பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2/28/2014

பசுமையான, சுத்தமான மூன்று பள்ளிகளுக்கு விருதுகள்




தேர்தல் வகுப்பு எதிரொலி - ஆசிரியர் உரிமை இயக்கம் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு.

இன்று (28.2.2014) சிவகங்கையில் பல்வேறு ஒன்றியங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்பு நடைபெறுவதால் இன்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெறவிருந்த ஆசிரியர் உரிமை இயக்கம் உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் வருகிற 2.2.2014 ஞாயிற்று கிழமை அதே இடத்தில் நடைபெறும் என ஆசிரியர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இளங்கோ தெரிவித்தார். ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

யாருக்கு வாக்களிப்பது? குழப்பத்தில் இடைநிலை ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிப்பது?

பெரும் குழப்பத்தில் 75000 இடைநிலை ஆசிரியர்களும் அவரது குடும்பத்தார்களும் உள்ளனர்.கடந்த தி.மு .க.ஆட்சியில் ஆறாவது ஊதியக்குழுவில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக்காட்டி போராட்டங்களைச் செய்தார்கள் ஆனால் அவ்வரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை அதனால் வெறுப்பில் இருந்த இடைநிலை
ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கவரும் வண்ணம் அப்போதைய எதிர்க்கட்சி இப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு .க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஊதியக் குழு முரண்பாடுகள் நீக்கப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றது.ஆனால் இதுவரை அவைகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே இந்த முறை யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.இதுபோன்ற குளறுபடிகள் எல்லாத் துறைகளிலும் காணப்படுவதால் அவர்களும் குழப்பத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர்.எனவே இந்த முறை யார் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்பதை உற்றுநோக்கியே வாக்களிப்பார்கள் எனத் தெரிகிறது.இரண்டு முக்கிய கட்சிகளும் புறக்கணிப்பதால் ஆசிரியர்கள் போராட்டங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

TET - 5 சதவீத மதிப்பென் தளர்வு. மாவட்டம் வாரியான பட்டியல் வெளியீடு

ஸ்டிரைக் செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டனர்.கடந்த 25ம் தேதி பள்ளிக்கு வருகை புரிந்தும், பாடம் நடத்தாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ம் கட்டமாக நேற்று தற்செயல் விடுப்பு பெற்று, பள்ளிக்கு வருவதை தவிர்த்தனர். போராட்டத்தின் போது மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனர் நேற்று, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார். இது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நேற்று தற்செயல் விடுப்பு பெற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் மூலம், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை அடங்கிய பட்டியல், சென்னைக்கு நேற்று காலை 11:00 மணிக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மானாமதுரை கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு. DEEO உடன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு

27.2.2014 அன்று மாலை 3.00 மணிக்கு சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளை மானாமதுரை பிரச்சனை குறித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் கோரிக்கைகள் குறித்தும் நேரடி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து இருந்தார். DEEO அவர்கள் மாவட்டத்தின் புதிதாக பணியேற்றதால் TNPTF நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து பேச்சு வார்த்தையை தொடங்கினர். DEEO முன்னிலையில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்வதாகவும், முதல் கோரிக்கையை விரைந்து முடிப்பதாகவும் உடன்பாடு செய்யப்பட்டது. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற மானாமதுரை உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஒத்துக்கொண்டதால் இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை வட்டாரத்தில் கல்விச் சூழல் சுமூகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருவதாக AEEO  உறுதியளித்துள்ளார். TNPTF நிர்வாகிகளும் ஆசிரியர் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டால் ஒன்றிய நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலான இச்சநதிப்பில் சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் மானாமதுரை AEEO திருமதி.நாகலெட்சுமி இவர்களுடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் திரு.ஜோசப் ரோஸ், மாவட்டத்தலைவர் திரு.முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளர் திரு.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் திரு.சிங்கராயர், மானாமதுரை வட்டாரச்செயலாளர் திரு.தங்க மாரியப்பன், தலைவர் திரு.இரமேஷ் குமார், பொருளாளர் திரு. இரவிக்குமார், மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

2/26/2014

மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள் அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 10% அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 100%ஆக உயரும் அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது.

இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள். தேர்தல் விதிகளை பாதிக்காது வகையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னேர இந்த 2 முடிவுகளும் வெளியாகும் என தெரிகிறது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் C.L ஐ இரத்து செய்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு



2/25/2014

தமிழகத்தில் உயர்ந்துவரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை!

சென்னை: தமிழகத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சுமார் 80 புதிய பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அமைப்புடன் இணைந்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகளின் நாடு முழுவதுமான மொத்த எண்ணிக்கை 14,841 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பல பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் மாநில வாரியத்தில் படிப்பதை விட, சி.பி.எஸ்.இ., வாரியத்தில் படிப்பதையே விரும்புகின்றனர். எனவே, மாநிலத்தின் பல பள்ளிக் குழுமங்கள், தங்களின் சில பள்ளிகளை மாநில கல்வி வாரிய அடிப்படையிலும், சில பள்ளிகளை சி.பி.எஸ்.இ., கல்வி வாரிய அடிப்படையிலும் நடத்துகின்றன.
மாநில வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கென்று சில குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கின்றன. சி.பி.எஸ்.இ., கல்வியோடு ஒப்பிடும்போது அதிக மதிப்பெண்களை சற்று எளிதாகப் பெறுதல், மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்கும்போது முன்னுரிமை பெறுதல் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.
அதேசமயம், சி.பி.எஸ்.இ., கல்வியிலும் சில சலுகைகள் உண்டு. தமிழகத்தைப் பொறுத்த வரையில், 2013 - 2014ம் கல்வியாண்டில் 499 பள்ளிகள் சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றவையாக உள்ளன. சென்னையில் மட்டும் 122 பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ரூ.1.28 கோடி

கோவை: மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 64 நடுநிலைப் பள்ளிகளில் "கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துதல்" என்ற திட்டத்தில் முதல் முறையாக கணித ஆய்வகம் அமைக்க 1.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களின் அடிப்படை கணிதம் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், கணித ஆய்வகங்கள் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்த, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கணிதம் என்பது அனை வரது வாழ்விலும், ஒன்றிணைந்த பாடம். இதில், போதிய அடிப்படை புரிதல் இன்மையால், தேர்வுகளில் கணித பாடத்தையும் பிற பாடங்களை போன்று மனப்பாடம் செய்து எழுதும் அவலநிலைதான் தற்போது உள்ளது. இதனால், மாணவர்களின் அடிப்படை கணிதத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நடுநிலைப்பள்ளிகள் வீதம் தமிழகத்தில் 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும். பள்ளி ஒன்றுக்கு இரண்டு லட்சம் வீதம் 64 பள்ளிகளுக்கு 1.25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
இது சார்ந்த, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் விபரம் முன்பே அனுப்பப்பட்டும், மீண்டும் பள்ளிகளின் பெயர் பட்டியல், மார்ச் ௫ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பள்ளிகளில் ஆர்வமுள்ள கணித பட்டதாரி ஆசிரியர், ஆய்வகம் அமைக்க வகுப்பறை வசதி, உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கும் வசதி, மாணவர்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது. ஆய்வுக்கு பின் பள்ளிகளின் பெயர் பட்டியல் அனுப்பப்படவுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நிடுநலைப் பள்ளிகள் வீதம் தமிழகத்தில் 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும். பள்ளி ஒன்றுக்கு இரண்டு லட்சம் வீதம் 64 பள்ளிகளுக்கு 128 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

"கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

சென்னை: "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம், பொதுத் தேர்வுப் பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, அடுத்த கல்வியாண்டில் தான் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளில், வகுப்புகளை ஒருங்கிணைந்து பயிலும், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம் முதற்கட்டமாக, 160 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு, உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளால், தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் பிப்., 19ல், தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் முறையில், இத்திட்டத்தை துவக்கி வைத்தார். மார்ச் 7ம் தேதி, பயிற்சி வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள 160 வகுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு அம்மாணவர்களின் சந்தேகம் உள்ளிட்டவைகளை போக்கும் வகையில் நிபுணர்கள் மூலம் பாடம் நடத்தப்படும்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், "தற்போது, பிளஸ் 2, 10ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதால் கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டத்தை, செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே இத்திட்டத்தை அடுத்த கல்வியாண்டில் தான் முழுமையாக செயல்படுத்த முடியும்" என்றனர்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு டி.இ.டி., தேர்வு எழுதலாம்

சென்னை: "பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும், இலவச டி.இ.டி., தேர்வு பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், தேர்வில் பங்கேற்க அனுமதித்தாலும் குழப்பம் தீரவில்லை. அவர்களையும் இலவச பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்வதா, இல்லையா என்ற குழப்பம், பயிற்சி இயக்குனரகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் இலவச பயிற்சி பெற, முதன்மை கல்வி\அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

தேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை


காணாமல் போன கரூர் AEEO


1.1.2013 அன்று நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் தயார் செய்ய உத்தரவு


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வெண்மணி நினைவாலயத்திற்கு ரூ.3 லட்சம் நிதியளிப்பு


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் சார்பில், வெண்மணி நினைவாலயத்திற்காக ரூ.3 லட்சம் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நாகை அவுரித்திடலில் ஞாயிறு முன்னிரவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும் சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவருமான டி.கே.ரங்கராஜன்,எம்.பி. நிதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
நாகைமாலி,எம்.எல்.ஏ. மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.நிதியளிப்புப் பொதுக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநிலத் தலைவர் தி.கண்ணன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் வரவேற்புரையாற்றினார்.தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் அசோக்குமார், தமிழ்நாடுமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஞானசேகரன், இந்தியப் பள்ளிகளின் கூட்டமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவர் தா.கணேசன், இந்தியப் பள்ளிகளின் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.ராஜேந்திரன், தமிழ்நாடு மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.விஜயகுமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் க.இசக்கியப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி சிறப்புரையாற்றும்போது, கீழத் தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் போராடி, செங்கொடி இயக்கத்தை வளர்த்தபி.சீனிவாசராவின் தொண்டுகளையும் வெண்மணி வீரர்களின் தியாகத்தையும் நினைவுகூர்ந்து உரையாற்றினார்.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் சார்பில் வெண்மணி நினைவாலய நிதியாக ரூ.3 லட்சம் நிதியைக் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் ச.மோசஸ் மற்றும் மாநிலத் தலைவர் தி.கண்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் செ.பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. இடம் வழங்கினர்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார்.

பிப்ரவரி 26ம் தேதிக்கு பின் நடக்கவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் 10% அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பும் அன்றைய தினமே வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஒய்வு வயதை 62ஆக உயர்த்தும் கோரிக்கையும் பரிசீலினையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், அதற்கு முன்னரே மேற்காணும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதால் பல்வேறு அறிவிப்புகளுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.   

2/24/2014

கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ஜோசப் அடைக்கல ராஜா கண்ணங்குடிக்கு அதிரடியாக மாற்றம். தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

கடந்த 20.2.2014 அன்று மாநிலத் தலைவர் திரு.கண்ணன், மாநிலப் பொருளாளர் திரு. மோசஸ் அவர்களுடன் சிவகங்கை மாவட்டத்தலைவர் திரு.முத்துப்பாண்டியன் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலவலர் மற்றும் மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலவலர் திருமதி. சீ.நாகலெட்சுமி ஆகியோரின் ஆசிரியர் விரோதபோக்கை தடுத்து நிறுத்தாமல் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் வேடிக்கை பார்ப்பதாக எடுத்துரைத்தனர்.  அதன் எதிரொலியாக உடனடியாக சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலவலராக மாற்றப்பட்டார். கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் அடாவடிகள் குறித்த விசாரனை மேறகொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தியிருந்தோம். அதன் விளைவாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் இன்று (24.2.2014) மாலை கல்லல் AEEO திரு. ஜோசப் அடைக்கலராஜா அவர்களை கண்ணங்குடி உதவித் தொடக்கக்கல்வி அலவலராக மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் மீது தகுந்த விசாரனை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். விதிக்கு புறம்பாக செயல்படும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வரும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  கல்லல்  AEEOஆக தேவகோட்டை கல்வி மாவட்டம் அறிவியல் AEEO திரு. கென்னடி மாற்றம் செய்யப்பட்டார்

மானாமதுரை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்


வெண்மணி நினைவாலய நிதியளிப்பு பொதுக்கூட்டம்



TETOJAC வேவைநிறுத்தம் போஸ்டர்


தமிழக முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். TNPTF@SVG


TETOJAC வேவைநிறுத்தம் தலைவர்கள் வேண்டுகோள்



டிட்டோஜாக் வேலை நிறுத்தத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள்


டிட்டோஜாக் போராட்டத்தில் பங்கேற்போரின் விபரம் அடங்கிய படிவம்


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

மார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL  )பட்டியல் WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID / PASSWORDஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


2/21/2014

இரட்டைப்பட்டம் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் அடுத்த வாரம் SLP தாக்கல்

இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி ஆனதால் வழக்கை உச்ச நீதி மன்றம் கொண்டு செல்ல வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 18.2.2014 அன்று சென்னையில் வழக்குரைஞரை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின் நம்மை தொடர்பு கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அடுத்த வாரம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வழக்குரைஞருடன் புதுதில்லி செல்லவிருப்பதாகவும் அப்பொழுது சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் நம்மிடம் தெரிவித்தனர்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இணைப்பு:

இந்த வழக்கில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 10 பேர் இணைந்துள்ளனர். இவர்கள் தாங்கள் பணி நியமனம்  பெறும்பொழுது இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்வழக்கு இவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனை என்பதால் மிகவும் ஆர்வமுடன் இதில் பங்கெடுத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் அளவில் பேச்சுவார்த்தை - எதிர்பார்க்கும் டிட்டேஜாக்

இன்று 7 அம்ச கோரிக்கை குறித்து கல்வித்துறையின் முதன்மைச் செயல் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக அமைச்சர் அளவில் பேச்சு வார்த்தையை டிட்டோஜாக் எதிர்பார்த்துள்ளது. பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் வருகிற மார்ச்-6ல் திட்டமிட்டபடி மிகப்பெரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நடத்தி முடிப்பதில் டிட்டோஜாக் உறுதியாக உள்ளது.

கல்வித்துறை செயலருடன் TETOJAC சந்திப்பு




முற்றுகை போராட்டம்


கலங்கிக் கிடக்கும் எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர்கள்!

வேற வேலையை பார்த்துக்குங்கன்னு, அதிகாரியே சொல்றதால, ஆசிரியர்கள் ஆடிப் போய் இருக்காங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகத்துக்கு கீழ, பதினாறாயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், வேலை பார்க்கறாங்க பா... மத்தியில, திரும்பவும், காங்கிரஸ் அரசு வந்தா, வேலை தொடருமாம்... ஆட்சி மாறினா, வேலை போயிடும்ங்கற நிலை இருக்காம்... ஏன்னா, மத்திய அரசு நிதியில இருந்து தான், இவங்களுக்கு, சம்பளம் தந்துட்டு இருக்கறாங்க...

''இந்நிலையில, அதிகாரிகளை சந்திச்சு, 'எங்களை காப்பாத்துங்க'ன்னு, ஆசிரியர்கள் கேட்டுட்டு இருக்கறாங்க... ஒரு அதிகாரி, 'எங்களால ஒண்ணும் செய்ய முடியாது... பேசாம, இப்பவே, வேற வேலையை பார்த்துக்குங்க'ன்னு, கூலா சொல்றாரு... இதனால, ஆசிரியர் மத்தியில, நாளுக்கு நாள், பீதி அதிகமாயிட்டு இருக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.''குப்புசாமின்னு என் நண்பர் ஒருத்தர் இருக்கார்... அவருக்கு போன் போட்டு, நாலு கேள்வி கேட்கணும்... வரேன்...'' எனக் கூறிக் கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!

ஆர்.எ ம்.எஸ்.ஏ.: தொகுப்பூதியத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

புதுகை ஆர்.எ ம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணை ப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி மேலாளர் மற்றும் 2 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்துக்கு தொகு ப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விரும்பு
ம் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி மேலாளர் பணியிடங்கள் மற்றும் 2 டேட்டா என்ட்றி ஆப்ரேட்டர் பணியிடங்களில் தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
உதவி மேலாளர் பணிக்கு பட்டப்படிப்பு மற்றும் டேலி ஈ.ஆர்.பி., தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று பணியில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல்வேண்டும். டேட்டா என்ட்றி ஆப்ரேட்டர் பணிக்கு பட்டப்படிப்பு மற்றும் தமிழ், ஆங்கில் தட்டச்சு தெரிந்தவராகவும், பணியில் முன் அனுபவம் உள்ளவர்களாகவும் இருத்தல்வேண்டும்.
  1. விரும்புவோர் புதுகை சி.இ.ஓ., அலுவலகம் அருகில் உள்ள அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு இதற்கான விண்ணப்பத்தை பெறல ாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 24ம் தேதிக்குள் அதே அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு.

டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை.
ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மூன்று நபர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன் பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக்கல்விச் செயலர் தெரிவித்தாக தெரிவித்தார்.

எனவே இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் கூடி விவாதிக்கின்றனர்.அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் வெளியிடப்படும்.

இயக்கம் எடுத்த முயற்சியால் இடம் மாற்றப்பட்ட மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் கல்லல் ஒன்றியங்களில் பணிபுரியும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் தொடர் ஆசிரியர் விரோத போக்கையும், உண்மைக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும்  கண்டித்து  மேற்கண்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பல முறை நேரடியாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை சந்திந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் DEEO மேற்கண்ட அலுவலர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வாந்தார். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் நடவடிக்கையால்அதிருப்தியடைந்த   TNPTF நேற்று(20.2.2014) மாநிலத்தலைவர் திரு.கண்ணன், மாநிலப் பொருளாளர் திரு.மோசஸ் மற்றும் சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு. முத்துப்பாண்டியன் ஆகியோர் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன் அவர்களை சந்திந்து கோரிக்கை மனு அளித்து மாவட்டச் சூழலை விளக்கினர். இதையடுத்து நேற்று பிற்பகல் சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலராக இடம் மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. இரவிக்குமார் நியமிக்கப்பட்டார். இச்சூழலில் மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி  அலுவலரை கண்டித்து வருகிற 28.02.2014 அன்று கண்டன  ஆர்ப்பாட்டம் மானமதுரையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வுத்துறை கவனக்குறைவு

சென்னை: தேர்வுத்துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல் ரோல்" வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த செய்முறை தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளதால் அதற்கு முன் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும் நோக்கில், பிப்., 21ம் தேதி முதல் செய்முறை தேர்வை நடத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டது.
செய்முறை தேர்வு நடத்துவதற்கான, கண்காணிப்பாளர் பணிக்கு வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு, "ட்யூட்டி ஆர்டர்" வழங்கப்பட்டன. ஆனால் தேர்வுத்துறை, "நாமினல் ரோல்" வெளியிடவில்லை; இதனால் மாணவர்களுக்கு, பதிவு எண் மற்றும் "ஹால் டிக்கெட்" வழங்க முடியாத சூழல் உருவாகியது. இதையடுத்து 10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக நேற்று மாலை, கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இன்று காலை சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வுக்கு தயாரான நிலையில் நாமினல் ரோல், கடைசி நேரத்தில் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்படலாம் என ஆசிரியர்களுக்கு, "ரிலிவிங் ஆர்டர்" கொடுத்து விட்டோம்.
தற்போது திடீரென, செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்களின் பி.எட்., கல்வித் தகுதியை பறிக்க முடிவு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 937 இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


துறைவாரியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
01. உயிரியல் - 41 (பொது- 19, ஒபிசி- 9, எஸ்சி- 13).
02. வேதியியல் - 51 (பொது- 20, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 15).
03. வணிகவியல் - 25 (பொது- 8, ஒபிசி- 8, எஸ்சி- 5, எஸ்டி- 4).
04. பொருளியல் - 76 (பொது- 25, ஒபிசி- 12, எஸ்சி- 29, எஸ்டி- 10).
05. ஆங்கிலம் - 53  (பொது- 40, எஸ்சி- 5, எஸ்டி- 8).
06. புவியியல் -33 (பொது- 17, ஒபிசி- 6, எஸ்சி- 6, எஸ்டி- 4).
07. இந்தி -51 (பொது- 37, எஸ்சி- 6, எஸ்டி- 8).
08. வரலாறு - 41 (பொது- 31, எஸ்சி- 8, எஸ்டி- 2).
09. கணிதம் - 84 (பொது- 14, ஒபிசி- 19, எஸ்சி- 27, எஸ்டி- 24).
10. இயற்பியல் - 59 (பொது- 24, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 19).

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் பி.எட்., பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பயிற்றுவிக்கும் திறன் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் 4,800.
வயதுவரம்பு: 31.01.2014 தேதியின்படி 40க்குள். இருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
01. ஆங்கிலம் - 88  (பொது- 32, ஒபிசி- 10, எஸ்சி- 13, எஸ்டி- 33).
02. இந்தி - 65 (பொது- 45, எஸ்சி- 12, எஸ்டி- 8).
03. கணிதம் - 179 (பொது- 62, ஒபிசி- 15, எஸ்சி- 45, எஸ்டி- 57).
04. அறிவியல் - 53 (பொது- 25, ஒபிசி- 1, எஸ்சி- 7, எஸ்டி- 20).
05. சோஷியல் ஸ்டடீஸ் - 38 (பொது- 26, ஒபிசி- 1, எஸ்சி- 4, எஸ்டி- 7).

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் பி.எட். பட்டம் பெற்றிருப்பதுடன் மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.1.2014 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.
எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுவார்கள்.  நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பதிவிறக்கம் செய்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பணமாக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி மறஅறும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.navodaya.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

2/20/2014

மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்படும் உயர்வு ஜனவரி 1 ல் இருந்தும், செப்டம்பர் மாத உயர்வு ஜுலை 1 ல் இருந்தும் அமல்படுத்தப்படும். கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் நன்னடத்தை விதி அமலுக்கு வருவதற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையும் 10 சதவீதத்துக்கு குறையாமல் அகவிலைப்படி உயர்த்தப்படும். 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தால் மொத்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயரும்.

வழக்கமாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் உயர்ந்தால் வீட்டுவாடகை, போக்குவரத்து முதலான இதர படிகளும் உயரும். இதன் காரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.

தற்போது 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அகவிலைப்படியில் குறைந்தது 50 சதவீதத்தையாவது அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால் 30 முதல் 35 சதவீதம் வரை சம்பளம் உயரும் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியக்காரர்கள் பலன் அடைவார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜாக் சந்திப்பு



மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..!

DA for central government employees increased by 10 per cent to 50 per cent DA with basic salary, the Central Government has decided to attach. 

சிவகங்கையில் ஆசிரியர் உரிமை இயக்கம் உண்ணாவிரதம்


வெண்மணி நிதியளிப்பு கூட்டம்


தொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜாக் சந்திப்பு நிறைவு. மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம்

Today (20.2.2014) tittojak am the director of primary education administrators call directly Dr. Elangovan spoke in detail about the 7-point demands. About 90 minutes above the license is non transferable 'justifies our demand at the meeting spoke in detail of each movement leaders. Director of the meticulous care they took note of all things. All of these things immediately எடுத்துரைப்பதகவும் education secretary, principal secretary of education will meet with leaders of the arrangement matippumiku Sabitha tittojak them this evening to inform inmukat said. Tittoja prior to the meeting at 10 am in the meeting room of the visitor took Directorate of primary education. The matters discussed will be discussed with the director. Tamil Nadu Elementary School Teachers Alliance meeting, Tamil Nadu Teachers Alliance, a coalition of Tamil Nadu author, primary author of the Council of Tamil Nadu, the Tamil Nadu Elementary School Teachers Alliance, Tamil Nadu Graduate Teachers Association of Secondary School tittojak launch was attended by representatives of the member associations. Tittojak held an emergency meeting this evening to the next step. Director of primary tittojakkai to end the strike by the strike scheduled to take place on March 6, said. Tittojak at the meeting with representatives of the Tamil Nadu Elementary School Teachers Alliance on behalf of Mr. manilattalaivar. Kannan, மாநிலப்பொருளாளர் Mr. Moses, with mavattacceyalalar kurucami Thanjavur, Sivaganga district முத்துப்பாண்டியன் attended the meeting. The government has taken its first step in the fight tittojak. By positively wish.

வெண்மணி நிதியளிப்பு கூட்டம்



ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

In August last year, the author of takutitter 26 thousand secondary teachers, trained graduate teachers. The passing score of 60 percent (150 - 90 score) was determined to be. Thereafter, only 5 per cent discount given to the reservation section, the pass mark was lowered to 55 percent from 60 percent. Accordingly, the minimum passing score of 150 - 82.5 to come, but, in takutitter 1 matippentan provided for every question. No chance to score a half. 10 thousand people fled Therefore, 82.5 passing score is an integer that is set to 83 test takers expected to change. In this case, CBSE A passing score is 82, as set out takutittervu takutittervai state of Tamil Nadu. The edict was issued immediately. In addition to the 48 percent mark for the reduction specializes thousand people. About 10 thousand people, of whom 82 have developed significant that missed the mark. Takutittervu taking the score to 82 out of the 89 available veyittej Mark 36. I get the job? 5 percentage points discount the newly pass the graduate teachers plus 2, Graduate Studies, p. Ed., Exam (secondary teachers plus 2, Teacher Training Diploma Exam), a high score if they have a job opportunity.

வருமான வரி பற்றிய தகவல்களுக்கு www.tnincometax.gov.in என்ற புதிய இணையதளம் தொடக்கம்

Capture.JPG (461 × 540)

2/19/2014

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் TNPTF பொதுச்செயலாளர் அவர்களுக்கு அனுப்பிய அழைப்பு கடிதம்


பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்




தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள மார்ச் -2014 நாட்காட்டி


சிவகங்கை அருகே தீயில் கருகி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பலி

சிவகங்கையை அடுத்த ஒக் கூரை சேர்ந்தவர் முரளி (வயது 50). இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 15 ஆண்டு கள் ஆகிறது. முரளி ஒக்கூரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி யில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மனைவி திருகோஷ்டியூருக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த முரளி காப்பி போடு வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப் போது எதிர்பாராத விதமாக முரளி மீது தீப்பற்றியது. இதனால் அவர் வேதனை தாங் காமல் அலறி துடித்துள் ளார்.
சாவு
இதற்கிடையில் வீட்டுக்குள் இருந்து புகை வருவதை பார்த்த அப்பகுதியினர் வீட் டுக் குள் சென்று பார்த்தபோது, முரளி மீது தீப்பற்றி எரிந் துள் ளது. உடனடியாக அவரது உடலில் உள்ளதீயை அனைத்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றுள்ளனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இதுகுறித்து மதகுப் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Home

முதல் கட்ட பேச்சு வார்த்தைக்கு டிட்டோஜாக் தலைவர்களுக்கு அழைப்பு - தொடக்கக்கல்வி இயக்குநர் டிட்டோஜாக் அமைப்பின் பொதுச்செயலாளர்களுக்கு தனித்தனியே அழைப்பு கடிதம்

டிட்டோஜாக் சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6.02.2014 அன்று ஒரு நாள் ஊதிய இழப்பு வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்கள் டிட்டோஜாக் இணைந்துள்ள அனைத்து இயக்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும் தனித்தனியே அழைப்பு கடிதம் விடுத்துள்ளார். இக்கடிதத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வருகிற 20.2.2014 அன்று காலை 11.00 மணிக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தைக்கு டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் தவறாது பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகவலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் மதிப்புமிகு பாலசந்தர் நம்மிடம் உறுதிபடுத்தினார்.