3/20/2012

TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012


TEACHER ELIGIBLITY TEST MODEL QUESTION
TEACHER ELIGIBLITY TEST SYLLABUS

General Provident Fund Interest Rate 8.6% from1.12.2011

(PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)
F.NO. 5(1)-B(PD)/2011
Government of India
Ministry of Finance
(Department of Economic Affairs)
New Delhi, the 19th March, 2012
RESOLUTION
It is announced for general information that during the year 2011-2012, accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest at the rate of 8% (Eight per cent) for the period from 1.4.2011 to 30.11.2011 and 8.6% (eight point six percent) with effect from 1.12.2011. The funds concerned are:—
1. The General Provident Fund (Central Services).
2. The Contributory Provident Fund (India).
3. The All India Services Provident Fund.
4. The State Railway Provident Fund.
5. The General Provident Fund (Defence Services).
6. The Indian Ordnance Department Provident Fund.
7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
9. The Defence Services Officers Provident Fund.
10. The Armed Forces Personnel Provident Fund.
2. Ordered that the Resolution be published in Gazette of India.
(Brajendra Navnit)
Deputy Secretary (Budget)

Tamilnadu Primary School Teachers' Federation

டி.இ.டி., பாடத்திட்டம்வெளியாவதில் இழுபறி

சென்னை:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் வெளியாவதில், இழுபறி ஏற்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி முதல், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம், மாநிலம் முழுவதும் வழங்கப்படும் நிலையில், தேர்வு விவரங்கள் அனைத்தையும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து விட்டது.இதைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கென, தனித்தனியே பாடத் திட்டங்களை வெளியிட வேண்டும். ஆனால், இதுவரை வெளியிடவில்லை.தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள பட்டதாரிகளும், டி.இ.டி., தேர்வை வைத்து, "கல்லா' கட்ட திட்டம் போட்டிருக்கும் பயிற்சி மையங்களும், தேர்வு வாரியத்தின் பாடத் திட்ட விவரங்களுக்காக, காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தில் விசாரித்தால், "வெளியிடுவோம்' என, தொடர்ந்து, ஒரே பதிலை கூறி வருகின்றனர். பாடத் திட்டங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தேர்வு எழுத திட்டமிட்டுள்ளவர்களை, கவலை அடையச் செய்துள்ளது.

பி.எட்., பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. அதற்கு தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் கீழ்கண்ட பாடப்பிரிவுகளுக்கு தயாரிக்கப்படவுள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், புவியியல், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எட்., முடித்துள்ள, அனைத்து வகையான முன்னுரிமை பிரிவு மனுதாரர்களும், 2012 மார்ச் 15ம் தேதி வரையிலும், பொதுப்போட்டி மனுதாரர்களை பொருத்தமட்டில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மட்டும், 2007 டிசம்பர் 31 வரை பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
மேலும் எஸ்.சி.(ஏ), எஸ்.டி., பி.சி.,(எம்), போன்ற இனத்தவர்களுக்கும், கன்னடம், மலையாளம், தெலுங்கு, உருது ஆகிய பயிற்று மொழிகளில் பி.எட்., படித்த நபர்களுக்கும், 2012 மார்ச் 15 வரை பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
எனவே மேற்கண்ட பாடங்களில் பி.எட்., படித்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மனுதாரர்கள் அனைவரும், தங்களது வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மற்றும் இதர ஒரிஜினல் கல்வி சான்றுகளுடன், 20ம் தேதி இன்றுக்குள், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று, தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றிட உரிய ஆவனங்களை சமர்ப்பித்து, சரிபார்த்து கொள்லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளியில் அதிக கட்டணம் : சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை

ஈரோடு: ஈரோடு, செங்கோடம்பள்ளத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறியதாவது: அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை, பள்ளி அலுவலகத்தில் செலுத்திவிட்டோம். ஆனால், அதிக கட்டணம் கேட்டு கட்டாயப்படுகின்றனர். இது சம்பந்தமாக ஃபிப்.,27ல் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் மனு கொடுத்தோம்; எவ்வித நடவடிக்கையும் இல்லை. கல்வித்துறை அதிகாரிகளை சந்திக்க சி.இ.ஓ., அலுவலகம் வந்தோம். ஆனால், அலுவலகத்தில் அவர் இல்லாததால் முற்றுகையிட்டோம். குழந்தைகளின் எதிர்கால கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மனு அளித்த பின், கலைந்து சென்றனர்.

Personnel and Administrative Reforms Department

Letter No. 11173
Dt : March 20, 2012
 Public Service - Bribery is against the Law-Message along with the Directorate of Vigilance and Anti-Corruption Location in the Government Departments website - Regarding.

3/18/2012

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பதிவு மூப்பு பட்டியலை சரிபார்க்கலாம் வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்

தஞ்சாவூர்,மார்ச்.18-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பதிவு மூப்பு பட்டியலை சரி பார்க்கலாம் என்று வேலை வாய்ப்புத்துறை உதவி இயக்குனர் கூறி உள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலகம்

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கும் பணி வேலை வாய்ப்பு துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது. அறிவிக்கப்பட்டு உள்ள பணி காலியிடங்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் தயாரிக்கப்பட உள்ள தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர் பட்டியலை தஞ்சை மாவட்ட தேசிய தகவல் மைய இணையதளத்தில் åலீணீஸீழீணீஸ்éக்ஷீ.ஸீவீநீ.வீஸீ. நாளை
(திங்கட்கிழமை) முதல் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இணையதளத்தில் பார்க்கலாம்

15-3-2012 வரை பதிவு செய்துள்ள ஆங்கிலம், தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய 9 பாடப்பிரிவுகளில் பதிவு செய்துள்ள பட்டதாரி ஆசிரியர் பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை åஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீé.ரீஷீஸ்.வீஸீ. என்ற இணையதளத்தில் (தங்களது பெயரினை ïசர் ஐ.டி. ஆகவும், பிறந்த தேதியினை பாஸ்வேர்ட் ஆகவும் உபயோகித்து) தங்களது பதிவு விவரங்கள், கல்வித்தகுதி, இனம், வகுப்பு, முன்னுரிமை, முகவரி போன்ற அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதிவு விவரங்களில் திருத்தம் இருப்பின் வருகிற 21-ந்தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு பட்டியலில் உள்ள விடுபாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

3/14/2012

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் தேர்வு

திண்டுக்கல், மார்ச் 13-

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் தேர்வு திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநில முன்னாள் பொதுச் செயலாளர் ந. பர்வதரா சன் தேர்தல் ஆணையாளராகவும், மாநில முன்னாள் பொதுச் செயலாளர் செ. போத்தி லிங்கம், மாநில முன்னாள் தலைவர் கோ. முரளிதரன் ஆகியோர் துணை ஆணையர் களாகவும் தேர்தலை நடத்தினர்.

இந்தத் தேர்தலில், மாநிலத் தலைவராக தி. கண்ணன், பொதுச் செயலாளராக

முருக. செல்வராசன், பொருளாளராக

ச. மோசஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர்.

மேலும், மாநிலத் துணைத்தலைவர் களாக ச. மயில், தே. ஜோசப் ரோஸ், செ. சந்திர மோகன், ச. ஜீவானந்தம், மு. மூர்த்தி, இரா. மலர்விழி, துணை பொதுச் செய லாளராக சி. பாலசந்தர், மாநிலச் செய லாளர்களாக சோ. முருகேசன், எஸ். ஜேம்ஸ் ராஸ், ம. சந்திரமௌலி, இ. வின்சென்ட், சி.அ. முருகன் ஆகியோரும் தேர்வு செய்யப் பட்டனர்.

NEWS