பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/30/2013

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


 என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்றும் தோழமையுடன்.........
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டத்தலைவர்@TNPTF
சிவகங்கை மாவட்டம்

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு

திண்டுக்கல்: பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ்2 வகுப்பில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளை, சி.டி.,களில் பதிவுசெய்து, அவற்றின் மூலம் மற்ற பள்ளி மாணர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து, வீடியோ, ஆடியோ கட்சி பதிவுகளை கல்வித்துறை கோரி உள்ளது.
இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் எந்த காலத்திலும் பயன்படுத்தும் விதமாகவும், மற்ற ஆசிரியர்கள் தங்களது கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும்.
தனிமனிதன், நிறுவனம், சாதி, மதம் சார்ந்ததாக இருக்க கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றை ஜன., 10க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை, சி.டி.,களில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

காரைக்குடி அருகே மானகிரியில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
வட்டாரச் செயலாளர் சேவியர் சத்தியநாதன் வரவேற்றார். வட்டாரத் தலைவர் பீட்டர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, செயற்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், சூசைராஜ், சவரிராஜ், அண்ணாத்துரை, வில்சன், சுப்பிரமணியன், ஜான் இக்கோஷியஸ், சரவணன், மலைக்கண்ணன், விஜய், சாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் லூயிஸ்லெவே நன்றி கூறினார்.
கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஊதியத்தை கைவிட வேண்டும். டிட்டோ ஜாக் எடுக்கும் முடிவு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி - தினகரன் நாளிதழ்

12/29/2013

TRB-TET-இல் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ்


பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

 ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். 

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர். இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
மத்திய இடைநிலை கல்வி திட்டத்துக்கு கூடுதல் நிதி

மத்திய அரசின் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, மாதிரிப் பள்ளிகளை நிறுவுவது, மாணவியர் விடுதிகள் கட்டுவது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இதற்காக மத்திய அரசு 75 சதவீத நிதியும், மாநில அரசுகள் 25 சதவீத நிதியையும் செலவிட வேண்டும்.

 இதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு தனது பங்காக ரூ.510 கோடி வழங்கியது.  அத்துடன் மாநில அரசின் பங்கும் இணைத்து மேற்கண்ட பணிகள் தொடங்கப்பட்டன. மாணவியர் தங்கி படிக்க வசதியாக 11 விடுதிகள் ஜவ்வாது மலை, நீலகிரி மலை, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் கட்டப்படுகின்றன.

விலை ஏற்றம் காரணமாக மாநில அரசு கூடுத லாக ரூ.45 கோடியே 44 லட்சம் ஒதுக்கியுள்ளது.அதேபோல தமிழகத்தில் 44 மாதிரிப் பள்ளிகள் கட்டவும் திட்டமிடப்பட்டது. அதில் இரண்டாம் கட்டமாக 26 மாதிரி பள்ளி கள் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. விலை ஏற்றம் காரணமாக அந்த பணிகள் நின்றன. இதனால் இப்பணிகளுக்காக தமிழக அரசு கூடுதலாக ரூ.57 கோடியே 23 லட்சம் வழங்கியுள்ளது.இதையடுத்து, ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் வரும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 1851 கூடுதல் வகுப்பறைகள் கட்ட மாநில அரசு கூடுதல் நிதியாக ரூ.71 கோடியே 18 லட்சம் வழங்கியுள்ளது.

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.

ரூ.177 கோடி ஒதுக்கீடு

பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 11 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டும் பணி முடிந்துவிட்டது. 7 பள்ளிகளுக்கு கட்டிட பணி முடியும் நிலையில் உள்ளது. 2-வது கட்டமாக 26 பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசு கொடுத்த நிதியுடன், கட்டிட செலவு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கொடுத்த நிதி போக, தேவைப்படும் எஞ்சிய நிதியையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி ரூ.177 கோடியே 44 லட்சத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

500 பள்ளிகளைதரம் உயர்த்த

இடைநிலை கல்வி திட்டத்தின்படி வருகிற கல்வி ஆண்டில் 500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு உத்தரவு

மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையில் அரசு பணியாளரின் பெயர் மற்றும் பதவி ஆகியன ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அடையாள அட்டைகளை வழங்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அனைத்து அரசுப் பணியாளர்களும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அடையாள அட்டையை தவறாது அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் தங்களுக்குக் கீழேயுள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தனது உத்தரவில் டேவிதார் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாரும் அணிவதில்லை: தலைமைச் செயலகம், சட்டப் பேரவைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியே புகைப்படத்துடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அடையாள அட்டைகளை பெரும்பாலான பணியாளர்கள் அணிவதில்லை என்று புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து அரசு பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்ற மாநிலம் தழுவிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை

சென்னை: "தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
தனியார் பள்ளிகளின் வளர்ச்சியில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன.
வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ் 1  வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதையும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர்.
இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில் சாதிப்பதற்கு இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும் முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என கல்வித்துறை கருதுகிறது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ் 1 வகுப்புகள் நடக்கும்.
அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும்.
தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ் 1 வகுப்பிற்கு வருமா என்பது கேள்விக்குறியே.

சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் - தினத்தந்தி செய்தி (28.12.2013)


சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் - தினமலர் செய்தி (29.12.2013)


12/28/2013

1.36 கோடி இலவச பாட புத்தகம் ஜன.2ல் பள்ளிகளில் வினியோகம்

மாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிடம் ஒப்படைப்பு!

வால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் வரை போதிய நிதி வசதி இல்லாததால் மூடப் போவதாக அறிவித்து வருகின்றன.

கோவை மாவட்டம், வால்பாறை அருகிலுள்ள மானாம்பள்ளி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில் போதிய மாணவர் வருகை இல்லாததால் பள்ளியை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த மாதம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

அதேபோல வால்பாறையில் உள்ள ஹை பாரஸ்ட் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி நிர்வாகம் அடுத்த ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து பள்ளியைத் தொடர்ந்து நடத்திட உறுதி அளித்துள்ளதாக, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

NMMS - இணையத்தில் ஜனவரி 2 முதல் 4 வரை பதிவேற்றலாம்

12/27/2013

பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு கல்வித்துறையே வழங்க வேண்டும் -ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

சிவகங்கை: இலவச பாடப் புத்தகங்களை கல்வித் துறையே நேரடியாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜோசப்ரோஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமஸ்அமலநாதன், துணை செயலாளர் ரவி, துணைத் தலைவர் சண்முகம், அனைத்து வட்டார கிளை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை பள்ளி ஆசிரியர்களே கல்வி அலுவலகத்திலிருந்து எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் கல்விப்பணி பாதிக்கப்படுகிறது. எனவே இப்புத்தகங்களை கல்வித் துறையே நேரடியாக பள்ளிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை

அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை,நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும்முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும்44 மேற்பார்வையாளர்கள் மற்றும்19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.இதனைத்தொடர்ந்து 28.12.2013 அன்றே 01.01.2013நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை

2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை

3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை

4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை

5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை

6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை

7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 41 வரை

8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை

9. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை

10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை

11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02

12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12வரை

13. உ.க.இ.நிலை-வரிசை எண் 1 1 முதல் 23 வரை

கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும்,அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் சிறந்த பள்ளிக் கூடங்களை தேர்வு செய்து வகுப்பறைகள் இணைப்பு திட்டம்

தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் சிறந்த பள்ளிக் கூடங்களை தேர்வு செய்து வகுப்பறைகள் இணைப்பு திட்டம் என்ற பெயரில் இணையதள வழிக்கல்வி முறையை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.
வகுப்பறைகள் இணைப்பு திட்டம்
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் இணைப்பு திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் குறிப்பிட்ட சில அரசு பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்படும் பள்ளிகளில் கணினிகள், இணையதளம், இணையதள கேமிரா போன்ற உபகரணங்கள் வாங்க ரூ.42ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும்

டிட்டோஜாக் முடிவு சரியே.

கோரிக்கைகளை முன்னிறுத்தி இயக்கங்கள் தங்களுக்குள் தனிச்சங்க நடவடிக்கைகள் பல செய்து விட்டன. புதிய அரசு  பதவியேற்று முதன் முதலாக கூடிய டிட்டோஜாக் அமைப்பால் இதுவரை எவ்வித போராட்டமும் நடத்தவில்லை. இந்த நிலையில் நாம் ஒன்றாக இணைந்துள்ளோம் என்பதையும், அரசின் கவனத்தை நம்மீது ஈர்க்கவும் குறைத்த பட்சம் மாவட்ட அளவில்  ஒரு போராட்ட நடவடிக்கையிலாவது ஈடுபட வேண்டும் என்பதுதான் அடிப்படை போராட்ட வியூகம். அந்த முடிவைதான் டிட்டோஜாக் எடுத்துள்ளது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. எனவே சகோதர இயக்கமாகிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட நியாயத்தை புரிந்துகொண்டு மீண்டும் நம்முடன் இணையவேண்டும் என்பதே நம் அவா. நேரடியாக மாநில அளவில் என்பது அவ்வளவு சரியாக இருக்காது. அதற்கு அடுத்த கட்டம் என்ன என்பது கேள்விக்குறியாகி விடும. முடிந்தால் பிப்ரவரி -2 என்பதை ஒருவார காலம் முன்னதாக வைக்க டிட்டோஜாக் யோசிக்கலாம். எனவே டிட்டோஜாக் எடுத்த முடிவு சரியே. இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதர பிரச்சணையில் ஒரு வரலாற்று பிழை ஏற்படாதவாறு அனைத்து இயக்கங்களும் ஒருங்கினைந்து செயலாற்ற வேண்டும்.
தோழமையுடன்..........
முத்துப்பாண்டியன்.A
மாவட்டத்தலைவர்@TNPTF
சிவகங்கை

12/26/2013

டிட்டோஜாக் கூட்டத்திலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியேறியது.

இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன. பேரணியை ஏற்கெனவே தாங்கள் நடத்திவிட்டோம் எனவும், மீண்டும் பங்கு கொள்ளமாட்டோம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பாதியிலேயே வெளியேறியது. பின்பு மற்ற 6 சங்கங்கள் கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.  
வருகிற 30.12.2013 அன்று தமிழக அரசுடன்  சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதையடுத்து 10.01.2014ல் மாவட்ட அளவில் டிடோஜாக் கூட்டம் நடத்தவும், 11.01.2014 அன்று டிடோஜாக் சார்பில் செய்தியாளர்களுடன் சந்திப்பு (PRESS MEET)ம், 02.02.2014 அன்று மாவட்ட தோறும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெளியேறிய சங்கத்துடன் மீண்டும் சந்தித்து பேரணியில் பங்குபெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப் திட்டம்" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை

அன்னூர்: "எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 500 வீதம் உதவி தொகை வழங்கப்படும்.
இதற்கு தேர்வு எழுத ஏழாம் வகுப்பில் ஆதிதிராவிட வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற வகுப்பினர் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு, பிப்., 22ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு தலா ரூ. 50 உடன் விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு குறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு "இ-மெயில்" மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பள்ளிகளில் மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தொகையுடன் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்பப்பட்டு விட்டது.
ஆனால், அன்னூர் ஒன்றியத்திலுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு இதுவரை உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் அல்லது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து தகவல் வரவில்லை. நேற்று முதல் அரை ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை துவங்கியது.
இந்நிலையில் "எந்த தகவலும் வராததால் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க முடியாமல், நடுநிலைப் பள்ளியில் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வு எழுத முடியாமல், உதவி தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு

சென்னை: ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, "ரெகுலர்" மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில் முடிவு வெளியாகும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

"ஆன்லைன்" பதிவு செய்யாத பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு

திண்டுக்கல்: தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்" மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10க்குள் ஆன்லைனில் பதிய அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில பள்ளிகள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத பள்ளிகள் சரிபார்ப்பு பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) பெறாத பள்ளிகள் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை நாளைக்குள் சென்னை அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைனில் பதிவு செய்த பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், "இன்சியல்", மதம், இனம் ஆகியவற்றை சரிபார்த்து 2014 ஜன., 4ல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் "ஆன்லைன்" மூலம் ஜன.,1 முதல் 3 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் பட்டியலில் உள்ள திருத்தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு

திருப்பூர்: "பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித விவரம், பள்ளி வளாகத்தில் பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: சில பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி வெளியாட்கள் நூழைகின்றனர்; பள்ளிக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்துகின்றனர் என சில இடங்களில் இருந்து புகார்கள் நேரடியாக வந்தன. தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் பணியாற்றி இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்.
பொதுத்தேர்வு வர உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் கற்பித்தல் பணி பாதிக்கப்படக் கூடாது. தேர்வு பணிகளுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாது. லேப்-டாப், சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது. இப்பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி வளாகத்துக்குள் பள்ளியை சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பள்ளிக்குரிய பொருட்கள் பாதுகாப்பு குறைவு ஏற்படாத வண்ணம் கவனமாக வைத்திருக்க வேண்டும். இதில், ஏதேனும் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டி வரும். இவ்வாறு, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் "வாக்கிங்&' செல்லும் வழக்கம் உள்ளது.
இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது, "பள்ளியை சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கூறியுள்ளார். முகம் தெரியாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்பதே அந்த உத்தரவு. "வாக்கிங்" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது" என்றார்.

கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல லட்சங்களை கொட்டி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் வீதம் கூடுதலாக நியமிக்கலாம். இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனங்கள் இருக்க வேண்டும். மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.8.2013ன் படி ஆசிரியர்கள், மாணவர்கள் விகித கணக்கெடுப்பு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, "சர்பிளஸ்' ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாசாரம் அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய (பணி நிரவல்) பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் இதற்கான பணிநிரவல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ""ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என ரூ. பல லட்சம் கொடுத்து, பணியில் சேர்ந்தோம். "சர்பிளஸ்' என்ற பெயரில், இடமாற்றம் செய்தால் குடும்ப சூழ்நிலை பாதிக்கும்,'' என்றனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முருகன் கூறியதாவது: கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் பணிநிரவல் நடத்தினால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு. பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்காலிகமாக இம்முடிவை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள் எதிர்ப்பையும் மீறி பணிநிரவல் நடத்தப்பட்டால், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு, ஜூனியர் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், என்றார்.

ஒப்புதலில் சிக்கல்:

ஒரு உதவி பெறும் பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு ஆசிரியர் மாற்றப்படும்போது, சம்பந்தப்பட்ட பள்ளி சார்பில், "அந்த ஆசிரியரை ஏற்றுக்கொள்கிறோம் என்ற ஒப்புதல்' அளிக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பல பள்ளிகள், இதற்கான ஒப்புதலை அளிக்க முன்வரவில்லை. தற்போது இருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையே போதும் என்ற நிலையை எடுக்க உள்ளதாம். இதனால், பணிநிரவல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம், என கல்வித்துறையினர் கூறுகின்றனர்.

12/24/2013

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.ஆர்.பி. இணையதளத்தில் காணலாம்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்காக ஜூலை 21இல் டி.ஆர்.பி.ஆல் தேர்வு நடத்தப்பட்டது.  இந்தத்தேர்விற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 688 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 748.

தமிழ் தவிர இதர பாடங்களுக்கான முடிவுகள் 07 அக்டோபர் 2013 அன்று வெளியானது. இன்று (23.12.2013)தமிழ் பாடத்திற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.ஆர்.பி.இன் http://trb.tn.nic.in இணையதளத்தில் காணலாம்.

மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஓவ்வொருவருக்கும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பப்படாது எனவும், இணையதளத்தில் உள்ள தகவல்களை பார்த்து, அதன் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம், என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

சான்றிதழ் சரிபார்க்கும் மையங்கள்
சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் மையங்களில் நடைபெறும்.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 - PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION

12/23/2013

அனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்!

இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக செலவழித்ததன் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பிரிட்டிஷ் அரசு. 9 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் கல்வி என்ற திட்டம்தான் இந்த சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி). இதற்காக அரசு ரூ 91,431 கோடியை ஒதுக்குகிறது. இதில் ஐரோப்பிய யூனியன், உலக வங்கி ஆகிய அமைப்புகளின் நிதி உதவியும் அடங்கும். அந்த வகையில் பிரிட்டிஷ் அரசு மட்டும் ரூ 2370 கோடி வரை நிதி உதவி செய்து வந்தது, ஆண்டுதோறும், இந்தப் பணத்தைக் கையாளுவதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக பிரிட்டன் பத்திரிகைகள் சமீபத்தில் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டன. கல்வித் திட்டத்துக்கே சம்பந்தமில்லாமல் ரூ 80 கோடி வரை அதிகாரிகள் வெட்டியாக செலவழித்திருப்பதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்தது பிரிட்டிஷ் அரசு. இதுகுறித்து, இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது பிரிட்டன். முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றும், இதுகுறித்து முழுமையாக விசாரிக்க சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் அனுப்பியது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம். இந்த நிலையில், இந்தியாவுக்கு இனி எங்களது இந்த உதவி தேவையில்லை என டேவிட் கேமரூன் அரசு அறிவித்து, நிதியுதவியை முற்றாக நிறுத்தியுள்ளது. சர்வ சிக்ஷா அப்யான் திட்டத்துக்கு போதிய நிதி ஆதாரம் இந்தியாவிடமே இருப்பதாகவும், பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள அந்நாடு இனி தானாகவே இதனைச் சமாளித்துக் கொள்ளும் என்பதாலும் இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் சர்வதேச மேம்பாட்டுத் துறைச் செயலர் (UK Department for International Development) ஆன்ட்ரூ மிச்சேல் கூறியுள்ளார்.

இடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

20.12.2013 கல்லல் வட்டார செயற்குழு கூட்டம் (TNPTF)

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கல்லல் வட்டாரச் செயற்குழு கூட்டம் மானகிரி LA.AR நடுநிலைப்பள்ளியில் வட்டாரத்தலைவர் திரு. பீட்டர் தலைமையில் நடைபெற்றது.
வட்டாரச் செயலாளர் திரு. சேவியர் சத்தியநாதன் அவர்கள் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன் கலந்து கொண்டார்.

வட்டாரப்பொருளாளர் ஆரோக்கிய லூயில் லெவே நன்றி கூறினார். வட்டார செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கல்லல் கூடுதல் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் ஆசிரியர் விரோத போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. கல்லல் வட்டாரத்தில் பணிபுரியும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இருவரும் இணைந்து தொடர்ந்து ஆசிரியர்களை மரியாதை குறைவாக நடத்துவதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

2. ஆசிரியர் விரோதபோக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களை கண்டித்து இயக்க நடவடிக்கையின் முதல் கட்டமாக கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை மாவட்டம் முழுமைக்கும் ஒட்டுவதற்கு வட்டார நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளித்து இச்செயற்குழு முடிவாற்றுகிறது.

3. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை பழிவாங்கும் நோக்குடன் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் நடைமுறையில் இல்லாத செயல்பாடுகளை செய்ய கட்டாயப்படுத்தும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களை இச்செயற்குழு கண்டிக்கிறது.

4. அலுவலக செயல்பாட்டிற்காக ஆசிரியர்களிடம் தலா ரூ100 கட்டாய வசூல் செய்வதை இச்செயற்குழு கண்டிப்பதுடன் உடனடியாக வசூல் செய்த பணத்தை ஆசிரியர்களிடம் திரும்ப ஒப்படைக்க கேட்டுக்கொள்கிறது.

5. அரசாணை 237 நாள் 22.7.2013ன் படி தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை/சிறப்பு நிலையில் கூடுதல் ஊதிய உயர்வு 3% வழங்காமல் காலம் தாழ்த்துவதை இச்செயற்குழு கண்டிக்கிறது.

6. பள்ளிகளுக்கு வழங்கும் விலையில்லா பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது

அரசுப்பள்ளிகளில் அரைகுறையாய் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கிலவழி, ஏழைத் தமிழ் மாணவர்களின் பரிதாபநிலை

நடப்புக் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் முதல்வகுப்பில் ஆங்கிலவழி தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல இடங்களில் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோரை ஈர்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி துவக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதன் தரம் குறித்து யாரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. 


தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களும்கூட அதுபற்றிக் கவலைப்படவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். அவர்கள் கவலைப்படாதது மட்டுமல்ல, ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் மிகவும் வேதனை தரக்கூடியது. கடலூர் மாவட்டத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் அனைத்து மாணவர்களையும் ஆங்கிலவழி வகுப்பில் சேர்த்துவிட்டனர்; தமிழ்வழி வகுப்புகளில் ஒருவர்கூடச் சேரவில்லை என்ற செய்திக்கு இயக்குனர் தங்கர்பச்சான் தொடங்கி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் வரை காட்டிய எதிர்வினையே இதற்குச் சான்று. இதனால் தமிழே அழிந்துவிடும் என்றும் ஆங்கிலத்தை தமிழ் மக்கள்மீது திணிக்கக் கூடாது என்றும் தமிழைக் காப்பாற்ற அனைத்துப் பள்ளிகளிலும் ஆரம்பக்கல்வி தமிழ்வழியில் மட்டுமே கற்றுத்தர வேண்டுமென்று கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

உண்மையில் இது தமிழ்மொழியின் பிரச்னையல்ல, தமிழ் மக்களின் வாழ்க்கைப் பிரச்னை. ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்விப் பிரச்னையை ஒரு மொழிப்பிரச்னை போல் ஆக்கி, அவரவர் உணர்ச்சிப் பிழம்பாய்க் கொந்தளிக்கிறார்களேயொழிய, அந்த மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை எவருக்குமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இங்கே இரண்டுவகையான கல்விமுறை நிலைபெற்றுவிட்டது. ஒன்று உலகளாவிய வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய ஆங்கிலவழிக் கல்வி. மற்றொன்று உள்ளுரில்கூட வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமற்ற தமிழ்வழிக் கல்வி. இவற்றில் முன்னது தனியார் கையில் வியாபாரச் சரக்காக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதை அத்தனை விலைகொடுத்து வாங்கமுடிந்த வசதிபடைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அத்தனை பணவசதி இல்லாவிட்டாலும்கூட பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்கள் வாயையும் வயிற்றையும் சுருக்கிக் கொண்டாவது, தங்களால் திரட்ட முடிந்த பணத்திற்கேற்ற குறைந்த விலை (குறைந்த கட்டண) ஆங்கிலவழிப் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

அதற்கும் வழியில்லாத ஏழைப் பெற்றோர்களே தங்களது இயலாமையை நொந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்க வைத்து வருகின்றனர். விலையில்லா அரிசி, விலையில்லா மடிக்கணிணி, விலையில்லா டி.வி, மிக்ஸி, கிரைண்டர் கொடுத்த அரசாங்கம் அந்த வரிசையில் விலையில்லா ஆங்கிலவழிக் கல்வி கொடுத்தவுடன், உடனடியாக அவர்கள் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்த்துவிட்டனர். இதில் தமிழ்மொழி அவர்களிடமிருந்து பிடுங்கப்படவும் இல்லை, ஆங்கிலமொழி திணிக்கப்படவும் இல்லை. தம்பிள்ளைகளும் நாலு பேரைப்போல படித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்ற ஏழைப் பெற்றோர்களின் நியாயமான ஆசையும் சுயவிருப்பமுமே இதில் அடங்கியிருக்கின்றன.

பெற்றோர்கள், எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி தரவேண்டும் என்று பாடாய்ப்படுவது ஆங்கில மோகத்தினாலோ தமிழ்மீதுள்ள வெறுப்பினாலோ அல்ல. போட்டிகள் நிறைந்த இச்சமூகத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரக்கூடிய கல்வியை வழங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வினால்தான். பெற்றோரின் இந்தப் பொறுப்புணர்வை ஆங்கில மோகம் என்று கொச்சைப்படுத்தி அவர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குவது சமூகப் பொறுப்புள்ளவர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல.

இன்றைய உலகமயச்சூழலில் உள்ளுர்த் தொழில்களும்கூட உலகத் தொழில்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே உலக இணைப்பு மொழியான ஆங்கிலத்தின்வழி கற்ற மாணவர்களுக்கே நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அத்தகைய வாய்ப்புகள், ஏழையாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது என்பதுதான் உண்மையான சமூகநீதியாகும்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி தொடங்கப்பட்டுள்ளதால் தமிழ் ஒருபோதும் அழியப் போவதில்லை. தமிழின் ஆயுள் அத்தனை அற்ப சொற்பமானது அல்ல. மத்திய அரசு தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தியை திணிக்க முயன்ற போது ஆங்கிலம் வேண்டும் என்று ஒரு மாபெரும் மொழிப்போர் நடத்தி ஆங்கிலத்தை நாம் இங்கே தக்க வைத்துக் கொண்டதால் தமிழ் ஒன்றும் அழிந்துவிடவில்லையே. இந்த அரை நூற்றாண்டில் தமிழின் சீரிளமை கூடித்தானே இருக்கிறது.

எனவே, தமிழ்மொழி அழிந்துவிடுமே என்பதைவிட, அரசுப்பள்ளிகளின் இன்றைய நிலையிலேயே அங்கு ஆங்கிலவழி துவங்கப்பட்டுள்ளதால் அதில் பயிலும் ஏழை மாணவர்கள், தனியார் ஆங்கிலப் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் சரிசமமாக போட்டியிட்டு வேலைவாய்ப்புகளை வென்றுவிட முடியுமா என்பதே நமது கவலையாக இருக்க முடியும். ஏனெனில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுக்கென தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தனியே நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த பழைய ஆசிரியர்களைக் கொண்டுதான் ஆங்கிலவழிப் பாடங்களும் நடத்தப்படப் போகின்றன. இதனால் ஒருமொழி என்ற அடிப்படையில், ஆங்கிலத்தையும் முறையாகக் கற்காமல் தமிழையும் முறையாகக் கற்காமல் மாணவர்கள் வெளியேவர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அடிப்பிசகாமல் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரே அரசாணையாகிய “எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி” என்ற விதி இந்த அவலநிலைக்கான வாய்ப்பை நிச்சயம் உறுதி செய்யும்.

ஏற்கனவே ஏபிஎல் முறை என்றும் எஸ்பிஎல் முறை என்றும் பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளில் இந்த அரைகுறை ஆங்கிலவழிக் கல்வியும் சேர்ந்தால் அந்த ஏழை மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியே நம்மை நிலைகுலையச் செய்கிறது.

எனவே, நமது தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையினராகிய ஏழைத் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் குறித்து உண்மையில் அக்கறை கொண்டுள்ள கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களின் இன்றைய உடனடிக் கடமை, அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கிலவழிப் பள்ளியின் அனைத்துப்பாட ஆசிரியர்களுக்கும் தனியே தகுதிகள் வரையறுக்கப்பட்டு, அத்தகுதிகளின்படி இப்பணியிடங்களுக்கென்று தனியாக ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதே ஆகும்.

- த.சிவக்குமார் ( thasivakumar@gmail.com)

மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்க ரூ.1055 கோடி நிதி

காரைக்குடி: சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலம் ஆசிரியர் தினவிழா காரைக்குடியில் நடந்தது.
கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்து பேசியதாவது: "பொருளாதாரம் மேம்பட மனித வளம் அவசியம். அவற்றை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். 2013-14-ம் கல்வியாண்டில் 133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1995 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேல்நிலை கல்வியில் இடை நிற்றலை மாணவர்கள் தவிர்க்கும் வகையில் மாநில அளவில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1055 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2013-14ம் கல்வி ஆண்டில் சீருடைக்காக 353 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 53.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அரசு செலவு செய்யும் மாணவர்களுக்கு சென்றடையும் மிகப்பெரிய பொறுப்பில் ஆசிரியர்கள் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி, இடைநிலை கல்வி திட்டம், நபார்டு மூலம் 9.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கழிப்பறை, கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டள்ளது. உலகம்பட்டியில் விடுதி கட்ட ரூ.2.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை

அச்சிறுபாக்கம்: கூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், மாத்துார், கழனிப் பாக்கம், கூடலுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 160 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில், எட்டு ஆசிரியர்கள் பணி புரிந்தனர். அவர்களில், நான்கு பேர் ஓய்வு பெற்ற நிலையில், தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணிபுரிகின்றனர்.
இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் கல்வி கற்று வருகின்றனர். இதில் ஒரு ஆசிரியர், தற்போது நீண்ட விடுப்பில் சென்றுள்ளதால், இங்குள்ள, 160 மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால், ஒரே வகுப்பறையில், ஒன்று மற்றும் இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களை அமரவைத்து, பாடம் நடத்துகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
மாணவர்களின் நலன்கருதி, ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, அச்சிறுபாக்கம் வட்டார கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலமணி கூறுகையில், "பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு செய்து மேலதிகாரி களுக்கு அனுப்பி உள்ளோம். இரண்டு மாதங்களில், காலி பணியிடங்கள் நிரப்பப்படலாம்" என்றார்.

அனைத்து குழந்தைகளும் கல்வி: 44 வழித்துணையாளர்கள் நியமனம்

நாமக்கல்: பள்ளி வசதி இல்லா குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகள், பாதுகாவலரோடு பள்ளி வந்து செல்லும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 217 குழந்தைகளுக்கு 44 வழித்துணையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி வசதி இல்லாத தொலைதூர, மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகள், மலைப்பகுதி, அடர்ந்த காட்டுப்பகுதி, பள்ளி கட்டிட இடவசதி இல்லாத பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் குழந்தைகள், பாதுகாப்பாக பள்ளிகளுக்கு வந்து செல்ல வசதி செய்து கொடுக்க வேண்டியது அவசியம்.

வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை?

தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பிலும் முப்பருவ கல்வி முறை அமலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வு ரத்தாகும் வாய்ப்பு இருப்பதால், பல்வேறு தரப்பினரும் பத்தாம் வகுப்பில் இக்கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்படுவதற்கு, தேவையான புதிய பாடத்திட்டங்கள் தயார் செய்யும் பணி நடந்து வந்தது. 

தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும், ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியர் குழு நியமிக்கப்பட்டு, பாடத்திட்ட தயாரிப்பு பணி தற்போது நிறைவடைந்துள்ளது.கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்புக்கும் முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததால், உடனடியாக புத்தகங்கள் அச்சிடும் வகையில் பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு ரத்தாகும் என்பதால் இந்த கல்வி முறைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தற்போது உள்ள கல்வி திட்டமோ அல்லது புதிய திட்டமோ அனைத்துக்கும் தயார் நிலையில் கல்வித்துறை உள்ளது’’ என்றனர்.

எழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம்

சென்னை: ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்த வரும் கல்வி ஆண்டில், புதிய திட்டத்தை செயல்படுத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, வரும் மே மாதத்திற்குள், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 56,573 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1.35 கோடி, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 89 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 46 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.
தனியார் பள்ளி மாணவர், ஆங்கிலவழியிலான பாடங்களை எழுதுதல், வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றில், ஓரளவிற்கு நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் மொழிப்பாடங்களை, குறிப்பாக, தமிழ் பாடத்தை படிப்பதிலும், எழுதுவதிலும், தடுமாறும் நிலை உள்ளது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலவழி பாடங்களை படிப்பதற்கும், எழுதுவதற்கும், ஏராளமான மாணவர்கள் தடுமாறுவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரிந்துகொள்ளும் ஆற்றலும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அடிப்படையில் தமிழ், ஆங்கிலவழி (மீடியம்) புத்தகங்களையும் சரளமாக வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில் திணறும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த வரும் கல்வி ஆண்டில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் தலைமையிலான, ஒன்பது பேர் கொண்ட குழு, புதிய திட்டத்தை செயல்படுத்த, 62 பக்க அறிக்கையை தயாரித்துள்ளது.
வகுப்பு வாரியாக திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்களுக்கு, ஆறு மாதங்களுக்குள் சரளமாக எழுதவும், படிக்கவும் கூடிய திறனை ஏற்படுத்த தலைமை ஆசிரியர் என்னென்ன செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக, தலைமை ஆசிரியர்களுக்கு, இதற்கான பயிற்சி அளிக்கப்படும். மே மாதத்திற்குள், இந்த பயிற்சியை அளிக்க, இயக்குனர், கண்ணப்பன் திட்டமிட்டு உள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், "விரைவில், இதற்கான ஆய்வு குறித்து, டிசம்பரில் ஆய்வு செய்வோம். இந்த பயிற்சியில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்கலாம்" என தெரிவித்தார்.

12/22/2013

தமிழக அரசு உத்தரவு பள்ளி வளாகங்களில் புகைபிடிக்க தடை

 
நாகர்கோவில் : பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனைபோன்று பள்ளிகள், கல்லூரிகள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால், பல்வேறு அரசு பள்ளிகள் போதிய காம்பவுண்ட் சுவர் ஏதுமின்றி திறந்த வெளிகளாக உள்ளன. இங்கு எந்த நேரமும் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் உள்ள பொருட்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி பள்ளி வளாகங்களில் வெளியாட்களை நடமாடுவதை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் சபிதா உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் தற்போது பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பதை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் சார்ந்த இடங்களில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டினை தடை செய்து உத்தரவிடப்படுகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ‘இது புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி’, இங்கு புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம்‘ என்று அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரே ஊக்குவிக்கும் அவலம் டூ வீலர் ஓட்டும் பள்ளி மாணவர்கள்

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் இயக்கி வருவது அதிகமாவதாக புகார் எழுந்துள்ளது. பெற்றோரும் இதற்கு உறுதுணையாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்களில்தான் சென்று வருகின்றனர். தற்போது அதிவேகமாக செல்லக்கூடிய வகையில் 150 சிசி, 200 சிசி உள்பட பல்வேறு கம்பெனிகளின் ஏராளமான வாகனங்கள் விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக இந்த தனியார் நிறுவனங்கள் இது போன்ற இரு சக்கர வாகனங்களை மாணவர்களை குறிவைத்தே சந்தைப்படுத்துகின்றனர் என்பது அதிர்ச்சித் தரக்கூடிய தகவலாக உள்ளது.


சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாவதோடு, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாதாரணமாக 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை, கூட்ட நெரிசலுக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதுபோன்ற நிலையில், பள்ளி மாணவர்களும் இரு சக்கர வாகனங்களில் ஆபத்தை உணராமல் பள்ளிக்கு சென்று வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது என்று புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தும் மாணவர்களுக்கு எதிராக இந்த ஆண்டில் ஏராளமான வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அந்த மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட வாகனம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து வருகிறோம்.

மேலும் பள்ளி நிர்வாகத்திடமும், பள்ளி வளாகத்தினுள் மாணவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறோம். தற்போது வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் 50 சிசிக்கும் குறைவான பைக்குகள் தயாரிப்பை நிறுத்திவிட்டது. ஆனால் அதி வேகமாக செல்லக்கூடிய வாகனங்களை பெற்றோரே மாணவர்களுக்கு வாங்கி தருவது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதில் முதலில் விழிப்புணர்வு பெற்றோருக்கு வர வேண்டும் என்றார்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தொழில் வரி உயர்வு

டிட்டோஜேக் அழைப்பிதழ் : நாள் – 26.12.2013

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

சிவகங்கை: அரசு பள்ளிகளில் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அளவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. நடப்பு காலம் வரை தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் 3,585 முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக பணி மூப்பு பட்டியலில் உள்ளனர். இதற்கான, கவுன்சிலிங் அறிவிக்கவில்லை. மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற 2,000 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவும் வரவில்லை.
தவிப்பு
இந்த சூழலில், மார்ச்சில் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுதேர்வை தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. தேர்வை சந்திக்க மாணவர்கள் தயாரான நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போதிய முதுகலை ஆசிரியர்களின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முக்கிய பாடங்களான கணிதம், ஆங்கிலத்திற்கு கூட ஆசிரியர்கள் இல்லை. இதனால், தேர்ச்சி விகிதம் குறையும் அபாய நிலை உள்ளது.
முதுகலை ஆசிரியர் சங்கங்கத்தினர் கூறியதாவது: "சுமாராக படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெற செய்யும் நோக்கில் கணக்கு, ஆங்கிலம் உள்ளிட்ட கடினமான பாடங்களில் அக்கறை எடுத்து நடத்துவர். இதற்காக, தேர்வு நேரத்திற்காக முதுகலை ஆசிரியர்களை மாற்று பணியில் நியமித்திருந்தாலும், எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய ஆசிரியர்களின்றி பாதிக்கப்படுவர்.
என்னதான், சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வகுப்பறையில் சொல்லித்தருவது போன்று இருக்காது. ஓரிரு மாதங்களில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு

உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
2014ம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில், எதிலிருந்து மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால், நிர்வாக பணிகளில் காலதாமதம் ஏற்படுவதோடு, மீண்டும் ஒரு துணை தேர்வாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, விருப்ப உரிமை அளிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெறவிருக்கும், தலைமை ஆசிரியர்கள், 2009 ஜன.1ம் தேதி முதல், 2013 டிசம்பர் 31 வரை உள்ள காலங்களுக்கு பணிக்காலத்தில் அவரின் தலைமையில் பள்ளியின் சிறப்பு வரவு, செலவு திட்ட அறிக்கை தவறாமல் பெற்றனுப்பட வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் சார்பில் விருப்ப கடிதம் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த ஆண்டு அளித்திருந்தாலும், இந்த ஆண்டும் புதிய விருப்ப கடிதம், படிவம் இணைத்தனுப்ப வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சத்துணவுக்கு அழுகிய முட்டைகள் சப்ளை?

நாமக்கல்: முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சத்துணவுக்கான முட்டை சப்ளையில், காலாவதியான மற்றும் அழுகிய முட்டைகளை கலப்படம் செய்யப்படுவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யவும், குழந்தை பருவ இறப்பை தவிர்க்கவும், உடல்திறன் அதிகரிக்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்க்கவும், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறை சார்பில், சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சத்துணவு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் வாரத்தில் மூன்று நாட்களும், பள்ளிகளில், வாரத்தில் ஐந்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. இதற்காக, நாமக்கல் பகுதிகளில் இருந்து, தினமும் 70 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்றன.
சத்துணவிற்கு வழங்கப்படும் முட்டை, தலா, 46 முதல், 52 கிராம் இருக்க வேண்டும். ஒரு முட்டைக்கு, அரசு கொடுக்கும் விலை, 3.18 ரூபாய். அதேபோல், 12 முட்டைகளை, ஒரே நேரத்தில் எடை போட்டால் 552 கிராம் இருக்க வேண்டும். நாள் வாரியாக முட்டை சப்ளை செய்யப்படுவதை உறுதி செய்ய தினமும் ஒரு வண்ணத்தில் முட்டையின் மீது, "இங்க்" பதிவு செய்ய வேண்டும். அரசின் இந்த கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு டெண்டர் எடுத்தவர்கள், குழந்தைகளுக்கு, முட்டைகளை சப்ளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு மாதங்களாக நாமக்கல் பகுதியில், முட்டை கொள்முதல் விலை அதிகபட்சமாக, 4.15 ரூபாய் வரை சென்றது. அதனால் அரசிடம் டெண்டர் எடுத்தவர்களுக்கு உரிய லாபம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அரசின் விலைக்கும், கொள்முதல் விலைக்கும், ஒரு முட்டைக்கு, 1.00 ரூபாய் வரை இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், குறைந்த எடையுள்ள முட்டை, விற்காமல் காலாவதியான முட்டை ஆகியவற்றை, சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டையோடு கலந்து விடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சத்துணவு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: தினசரி மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி முட்டையின் விலை உயர்ந்துள்ள நிலையில், அரசிடம் டெண்டர் எடுத்தவர்கள், அரசு நிர்ணயித்த விலைக்கே சப்ளை செய்கின்றனர். அதில், அவர்களுக்கு லாபம் குறைந்ததால் காலாவதி முட்டைகளை கலந்து விடுகின்றனர். அதனால், சத்துணவு வழங்கும் பொறுப்பாளர்களுக்கும், புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சத்துணவு முட்டையை வேக வைக்கும் முன், தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். அதில், மிதக்கும் முட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். உடைந்த முட்டைகள் மற்றும் வேக வைக்கும் போது உடையும் முட்டைகளை, குழந்தைகளுக்கு தரக் கூடாது. அந்த முட்டைகளை, தனியாக எடுத்து கணக்கு வைத்து, டெண்டர் எடுத்தவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யும் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது: சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டைகள், கோழி, முட்டையிட்ட தேதியில் இருந்து, மூன்று நாட்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதனால் முட்டையில் கலப்படம் மற்றும் அழுகிய முட்டை சப்ளை செய்ய முடியாது. யூனியன் வாரியாக, முட்டை சப்ளைக்கு டெண்டர் எடுத்தவர்கள், ஆட்களை நியமித்து, கண்காணித்து வருகின்றனர்.
குளிர்கால சீசன் என்பதால், முட்டையை, 20 நாள் வரை வைத்திருந்தாலும் கெடாது. தற்போதைய விலை உயர்வுக்கும், அரசின் டெண்டரில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் வித்தியாசம் அதிகரித்துள்ளது. அதனால், முட்டை டெண்டர் எடுத்தவர்கள், ஏற்ற, இறக்கத்தை சந்தித்தே ஆக வேண்டும்; வேறு வழியில்லை. அழுகிய முட்டைகள் இருந்தால், தண்ணீரில் போடும் போதே, தெரிந்துவிடும். அதை, டெண்டர் எடுத்தவர்களிடம் திருப்பி கொடுத்தால், எடுத்துக் கொள்வர். அந்த, நடைமுறை ஏற்கனவே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.
கடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது.
ஒரு தேர்வு நடந்தால், அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்கு மேல் வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் குறைந்தபாடில்லை.
ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால் தேர்வர்களும், முடிந்த வரை போராடுகின்றனர். ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி இன்று வரை முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், சில கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தமிழ் பாடத்தின் தேர்வு முடிவை வெளியிட கோர்ட் தடை விதித்தது.
இந்த வழக்கில் கடந்த வாரம், தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட கோர்ட் உத்தரவிட்ட நிலையில், புதிதாக இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.
இதற்கிடையே ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தோல்வி அடைந்தனர். "சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை" என தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:
பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள் நடந்து விடுகின்றன. தவறான விடை, கேள்வி என தெரிந்தால், அதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும் "உரிய மதிப்பெண் வழங்கவில்லை" என தேர்வர் கூறுகின்றனர்.
எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு 2,000 ரூபாய் என ஐந்து பேர் சேர்ந்து, ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும், பலரும் வழக்கு தொடர்ந்ததால் வழக்குகளின் எண்ணிக்கை, மலை போல் குவிந்துள்ளது.
"அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்து உள்ளோம். தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராத அளவிற்கு, தேர்வை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில் வரி இந்த அரையாண்டு முதல் உயர்வு

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1) முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. 
 
          ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்து, வரி நிர்ணயம் செய்யப்படும். இதற்குமுன் 1.10.2008ல் தொழில் வரி சீராய்வு செய்யப்பட்டது.தற்போது 25 சதவீதம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீராய்வு அடிப்படையில், 1.10.2013 முதல் 25 சதவீதமாக இருந்த தொழில் வரி, 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி இயக்குனர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வரி உயர்வு தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12/21/2013

தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்

மதுரை கிளையில் வழக்கு முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சிலர், வழக்கு தொடர்ந்துள்ளதால், முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில், போட்டித் தேர்வு நடந்தது. தமிழ் பாடம் தவிர, இதர பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பையும், நடத்தி முடித்துவிட்டது. "தமிழ் பாட கேள்வித்தாளில், சில பிழையான கேள்விகள் இடம் பெற்றன; இதற்கு, உரிய மதிப்பெண் தர வேண்டும்" என வலியுறுத்தி உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சில தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக, தமிழ் பாடத் தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.
இந்நிலையில், சமீபத்தில், தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட, உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆனாலும், இதுவரை, தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதுகுறித்து டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "மதுரை கிளையில் வழக்கு முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சிலர், வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், முடிவு வந்தால் தான், தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட முடியும்" என தெரிவித்தது. இதனால், இப்போதைக்கு, தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளி வராது என தெரிகிறது.

ஜனவரி மாதம் 2014 தொடக்கக்கல்வி இயக்குனர் அவ்ர்களால் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டி

நிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 48 பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும் 1000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமலும் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில் அங்கீகாரம் தொடர்பான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் புதுப்பித்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கோவை கணபதி பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 23 ஆண்டுகளாக குமாரசாமி மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 23 வகுப்பறை உள்ளன. எல். கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 750 மாணவர்கள் படித்து வருகின்றனர்; 40 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக பள்ளியை மூடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெற்றோர் ஒருவர் கூறுகையில், "பள்ளி நிர்வாகம் திடீர் என்று பள்ளியை மூடப்போவதாக தனித்தனியாக பெற்றோர்களை அழைத்து அறிவித்து வருகிறது. எனது இரு மகன்கள், இப்பள்ளியில் படிக்கின்றனர். மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் இடம் கிடைக்குமா என்பதும், அவ்வாறு கிடைத்தாலும் புதிய பள்ளிக்கான கட்டணம், நன்கொடை, புதிய சீருடை என பல சிரமங்கள் உள்ளன.
பிற பள்ளிகளில், இடம் கிடைக்க முழு பொறுப்பையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும், எங்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை பணத்தை திருப்பி தரவேண்டும்" என்றார்.
பள்ளியின் முதல்வர் பிரவீண் கூறுகையில், "நிதி பற்றாக்குறையின் காரணமாக பள்ளியை மூட உள்ளோம். அங்கீகாரம் புதுப்பிக்கவும், மேற்கொள்ள வேண்டிய இதர பணிகளுக்கும் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மாணவர்களுக்கு மேற்கொண்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இயலாததால், பள்ளியை முறைப்படி மூட அனுமதி கேட்டுள்ளோம். பெற்றோர்களுக்கும், முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ரங்கராஜன் கூறுகையில், "பள்ளி நிர்வாகம், பள்ளியை மூடுவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இதை சென்னைக்கு அனுப்பியுள்ளோம். தலைமை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

டிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (TNPSC)


Departmental Examinations, December, 2013
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 23.12.2013 to 31.12.2013)
           Enter Your Application Number :DED13                                  
                                                                        Date       Month           Year
                Enter Your Date of Birth   :      /     /   

                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

அனைவருக்கும் கல்வி இயக்கம்(SSA) கலைக்கப்படாது - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா

"அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை" என பள்ளிக் கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.
கடந்த, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாற்றுத் திறனாளி மாணவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல், இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்ட காலம், 2010ல், முடிந்தது; தொடர்ந்து, மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய மனித வளமேம்பாட்டு துறை இத்திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் இணைக்க, ஆலோசித்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க முக்கிய பணியான, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, அதில் பணிபுரிந்தவர்கள், கலந்தாய்வின் மூலம் மீண்டும் பள்ளிகளுக்கே அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கான நிதியை, மத்திய அரசு நிறுத்தியதே காரணம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது இத்திட்டத்தை நிறுத்துவதற்கான, மறைமுக நடவடிக்கை என்று கூறப்பட்டது. திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, "அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கத்துடன் இணைப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனைகளும், மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது" என்றார்.

தேசிய நல்லாசிரியர் விருது: தேர்வுக் குழுவுக்கு "கிடுக்கிபிடி"

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யும் தேர்வுக் குழு மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2013ம் ஆண்டுக்குரிய தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்வுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர்கள் தூய்மையான கல்வி பணியாற்றுவர்களாகவும், எந்தவித புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்பட்டவராக இருக்க கூடாது.
விருதுக்கு தகுதியானவர்கள் பணிபுரியும் பள்ளிகளை பார்வையிட்டு அதன் அடிப்படையில் மார்க் வழங்கி தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதனை மீறி செயல்படும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு குழு மூலம் ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து அவர்களின் சார்பில் கருத்துருக்களை தயாரித்து பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் எந்தவித புகாருக்கும் இடமின்றி சார் நிலை அலுவலர்கள் இதன் மீது தனிக் கவனம் செலுத்தி மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அலுவலர்கள் தாங்களே இனம் கண்டு உரிய கருத்துருக்களை தயார் செய்து பரிந்துரைக்க வேண்டும். ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்களை பெற்று பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்.
2011-12ம் கல்வி ஆண்டில் அல்லது அதற்கு முன்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடையவராவார். தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தூய்மையான கல்வி பணியாற்றுபவர்களாகவும், எந்தவித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டவராக இருக்க கூடாது.
இதனை மீறி செயல்படும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12/19/2013

சிவகங்கை மாவட்டத்தில் கல்வித்துறையை குழப்பும் குறுந்தகவல்கள்

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் கடந்த சில நாட்களாக குறுந்தகவல்கள் ஆசிரியர்களை குழப்பி வருகிறது. பள்ளி வேலை நாட்கள் பொதுவாக மாவட்டத்திற்கு ஏற்ப மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களே திட்டமிடும் வழக்கம்தான் இது நாள் வரை இருந்து வருகிறது. ஆனால் நேற்று சில ஒன்றியங்களில் சனிக்கிழமை வேலை நாள் இல்லை என அறிவித்து அந்த செய்தி குறந்தகவல்களாக மாவட்டம் முழுமையும் உள்ள ஆசிரியர்களுக்கு பரப்பப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அளித்துள்;ள விடுமுறை பட்டியலில் சனிக்கிழமை வேலை நாளாகவும் அன்று தேர்வு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு கேட்டபொழுது, பள்ளி வேலை நாளை பொறுத்தவரை அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களிடமும் காலண்டர் கொடுத்துள்ளேன் அதை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தியுள்ளேன் என நம்மிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக உதவித் தொடக்க்கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டால் ஒவ்வொருவரும் மாறுபட்ட பதிலை தருகிறார்கள். புதிய காலண்டர் வருங்காலங்களிலதான் பயன்படுத்த வேண்டும் எனவும் தற்பொழுது பழைய விடுமுறை பட்டியலே தொடரும் எனவும் சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும், இல்லை புதிய காலண்டர்படி சனிக்கிழமை விடுமுறை என சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும் முரண்பட்டு கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குழப்பமான சூழலில் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில ஒன்றியங்களில் வருகிற சனிக்கிழமை விடுமுறை அறிவித்து  சனிக்கிழமை நடைபெற உள்ள தேர்வுகள் இன்று நடத்தப்பட்டுள்ளது. மற்ற ஒன்றியங்களில்  பழைய விடுமுறை பட்டியல்படி சனிக்கிழமை வேலை நாளாகவும், தேர்வு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்குள் நிகழ்ந்துள்ள குழப்பத்தால் ஆசிரியர்கள் குழம்பி நிற்கின்றனர் என்பதுதான் உண்மை. வருங்காலங்களில் இந்த குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நம் அவா.

பதவி உயர்வை வெறுத்த ஆசிரியர்கள்: அவசர அழைப்பால் ஏமாற்றம்

ள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி உயர்வு "கவுன்சிலிங்"கை, ஆசிரியர்கள் பலர் வெறுத்து, "தற்காலிகமாக வேண்டாம்" என பதில் கொடுத்துள்ளனர்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக பணிமூப்பு பட்டியலில் உள்ள பட்டதாரிகள், தமிழாசிரியர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு டிச., 14ல் "கவுன்சிலிங்" நடந்தது.
இதற்கிடையே, அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ.,) திட்ட மேற்பார்வையாளர்கள், அப்பணியில் இருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான "கவுன்சிலிங்"கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
இதனால், எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர்கள் பலருக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாய்ப்பு கிடைத்ததால் பட்டதாரி, தமிழாசிரியர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரும்பிய இடங்கள் கிடைக்கவில்லை. தூரத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே பணியிட வாய்ப்பு கிடைத்தன.
இதனால், 248 இடங்களுக்கு நடந்த "கவுன்சிலிங்"கில், "பேனலில்" இருந்து அழைக்கப்பட்ட 156 ஆசிரியர்கள் வரை "பதவி உயர்வு தற்காலிகமாக வேண்டாம். தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து பணியாற்றுகிறேன்" என, எழுதிக்கொடுத்துள்ளனர். இதில், பெரும்பாலும் ஆசிரியைகள். குடும்பச் சூழ்நிலை, அவசர அழைப்பு, தொலைதூர இட வாய்ப்பு போன்ற காரணங்களால் "கவுன்சிலிங்"கை வெறுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கச் சட்டச் செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது: "அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர்களையும் இதில் சேர்த்து "கவுன்சிலிங்" நடத்தி விட்டனர். மேலும், ஒரேநாள் இரவில் எவ்வித "ரெக்கார்டு"ம் இல்லாமல், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை போனில் அழைத்து, "நாளை காலை பதவி உயர்வு "கவுன்சிலிங்" கட்டாயம் பங்கேற்க வேண்டும்" என, தகவல் கூறப்பட்டது. மேலும், பலருக்கு விரும்பிய இடமும் பறிபோனதால், குறிப்பாக ஆசிரியைகள் "கவுன்சிலிங்"கை வெறுத்து பெயருக்கு பங்கேற்று திரும்பினர். பதவி உயர்வு "கவுன்சிலிங்"கால் எவ்வித பயனும் இல்லை" என்றார்.