பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/31/2012

Poster & Role Play School, Block, Dist, State & Regional level Competition for STD 9 to 12 & 9 respectively for National Population Education by SCERT

தொடக்கக் கல்வி - பயிற்சி - RTE ACT 2009 - AEEO / PRIMARY & BT HMS - RTE சட்டம் பற்றி 03.09.2012 அன்று நடைபெறுவது - பயிற்சி செலவிற்கு பணம் அனுப்புவது மற்றும் மாவட்டம் தோறும் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்.

சிறப்பு தேர்வுக்கு இனி "ஆன்-லைன்' விண்ணப்பம்

சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, கருவூலத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு துறைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர்.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிப்பு வெளியாகும் போது, மாணவர்களுக்கு அலைச்சலும், சிரமமும் ஏற்பட்டது.எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு "ஆன்-லைனில் விண்ணப்பிப்பது போன்று, நடப்பு கல்வி ஆண்டு முதல், சிறப்பு தேர்வு, மதிப்பெண்கள் மறு கூட்டல், அக்டோபரில் நடைபெறும் சிறப்பு தேர்வு ஆகியவற்றிற்கு, இனிமேல் "ஆன்-லைன்' மூலம் தான், விண்ணப்பிக்க வேண்டும், என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. www.dge.tn.nic.in என்ற வெப்சைட் முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்.

47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAcEWWn0uTP6WgH7cI8vzi7q72mMjq0DS8K4VE9IUPTMVTnQ93bA0l9mPZdn0-U85N5NhDZ47SW9LAUpI-M209GuN_3Zhead0C5AWvIFj5IkiZ_i9Kq0gz7cSwx0E22kdGxAHrFk1a81TR/s1600/14978.JPG
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன.
பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

8/30/2012

பல்க் எஸ்எம்எஸ் அனுப்பும் தடை விலகியது !

 
புதுடில்லி : பல்க் எஸ்எம்எஸ்கள் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக விலக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் குடியேறிய மக்களால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தகவல்களையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அம்மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர்.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு, பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப மத்திய அரசு அதிரடி தடைவிதித்தது. பின்னர். நாளொன்றிற்கு 5 எஸ்எம்எஸ்கள் அனுப்பலாம் என்று தடையை பின் சிறிது தளர்த்தியது. பின் நாளொன்றிற்கு 20 எஸ்எம்எஸ்கள் என்று மாற்றப்பட்டது.
இந்த தடை, நாளை முடிவடைய உள்ள நிலையில், பல்க் எஸ்எம்எஸ்கள் அனுப்புவதற்கான தடை உடனடியாக விலக்கிக்கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இரட்டைப்பட்டப்படிப்பு நீதி மன்றத்தீர்ப்பு - மேல்முறையீடு செய்ய ஏற்பாடு

Double Degree - JUDGEMENT click here
 

இரட்டைப்பட்டப்படிப்பு சம்பந்தமாக நீதியரசர் இராமசுப்பிரமணியன் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனைத்து வேலைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் வழக்கில் இணையாத புதியவர்களை இவ்வழக்கில் இணைக்க அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் மற்ற மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.
தொடர்புக்கு ............
1. ஆரோக்கியராஜ் - ஒருங்கிணைப்பாளர் - 9942575162, 9080021826
2. வீரமணி - ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் - 9600225539
3. இசக்கியப்பன் - TIAS _ தென் மாவட்டங்கள் - 9442989075
4. பாண்டியன் - திருவள்ளுர், காஞ்சி - 9894192500
5. முத்துமுருகன் - இராமநாதபுரம், விருதுநகர் - 9488022810
6. சம்சுதீன் -  விழுப்புரம் - 9629872224
7. கனேசன்  - சிவகங்கை, புதுக்கோட்டை -  9976105153

8.  இரா.ஜெகதீஸ் - கிருஷ்ணகிரி, தர்மபுரி - 9578786177
இப்பணி அடுத்த வாரத்தில் நிறைவு அடையவிருப்பதால் புதியவர்கள் உடனடியாக தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.
குறிப்பு: நீதி மன்றத்தின் முறையான தீர்ப்பு நகல் இன்று வரை (30.8.12) கிடைக்காததால்  மேல்முறையீடு பணி தாமதமாகிறது என்று இவ்வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்குறைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகமான நபர்கள் இவ்வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டால் வழக்கு விரைவாக முடிய சாதகமான சூழ்நிலை ஏற்படும் என திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.

பதிவுமூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1,185 பேர் தேர்வு

பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தேர்வு தொடர்பாக, ஏற்கனவே ஒரு முடிவு
வெளியிடப்பட்டு, பதிவுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்கள், விடுபட்ட பதிவுதாரர்கள் என, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பிடித்தனர். 162 பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட சில பிரிவுகளில் பதிவுதாரர்கள் இல்லாததால், இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த தேர்வில் இருந்து, இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது.

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

8/29/2012

10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு

நடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
 முழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.

 இந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டம் காரணமாக தேர்வுகள சரியாக எழுத முடியாத நிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையை மாற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வைப் போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதன் எதிர்லியாக தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இன்று முதல் பி.எட்., கலந்தாய்வு துவக்கம்

பி.எட். ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கான கலந்தாய்வு சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று துவங்கியது. அரசு மற்றும் அரசு சார்ந்த 21 கல்லூரிகளுக்கான 2,118 இடங்கள் நிரப்பப்படுவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.மொத்தம் 10,386 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு விடுத்துள்ளது. இந்த கலந்தாய்வு செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் 237 பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

8/28/2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக 1,134 ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.தகுதித் தேர்வு முடிவு.

   கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 63/4 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினார்கள். ஆனால், அவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.


   வெற்றி பெறாதவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நேரம் போதாது என்று தேர்வு எழுதிய அத்தனை ஆசிரியர்களும் புகார் தெரிவித்ததால் அரசு இந்த சலுகையை அளித்து தேர்வு நேரத்தையும் 3 மணி நேரமாக உயர்த்தி இருக்கிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர் வேலை வழங்கப்படும்.


1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமனம்


   இதற்கிடையே, இந்த தகுதித்தேர்வு மூலமாக 1,134 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வழக்கமாக ஆசிரியர் பயிற்றுனர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தனியாக போட்டித்தேர்வு நடத்தும். ஆசிரியர் பயிற்றுனர் பதவியும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானது என்பதால் அந்த காலி இடங்களையும் தகுதித்தேர்வு மூலமாகவே நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


   தற்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களைக் கொண்டு ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்கள் நிரப்பப்படுமா? அல்லது அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ள மறு தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


பணி நிரவல் தந்தது பலன்: 10 ஆயிரம் ஆசிரியர்கள் அதிரடி மாற்றம்

குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியர்களும், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்த அவல நிலையை களைய, சமீபத்தில் நடந்த பணி நிரவல் மூலம், 10 ஆயிரம் ஆசிரியர்கள், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
  விருப்பம் போல் பணி: துவக்கப்பள்ளியாக இருந்தால், 30 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஒன்பது, 10ம் வகுப்புகளில், 40 மாணவருக்கு, ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில், பாட வாரியாக, ஆசிரியர் இருக்க வேண்டும். இதற்கு மாறாக, குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியரும்; மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலைமை, பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், தென் மாவட்டங்களில் காலி இடங்கள் ஏற்படுவதை கண்காணித்து, அதற்கேற்ப நடைமுறைகளை மேற்கொண்டு, அங்கே பறந்து விடுகின்றனர். இதனால், வட மாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநகரங்கள் மற்றும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளில், தேவையை விட, அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த வகையில், மாணவ, மாணவியர் குறைவாக உள்ள பள்ளிகளில், 10 ஆயிரம் பேர் இருந்தது கண்டறியப்பட்டது.



   முதல்வர் அதிரடி: இதுகுறித்த ஆய்வுக்குப் பின், ""ஆசிரியர் இல்லாததால், மாணவர் படிப்பு பாதிக்கக் கூடாது. தேவையுள்ள பள்ளிகளில், போதிய ஆசிரியரை நியமிக்கவும், கூடுதலாக உள்ள ஆசிரியரை, மாறுதல் செய்யவும் தயங்க வேண்டாம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு, முதல்வர் பச்சைக்கொடி காட்டினார். கடந்த மாதம் நடந்த கலந்தாய்வில், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில், 10 ஆயிரம் ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். அனைவருமே, வட மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தில் இருந்து மட்டும், 150 ஆசிரியர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். தொடக்கக் கல்வித் துறையில், 3,200 ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் மாற்றப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறையில், 6,500 ஆசிரியர்கள் வரை, பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். "அரசின் அதிரடியால், ஆசிரியர்கள் புலம்பினாலும், அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது' என, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



   புதிய நியமனம் எப்போது? தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறும் போது, ""தொடக்கக் கல்வித் துறையில், 3,000 இடைநிலை ஆசிரியர்களும்; பள்ளிக் கல்வித் துறையில், 6,000 ஆசிரியர்களும், விரைவில் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களில், இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், மாணவர்கள் மேலும் பலன் பெறுவர்,'' என்றார்.

8/25/2012

TamilNadu Teachers Eligiblity Test 2012- Tentative Provisional List of Candidates and Individual Query

ஆசிரியர் தகுதி தேர்வு ரிசல்ட் வெளியீடு-அக்டோபர் 3-ல் மறுதேர்வு: வாரியம் திடீர் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நள்ளிரவில், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 6.76 லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து அக்டோபர் 3-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.     அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் எழுதினர்.  10 நாட்கள் இடைவெளிக்கு பின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.

     தகுதி தேர்வு கேள்வி தாள் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், கீ ஆன்சர் விடைகளில் குழப்பம் இருந்தது.
இதை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. விளக்கம் கொடுக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

   இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட கூடாது என்று தடை கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. இதை அறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை வாரிய இணையதளமான www.trb.tn.nic.in அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில், 90 சதவீதம் பேர் 150 மதிப்பெண்களுக்கு 65 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால், 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

    நேற்று இரவு வெளியிடப்பட்ட தகுதி தேர்வு முடிவுகளில் சுமார் 2448 பேர் மட்டும்தான் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியோர் அவர்களின் தேர்வு எண்ணை அதில் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அக்டோபர் 3-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று காலை அறிவித்தது.

தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்படுமா?

   ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. கணித தேர்வுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை. அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என்று தேர்வு எழுதியோர் பலரும் குற்றம்சாட்டினர். இதனால் தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று தேர்வு எழுதியோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.


   2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், டிசம்பரில் மறுதேர்வு நடத்தப்படலாம் என்றும் கல்வித் துறை வட்டாரங்களில் சொல்லப்பட்டது. 


   இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட்டில் 2448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதியோரின் கோரிக்கையை ஏற்று, தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடித்தவர்கள்


   ஆசிரியர் தகுதித்தேர்வு கேள்விகள் கடினம் என்ற போதிலும் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சித்ரா என்பவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 131 மதிப்பெண் பெற்ற ஷர்மிளா 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். சமூக அறிவியல் பாடப்பிரிவில் அருள்வனி 125, பிருந்தா 124, செந்தில்குமார் 124 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

8/23/2012

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது-23-08-2012

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன.
கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

தொடக்கக் கல்வி - இலவச பாடநூல்கள் - 2011 - 12ஆம் கல்வியாண்டில் பாடநூல்கள் வழங்க மேற்கொண்ட போக்குவரத்து செலவினம் மற்றும் பாடநூல்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய செலவினம் மாவட்ட வாரியாக பிரித்து காசோலையாக வழங்க உத்தரவு.

எஸ்.எம்.எஸ் உச்சவரம்பு ஒரு நாளுக்கு 20 ஆக அதிகரிப்பு

இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

அசாம் கலவரத்தை தொடர்ந்து தென் மாவட்டங்களில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என வதந்தி கிளப்பிய எஸ்.எம்.எஸ்.கள் காரணமாக, எஸ்.எம்.எஸ் அனுப்புவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி அடுத்த 15 நாட்களுக்கு ஒரு எண்ணிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும் எனக் கூறப்பட்டது.


 
இந்தக் கட்டுப்பாடு அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது வதந்திகள் பரப்புவது முழுமையாக தடுக்கப்பட்டு விட்டதால் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே ஒரு எண்ணிலிருந்து நாள் ஒன்றுக்கு 20 எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பலாம் எனவும், இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
 
அசாம் கலவரம் காரணமாக வேறு மாநிலங்களில் வாழும் வடகிழக்கு மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டதால் ஏற்பட்ட பீதியால், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து பெரும்பாலான வடகிழக்கு மாநில மக்கள் சொந்த ஊர் திரும்பினர். வடகிழக்கு மாநில மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அந்த எஸ்.எம்.எஸ்.கள் காரணமாகவே, எஸ்.எம்.எஸ்.களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

8/22/2012

சுற்றுச் சூழல் நண்பன் திட்டத்தில் (‘பரியாவரன் மித்ரா‘) உறுப்பி னர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மத்திய அரசு சார்பில் ‘பரியாவரன் மித்ரா‘ ( சுற்றுச்சூழல் நண்பன்) திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் இரண்டு கோடி பேரை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த திட்டத்தை, சுற்றுச் சூழல் கல்வி மையம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் அனைத்து மேல் நிலை, உயர் நிலை, நடு நிலைப்பள்ளிகளை சேர்ந்தவர்களை உறுப்பி னர்களாக சேர்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

TNPTF Letter

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க புதிய வழிமுறை

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

   இதில் கூறியுள்ளதாவது: திங்கள்கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்ய வேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும்.
மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்ல வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

8/21/2012

மாநிலச் செயற்குழு

இரட்டைப்பட்டப்படிப்பு நீதி மன்றத்தீர்ப்பு - மேல்முறையீடு செய்ய ஏற்பாடு

Double Degree - JUDGEMENT click here 
இரட்டைப்பட்டப்படிப்பு சம்பந்தமாக நீதியரசர் இராமசுப்பிரமணியன் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனைத்து வேலைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் வழக்கில் இணையாத புதியவர்களை இவ்வழக்கில் இணைக்க அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் மற்ற மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.
தொடர்புக்கு ............
1. ஆரோக்கியராஜ் - ஒருங்கிணைப்பாளர் - 9942575162
2. வீரமணி - ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் - 9600225539
3. இசக்கியப்பன் - TIAS _ தென் மாவட்டங்கள் - 9442989075
4. பாண்டியன் - திருவள்ளுர், காஞ்சி - 9894192500
5. முத்துமுருகன் - இராமநாதபுரம், விருதுநகர் - 9488022810
6. சம்சுதீன் -  விழுப்புரம் - 9629872224
7. கனேசன்  - சிவகங்கை, புதுக்கோட்டை -  9976105153

8.  இரா.ஜெகதீஸ் - கிருஷ்ணகிரி, தர்மபுரி - 9578786177
இப்பணி அடுத்த வாரத்தில் நிறைவு அடையவிருப்பதால் புதியவர்கள் உடனடியாக தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.

TNOU -B.Ed 2012 Entrance Hall Ticket

8/19/2012

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!

மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய  WWWW.MPTNPTF.BLOGSPOT.COM வலைதளம்  TNPTFSVG  மற்றும்  TNPTFMUTHUPANDIANDIAN என்ற பெயரில் வழங்கும் இலவச குறுந்தகவல் சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும் வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.. 

ஆசிரியர் நியமனம், மாறுதல் மற்றும் துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தனி அலுவலர்கள் பள்ளிக் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர்

பணி நியமனம், மாறுதல் குறித்து,தொடுக்கப்படும் வழக்குகள், அதிகளவில் சேர்ந்துள்ளதால், அவற்றை உடனுக் குடன் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. வழக்குகள் குறித்த தகவல்கள், அதற்கென உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும், தினசரி கோர்ட்டில் வழக்காடப்படும் வழக்குகள், அவற்றின் அடுத்த நிலை ஆகியவை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது, தகவல்களை அறியவும், வழக்குகளை விரைவாக முடிக்க உதவி செய்யும் வகையிலும், அலுவலர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. இதன்படி, பிரிவு அலுவலர் அல்லது உதவிப் பிரிவு அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர், தினசரி மாலை 4 மணிக்கு ஐகோர்ட் சென்று, அரசு வழக்கறிஞர்களிடம் வழக்கு குறித்த நிலவரங்களை அறிந்து, துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கான அலுவலர் பட்டியலையும், துறை வெளியிட்டுள்ளது

சென்னை தொடக்கக் கல்வி இயக்கக கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு

8/17/2012

DGE - Class Xth Special Supplementary Examination Results & Marks - June/July 2012

மூன்று ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . வழக்கு எண்:MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012.Date:11.07.2012 இவ்வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ . 9300 - 34800 + 4200(GP) என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என பதில்.

Government Letter Click Here  
மூன்று ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து வழக்குப் பதிவு செய்த விபரம். ஆறாவது ஊதியக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை ஏற்ப்படுத்தினர்.ஊதியத்தை உயர்த்தி தருகிறோம் என்று 

கூறி பெற்று வந்த ஊதியத்தை பறித்துக்கொண்டனர். ஐந்தாவது ஊதியக்குழு தொடந்து இருந்தாலே தற்போது பெரும் ஊதியத்தை விட அதிகம் பெற்று இருப்போம்.ஐந்தாவது ஊதிக்குழுவில் அடிப்படை ஊதியம் Rs3050 பெற்று வந்த நம்மைவிட கல்வித்தகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிதவர்களுக்குகூடRs. 9300 -34800+4200 முதல் 4600 வரை தர ஊதியம் வழங்கி உள்ளனர். மேலும்,அரசாணை எண்  23 ல் Rs. 750 தனி  ஊதியமாக ஒதுக்கப்பட்டது. அதில் அமைச்சு பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் ஊதிய முரண்பாடு ஏற்படும்  என்று ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக்  கூறியுள்ளனர்.நம்மைவிட அவர்களுடைய கல்வித்தகுதி குறைவு.மேலும் சுமார்  1,16,000 க்கும் மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்தால், பொருள் செலவு அதிகமாகும் என்று தவறான தகவல்களை கூறியுள்ளனர். மருத்துவ துறையில் புதிதாக நியமனம் பெரும் மருத்துவர் கிராமப்புறங்களில் கண்டிப்பாக சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்றும் அதற்கு  ஊக்க ஊதியமும் வழங்கி வருகின்றனர்.ஆனால்,இடைநிலை ஆசிரியர்கள் கரடு முரடான, பாதைகளே இல்லாத இடங்களிலும் ,மலைப்பகுதிகளிலும் தன்னலம் பாராமல் வருங்கால பாரதம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக கிராமங்களில் பணிபுரிகின்றனர். ஆதலால், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் தருகின்றோம் என்று, ஒரு நபர் குழுவில் கூறியுள்ளனர்.கிராமப்புறங்களில்  பணிபுரிவதற்கு  மேலும் ஒரு ஊக்க ஊதியம் அரசு தான் தரவேண்டும்.இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத்தான் நமது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து உயர் நீதி மன்றத்தில் வழக்குப்  பதிவு செய்துள்ளனர்.நமது இயக்கமும் மூன்று நபர் ஊதியக்குழுவிடம் நமது ஊதிய முரண்பாட்டை நேரில்  வலியுறுத்தி  உள்ளோம். இதற்கு தற்போது செலவினத்தின் செயலாளர் உயர்திரு.S .கிருஷ்ணன் I.A.S  அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற  வழக்கு எண்MP.(MD) No2  of 2012 in W.P.(MD)9218 of 2012. ற்கு  உயர் நீதிமன்றத்திற்கு     பதில் அளித்துள்ளார்.அவற்றில் நமது ஊதியம் 5200 - 20200 + 2800 இருந்து  9300 -34800 +4200   வழங்குமாறு  வழக்கு பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு அரசு பரிசீலித்து உரிய அரசாணை பிறப்பிக்கும் என்று சாதகமான பதில் அளித்துள்ளார்.விரைவில், நமக்கு நல்ல ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் .

8/15/2012

RTI

SSA

Remembering our Indian freedom fighter. Happy Independence Day!!!


அக்டோபர் 7ம் தேதி செட் தேர்வு

மாநில அரசின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செட் தேர்வு, வரும் அக்டோபர் 7ம் தேதி, மாநிலமெங்கும் 10 மையங்களில் நடக்கிறது.
புதுச்சேரி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேரவும் இத்தகுதி தேர்வு செல்லும். தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களை பாரதியார் பல்கலைக்கழகம் வரவேற்கிறது.
யு.ஜி.சி. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் பாடப்பிரிவுகள், மானுடவியல், சமூகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை.
முதுநிலைப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

STATE ELIGIBILITY TEST (SET) FOR LECTURESHIP, OCTOBER 2012

8/14/2012

சுததந்திர தின வாழ்த்துகள்.


இரட்டை பட்டம் செல்லாது. உயர் நீதி மன்றம்

இரட்டை பட்டம் செல்லாது என்று . உயர் நீதி மன்றம் விதித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களை  சார்ந்த ஆசிரியர்கள்  குழுவாக இணைந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கு விசாரனை முடிந்த நிலையில் நீதியரசர் மதிப்புமிகு இராமசுப்பிரமணியன் இன்று தனது தீர்ப்பில் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க விதித்திருந்த இடைக்கால தீர்பை ஆதரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதது மட்டுமல்லாமல் பதவி உயர்வில் சென்றவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக ஒருங்கிணைப்பு குழுவைச்சார்ந்த திரு;ஆரோக்கியராஜ்  கூறினார்.

8/13/2012

சி.எம். செல்லுக்கு தனி இணையதளம்

சென்னை: தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும், தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.
தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.
இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று முதல்வர் துவக்கி வைத்தார்.
இவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.
புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட அலுவல கத்திலுள்ள முதலமைச்சர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
தற்போது அனைவரிடமும் கைப்பேசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையினை முதல்வர் துவக்கி வைத்தார்கள்.
அஞ்சல் வழியாக அனுப்பப்படும் மனுக்களில் மனுதாரர் தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிட்டிருந்தால் முதலமைச்சரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கவுன்சிலிங்: வீடியோ கேமராவில் பதிவு செய்ய கோரிக்கை

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்தால், முறைகேடுகளை தவிர்க்க முடியும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
  தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பல லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இட மாறுதல் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆண்டு தோறும் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. 

   இதில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில் கவுன்சிலிங் நடப்பதில்லை. இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் இல்லாத நிலையில் பல மாவட்டங்களில் இருந்து, மாவட்ட மாறுதலுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. 

   சில கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் பெயரால் கவுன்சிலிங்களில் முறைகேடு செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். காலிப்பணியிடங்களை மறைத்து தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது. இதில் பல லட்சம் ரூபாய் வருமானம் இருப்பதால், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் தொடர்ந்து வருகிறது. 

  இதனை தவிர்க்க ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நடக்கும் கவுன்சிலிங் போல் ஆன் லைன் வசதி செய்ய வேண்டும். இடமாறுதல் உத்தரவுகளை கம்ப்யூட்டர் மூலமாக உடனடியாக வழங்க வேண்டும். 

  இது போன்ற நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடைப்பிடித்தால் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படும். இதனை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8/12/2012

Central Board of Secondary Education 2012 CTET

The candidates may download their admit cards from CBSE website from 01.11.2012 onwards and appear for the examination at the given Centre. In case of any discrepancy in the particulars of the candidate or his photograph and signatures mentioned in the admit card and Confirmation Page the candidate may immediately contact CBSE for necessary action.

In case the application of the candidate is not shown as received on CBSE website www.cbse.nic.in or www.ctet.nic.in by 05.10.2012, the candidate should approach the Assistant Secretary, CTET Unit, CBSE between 10:00 A.M to 5:00 P.M from 01.10.2012 to 19.10.2012 giving details of the Post Office, Date of Dispatch, Original Receipt of Postal Dispatch, Photostat Copy of the Confirmation Page and Demand Draft, one photograph (as pasted on the Confirmation Page). CBSE will not be responsible for non-receipt of Confirmation page due to any transit/postal loss:
FOR ADMIT CARDS CLICK HERE

ஒரு வருட பட்டப்படிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுத தகுதி இல்லை - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம்

8/11/2012

ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி!

சென்னை, ஆக.10: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர்.  ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  இந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர்.  இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.  5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர்  மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.  தள்ளிப்போகும்?: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

PAY Rederssal Cell

8/08/2012

IGNOU

KRISHNA JAYANTHI

[Press Release No.468] ( G.O of Public Department regarding holiday on 9th August 2012 for Sri Krishna Jayanthi )        SET EXAM  

 

 கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை(09-08-2012) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. முன்னதாக தமிழக அரசு முன்பு வெளியிட்டு இந்து விழாக்கள் பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா அடுத்தமாதம் செப்டம்பர் 9ம் தேதியாக இருந்தது.

மூளைச்சாவு அடைந்த மாணவி உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு உள்ளன. சேலம், மிட்டாபுதூர், கார்மென்ட் ரோட்டை சேர்ந்த ஜேக்கப் - சந்திரா தம்பதியின் மூத்தமகள் ஐஸ்வர்யா,21. சேலம், தனியார் மகளிர் கலைக் கல்லூரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்துள்ளார். கடந்த 3ம் தேதி, சாமிநாத
புரத்தை சேர்ந்த தோழி பவித்ராவுடன், ஐஸ்வர்யா, இருசக்கர வாகனத்தில் சேலத்துக்குப் புறப்பட்டு உள்ளார். வாகனத்தை பவித்ரா ஓட்டியுள்ளார். நாமமலை பகுதியில் சென்ற போது, அவ்வழியாகச் சென்ற டாரஸ் லாரியின் முன் சக்கரம் கழன்று, மாணவியர் வந்த வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், காயமடைந்த மாணவியர் இருவரும், சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதில், கோமா நிலைக்குச் சென்ற ஐஸ்வர்யா, மேல் சிகிச்சைக்காக சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும், நினைவு திரும்பாத ஐஸ்வர்யாவுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. அதையடுத்து, மாணவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக, சென்னை, அப்போலோ மருத்துவமனைக்கு ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றனர். மருத்துவமனை நிர்வாகிகள் நிவேதிதா, வித்யா, பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்புடன், மாணவியின் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. மருத்துவக் குழுவினர், மாணவி ஐஸ்வர்யா உடலில் இருந்து கண்கள், இருதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் தானமாகப் பெற்று, மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்தனர்.
நன்றி-தினமலர்

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

8/05/2012

CCE- ஆசிரியர்களால் கேட்கப்படும் வினாக்களும், அவற்றுக்கான விடைகளும்

கல்வி வணிகமயமாக்கலை ஒழிக்க நாடு தழுவிய பெருந்திரள் இயக்கம்...!!


சென்னை, ஆக.3-

நவீன தாராளமய பொருளா தாரக் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டத்தோடு இணைந் ததே கல்வியில் சம உரிமைக் கான போராட்டமும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைக்கான போராட் டத்தை ஒத்த கருத்துள்ள அர சியல் கட்சிகள், வெகு மக்கள் அமைப்புகளோடு இணைந்து நாடு தழுவிய அளவில் மேற் கொள்ளவும் உறுதி எடுக்கப் பட்டுள்ளது.கல்வி வணிக மயமாக்கல் ஒழிப்பு மற்றும் பொதுப்பள்ளி முறையைக் கட்டுதலுக்கான அகில இந்திய மாநாட்டுப் பிர கடனம் சென்னையில் வெள்ளி யன்று (ஆக.3) வெளியிடப்பட் டது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, அகில இந்திய கல்வி உரிமை கூட்டமைப்பு இரண் டும் இணைந்து அந்த மாநாட்டை கடந்த ஜூன் 30, ஜூலை 1 தேதிகளில் நடத்தியது தெரிந் ததே.“சமுதாய நிலைமைகளை அப்படியே வைத்துக்கொள்வ தாக இல்லாமல், அதை ஆக்கப் பூர்வமாக மறுகட்டுமானம் செய் வதில் பங்களிக்கும் வகையில் குழந்தைகள் மற்றும் இளைஞர் களின் படைப்பாக்கத் திறனை யும் மனித ஆற்றலையும் வெளிப் படச் செய்கிற வரலாற்றுப்பூர்வ மான சமுதாயப் பங்கு கல் விக்கு உண்டு,” என்று சென் னைப் பிரகடம் தொடங்குகிறது

.இந்த லட்சியத்தைப் பொதுப் பள்ளி முறையால் மட்டுமே நிறைவேற்ற முடியும். தரமான கல்வியை அனைத்துக் குழந் தைகளுக்கும் சமமாக வழங்கு கிற கடமை அரசுக்கு உண்டு. ஊட்டச்சத்து, உடல் நலம், சமூக-உளவியல் பாதுகாப்பு, பண்பாட்டுப் பாதுகாப்புடன் இணைந்த கல்வியை இலவச மாக அரசாங்கம் வழங்க வேண் டும். மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரையில் அனைத் துக் குழந்தைகளுக்கும் 18 வயது வரையில் அருகமைப் பள்ளி அடிப்படையில் முழுக்க முழுக்க அரசு நிதியுடனான பொதுப்பள்ளி முறை நிலை நாட்டப்பட வேண்டும் என்று அந்தப் பிரகடனம் வலியுறுத்து கிறது.இந்தியாவில் நீண்ட நெடுங் காலமாகவே, பாடுபடும் மக்க ளுக்கு சமூக நிலை அடிப்ப டையில் கல்வி உரிமை மறுக்கப் பட்டு வந்திருக்கிறது. அந்தப் பின்னணியில் இன்று நீர், காடு, நிலம் ஆகிய உரிமைகள் போல பொதுப்பள்ளி என்பது ஒரு அடிப்படை உரிமையாக உறுதிப் படுத்தப்பட வேண்டும். நவீன தாராளமய மூலதனத்தாலும், பேராசை பிடித்த நிதிச்சந்தை களாலும், உள்நாட்டு மதவெறி சக்திகளாலும், குறுகிய பிளவு சக்திகளாலும், இதர பிற் போக்கு சக்திகளாலும் கடுமை யான சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியா, உயர் தன்னாளுமை உரிமை உள்ள தேசம் என்ற தனது உரிமையைக் காக்க வேண்டு மானால், ஜனநாயகமும் சுதந்திர மும் உள்ள முற்போக்கான அமைதியான சமுதாயமாக நிலைத்திருக்க வேண்டுமா னால் கல்வியை உரிமையும் மக்களின் வாழ்வாhதார உரிமை களும் அடிப்படை உரிமைக ளாக உறுதிப்படுத்தப்பட வேண் டும் என்றும் பிரகடனம் கூறு கிறது.1990ம் ஆண்டுகளின் தொடக் கத்தில் உலக வங்கி - பன் னாட்டு நிதியம் ஆகியவற்றின் கட்டளைப்படி கல்வித்துறைக் கான அரசுச் செலவினங்கள் வெட்டப்பட்டன. மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமாக உலக வங்கிக் கட்ட ளைப்படி பல்வேறு எதிர்மறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

அதன்படி முறையான நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக பயிற்சியற்ற ஒப்பந்த முறை ஆசிரியர்களை நியமிப்பது, இரண்டுக்கும் மேற்பட்ட வகுப்பு களுக்கு ஒரே ஆசிரியரே கற் பிப்பது, ஒரே அறையில் பல வகுப்புகள், பாகுபாடுகள் மிகுந்த பல அடுக்கு பள்ளி முறை, அரசு களின் நிதி ஒதுக்கீடு வெட்டு முதலிய நடவடிக்கைகளால் அனைவருக்கும் சமமான தரமான கல்வி என்ற லட்சியம் கைவிடப்பட்டது என்றும் அந்தப் பிரகடனம் கூறுகிறது.கல்வி வணிகமயமாக் கலை ஒழித்தல், அருகமைப் பள்ளி அடிப்படையில் முற்றி லும் அரசு நிதியுடனான பொதுப் பள்ளி முறையை நிலைநாட்டு தல், கல்வி முறை மாற்றத்திற் காக பெருந்திரள் மக்கள் இயக் கத்தைக் கட்டுதல் ஆகிய நோக்கங்களை முன்னெடுத் துச் செல்வது என்றும் பிரகட னத்தில் முன்வைக்கப்பட் டுள்ளது.தற்போதைய கல்வி உரி மைச் சட்டம் பல வகைகளி லும் மக்களின் அடிப்படைக் கல்வி உரிமையை நிராகரிப்ப தாக, அதனைத் தனியார் கை களில் ஒப்படைக்க வழிசெய்வ தாகவே இருக்கிறது என்று பிரகடனத்தை வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவரும், மாநாட்டு வழிநடத்து குழு தலைவருமான பேராசிரியர் அனில் சடகோபால் கூறினார்.சட்டத்தின் 51-ஏ பிரிவு குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதைப் பெற்றோரின் பொறுப்பாக்குகிறது.

அரசின் கடமையாக சட்டத்தில் வரை யறுக்கப்படவில்லை. உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு கல்விக்கடமை யைப் பெற்றோர் தலையில் தள்ளிவிடுகிற ஏற்பாடு இல்லை என்று மாநில மேடை பொதுச் செயலாளரும் வழிநடத்து குழு வின் செயலருமான பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், மக்கள் நல் வாழ்வு இயக்க பொதுச்செயலா ளர் மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற் குணம், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், மருத்துவர் பி. சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். மாநில மேடை தலைவர் ஐ.பி. கனகசுந்தரம் தலைமை தாங்கினார், கவிஞர் செவ்வி யன் நன்றி கூறினார்.
நன்றி:  தீக்கதிர் நாளிதழ்.

8/04/2012

Pay Grievance Redressal Cell

Letter No. 28307
Dt : August 3, 2012
 Pay Grievance Redressal Cell constituted to examine anomalies, if any Personal Hearing with the Associations / Individuals – Postponement - Intimation-Regarding.

8/02/2012

இக்னோ நுழைவு தேர்வுகள்: பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இக்னோ நுழைவு தேர்வுகள் ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன என, மதுரை மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார். எம்.பி.ஏ., பி.எஸ்சி., நர்சிங், பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் 1 மணி வரை எம்.பி.ஏ., பி.எஸ்சி., படிப்புக்கும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பி.எட்., எம்.எட்., படிப்புக்கும் தேர்வுகள் நடக்கும். நுழைவு தேர்வுக்கான அனுமதி சீட்டு ஆக., முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வழக்கு எண்: MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No: 9218 / 2012 நாள்.11.07.2012
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்ந்து மறுக்கப்படுவதாகவும் இதனால் ஆசிரியர்கள் மனவேதனை அடைவதாகவும் மேலும் அமைச்சு பணியாளர்களோடு ஒப்பீட்டு ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை குறைப்பது நியாமற்ற செயல் எனவும் ஏற்கெனவே 5வது ஊதிய குழுவில் ஆசிரியர்களை விட குறைவான ஊதியம் பெற்றவர்களுக்கு 6வது ஊதிய குழுவின் ஒரு நபர்
குழுவில் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை விட அதிகமாக பெறுவதை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுமா அல்லது தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுமா என்று வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் இளையராஜா , மாரிதுரை ,சதீஷ் மற்றும் குசேலன் ஆகியோர்கள் தொடர்ந்த இந்த வழக்கை ஏற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சமனில்லாத சமன்!

கடந்த ஆண்டு இதே காலத்தில் சமச்சீர் கல்வி பற்றி மிகப்பெரிய குழப்பம் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் இருந்தது. இது தொடர்பாக போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. தில்லி உச்ச நீதிமன்றம்வரை சென்ற அந்தப் பிரச்னை ஒரு வழியாக சுமுகமாக்கப்பட்டது. கல்வி அனைவருக்கும் சமமாக்கப்பட வேண்டும் என்ற பெயரில் சமச்சீர் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான்.  ""ஒரு கட்டடத்தை இரு தூண்கள் தாங்கிக் கொண்டுள்ளன. அதில் ஒரு தூணின் மேற்பகுதி சிறிது உடைந்துவிட்டது. இப்போது மேல்தளம் சமனில்லாமல் ஒரு புறம் சரிந்துள்ளது. இதனை சமன்செய்வதற்கான பல வழிகள் தொடர்பாகக் கூறப்பட்ட ஒரு யோசனை செயல்படுத்தப்பட்டது. அது என்னவென்றால், நன்றாக உள்ள மற்றொரு தூணையும் உடைந்த தூணின் அளவுக்கு உடைப்பதென்பது. அது அவ்வாறே மேற்கொள்ளப்பட்டு மேல் தளத்தைச் சமன்படுத்தியாயிற்று''.  இதுபோன்று எளிதில் புரியக்கூடிய, அழகான எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருக்கும் சமச்சீர் புத்தகம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதைக்குப் பிரச்னை அதுவல்ல.  8-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள, மாணவர்களும் ஆசிரியர்களும் செயல்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகளைப் பற்றித்தான். செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்கும் முறை இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தினமும் அதிகநேரம் படிப்பது என்பது மாறி அதிகநேரம் செயல்வழிக் கற்றல் என்றாகிறது. இது பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.  இந்த செயல் வழிக்கற்றலுக்காக மாணவர்களுக்கு சில மூலப்பொருள்கள் (சார்ட், அதில் ஒட்டுவதற்குப் படங்கள்..,) தேவைப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவனுக்கும் தினமும் குறைந்தது 20 ரூபாய் தேவைப்படுகிறது. 20 ரூபாய் என்பது உயர் வருவாய் பிரிவினருக்கு பெரும் தொகையல்ல. அரசுப் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு டாஸ்மாக்கில் நாள்தோறும் வருகையைப் பதிவு செய்யும் தந்தைக்கும், இலவசமாக அளிக்கக்கூடிய அரிசியைக்கூட கிலோ ரூ.3-க்கு வாங்கும் தாய்க்கும் இது பெருந்தொகையே! இது மாணவர்களுடைய பிரச்னை.  இந்தமுறையில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை? இங்குதான் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் மாணவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் அலுவலர்களாக மாறியிருக்கின்றனர்.  ஒவ்வொரு மாணவனுக்கும் 5 அல்லது 6 பக்கம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களைத் தனித்தனியே கவனித்து அவர்களைப் பற்றி வளர் மதிப்பீடு, தொகுப்பு மதிப்பீடு என்று ஆவணப்படுத்தும் வேலை ஆசிரியர்களுக்கு. இதனால் கற்றுத்தரும் நேரம் குறைவாகவும் ஆவணப்படுத்தும் நேரம் அதிகமாகவும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு மாணவனிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டால், மாணவனிடம் என்ன கேள்வியைக் கேட்டோம் என்று ஆவணப்படுத்த வேண்டும். மாணவன் புத்தகத்தை கையில் தொட்டால், அதற்கு தனி மதிப்பெண் என்று அதனையும் பதிவு செய்ய வேண்டும்.  இந்த வேலைகளையெல்லாம் செய்துதான் மாணவன் எந்த இடத்தில் தேங்குகிறான், தொய்வடைகிறான் என்று ஆசிரியர் அறிய வேண்டியதில்லை. மாணவர்களின் சில செயல்பாடுகளை வைத்தே அவனைப் பற்றி கணிக்கக் கூடிய திறமை ஆசிரியர்களிடத்தில் உண்டு. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை ஆவணப்படுத்தும் முறை எப்படி சாத்தியமாகும்?  இந்நிலையில் இத்தனை வழிமுறைகளை அமல்படுத்தினால் மாணவர்களுக்குக் கல்வி சுமையாகின்றதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு சுமையாகிவிடாதா?  ஆசிரியர்களைப் பொருத்தவரையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மேலானவர்கள். புதிதாகக் கொண்டு வந்துள்ள முறை தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதா?  வண்டியில் சாட்டையைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர் பாரத்தை இழுக்கும் எருதின் கஷ்டத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.  கல்வி முறைகளில் உள்ள குறைகளைக் கூறினால், ""சம்பளம் அதிகம்; அதனால் வேலை அதிகம்; இதைக் கூட அவர்கள் செய்ய முடியாதா?'' என்று கேள்விக்கணைகள். வேலை செய்ய ஆசிரியர்கள் தயார். ஆனால், ஓட்டைப் பானையை வைத்து செடிகளுக்கு எப்படி நீர் ஊற்றுவது? இங்கு மாற்ற வேண்டியது பானையையா, நீர் ஊற்றுபவர்களையா?  கால்குலேட்டர் வந்தவுடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் திறன் குறைந்தது; செல்போன் வந்தவுடன் நினைவுத்திறன் குறைந்தது; இவைகளை இழந்து நாம் எதைப்பெற்றோம் என்று தெரியவில்லை.  அதேபோல் தொழில்நுட்பம் வந்தபின் எழுதுவது குறைந்தது. அட்டை வழி, செயல்வழி கற்றல்கள் மூலம் மாணவனின் வாசிப்புத் திறன் மறைந்து கொண்டிருக்கிறது. எழுத்து, வாசிப்பு இவையிரண்டும் இல்லாமல் எப்படி ஒரு மொழியைக் காப்பாற்றுவது?  மாற்றங்கள் வரும்போது ஒன்றை நாம் இழக்கத்தான் வேண்டும். மாற்றத்தை மறுப்பவர்கள் பிற்போக்காளர்கள், இந்த காலத்துக்கு உதவ மாட்டார்கள் என்று மாற்றத்தை ஏற்பவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.  அசோகர் மரம் நட்ட வரலாற்றுக் கல்வியைத் தூக்கிப்போடுங்கள். இந்த காலத்துக்கு ஏற்ற கல்வியை உருவாக்குங்கள் என்று முற்போக்கு சிந்தனைவாதிகளின் (?) குரல்கள் முன்பு கேட்டன.  ஆனால் இன்றோ, உலக வெப்பமயமாதலைத் தடுக்க ஜி-20 மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. மரத்தின் அருமை குறித்து அரசு பல விளம்பரங்களைச் செய்து வருகிறது. மரங்களை வளர்க்க பல இயக்கங்கள் தோன்றிவிட்டன.  இப்போதாவது புரிகிறதா, பழைய கல்வி முறை எவ்வளவு உகந்ததென்று? எந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டுமென்று யார் கூறுவது? மாற்றங்களை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டுமா? அவ்வாறாயின், உருவில் சிறியதாக இருந்து அறை முழுவதும் மணத்தை பரப்பக்கூடிய மல்லிகை போல்தானே அது இருக்க வேண்டும். அதைவிடுத்து காற்றிலே பட்டவுடன் சுருங்கி விடும் பஞ்சு மிட்டாய் போன்று இருந்து என்ன பயன்?  இந்த வகையான கற்றல் முறைகள் எல்லாம் சிபிஎஸ்இ-க்கு ஈடாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது அதிகாரிகளின் கருத்து. ஒருவேளை இந்த முறையும் அதற்கு ஈடாகவில்லையென்றால் என்ன செய்வது என்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினால், "நாம் என்ன செய்ய, அரசன் எவ்வழியோ நாம் அவ்வழி' என்ற பழமொழியை நினைவூட்டுகிறார்கள்.  நீரில் நனைந்த காகிதமோ, அட்டையோ ஈரம் காய்ந்தபின் முன்பைவிட விறைப்பாகத்தான் இருக்கும். அதற்காக அது உறுதியாகத்தான் உள்ளது என்று கூறிவிட முடியுமா?  முன்னர் பார்த்த கட்டட உதாரணத்தில், எதிர்கால சிந்தனையின்றி மேல்தளம் சமன்செய்யப்பட்டது. பாருங்கள், நாளைக்கு ஏற்கெனவே பாதிப்படைந்த தூண் பளு தாங்காமல் மேலும் பாதிப்படைந்தால் மேல்தளத்தை எப்படி சமன் செய்வது? மீண்டும் நன்றாக உள்ள தூணை வெட்டி சமன் செய்வதா? இதைத் தவிர்க்க முன்னரே என்ன செய்திருக்க வேண்டும்?
 

முதலமைச்சரின் தனிப்பிரிவு - இனி வரும் காலங்களிலும் மாணவர் எண்ணிக்கை காரணமாக ஏற்ப்படும் உபரி பணியிடங்களும் நிரவல் செய்யப்படும் என்று, முதன்மை கல்வி அலுவலர் மனுவிற்கு பதில் அளித்துள்ளார்

TNPTF Federation Day


8/01/2012

கணிதப்பிரிவில் 30 கேள்விகளுக்கு பதிலாக 20 கேள்விகளே கேட்கப்பட்டன ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்தவேண்டும் பட்டதாரிகள் கோரிக்கை

சென்னை, ஆக.1-

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முறைப்படி நடத்தாததால் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்தவேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

கடந்த ஆகஸ்டு 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-1 என்றும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-2 என்றும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 61/2 லட்சம் பேர் எழுதினார்கள்.

இந்த தேர்வுகளில் விடைத்தாள் நகலை தேர்வு எழுதியவர்களே வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.

சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று கல்வியாளர்கள், தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் (கீ-ஆன்சர்) விடைகளை வெளியிட்டது. அதில் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ விடைகள் தவறாக தெரிந்தாலோ ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தவறான விடைகள்

அந்த விடைகளில் சில தவறாக இருந்ததாக ஆசிரியர்கள் புகார் செய்தனர்.

நிபுணர்களை அழைத்து சரியான பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிந்து அதை இணையதளத்தில் வெளியிடுவதுதான் சரியானது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மேலப்பட்டியை சேர்ந்த உதவி பேராசிரியர் செல்வராசு தெரிவித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கணிதத்தில் 20 கேள்விகள் மட்டுமே...

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வில் கணிதப்பிரிவில் 30 கேள்விகள் கேட்பதற்கு பதிலாக 20 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இதனால் கணிதம் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.சி.டி.இ. தெரிவித்த விதிமுறைப்படி கணிதத்தில் 30 கேள்விகள் கேட்கப்படவேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் அதை கடைப்பிடிக்காமல் 20 கேள்விகளை மட்டுமே கேட்கப்பட்டுள்ளது.

எனவே கணித ஆசிரியர்களின் நலன் கருதி ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்துவிட்டு சரி சமமாக கேள்விகள் எடுத்து தேர்வை நடத்தவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது போல பல பட்டதாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் தேர்ச்சி சதவீத மார்க்கை குறைக்கவேண்டும் என்றும் ஏராளமான ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கான சாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்.

தொடக்கக்கல்வி - பள்ளி வளாகங்களில் மாணவ-மாணவிகள் கைபேசி (செல்போன் ) கொண்டு வருவதை தடை செய்து ஆணை வெளிடப்பட்டது சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் -சார்பு