3/30/2014
3/28/2014
வாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களை எந்த தகுதி அடிப்படையில் தேர்வு செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
ஒரு வாக்குசாவடியில் முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர் 1, வாக்குசாவடி அலுவலர் 2, வாக்குசாவடி அலுவலர் 3 ஆகிய 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளன.
அதன்படி வாக்குசாவடி முதன்மை அலுவலராக பணியாற்றுபவர் கண்காணிப்பாளர் நிலை மற்றும் அதற்கு மேல் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.4600க்கு மேல் பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.
வாக்குசாவடி அலுவலர் 1 ஆக நியமிக்கப்படுபவர்கள் தேர்வு நிலை உதவியாளர் அல்லது உதவியாளர் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.2800 முதல் ரூ.4800 வரை பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.
வாக்குசாவடி அலுவலர் 2 ஆக நியமிக்கப்படுபவர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் நிலை அலுவலர்கள் தர ஊதியம் ரூ.1800 பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.
வாக்குசாவடி அலுவலர் 3 ஆக நியமிக்கப்படுபவர்கள் இளநிலை உதவியாளர், உதவியாளர் நிலை அலுவலர்கள் தர ஊதியம் ரூ.1800 முதல் ரூ.2800 வரை பெறுபவர்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும்
என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் இறுதியில் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு?
லேபிள்கள்:
Educational News
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு குறுக்கிடுவதையடுத்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது.
விடைத்தாள் மதிப்பீட்டில் இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளொன்றுக்கு இவர்கள் 30 விடைத்தாள்களை மதிப்பீடு செய்தால் 4 நாள்களில் மதிப்பீடு செய்து முடித்து விடலாம் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது:
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் அந்தந்த மதிப்பீட்டு மையங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் எடுத்துச் செல்லப்பட உள்ளன. பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பெரும்பாலும் ஏப்ரல் 14, 15-ஆம் தேதிகளில் நிறைவடையும். அதன் பிறகு இரண்டு நாள்கள் கழித்தே இந்த மதிப்பீட்டு முகாம்களில் பணிகள் முடிவடையும்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களுக்கான பூர்வாங்கப் பணிகள் 2 அல்லது 3 நாள்களுக்கு நடைபெறும். எனவே, ஏப்ரல் 20-தேதிக்குப் பிறகு மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாக ஒரு நாளும், இடையில் பயிற்சிக்காகவும் ஆசிரியர்கள் செல்ல வேண்டியிருக்கும். பயிற்சிக்குச் செல்லும் தேதிகளை தேர்தல் ஆணையத்திடம் இருந்து கேட்டுள்ளோம். கிடைத்ததும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான தேதிகள் இறுதி செய்யப்படும்.
விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 26-க்குப் பிறகு தொடங்கினால் கூட, மே 1-ஆம் தேதிக்குள் முடித்துவிடலாம். இந்தப் பணியில் ஒரு பள்ளிக்கு 5 ஆசிரியர்கள் வீதம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் கடும் நடவடிக்கை: பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடும் எச்சரிக்கை
லேபிள்கள்:
Educational News
ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வுபெறும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிகள், சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எப்.) இறுதி பணம், ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளின்படி ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஜி.பி.எப். இறுதி தொகை, ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட விவரங்களை உரிய ஆவணங்களுடன் மாநில கணக்காயருக்கு அனுப்பி ஓய்வுபெறும் நாளுக்கு மறுநாளே ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்பட வேண்டும்.
ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், தாமதம் ஆனதற்கு காரணமான பணியாளர்கள் அல்லது அலுவலர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு ஓய்வூதிய பலன்களின் தொகைக்கான வட்டி, அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
எனவே, ஓய்வூதிய கருத்துருக்களை முழுமையான அளவில், ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே மாநில கணக்காயருக்கு அனுப்பி காலதாமதமின்றி ஓய்வூதிய பலன்களை ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு பெற்று வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு ஏப். 23 முதல் கோடை விடுமுறை: ஜூன் 2-ல் மீண்டும் திறப்பு
லேபிள்கள்:
அறிவிப்பு,
Educational News
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகின்றன.
ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி) விடுமுறை ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 21, 22-ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும்.
ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன் தெரிவித்தார்.
வெயில் தாக்கம் அதிகரிப்பு துவக்கப்பள்ளிகளில் நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை.
லேபிள்கள்:
Educational News
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலைநேரத்தை, குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், கோடை காரணமாக, நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் காணாமல் போய் விட்டதால், தண்ணீர் பஞ்சமும் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 220 நாட்கள் வேலைநாட்களாக அரசாணை உள்ளதால், ஏப்ரல் மாதம், 30ம் தேதி வரை பள்ளிகள் செயல்பட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வின் நேரத்தை, வெயில் காரணமாக மாற்றியுள்ள நிலையில், துவக்கப்பள்ளி செயல்படும் நேரத்தையும் மாற்றியமைக்க வேண்டும், என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மாணவர்கள் பல அவதிகளுக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில் மின் விசிறி மற்றும் மின்சாரம் உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனால், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் வேலை நேரத்தை காலை, 8.30 மணி முதல் மதியம், 1 மணி வரையாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், முன்னதாகவே தேர்வு நடத்தி அனைத்து பள்ளிகளை போலவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுமுறை அளிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
3/27/2014
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
அரசு அலுவலகங்களில் தகவல் பலகை இல்லை. RTI கேள்விக்குறி?
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தேர்வெழுத மாணவர்களுக்கு மறுப்பு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
குடி தண்ணீர் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் அவதி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
சிவகங்கை மாவட்டத்தில் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம். உறவினர் கைது
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது.
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
105வது ஆண்டு விழா சிறப்படைய வாழ்த்துகிறோம்.
லேபிள்கள்:
வாழ்த்துக்கள்
தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி.
லேபிள்கள்:
Educational News
தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா' என, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுப் பணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முக்கிய பங்காற்றுகின்றனர். மாவட்டங்களில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அனைத்துப் பணிகளையும், குளறுபடி இல்லாமல் நிறைவேற்றுகிற வேலையை, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செய்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர்கள், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், பணியை கவனித்து வருகின்றனர். மற்றொரு பக்கம், 10ம் வகுப்பு தேர்வு துவங்கி உள்ளது. இந்நிலையில், ஏப்., 7 முதல், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)நடத்த உள்ளது.
தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுப் பணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முக்கிய பங்காற்றுகின்றனர். மாவட்டங்களில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அனைத்துப் பணிகளையும், குளறுபடி இல்லாமல் நிறைவேற்றுகிற வேலையை, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செய்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர்கள், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், பணியை கவனித்து வருகின்றனர். மற்றொரு பக்கம், 10ம் வகுப்பு தேர்வு துவங்கி உள்ளது. இந்நிலையில், ஏப்., 7 முதல், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)நடத்த உள்ளது.
மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகள் இருந்தால் தான், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த முடியும்என, டி.ஆர்.பி., கருதுகிறது. இதற்காக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு, அதிகாரிகளை ஒதுக்கி தருமாறு, கல்வித்துறையிடம் கேட்டுள்ளது. டி.ஆர்.பி., நடவடிக்கைக்கு, மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 'தேர்வுப் பணியை கவனிக்கவே நேரம் இல்லாத நிலையில், கூடுதலாக, சான்றிதழ்சரிபார்ப்பு பணியையும் திணித்தால் எப்படி' எனவும், 'தேர்வுப்பணிகள் முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும்' எனவும், அவர்கள் வலியுறுத்துகின்றனர்
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
லேபிள்கள்:
Educational News
கோடை விடுமுறைக்கு பின் 2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் 11ம் வகுப்பு 16.06.2014 அன்று துவக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது .
மேலும் 11ம் வகுப்பு 16.06.2014 அன்று துவக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது .
3/26/2014
ஓய்வூதியருக்கு நேர்காணல்
லேபிள்கள்:
இணையச்செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும், 2014-15ம் ஆண்டிற்கான நேர்காணலுக்கு ஏப்.1 முதல் ஜுன் 30ம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு நேரில் வர வேண்டும். ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், சமீபத்தில் எடுத்த புகைப்படம் இரண்டு, வருமானவரி வரம்பிற்குள் வரும் ஓய்வூதியர்கள் பான் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். முகவரி மற்றும் செல்போன் எண் அல்லது தொலைபேசி எண்ணை கருவூல அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 10-ம் வகுப்புத் தேர்வெழுதிய பண்ருட்டி மாணவி
லேபிள்கள்:
இணையச்செய்திகள்
கடலூர் பண்ருட்டியை அடுத்த வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாக்கியலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம்- வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் இன்று துவங்கிய பொதுத்தேர்வை ஒட்டி, பண்ருட்டியில் உள்ள சுப்ராயலு செட்டியார் அரசு பெண்கள் மேநிலைப்பள்ளியில் தேர்வுமையத்திற்கு தனது சகோதரர் ஆனந்தபாபுவுடன் மொபட்டில் செல்லும் போது அங்குச்செட்டிப்பாளையத்தில் எதிரே வந்த மற்றொரு பைக்கில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவியும், அவரது சகோதரரும் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் சொல்லி வரவழைத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.பலத்தக் காயம் ஏற்பட்டிருந்ததால், பின்னர் அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்த நிலையில் மாணவி தேர்வெழுத வேண்டும் அனுமதிக்கவேண்டும் என மருத்துவ உதவியாளர் மலர் என்பவரிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் விருப்பம் குறித்து மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் மூலம் மாணவி மருத்துவமனையிலேயே தேர்வெழுத சிறப்பு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மாணவி மருத்துவமனையிலேயே தேர்வெழுதினார்.
கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்…
லேபிள்கள்:
கட்டுரை
நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.
டபரா-டம்ளரைக் கும்பகோணத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வாயில் காபியை வைத்ததும் சூட்டின் காரணமாக நாக்கு ருசிக்கும் திறனை இழக்கிறது. அதனால், காபியின் ருசியே தெரியாது சாப்பிட்டுவிட்டு கும்பகோணம் டிகிரி காபி சாப்பிட்டதாக நினைத்துக்கொள்கின்றோம். கும்பகோணத்துக்காரர்களைக் கேட்டால், டிகிரி காபி பாலின் தரத்தால் வருவது என்பார்கள்.
நமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியும் டிகிரி காபியைப் போன்றதே. கட்டிடம், பாடநூல்கள், ஆசிரியர்கள் போன்றவை முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள். மனப்பாடமுறைக் கல்வி சூடான காபியைப் போன்றது. கல்வி கற்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்துவதுடன், கல்வியின் ருசியை அறியாமல் செய்துவிடும். நல்ல பால்தான் டிகிரி காபியைத் தரும் என்பதுபோல, சிந்தனையைத் தூண்டும் வகுப்பறைக் கற்பித்தல்தான் தரமான கல்வியைத் தரும் என்பதை மறந்துவிடுகிறோம்.
குறுக்குவழிக் கல்வி
சுயநிதிப் பள்ளிகள் அனுமதிக்கப்பட்டவுடன் பெற்றோரைக் கவர வேண்டிய தேவை ஏற்பட்டது. பொதுத்தேர்வில் பள்ளியின் தேர்ச்சி விகிதமும், தனிப்பட்ட மாணவருடைய மதிப்பெண்களும் தரத்துக்கு அளவுகோல்களாயின . உயர் தேர்ச்சியை அடைந்திட பள்ளிகள் பல குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தன.
அவற்றில் பிரதானமானது மனப்பாடக் கல்விமுறை. இதன்படி, பாடங்களைக் கற்பிக்காமலோ அல்லது அரைகுறையாகக் கற்பித்தோ பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடைகளை மனப்பாடம் செய்ய மாணவரைப் பழக்கப்படுத்த வேண்டும்.
இந்தப் பள்ளிகளில் 10-ம் வகுப்புப் பாடங்களை 9-ம் வகுப்பிலேயும், 12-ம் வகுப்புப் பாடங்களை 11ம் வகுப்பிலேயும் தொடங்கி, 10, 12-ம் வகுப்புகளில் முழுமையாகத் திருப்புதலுக்கும், தின, வார மற்றும் திடீர் தேர்வுகளுக்கும் பயன்படுத்துகிற நடைமுறையைப் பின்பற்றுகின்றன.
மாணவர்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது. உறைவிடப் பள்ளிகளில் மிகுந்த கட்டுப் பாடுகள். அச்சத்திலேயே 24 மணி நேரமும் மாணவர்கள் வாழ வேண்டிய நிலை பரிதாபத்துக்குரியது. ஐ.நா. குழந்தைகள் உரிமை சாசனம் வற்புறுத்தும் மகிழ்ச்சி கரமான குழந்தைப் பருவம் மறுக்கப்படுகிறது.
உயர் தேர்ச்சி
இம்முறையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கல்வித் துறையே பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற இதுவே சரியான முறை என்று ஏற்றுக்கொண்டு, அதனைப் பள்ளிகளில் செயல்படுத்த முயல்வதை என்னவென்று சொல்வது? பத்து, பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உயர் தேர்ச்சி காட்டிட தனிப்பயிற்சி அளிக்க இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.
கல்வித் துறையே, மாநிலம் முழுவதற்கும் பொதுவாகப் பருவத் தேர்வுகள் நடத்துவதும், வினா வங்கி என்ற பெயரில் வினாத் தொகுப்புகளை வெளியிட்டு விற்பனை செய்வதும் பொதுத்தேர்வுகளில் உயர் தேர்ச்சி அடைந்திட வேண்டுமென்றே. இவை அனைத்தும் மனப்பாட முறைக் கல்வியை வளர்க்கவே உதவும். இதன் விளைவு, பொறியியல் மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே தேர்ச்சி பெறத் தவறுகின்றனர்.
முன்கூட்டியே...
தனியார் பள்ளிகளைப் போல ஒன்பது, பதினொன்றாம் வகுப்புகளிலேயே பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை முன்கூட்டிக் கற்பிக்காவிட்டாலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களுக்குள் பாடங்களை முடித்துவிட்டு, மீதிக் காலத்தை மீள்தேர்வுகளுக்குப் பயன்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், பாடங்களை விரைந்து கற்பிக்க ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர். 200 வேலை நாட்களில் கற்பிக்க வேண்டியவற்றை 150-160 நாட்களில் நடத்த வேண்டுமென்றால், கற்பித்தலும் குறைபடும் மாணவர்களுடைய கற்றலும் வெகுவாகப் பாதிக்கப்படும். பாடத்திட்டங்கள் வகுக்கும்போது, ஒவ்வொரு பாடப் பகுதியையும் நன்கு கற்பிக்கவும் மாணவர் புரிந்துகொள்ளுதலை உறுதிப்படுத்தவும் தேவையான பிரிவேளைகள் ஒதுக்கப்படும்.
ஒரு பாடப் பகுதிக்கு 10 பிரிவேளைகள் தேவையென்றால், ஆசிரியர் விடுப்பு, அந்தப் பகுதியில் ஒரு அலகுத் தேர்வு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு 12 பிரிவேளைகள் ஒதுக்கப்படும். 10 பிரிவேளைகளில் கற்க வேண்டியதை 5, 6 பிரிவேளைகளில் முடிக்க முற்பட்டால், கற்றல் நடைபெறாது. அஜீரணம்தான் ஏற்படும். கற்றல் இல்லாமலேயே தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டுமென்றால், மனப்பாட முறைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள். பள்ளியில் முழுமை யாகக் கற்க இயலாததால் காலையும் மாலையும் தனி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படு கிறது. அதற்கான வசதி இல்லாதவர்கள் அரைகுறை அறிவோடு தேர்வுகளை மட்டுமின்றி வாழ்க்கையையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பெரும் சவால்
பொதுத்தேர்வுக்குரிய வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் படும் துன்பம் அளவிட முடியாதது. ஒரு ஆசிரியர் வேடிக்கையாக, ஆனால் வேதனையுடன், “மாணவர்கள் கீழ் வகுப்புகளிலிருந்து அறியாமையைத் தொடர்வட்டி விகிதத்தில் சேர்த்துக்கொண்டு வருகின்றார் கள். அடிப்படைகள்கூடத் தெரியாத அவர்களைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துதல் பெரும் சவாலாக இருக்கிறது” என்று கூறினார்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து தரமான கல்வியை ஒவ்வொரு மாணவருக்கும் உறுதிசெய்வதன் மூலமே, மனப்பாடமுறைக் கல்வியி லிருந்து மாணவர்களை விடுவிக்க முடியும். அதனை உறுதிசெய்வது ஆண்டாய்வு. ஆனால், கல்வித் துறை தனது முதற்பணியான பள்ளி ஆண்டாய்வை முறையாக நடத்துவதைக் கைவிட்டுப் பல ஆண்டுகளாகிவிட்டன. 10, 12 -ம் வகுப்புகள் மட்டும்தான் பள்ளிக்கல்வி, அவற்றைக் கவனித்தால் போதும் என்ற மாயையிலிருந்து கல்வித் துறை விடுபட வேண்டும்.
அப்போதுதான், மாணவர்களுக்கு அர்த்த முள்ள முழுமையான கல்வி கிடைக்கும். அறிவுமிக்க ஒரு சமுதாயத்தையும் நம்மால் உருவாக்க இயலும்.
குழு முறையில் கற்றல்
கோத்தாரிக் கல்விக் குழு, பேரா. யஷ்பாலின் ‘சுமையின்றிக் கற்றல்’ குழு ஆகியவை பள்ளிக் கல்வியில் தேவைப்படும் சீரிய மாற்றங்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளன. தமிழ்நாட்டில் பாடச்சுமைக் குறைப்புக் குழு, சமச்சீர் கல்விக் குழு ஆகியவையும் பல நடைமுறைச் சாத்தியமுள்ள பரிந்துரை களை அளித்துள்ளன. ஆனால், அவை காற்றில் விடப்பட்டது மாத்திரமின்றி, நேரெதிர் முடிவுகளும் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மாணவர்களுக்காகப் பள்ளியா, பள்ளிக்காக மாணவரா என்ற வினா எழுகிறது. மாணவர்களுடைய வயது, புரிந்துகொள்ளும் தன்மை ஆகியவை கருத்தில் கொள்ளப்படாமல், உயர் கல்வியின் தேவைகளை முன்வைத்தே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையோர் உயர் கல்விக்குச் செல்லும் வாய்ப்பை இதுவே குறைக்கிறது என்பது ஒரு முரண்நகை. போட்டி முறையில் கற்றல் என்பதைவிட, குழுமுறையில் கற்றல் என்பதை ஊக்குவிக்கும் வகையில், கல்விமுறை அமைக்கப்பட வேண்டும்.
வகுப்பறை என்பது விவாத அரங்காக மாற வேண்டும். மாணவர் பங்கேற்புடன் வகுப்பறை மாறும்போதுதான் உண்மையான கல்வியை மாணவர்கள் பெற முடியும் என்பதைப் பல ஆய்வுகளும் வலியுறுத்தியுள்ளன.
பள்ளிக் கல்வியில் சீரிய மாற்றங்களைக் கொண்டு வராமல் முன்னேற்றப் பாதையில் செல்ல இயலாது. பளபளக்கும் டபரா-டம்ளர்களைப் பார்த்து டிகிரி காபி என நம்புவதுபோல், அர்த்தமற்ற கல்வி மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளை நாம் இழந்துவிடக் கூடாது.
-ச. சீ. இராசகோபாலன், கல்வி ஆர்வலர்,
முன்னாள் மாநிலத் தலைவர்,
தலைமை ஆசிரியர் சங்கம்.
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com
முன்னாள் மாநிலத் தலைவர்,
தலைமை ஆசிரியர் சங்கம்.
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com
செ.நடேநன், முன்னாள் TNPTF மாநிலப் பொதுச் செயலாளர் அவர்களின் கருத்துரை
‘கும்பகோணம் டிகிரி காபியும், சமகாலத்துக் கல்விமுறையும்’ கட்டுரையில் கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் எழுப்பியுள்ள பிரச்சனைகள் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ் நாட்டின் கல்விவளர்ச்சியில் அக்கறைகொண்ட அனைவரும் ஆழ்ந்துபரிசீலிக்க வேண்டியவை ஆகும். சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் பெருகிக் கல்வி ஒரு வியாபாரமாகிவிட்ட இன்றையசூழலில் தேர்வு ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஆழ்ந்த புரிதலற்ற மனப்பாடக்கல்வியை மையமாகக்கொண்டே இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோத்தாரி கல்விக்குழு, பேரா.யஷ்பாலின் ‘சுமையின்றிக்கற்றல்’ தமிழ்நாட்டில் பாடச்சுமைக்குறைப்புக்குழு, சமச்சீர் கல்விக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதுமட்டுமின்றி, அவற்றிற்கெதிரான முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவது அனைவராலும் கவலை உணர்வோடு பரிசீலிக்கப்படவேண்டும்.அதுமட்ட ுமல்ல, தமிழக அரசு பயிற்றுமொழிக் கொள்கையில் உலக்அறிஞர்கள், கல்விவல்லுனர்கள் கருத்துக்களுக்கு மாறாக முதல்வகுப்பிலிருந்தே ஆங்கிலமொழிமூலம் கல்வி என்ற அபத்தத்தை நடைமுறைப் படுத்திவருகிறது. கெட்டிதட்டிப்போன நமது கல்வித்துறை கல்வியில் சீரியமாற்றங்களைக் கொண்டுவரும் என்று என்ற நம்பிக்கை மெல்லமெல்லப் பொய்த்துவருகிறது
வகுப்பறை என்பது விவாத அரங்கமாக மாறவேண்டும்: மாணவர் பங்கேற்புடன் வகுப்பறை மாறும்போதுதான் உண்மையான கல்வியை மாணவர்கள் பெறமுடியும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்கமுடியாது. இந்த நேரத்தில் கல்வியில் அக்கறைகொண்ட கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் ஆற்றிவரும் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘எனக்கு ஏன் இல்லை கல்வி?’ ‘இது யாருக்கான வகுப்பறை?’ ‘ஆயிஷா’ முதலான பல நூல்கள் வெளிவருவதும், இவற்றை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போன்ற ஆசிரியர் இயக்கங்களே ஆசிரியர்கள் மத்தியில் கொண்டுசெல்வதும் நம்பிக்கை அளிக்கின்றன.
சுயநிதிக்கல்வி நிறுவன்ங்கள் தரும் மனப்பாடக்கல்விமுறை என்ற பளபளக்கும் டபராக்களில் அல்ல: மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விவாத அரங்காக மாறும் வகுப்பறை என்ற பாலில் தான்- கும்பகோணம் காபி என்ற- அர்த்தமுள்ளகல்வி இருக்கிறது. இதை அடுத்ததலைமுறைக்குக் கொண்டுசெல்லும் பணியில் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
அன்புடன்,
செ.நடேசன்,
20.பாரதி இல்லம்,
திருப்பூர் ரோடு,
ஊத்துக்குளி.ஆர்.எஸ்.638752
கோத்தாரி கல்விக்குழு, பேரா.யஷ்பாலின் ‘சுமையின்றிக்கற்றல்’ தமிழ்நாட்டில் பாடச்சுமைக்குறைப்புக்குழு, சமச்சீர் கல்விக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதுமட்டுமின்றி, அவற்றிற்கெதிரான முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவது அனைவராலும் கவலை உணர்வோடு பரிசீலிக்கப்படவேண்டும்.அதுமட்ட
வகுப்பறை என்பது விவாத அரங்கமாக மாறவேண்டும்: மாணவர் பங்கேற்புடன் வகுப்பறை மாறும்போதுதான் உண்மையான கல்வியை மாணவர்கள் பெறமுடியும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்கமுடியாது. இந்த நேரத்தில் கல்வியில் அக்கறைகொண்ட கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் ஆற்றிவரும் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘எனக்கு ஏன் இல்லை கல்வி?’ ‘இது யாருக்கான வகுப்பறை?’ ‘ஆயிஷா’ முதலான பல நூல்கள் வெளிவருவதும், இவற்றை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போன்ற ஆசிரியர் இயக்கங்களே ஆசிரியர்கள் மத்தியில் கொண்டுசெல்வதும் நம்பிக்கை அளிக்கின்றன.
சுயநிதிக்கல்வி நிறுவன்ங்கள் தரும் மனப்பாடக்கல்விமுறை என்ற பளபளக்கும் டபராக்களில் அல்ல: மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விவாத அரங்காக மாறும் வகுப்பறை என்ற பாலில் தான்- கும்பகோணம் காபி என்ற- அர்த்தமுள்ளகல்வி இருக்கிறது. இதை அடுத்ததலைமுறைக்குக் கொண்டுசெல்லும் பணியில் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
அன்புடன்,
செ.நடேசன்,
20.பாரதி இல்லம்,
திருப்பூர் ரோடு,
ஊத்துக்குளி.ஆர்.எஸ்.638752
கற்றல் திறனை சோதிக்க தேசிய அளவில் தேர்வு
லேபிள்கள்:
Educational News
அண்ணாமலை பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியீடு
லேபிள்கள்:
தேர்வு முடிவுகள்
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக, தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கம், டிசம்பர் - 2013ல் நடத்திய, அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள், எம்.பி.ஏ., டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகளை www.annamalaiuniversity.ac.in; www.kalvimalar.com ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
முறைகேடு நடக்காமல் இருக்க...தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு
லேபிள்கள்:
Educational News
"பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்" என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. 7.31 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். குளறுபடிகள் இன்றி, தேர்வை நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
தேர்வு நாட்களில், அந்த பாடத்தை நடத்தும் ஆசிரியர், அறை கண்காணிப்பாளராகவோ அல்லது பறக்கும் படை உறுப்பினர்களாகவோ இருக்க கூடாது. உதாரணமாக, தமிழ் தேர்வு நாளில், தமிழாசிரியர், எப்பொறுப்பிலும் பணியமர்த்தக் கூடாது.
அத்தகைய ஆசிரியர்களுக்கு, அன்றைய தினம், விடுப்பு கொடுத்து விட வேண்டும். ஆனால், முதன்மை கண்காணிப்பாளராக இருக்கும், தலைமை ஆசிரியர் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு, கடந்த, 25ல் நிறைவடைந்துள்ளது.
குரூப் I முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
லேபிள்கள்:
தேர்வு முடிவுகள்
CPS - மசோதா பாராளமன்றத்தில் நிறைவேற்றும் போது மத்திய நிதியமைச்சரின் பேச்சு - நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை நிறைவேற்ற நிர்பந்தம் செய்ய வில்லை -இது மத்திய அரசின் திட்டம் என தகவல் -The State Governments were not obliged to join. They joined voluntarily. Only for the Central Government employees, it is mandatory from 1.1.2004.
லேபிள்கள்:
cps
njhFg; G: gp. gpnunlupf; Vq;nfy;]; khepyg; nghJf;FO cWg;gpdu;; (TNPTF)
135-PAGE
THE MINISTER OF FINANCE (SHRI P. CHIDAMBARAM): Mr. Chairman, I am grateful to the hon. Members, 15 of them, who have participated in this discussion on the Pension Fund Regulatory and Development Authority Bill.
Sir, this Bill was first introduced in 2005. It was once reported by the Standing Committee on Finance chaired, at that time, by Maj. Gen. (Retd.) Khanduri. The Standing Committee favourably reported the Bill. There were one or two dissent notes, mainly from the Left Parties. That Bill lapsed with the dissolution of the
Lok Sabha.
The Bill was again re-introduced in 2011 and this is one of the rare Bills that went through another Standing Committee procedure. This time, the Standing Committee was chaired by Mr. Yashwant Sinha. This Committee also favourably reported the Bill. There was only one Member who dissented to the Standing Committee’s report. The point I wish to make is that, at least, in the Standing Committee, there was very wide consensus for the Bill except one dissenting voice to the Bill that is now under consideration.
Secondly, when my friend, Shri Nishikant Dubey, spoke, I thought he will take credit for the fact that the interim PFRDA was actually notified by Shri Vajpayee’s Government in October 2003.
SHRI NISHIKANT DUBEY : I said that.
SHRI P. CHIDAMBARAM: That may have been lost in translation. The notification was made on 22.12.2003 and the New Pension Scheme came into force from 1.1.2004. So, when the UPA Government took office, the Scheme had come into force and all Government servants recruited after 1.1.2004 are covered by the New Pension Scheme. Every Government servant in service prior to 1.1.2004 is under the old scheme. Nobody is affected, nobody is complaining and they are not aggrieved.
The Government servants who were recruited after 2004 have been recruited with the clear stipulation that pension will be under the New Pension Scheme. To the best of my knowledge – I have been in the Finance Ministry
04.09.2013
earlier for some time and now again – I think by and large the Government servants have come to accept the fact that the New Pension Scheme is, in the long run, a beneficial Scheme. They may begin to earn pension only 28 or 29 years after they join service. There are one or two other developments on which I thought I should comment. I know Shri T.K.S. Elangovan and Dr. Raghuvansh Prasad Singh have some reservations. But the point is, the 2005 Cabinet which approved the Bill, had Dr. Raghuvansh Prasad Singh as a member. He was the member of the Cabinet which approved this Bill. Shri Elangovan’s Party had many members in the Cabinet which approved this Bill. Therefore, I suppose that memories are short. I acknowledge and I respect their right to express their concerns. But when it comes to supporting the Bill finally, I have no doubt in my mind that our colleagues will support us in this Bill. Actually, what you must remember is that you cannot turn back the clock. Twenty-six States have already joined the NPS. For example, Shri Semmalai opposed the Bill. But I want to remind him that Tamil Nadu also, by a Notification made on 6th of August, 2003, joined the New Pension Scheme with effect from 1.4.2003. It is hardly necessary for me to point out who was in Government in Tamil Nadu in 2003. Therefore, 26 States have already joined the NPS.
I will give you presently the number of employees who have joined the NPS. Today, the States have 17,76,973 subscribers. The cumulative contribution of the Central Government, the State Government and other NPS-like subscribers runs to Rs. 34,965 crore. … (Interruptions) All I am pointing out is, I assume that the State Governments take a decision after a most careful consideration, after considering it in their State Cabinet. The State Governments were not obliged to join. They joined voluntarily. Only for the Central Government employees, it is mandatory from 1.1.2004. Twenty-six State Governments have joined. Total number of subscribers of the Central Government is 12,01,636; of State Governments, as on 14th of August, it is 17,76,973; of the private sector, it is 04.09.2013
2,57, 754; in NPS-lite Schemes, like Swalamban and similar Schemes, it is 20,46,849. The total is 52,83,212. The total asset under the management is Rs. 34,965 crore.
Now, the Standing Committee made a number of recommendations. I have accepted all except one. I think some one here quoted the wrong recommendation and alleged that we have not accepted that. That is not correct. The only recommendation that we are not able to accept is the Standing Committee said that we must allow a re-payable advance; now, that would convert the NPS into a current account or even a over-draft account. That is not the purpose of the NPS. The purpose of the NPS is, at the end of his or her career, a man or a woman must have a large amount of money, a cumulative amount, so that forty per cent of that is mandatory annuitisation so that they will get an annuity as pension and the remaining sixty per cent can be taken as lump-sum. This 40 per cent mandatory annuitization is also a minimum. If you want, the entire accumulation can be used for annuitization. We have accepted all the recommendations. In my opening Statement which I made, which many Members may not have heard because of an extra decibel level at that time, I had made it clear. I think all the recommendations of the Standing Committee have been accepted but for one. Only this one recommendation we have not been able to accept and I have given you the reasons.
The NPS actually offers a wide choice, as Shri Mahtab has pointed out. In fact, he was even advancing the other argument: “Why are you placing restrictions? Why do you not allow full freedom of choice?” Now, we think that at the current stage of development of the pension market and the current stage of development of the bond market, the equity market and the other instruments of investment, we should strike a balance. We have, therefore, struck a balance. There are clear restrictions on how much can be invested in the equity market, the e-market; how much can be invested in the Government bond market, the G-market; and how much can be invested in the C-market, the corporate bond
04.09.2013
The bond market is relatively under-developed in India. Therefore, we have to have this balance. But we have allowed the employees to have a choice that they would like all their money to be invested only in Government bonds. That has been allowed. We have also said that if you want an assured return, then the Authority will notify which are the schemes which are promising an assured return and you can then choose saying : “my money shall be invested only in the assured returns.” So, every single recommendation of the Standing Committee which has a bearing on risk, which has a bearing on capacity to take risk, has been accepted. I think this is the way the legislation should be made. Government indeed makes legislation but Government is not the repository of all the wisdom. When it goes to a Standing Committee with opposition parties members on it, which Committee is chaired by a Member of the Opposition party, when Government receives their advice, when we find that there is merit in what they are saying, we accept it. After all, we represent the different shades of opinion of about 130 crore people. So, when we get these recommendations, we are willing to accept. That is how, I believe, legislation should be made. This is a good example of how legislation should be made. It was notified by a previous Government; the Bill was introduced by a new Government; again re-introduced by the second UPA Government; it went to two Standing Committees chaired by two distinguished Members of the Opposition. Then, we have accepted suggestions and now we have reached a very broad consensus.
04.09.2013
I think while I have heard all of you, I take your advice seriously for future guidance. The PFRD Authority is sitting in the Gallery. He must have listened to you very carefully; he must have noted your views. We will ensure that the NPS is improved; made more secure and made more attractive for the subscribers.
Sir, I do not wish to make a long speech. The point I am trying to say is that the NPS has been there with us for nine years. We have a non-statutory Authority today and that is not good. A sum of Rs.35,000 crore should not be managed by a non-statutory Authority. It must be managed by a statutory Authority. All that this Bill does is to make the non-statutory Authority a statutory Authority. Now, he has legal powers. He can take action; he can pull up people, he can punish people, he can fine people and he can impose penalties. That power was not available so far. Now, we have got a statutory Authority.
So, with these words, I commend this Bill. I am grateful to all the hon. Members.… (Interruptions)
gÉÉÒ cÖBÉDàÉnä´É xÉɮɪÉhÉ ªÉÉn´É (àÉvÉÖ¤ÉxÉÉÒ): ÉÊBÉEºÉÉxÉÉå BÉEä ÉÊãÉA £ÉÉÒ {Éå¶ÉxÉ BÉEÉÒ BªÉ´ÉºlÉÉ BÉEÉÊ®A*
SHRI P. CHIDAMBARAM: Sir, many suggestions have been made which are outside the scope of this Bill. We have got this Swavalamban Scheme introduced by my distinguished predecessor.… (Interruptions) The Swavalamban Scheme has been introduced. The Swavalamban Scheme is attracting a large number of people. The Government makes a contribution. As they make a contribution of Rs.1000, the Government makes a contribution. It has to still gain currency. It has to be popularized more. We will do so. But the Old Age Pension is not under this Scheme. That is a separate Scheme. That is a very different Scheme. This is a Scheme which is now accepted world-wide, namely, “ a Defined Contribution”. “Save for your pension as earn during your career.” That is the motto under which all the Schemes around the world are converging. You save as you earn. So, as you earn, you save, not for the current period but you save for your retirement.
04.09.2013
So you save, accumulate over a period of time; the accumulation is managed by pyou rofessionals; the accumulation adds to the total of your total wealth. At the time of retirement, that wealth is available for an annuity which will give you an assured pension every month for the rest of your life. That is the principle under which this has been formed. I am grateful to hon. Members. All other pension schemes which are there – old age pension, or some other pension scheme – they are outside this Act. They will be dealt with by the Ministry or Department concerned; we can make improvements there. For example, there are many other schemes. This is about people who have got a regular income, who can earn. As they earn today, they have got Current Account; they have got Savings Bank Account; some of them have got the Fixed Deposit Account. But they have no saving which actually matures at the time of retirement. Therefore, accumulation for pension is the way to save for retirement. That is what this scheme has introduced – on the day of retirement, there is a lump sum. Forty per cent of it is mandatory annuitisation but you can annuitise the entire 100 per cent, it will give you a larger annuity. You can also take a lump sum out of that.
With these words, Sir, I commend the Bill. I am grateful to the hon. Members for the support, and I request that all hon. Members, irrespective of the reservations they may have expressed, which I respect, I acknowledge, please move this Bill so that this Bill is passed
3/25/2014
பகத் சிங்கின் இறுதி நாள்...
லேபிள்கள்:
கட்டுரை
லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.
பிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பர்கத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார்.
கைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள். ஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது. எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார்.
“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”
ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.
அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.
பகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.”
சுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.
மேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
பகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.
“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
தூக்குமேடை நோக்கி...
மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.
“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும்
இது எங்கள் மண்ணாக இருக்கும்
இது எங்கள் வானமாக இருக்கும்
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்
மக்கள் கூடுவார்கள்
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு
மரியாதை செலுத்துவார்கள்.”
இது எங்கள் மண்ணாக இருக்கும்
இது எங்கள் வானமாக இருக்கும்
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்
மக்கள் கூடுவார்கள்
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு
மரியாதை செலுத்துவார்கள்.”
மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங்.
“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.
தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார்.
அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார்.
சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
புரட்சியால் மட்டுமே முடியும்!
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு. பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது. பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.
ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:
“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”
பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.
இந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில்
புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும்.
புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும்.
குல்தீப் நய்யார் எழுதிய ‘வித்தவுட் ஃபியர்: த லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற நூல் கவிதா முரளிதரனின் மொழிபெயர்ப்பில் ‘மதுரை பிரஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மார்க்சிஸ்ட் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை அளித்த ஆசிரியர்கள்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இருவருக்கான டெபாசிட் தொகையை வழங்கினர்.
இதுதொடர்பாக பொதுப் பள்ளிக் கான மாநில மேடையின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கை:
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண்களில் தளர்வு அறிவிக்கப்படாமலே தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்த்தன. அதன் விளைவாக தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் தளர்வை அறிவித்தது.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு மையம் மாநில அளவில் நடத்தியது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடையோடு இணைந்து நடத்திய இந்த பயிற்சி வகுப் பால் 2013-ல் மட்டும் 43 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர். இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் முக்கிய பங்காற்றிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் விருதுநகரிலும் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் விழுப்புரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்தை, அம்பேத்கர் மையத்தில் படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அளித்துள்ளனர். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் மையத்தின் தென் சென்னை அமைப்பாளர் பி.கிருஷ் ணாவிடம் இந்தத் தொகையை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
CPS விவரம் :இனி தகவல் மையம் பராமரிக்கும் ஏஜிஎஸ் அலுவலகம் செல்ல வேண்டாம்CPS விவரம் :இனி தகவல் மையம் பராமரிக்கும் ஏஜிஎஸ் அலுவலகம் செல்ல வேண்டாம்
லேபிள்கள்:
cps
அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விவரங்கள் அரசு தகவல் தொகுப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (ஏ.ஜி.எஸ். அலுவலகம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் வர்ஷினி அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
ரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. இனி 2013, 14ம் ஆண்டு கணக்கு முதல் இத்திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும் அரசு தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படும்.
தொடர்பு கொள்ள…..
மேலும் 2012-13ம் ஆண்டுக்கான சந்தாதாரர்கள் அனைவரின் கணக்கு விவரப் பட்டியல்கள் அந்தந்த கருவூல அலுவலர்கள் மூலம் வரைவு மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பும் பொருட்டு, சென்னை கருவூல கணக்கு இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இனி அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த அனைத்து விவரங்களுக்கும், சந்தாதாரர்கள், ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், சென்னை 600025 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழக அரசு ஊழியர்களுக்கான 2011-12ம் ஆண்டின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு அறிக்கை, குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டு, கருவூல அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு அட்டவனை:
லேபிள்கள்:
தேர்வு
- மார்ச் 26ம் தேதி தமிழ் முதல் தாள்
- மார்ச் 27ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
- ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
- ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
- ஏப்ரல் 4ம் தேதி கணிதம்
- ஏப்ரல் 7ம் தேதி அறிவியல்
- ஏப்ரல் 9ம் தேதி சமூக அறிவியல்
சேற்றில் சிக்கி மாணவி மரணம்; தமையாசிரியர் உட்பட மூவர் “சஸ்பென்ட்”
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஜம்மனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், 78 மாணவ, மாணவிகளை களப்பணிக்காக பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதிக்கு சென்றனர். பள்ளி ஆசிரியர்கள் மணி, சந்திரசேகர், பள்ளி உதவியாளர் மனோகரன் ஆகியோர் இவர்களை அழைத்து சென்றனர்.
வாணியாறு அணையை சுற்றி பார்த்து விட்டு, 11 மணியளவில் சாப்பிட்டுள்ளனர். அப்போது, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஜம்மனஹள்ளியை சேர்ந்த டிரைவர் மூர்த்தி என்பவரது மகள் சவுந்தர்யா (16), மணிமேகலை (14), எட்டாம் வகுப்பு படிக்கும் பவித்ரா (13) ஆகியோர் சாப்பிட்டு விட்டு, கையை கழுவுவதற்காக, அணையில் குட்டை போல் தேங்கி நின்ற தண்ணீர் உள்ள பகுதிக்கு சென்று திரும்பும் போது, கால் சேற்றில் சிக்கியது.
சேற்று பகுதி அதிகமாக இருந்ததால், மூன்று மாணவிகளும் சேற்றில் சிக்கி உள்ளனர். இதனால், மாணவிகள் தங்களை காப்பாற்றக்கோரி, சத்தம் போட்டுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மணி உள்ளிட்டோர், மணிமேகலை, பவித்ரா என்ற மாணவிகளை, சேற்றில் இருந்து காப்பாற்றினர்.
சவுந்தர்யாவை காப்பாற்ற முயற்சி செய்த போது, அவர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து, மாணவிகளின் அழுகுரல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சவுந்தர்யாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து, மோளையானூர் வி.ஏ.ஓ., கற்பகம், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். மேலும், களப்பணிக்கு சென்ற ஆசிரியர்கள், மாணவிகளிடம், மாவட்ட கல்வி அலுவலர் பன்னீர்செல்வம், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பள்ளி மாணவி அணையில் சேற்றில் மூழ்கி இறந்தது, தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர் ஜெகநாதன், மற்றும் ஆசிரியர்கள் சந்திரசேகர், மணி, பள்ளி உதவியாளர் மனோகரன் ஆகிய நான்கு பேரையும், சி.இ.ஓ., மகேஸ்வரி “சஸ்பெண்ட்” செய்து உத்தரவிட்டார்.
இறந்த மாணவியின் உடல், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சனிக்கிழமை மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை சொந்த ஊரக்கு எடுத்து சென்ற குடும்பத்தினர், உடலை அடக்கம் செய்யாமல் போராட்டம் நடத்த திரண்டு உள்ளதாக, எஸ்.பி., ஆஸ்ராகர்க்குக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, எஸ்.பி.,யின் உத்தரவின் பேரில், அரூர் டி.எஸ்.பி., சம்பத் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிந்து, மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை காலை மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் போல் திருப்புதல் தேர்வுக்கும் வழங்க கோரிக்கை
லேபிள்கள்:
Educational News
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்களின் வடிவமைப்பில் திருப்புதல் தேர்வுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பத்தாம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு, பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. அரையாண்டு தேர்வு முடிந்து அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வு ஓராண்டுக்குரிய முழுமையான பாடத்திட்டம் அடிப்படையில் அரசு பொதுதேர்வு போல் நடத்தப்படும். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்கள் தவிர கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய தேர்வுக்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியிலும் இருக்கும். ஆனால் பொதுத்தேர்வுக்கு முன் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் போது தமிழில் மட்டுமே வினாக்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வில் இரண்டு மொழி யிலும் இருக்கும் வினாத் தாளை பார்த்ததும் மாணவர்களுக்கு சற்று குழப்ப நிலை ஏற்படுகிறது. திருப்புதல் தேர்விற்கு அச்சிடப்படும் வினாத்தாள் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட அளவில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் திருப்புதல் தேர்விற்கு, பொதுத்தேர்விற்குரிய வினாத்தாள் வடிவமைப்பில் இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தமிழில் மட்டுமே உள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படிக்கின்றனர். அரசு பொதுத்தேர்வு என்றவுடன் ஒருவித பய உணர்வு ஏற்படும்.
இந்த நிலையில் வினாத்தாளை பார்த்ததும் குழப்பம் ஏற்படுகிறது. எனவே திருப்புதல் தேர்விற்கு பிற மாவட்டங்களைப்போல் இரு மொழிகளில் வினாக்கள் அச்சிடப்பட்ட வினாத்தாள் வழங்கப்பட வேண்டும் என்றனர்.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பத்தாம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு, பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. அரையாண்டு தேர்வு முடிந்து அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வு ஓராண்டுக்குரிய முழுமையான பாடத்திட்டம் அடிப்படையில் அரசு பொதுதேர்வு போல் நடத்தப்படும். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்கள் தவிர கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய தேர்வுக்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியிலும் இருக்கும். ஆனால் பொதுத்தேர்வுக்கு முன் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் போது தமிழில் மட்டுமே வினாக்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வில் இரண்டு மொழி யிலும் இருக்கும் வினாத் தாளை பார்த்ததும் மாணவர்களுக்கு சற்று குழப்ப நிலை ஏற்படுகிறது. திருப்புதல் தேர்விற்கு அச்சிடப்படும் வினாத்தாள் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட அளவில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் திருப்புதல் தேர்விற்கு, பொதுத்தேர்விற்குரிய வினாத்தாள் வடிவமைப்பில் இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தமிழில் மட்டுமே உள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படிக்கின்றனர். அரசு பொதுத்தேர்வு என்றவுடன் ஒருவித பய உணர்வு ஏற்படும்.
இந்த நிலையில் வினாத்தாளை பார்த்ததும் குழப்பம் ஏற்படுகிறது. எனவே திருப்புதல் தேர்விற்கு பிற மாவட்டங்களைப்போல் இரு மொழிகளில் வினாக்கள் அச்சிடப்பட்ட வினாத்தாள் வழங்கப்பட வேண்டும் என்றனர்.
10-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
லேபிள்கள்:
வாழ்த்துக்கள்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
லேபிள்கள்:
Educational News
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்மையங்களில் வாயிற் கூட்டம் நடத்ததடைவிதித்துதேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வுவிடைத்தாள்திருத்தும் பணி மாநிலத்தில் 66
மையங்களில் துவங்கியது. முதல் கட்டமாகமுதன்மை தேர்வாளர்கள்விடைத்தாள்திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும்24ம் தேதிஉதவி தேர்வாளர்கள்திருத்தும்பணியை மேற்கொள்கின்றனர். முதல் கட்டமாகமொழிப் பாடவிடைத்தாள்கள்திருத்தப்படுகிறது. ஏப்ரல்1ம் தேதிமுதல் பிறபாட விடைத்தாள்கள்திருத்தப்பட உள்ளது.விடைத்தாள் திருத்தப் பணிநடைபெறும் மையங்களில், பல்வேறு ஆசிரியர்சங்கங்கள்,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும்காலையில்வாயிற்கூட்டம்நடத்தப்படும். அதன் பிறகு ஆசிரியர்கள், விடைத்தாள்திருத்தும் பணியைஅவசர, அவசரமாக மேற்கொள்ளவேண்டிய நிலைக்குதள்ளப்பட்டனர்.இதனால், பலமாணவர்களுக்கு மதிப்பெண்குறைவதும், அவர்கள் விடைத்தாளை மறு மதிப்பீடுகோரிவிண்ணப்பிப்பதுஆண்டிற்கு ஆண்டுஅதிகரித்து வருகிறது. பல விடைத்தாள்கள்முறையாகதிருத்தாத காரணத்தினால், மதிப்பெண் குறைவாகஇருப்பதும், மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்பெறுவது அதிகரித்துவருகிறது.கடந்தாண்டில்இதுபோன்று கவனக்குறைவாகவிடைத்தாள் திருத்தியது தொடர்பாக1,500 ஆசிரியர்களுக்கு "மெமோ' வழங்கி, ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டது.இதனைத் தவிர்க்க, இந்தாண்டு விடைத்தாள்திருத்தும் மையங்களில், வாயிற்கூட்டம்நடத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)