பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/10/2013

அடிப்படை வசதி குறித்து ஆய்வு - தொடக்கக்கல்வி இயக்குநர்

கல்வியறிவில் திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்தது

இந்திய அறிவொளி வளர்ச்சி பட்டியலில் திரிபுரா, கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் முழு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக அது மாறவில்லை. இன்றைய தினத்தில் திரிபுராவில் 94.65 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நூறு விழுக்காடு கல்வியறிவு என்பது எங்கள் இலக்கு. அதை விரைவில் நாங்கள் எட்டுவோம் என்று மிக நம்பிக்கையுடன் கூறுகிறார் திரிபுரா மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் இடது முன்னணியைச் சார்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார்.
File:Manik Sarkar.jpg

Manik Sarkar

Politburo Member of Communist Party of India (Marxist)
Chief Minister of Tripura
11 March 1998 to Still the date
உலக கல்வியறிவு தினத்தையொட்டி அகர்தலாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாநில அறிவொளி இயக்கத்திற்கு அவர் நன்றி கூறியதுடன், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துத் தந்த இந்த பிரம்மாண்டமான இயக்கத்தில் தங்களது உடல் வருத்தங்களை பொருட்படுத்தாது பாடுபட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கிடைத்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர் மாநிலத்தின் அறிவொளி வளர்ச்சி 94.65 விழுக்காட்டை எட்டியது என்ற அறிவிப்பை கூட்டத்தில் வெளியிட்டார்.
இந்த அருமையான தருணத்தில் மாநிலத்தை முழுகல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சில பிரிவு மக்களை, குறிப்பாக மூத்த குடிமக்களை எங்களால் எட்ட முடியவில்லை என்று அறிவொளி இயக்க அதிகாரி வருத்தப்பட்டார். எஞ்சியுள்ள 5.35 விழுக்காடு மக்களுக்கும் கல்வியறிவு அளிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார். சுமார் 38 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் முழுவெற்றி அடைவோம் என்றும் அவர் உறுதிபடக்கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் திரிபுரா நான்காவது இடத்தில் இருந்தது. 2011 புள்ளிவிவரப்படி திரிபுராவில் 87.75 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதமேந்திய கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த பின் அறிவொளி இயக்கத்தினரால் தொலைதூர மலைப்பகுதி மக்களை அடைய முடிந்தது. அதன் பலனாக அப்பகுதிகளில் அறிவொளி இயக்க வேலைகள் சிறப்பாக நடந்தன. மிசோரமில் கல்வியறிவு வளர்ச்சி 88.80 விழுக்காடு என்றும் கேரளாவில் இது 93.91 விழுக்காடு என்றும் திரிபுரா அரசு அதிகாரிகள் கூறினர்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா கல்வியறிவு வளர்ச்சியில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது திரிபுரா நான்காவது இடத்துக்கு முன்னேறியது என்றும் அவர் கூட்டத்தில் கூறினார். 2011 கணக்கெடுப்பில் திரிபுரா 87.75 விழுக்காட்டை அடைந்த பின்பு, ஆகஸ்ட் 2012, அரசு எட்டு மாவட்ட ஆட்சியாளர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தியது. 38 லட்சம் மக்கள் வாழும் மாநிலத்தில் ஐம்பது வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களும் அடங்கிய 1.31 லட்சம் மக்கள் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்கள் என்று தெரியவந்தது என்று மாணிக்
சர்க்கார் கூறினார். ஆகஸ்ட் 10 முதல் 25 தேதிவரை கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) தலைமையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்கள் பற்றிய இறுதி மதிப்பீடு நடத்தப்பட்டது. ஐஎஸ்ஐ இடைக்கால அறிக்கையின்படி மாநிலத்தின் கல்வியறிவு 94.65 விழுக்காட்டை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐ இறுதி அறிக்கை கிடைக்கும் போது மாநிலம் 96 விழுக்காட்டை எட்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து, கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் ஆகியவை முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அறிவொளி இயக்கத்தின் மேற்பார்வையில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டதால் திரிபுரா இச்சாதனையை அடைய முடிந்தது. திரிபுராவில் ஆண்களை விட பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள்
தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திலிப் அச்சர்ஜீ கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெண்களின் கல்வியறிவு 64.91 விழுக்காடாக இருந்தது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 83.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 18.24 விழுக்காடு உயர்வாகும். ஆண்கள் மத்தியில் இந்த உயர்வு 11.18 விழுக்காடுதான். ஆண்கள் மத்தியில் 2001ல் 81 விழுக்காடாக இருந்த கல்வியறிவு 92.18 விழுக்காடாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.இடது முன்னணி அரசின் திட்டங்களும் இதற்கு முன்னோடியாக இருந்தன. மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குஆண்டுதோறும் ரூ.1718ம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1485ம் வழங்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.856ம், ரூ.645ம் வழங்கப்படுகிறது. அதேபோல் கலைப்பிரிவு மாணவர்களுக்கு முறையே ரூ.855ம், ரூ.706ம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முனைப்புகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அண்மையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ் பாடத்திற்கான வினாத்தாளில் 47 வினாக்கள் பிழையுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்வு எழுதிய ஒருவர் வழக்கு தொடுத்ததில் தமிழ் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது

‘கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது என்று மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு
விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருபவர் வன்னியராஜ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:–
நான், கடந்த 1988–ம் ஆண்டு கருவூலத்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். 2009–ம் ஆண்டு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றேன். 2012–2013–ம் ஆண்டு உதவி கருவூல அலுவலர் பதவி உயர்வுக்கான பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை.
காரணம் கேட்டபோது, எனக்கு ஏற்கனவே ‘கண்டனம்’ என்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் எனது பெயர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய தண்டனைகளுக்கு பதவி உயர்வு மறுப்பது சரியல்ல. எனவே, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மறுப்பது சரியல்ல
இந்த மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–
‘‘கண்டனம் என்பது போன்ற சிறிய தண்டனைக்காக பதவி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல என்று 2011–ம் ஆண்டு தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அந்த அப்பீல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரர், கண்டனம் என்ற தண்டனையை பெற்றுள்ளதாக கூறி பதவி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரரின் பெயரை 2012–2013–ம் ஆண்டுக்கான உதவி கருவூல அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் 4 வாரத்துக்குள் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகின்றன.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை:
(காலை 10 மணி முதல் 12.45 வரை)
செப்டம்பர் 23 - திங்கள்கிமை - மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 24 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 25 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 26 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 27 - வெள்ளிக்கிழமை - கணிதம்
செப்டம்பர் 30 - திங்கள்கிழமை - அறிவியல்
அக்டோபர் 1 - செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்
பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணை:
செப்டம்பர் 23 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 24 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 25 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 26 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 27 - வெள்ளிக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்
செப்டம்பர் 28 - சனிக்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்
செப்டம்பர் 30 - திங்கள்கிழமை - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
அக்டோபர் 1 - செவ்வாய்க்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்
அக்டோபர் 3 - வியாழக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
அக்டோபர் 4 - வெள்ளிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, தமிழ் (அட்வான்ஸ்டு லாங்குவேஜ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
அக்டோபர் 5 - சனிக்கிழமை - தொழில் பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல்.

இரட்டைப்பட்டம் வழக்கு - ஒரு புரியாத புதிர்

இன்று 101ல் பட்டியலிடப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு வராது. பொதுவாக 50க்குள் இருந்தால் நம்பலாம். இல்லையென்றால் வரும் .......ஆனா வராது. என்ற பதில்தான். சில நண்பர்கள் ஏன் வரவில்லை? என்ற என்னை ஆராய்ச்சி செய்ய சொல்கிறார்கள். வழக்கு நீதி மன்றத்திற்கு சென்ற பின்னால் வழக்கின் தன்மை மாறுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கு பட்டியலிடமுடியாது. நாம் விசாரித்த அளவில் நாளை(11.9.2013) கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பஞ்சு மிட்டாய் மாதிரி இழுக்கும் இந்த வழக்கு ஒரு புரியாத புதிர்தான். இந்த வழக்கு முடிந்தால்தான்  அடுத்துகட்ட பதவி உயர்வோ அல்லது பணி அமர்வோ நடக்கும். பார்க்கலாம் உங்களைப்போலவே நாமும் ஆவலில் உள்ளோம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (CPS) இரண்டு லட்சம் அரசு ஊழியர்களின் கணக்குகள் வெளீயீடு

ESLC- Eighth Standard Leaving Certificate - April 2013

இ.பி.எப். வட்டி 8.5 சதவீதம் அளிக்க முடிவு

ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 28000 பேர் வெற்றியடைய வாய்ப்புள்ளது

ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம் பேர் அதாவது மொத்தம் 28000 பேர் வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர்களில் இவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றும் போது st , sc பிரிவினர் அனைவரும் 90மதிப்பெண் எடுத்து தகுதி பெற்றாலே போதுமானதாக இருக்கும் ஆனால் மற்ற பிரிவினர்களில் 105 மற்றும் 120 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தெரிவு பெற்று விடஅதிக வாய்ப்புள்ளது .மீதமுள்ள பணி இடங்களுக்கு வெய்ட்டேஜ் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதில் தேர்வு எழுதியவர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
7 சதவிகிதம் பேர் வெற்றிபெற்றால் எந்தெந்த பிரிவினர் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற கணக்கீடும், வெய்ட்டேஜ் அடிப்படையில் எவ்வளவு பேர் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது என்பதையும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு படி மட்டுமே கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது இதில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை, முக்கியமாக பணி இடங்களின் எண்ணிக்கையை பொருத்து இது மாறுபடும்.
கீழுள்ளவாறு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் பெறுபவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க அதிகபடியாக வாய்ப்புள்ளது.

Tamil
English
Maths
Science
Social Science
OC 105
105
105
105
120
BC
105
105
105
105
105
MBC
105
105
105
90
105
SC
105
90
90
90
105
ST
90
90
90
90
105

ஆசிரியர்கள் செலுத்தும் எல்.ஐ.சி பிரிமியத்துக்கு கமிசன் கேட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம், ஆத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், ஏ.இ.இ.ஓ.,வாக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணியன். இந்த அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியை, ஆசிரியர்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய கடன்தொகை மற்றும் அவர்கள் செல்லுத்த வேண்டிய எல்.ஐ.ஸி., பாலிஸிக்கான தொகையை, ஜூலை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யவில்லை.

மேலும், ஆசிரியர்கள் சார்பாக செலுத்தப்பட்டு வரும் எல்.ஐ.ஸி., பாலிஸி தொகைக்கு, அந்த நிறுவனத்தில் சென்று கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடன் சுமை அதிகரித்தும், எல்.ஐ.ஸி., விபத்துக்கான இழப்பீடு தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. தவிர, அலுவல கத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு எதிராக, தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததாக கூறப் படுகிறது.


இந்நிலையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ராமச்சந்திரன், கடந்த, 2-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது, "எனது இறப்புக்கு, ஏ.இ.ஓ., சுப்ரமணியன்தான் காரணம்' என கடிதம் எழுதி வைத்தார்.

இச்சம்பவம் குறித்து, தலைவாசல் போலீஸார், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்நிலையில், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணியன் மீது எழுந்த புகார்கள் குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை செய்து, அதன் அறிக்கையை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பினார். அதன்படி, தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணி யத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தந்தை இறந்து விட்டால், கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை வழங்கவேண்டும். இதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தந்தை மரணம் வேலூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தந்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். பணியில் இருந்தபோது, 2011–ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜெயலட்சுமி மனு அனுப்பினார்.

இவரது மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், ‘தந்தை மரணமடையும்போது, ஜெயலட்சுமிக்கு திருமணமாகி விட்டது. எனவே அவருக்கு வேலை வழங்கமுடியாது’ என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– தந்தை இறந்து விட்டால், திருமணமான மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. அதனால், திருமணமான மகளுக்கு வேலை வழங்க முடியாது என்று அதிகாரிகளால் கூறமுடியாது. பாகுபாடு கூடாது 2007–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின்படி, வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்கவேண்டும். இதில், மகன் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும் என்று இல்லை.பெற்றோரை பாதுகாப்பது மகன், மகள் ஆகியோரது கடமை என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அங்கு பாலியல் ரீதியான பாகுபாடு பார்க்கப்பட வில்லை. எனவே தந்தை இறந்தால், திருமணமான மகளும் கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உள்ளது. இதில் மகள், மகன் என்ற பாகுபாடு பார்க்க கூடாது.எனவே விஜயலட்சுமிக்கு கருணை அடிப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலை வழங்கவேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

"மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதம்"

புதுடில்லி: "தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், நிதி நிறுவனங்கள் போல் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்காக, மாணவர்களிடமிருந்து, நன்கொடை என்ற பெயரில், பல கோடி ரூபாயை, வசூலிக்கின்றன. இது, சட்டவிரோதமான செயல். இதை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசு, தகுந்த சட்டம் இயற்ற வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று, மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய, பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நம் நாட்டில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், காளான்கள் போல் அதிகரித்து விட்டன. இதனால், கல்வியின் தரம் குறைந்து விட்டது. தனியார், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், மாணவர்களை சேர்ப்பதற்காக, பல கோடி ரூபாயை, நன்கொடையாக, அவர்களிடமிருந்து வசூலிக்கின்றன.
தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு, சேர்க்கை மறுக்கப்படுகிறது. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும், பல தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், ஆண்டுதோறும், தங்களின் சீட்டுகளை அதிகரிப்பதற்கு விண்ணப்பிக்கின்றன.இந்த தனியார் கல்லூரிகள், மாணவர் நலனுக்காக செயல்படாமல், தங்கள் சொந்த நலனுக்காக செயல்படுகின்றன.
கல்லூரிகள் நிதி நிறுவனங்கள் போல் செயல்படுவதால், கல்வியின் தரம் குறைந்து வருகிறது.நன்கொடை என்ற பெயரில், மாணவர்களிடம் நிதி வசூலிப்பது, சட்ட விரோதமான நடவடிக்கை. கல்லூரிகளின் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசு, தகுந்த சட்டமியற்ற வேண்டும்.
சட்ட விரோத செயல்: மத்திய சுகாதார அமைச்சகம், சி.பி.ஐ., மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஆகியவை, இந்த சட்ட விரோத செயல் குறித்து விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தனியார் சுயநிதி கல்லூரிகள், மாணவர் நிதி நிறுவனங்களாக மாறுவதை தடுக்க முடியாது. இவ்வாறு, நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

9/09/2013

ABL- கல்விமுறை முடங்கியதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி

துவக்கப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, அறிமுகம் செய்யபடுத்தப்பட்ட, ஏ.பி.எல்., கல்வி முறை,(செயல்வழி கற்றல்) எந்த பள்ளியிலும் பின்பற்றப்படாததால், ஏ.பி.எல்., அட்டைகள்
காட்சிப்பொருளாகி விட்டன. பல கோடி ரூபாய் செலவு செய்து,நடைமுறைப்படுத்தப்பட்ட, இக்கல்வி முறை பயனற்று போனது,கல்வியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புதிய கல்வி முறை: தமிழகத்தில், 2006ம் ஆண்டுக்கு முன் வரை,துவக்கப்பள்ளிகளில் புத்தக கல்வி முறை இருந்து வந்தது. மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டு, அதில் உள்ள பாடங்களை ஆசிரியர் நடத்துவது வழக்கம். ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும், ஒரே வித புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்க வாய்ப்பில்லை
என்பதால், கல்வி ஒரு சிலருக்கு இனிப்பாகவும்,ஒரு சிலருக்கு கசப்பாகவும் இருப்பதாக கருதி, அப்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த விஜயகுமார், ஏ.பி.எல்.,எனும் கல்வி முறையை, ஒரு சில பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதில் பாடங்கள் அனைத்தும், வண்ண அட்டைகளாக மாற்றப்பட்டு,வகுப்பறையில், "ட்ரே"யில் அடுக்கப்படும். இதில் மாணவர்கள் படிநிலைக்கு ஏற்ப, குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்கள் படிநிலைக்கேற்ப பாடங்களை அவர்களே படித்துக்கொள்ளும் முறை அமைக்கப்பட்டது. இதில் மாணவர்கள் தாங்களாகவே,கற்றுக்கொள்ளும் படி இருந்ததால், மாணவர்களிடையே நல்ல வித்தியாசம் தெரிந்தது. இதை ஆய்வு செய்த அரசு, கடந்த, 2006 - 07ம் கல்வியாண்டில், அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும்,இம்முறையை அறிமுகம் செய்தது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரியான விஜயகுமாரை, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக நியமித்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் ட்ரே, ஏ.பி.எல்., அட்டைகள்,ஆசிரியர்களுக்கு பயிற்சி என, இதற்காக, பல கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே கற்றலுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதால், ஆசிரியருக்கு வேலைப்பளு அதிகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்ததால்,அவர்களுக்கான, "லெசன் பிளான்" எழுதுவது உள்ளிட்ட பணிகள் செய்ய தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.

ஆனால், இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய விஜயகுமார், இத்திட்ட பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஏ.பி.எல்., கல்வி முறையில்,அதிகாரிகள் அக்கறை காட்டுவதில், அலட்சியம் காட்டினர். அதிலும், குறிப்பாக கடந்த ஆண்டு, முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்த பின், ஏ.பி.எல்.,கல்விமுறை, முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வரை, செலவழித்து வாங்கப்பட்ட கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை பயனற்று கிடக்கின்றன.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: புத்தகத்தில் உள்ள பாடங்களை வண்ண அட்டைகளாக மாற்றி,வகுப்பறையில் வைத்த பின்பும், அதே புத்தகத்தை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த குளறுபடி ஆண்டுக்காண்டு அதிகரித்து, தற்போது அனைத்து பள்ளிகளிலும்,புத்தக கல்வி முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. இதற்கேற்றாற்போல், ஏ.பி.எல்., அட்டைகளும் புதிதாக வழங்கப்படுவதில்லை. இதனால் பழைய அட்டைகள் முதலான உபகரணங்கள் காட்சிப்பொருளாகிவிட்டன.

ஏ.பி.எல்., கல்வி முறைக்காக, குறைக்கப்பட்ட பணிகளை, தற்போது ஆசிரியர்கள் செய்வதில்லை. இதனால் புத்தக கல்வி முறையிலும் தரம் குறைந்துவிட்டது. இதனாலேயே அரசு துவக்கப் பள்ளிகளில்,மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. முதலில் எந்த கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்ற தெளிவான முடிவை கல்வித்துறை அலுவலர்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

9/06/2013

ஏமாற்றாமல் இருந்தால் சரி!

மக்களவையில் கடும் அமளிக்கு இடையிலும், மிகக் குறைவான எதிர்ப்புகளுடன், "ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா-2011' நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா இதே பாணியில் நிறைவேற்றப்படும் என்பதில் ஐயமில்லை. இனி ஓய்வூதிய நிதிகள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்த ஆணையம் மேற்கொள்ளும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு ஊழியர் அமைப்புகளும், ரயில்வே தொழிலாளர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய ஓய்வூதிய நிதி முழுவதையும் தனியாரிடம் கொடுப்பதன் மூலம், நட்டமே ஏற்படும். அதனால் ஊழியர்கள், தொழிலாளர்களின் ஓய்வூதியம் தடைபடும் என்பதுதான் அவர்கள் வாதம். இருப்பினும், அவர்களுக்கான ஓய்வூதியத்தின் அளவு குறையும் என்பதுதான் அவர்கள் வெளிப்படையாக சொல்லாத கருத்து.

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் என்பது இந்தியாவில் பயனாளித் திட்டமாக இருக்கின்றது. ஆதலால், ஒவ்வொரு முறை அகவிலைப் படி உயர்த்தப்படும்போதும், ஓய்வூதியதாரர்களுக்கும் அதன் பயன் போய்ச்சேரும். ஓய்வூதியத் தொகை உயர்ந்துகொண்டே போகும். 2009-10 ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஓய்வூதியத் தொகை மட்டுமே சுமார் 29,000 கோடி! அனைத்து மாநிலங்களிலும் இதேபோன்று } இதைவிட சில ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக } ஓய்வூதியத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இது அரசின் மொத்த வருவாயில் கணிசமான பகுதியாக இருக்கிறது என்பதால்தான், புதிய ஓய்வூதியத் திட்டத்தை பங்களிப்புத் திட்டமாக அரசு மாற்றியது.

அதாவது, அரசு சாரா தொழிற்கூடங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பி.எஃப் தொகை பிடித்தம் செய்யப்படும் அதே அளவுக்கு நிறுவனமும் ஒரு தொகை தருகிறது. 58 வயதின் முடிவில் ஒரு தொழிலாளியின் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளதோ, அவரது பணிக்காலம் எவ்வளவோ, அதைக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும். இந்த ஓய்வூதியம், அரசு ஊழியர் ஓய்வூதியத்தைப் போல, ஒவ்வொரு அகவிலைப்படி உயர்விலும் உயராது. இந்த பங்களிப்புத் திட்டத்தால் அரசுக்கு கூடுதல் செலவுகள் கிடையாது.

அரசு வருவாயின் பெரும்பகுதி அரசு ஊழியரின் சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்குமே சென்றால், காலப்போக்கில் ஓய்வூதிய செலவு உயர்ந்துகொண்டே போய், ஓய்வூதியம் வழங்கவே முடியாத நிலை உருவாகும் நிலைமை ஏற்படக்கூடும். அதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வந்திருப்பது அரசின் தவிர்க்க முடியாத காலக்கட்டாயம் என்கிற வாதத்திலும் உண்மை இருக்கவே செய்கிறது.

ஆனால், இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, 60 ஆண்டுகள் நிரம்பியவர், தனது மொத்த ஓய்வூதியத் தொகையில் 60 விழுக்காட்டை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளவும், 40 விழுக்காட்டை அரசு அனுமதித்துள்ள நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டிருப்பதுதான் இப்போது பிரச்னையாகப் பேசப்படுகிறது.

முதலீடு செய்யப்படும் இந்த 40 விழுக்காடு தொகையிலிருந்து கிடைப்பதுதான் ஒருவருடைய ஓய்வூதியமாக இருக்கும். ஆனால் ஓய்வூதிய நிதி மூலம் நாடு முழுவதும் திரளும் முழுத்தொகையையும் "ஓய்வூதிய நிதி மேலாளர்கள்' (தற்போது ஆறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன) வசம் ஒப்படைத்து, அவர்கள் அந்தப் பணத்தை பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, அரசு நிதிப்பத்திரங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபமும் அதிக ஓய்வூதியமும் கிடைக்கும் என்று அரசு சொல்கிறது. இந்த நிறுவனங்கள் அசலையே தொலைத்துவிட்டால் என்ன ஆகும் என்பதுதான் பரவலான அச்சம்.

அதற்கான வாய்ப்பே கிடையாது என்கிறது அரசு. ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனைத்து முதலீட்டு திட்டங்களையும் கண்காணிக்கும்; நிலைமை மாறினால் குறுக்கிட்டுத் தடுத்து நிறுத்தும்; தவறு செய்திருந்தால் அந்நிறுவன சொத்துகளை ஜப்தி செய்து இழந்த தொகையை ஈடு செய்யும்; அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும்; தொழில் உரிமத்தை ரத்து செய்யும்; திடீர் ஆய்வுகள் நடத்த உரிமை உண்டு; ஓய்வூதியத் தொகை அயல்நாடுகளில் முதலீடு செய்யப்படாதபடி கண்காணிக்கும்... இப்படியாக நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும்கூட அச்சம் அகல மறுக்கிறது.

40 விழுக்காடு தொகையை எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்கின்ற விருப்புரிமை ஓய்வுதியதாரருக்கு அளிக்கப்படுகிறது. பங்குச்சந்தையா, அரசுப் பத்திரமா, பரஸ்பர நிதியா, கடன்பத்திரமா என்பதை ஒய்வூதியதாரர் தேர்வு செய்துகொள்ளலாம். இதுபற்றி அதிக ஞானம் இல்லாததால் நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவுக்கே (ஆட்டோ சாய்ஸ்) விட்டுவிடுகிறேன் என்று ஓய்வூதியர் கூறினால், அந்த நிறுவனம் தான் நினைத்தபடி தனது திட்டங்களில் அத்தொகையை முதலீடு செய்யும்.

ஓய்வூதிய நிதி மேலாளர்கள் (பென்ஷன் ஃபன்ட் மேனேஜர்ஸ்) கொண்டுவரும் வசீகரத் திட்டங்களுக்கு இந்த ஆணையம் தடை போடுமா? அதிக லாபம், அதிக பணம் என்ற கவர்ச்சியில் ஓய்வூதியதாரர் விழாமல் இருப்பாரா?

ஓய்வூதியத்துக்காக இனி மத்திய, மாநில அரசுகள் பெருந்தொகை செலவிட வேண்டிய தேவை இருக்காது. ஓய்வூதியத்துக்கு ஆணையம்தான் பொறுப்பு.

"சம்பாதிக்கும்போதே சேமிப்பு' என்கிறார் நிதியமைச்சர். இத்திட்டம் சந்தாதாருக்கு அதிக பலன் தரும் என்கிறார். இந்த புதிய திட்டம் "உங்கள் ஓய்வூதியம் உங்கள் மதிநுட்பம்' என்றாகுமா, அல்லது "உங்கள் ஓய்வூதியம் உங்கள் தலையெழுத்து' என்று முடியுமா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுடன் விரைவில் சட்டமாகப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

 

ஓய்வூதிய நிதியும் இனி கூட்டுக் கொள்ளைக்கே

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் ஒட்டு மொத்த ஓய் வூதிய நிதியை கார்ப்பரேட்களின் கூட்டுக் கொள்ளைக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வழிவகுத்துக் கொடுத்துள்ளன.மக்களவையில் ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா - 2011 நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

முதலில் இதனை எதிர்ப்பதாக கூறி நாடகமாடிய பாஜக உள் ளிட்ட கட்சிகள், மக்களவையில் வாக்கெடுப் பிற்கு வந்தபோது காங்கிரஸ் கட்சியோடு கரம் கோர்த்து ஆதரித்து மசோதாவை நிறைவேற்றி யிருக்கின்றன. இதன் மூலம் அரசு ஊழியர்க ளின் ஓய்வூதியநிதி இனி தனியார் நிறுவனங் களின் கையில் ஒப்படைக்கப்படும்.

இந்த நிறுவ னங்கள் பணத்தை பங்குச் சந்தை உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கை யில் முதலீடு செய்யும். அதில் லாபம் வந்தால் அது ஊழியர்க ளின் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படும். நஷ்டம் ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பட்டை நாமம் சாத்தப்படும் என்பதே இந்த மசோதாவின் சாராம்சம்.

ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதிய நிதியை கையாளும் தனியார் நிறுவனங்களை கண்காணிக்கும். அதன் மூலம் லாபம் உறுதி செய்யப்படும் என அரசு வாதிடுகிறது. உலகமயம் உள்ளூர் மய மான பின்பு, கார்ப்பரேட்கள் அரசு நிர்வாகத்தை யும் சேர்த்தே கூட்டுக் கொள்ளையில்பங்குதாரர் களாக மாற்றி வருகின்றன அதனால்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக் கீட்டு ஊழல் என பல்வேறு ஊழல்கள் அணி வகுத்து நிற்கின்றன.

அரசு நிர்வாகத்தின் நேரடிக் கண்காணிப்பிலே நடந்தவை தானே இவையெல்லாம்.அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஓரே வழியாக இருக்கும் ஓய்வூதியத்தையும் ஏன் மத்திய அரசு தட்டிப்பறிக்க முயற்சிக்கிறது. பழைய முறைப் படி ஓய்வூதியம் வழங்குவதால், ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயரும் போது, ஓய் வூதியத்தையும் உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு அதிகமாகப் பணம் செல வாகிறது. அதனால் அதனைத் தவிர்ப்பதற்காக வே ஊழியர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய் வூதியத்திட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று அரசு வாதிடுகிறது.

அகவிலைப்படி என்பது விலைவாசிப் புள்ளி உயர்வுக்கேற்பவே நிர்ணயிக்கப்படுகி றது. அப்படி என்றால் ஓய்வூதியம் பெறுவர்க ளுக்கு நாட்டில் விலைவாசியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறதா? இல்லையே. அப்படியி ருக்கும் ஓய்வூதியத்தை உயர்த்துவது அரசின் தார்மீகக் கடமைதானே! அதனை ஏன் தட்டிக் கழிக்க வேண்டும்? ஓய்வூதியம் என்பது அரசு தானாகப் பார்த்துத் தருகிற கருணைத் தொகை யல்ல, ஊழியர்களின்உரிமை. ஆனால் அரசுக்காக உழைத்த ஊழியர்க ளைப் பற்றியும், மக்களை பற்றியும் அரசுக்கு கவலை இல்லை.

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப் பரேட் நிறுவனங்களின் நலன் மட்டுமே முக்கி யம் என்றும் கருதுகிறது. இதில் காங்கிரசும், பாஜ கவும் ஓரே கொள்கையோடுதான் உள்ளன என் பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவர்களை ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களும் இணைந்து தனிமைப்படுத்துவதன் மூலமே தொழிலாளி வர்க்கத்தின் உரிமை யையும் நலனையும் பாதுகாத்திட முடியும்.

ஆசிரியர்களை நீதிமன்றத்திற்கு அழையவிடக்கூடாது

இரட்டைப்பட்டம் வழக்கு - தொடரும் தொடர் கதை

போங்கப்பா........ என்று அலுத்துக்கொள்ளும் நிலையில்தான் வழக்கு உள்ளது. இன்று 109வது வரிசை எண்ணில் பட்டியிலிடப்பட்ட வழக்கு வழக்கரைஞர்களின் வெளிநடப்பால் விசாரணைக்கு வரவில்லை. நம்மிடம் இந்த வழக்கு குறித்து ஏராளமான விசாரணைகள் வந்த நிலையில் இப்பதிவை உங்களுக்காக வெளியிடுகிறோம். செவ்வாய் அல்லது புதன் வழக்கு விசாரணையை எதிர்பார்க்கலாம். இந்த கதையின் முற்று புள்ளியை நோக்கி உங்களைப்போலவே நாமும் காத்திருக்கிறோம்.
தோழமையுடன் .........
முத்துப்பாண்டியன் (MP@TNPTF)

பென்சன் மசோதா - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு

துறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு

பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் துறைத் தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் சுமார் 58-க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
பதவி உயர்வு மற்றும் பணி நிரந்தரம் போன்றவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் துறைத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு நடந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 58-க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
துறைத் தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்கள் எம்ஃபில் படித்தால் 3-ஆவது ஊக்க ஊதியம் உண்டு

எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற உத்தரவு அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
  மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே. நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். மணிக்குமார் இவ்வாறு உத்தரவிட்டார்.
  உத்தரவு விவரம்: ஆசிரியர்களின் அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையில் கூடுதல் கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. மனுதாரர் எம்ஃபில் பட்டப்படிப்பு பெற்றதற்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க கோரியுள்ளார். ஏற்கெனவே எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அதையே மதுரை மாவட்ட கல்வி அலுவலரும் பின்பற்றி ஊக்க ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் அரசு அவ்வப்போது உத்தரவுகளை வெளியிடுகிறது.
  இந்த விஷயத்தைப் பொருத்தவரையிலும் ஊக்க ஊதியம் கோரிய மனுதாரரின் மனுவை நிராகரித்த மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
  மனுதாரர் மீண்டும் ஊக்க ஊதியம் பெறுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரி முறையாகப் பரிசீலித்து  நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு உத்தரவுகளைப் பின்பற்றி தகுந்த முடிவு எடுக்க வேண்டும்.
  உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தனிநபர்களுக்காக பிறப்பிக்கப்படுபவையாக இருந்தாலும், அதன் உள்பொருள் எல்லாருக்கும் பொதுவானது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  மனுதாரர் நாகசுப்பிரமணியம் தனது மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 2013, மார்ச் 28-இல் கே. லதாதேவி என்பவருக்கு எம்ஃபில் படிப்புக்காக 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.   
அந்த உத்தரவை பின்பற்றி தனக்கும் எம்ஃபில் படிப்புக்கான 3-ஆவது ஊக்க ஊதியம் கேட்ட போது, அரசு உத்தரவு தனிநபருக்கானது என்று கூறி மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்து உள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.
Dinamani

விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியரிடம் நஷ்டஈடு வசூலிக்க உத்தரவு

கட்டாக்: ஒடிசாவில், விடைத்தாளை தவறாக திருத்தியதால், ஓராண்டு படிப்பை இழந்த மாணவனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, இடைநிலை கல்வி வாரியத்திற்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை, விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியர்களிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பத்ரக்பூர் மாவட்டம், பசுதேவ்பூரை சேர்ந்தவர், சுமன். பள்ளி மாணவரான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற, பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தார். அனைத்து பாடங்களிலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமன், கணிதப் பாடத்தில் மட்டும், 100க்கு, ஆறு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதிர்ச்சி அடைந்த சுமன், தன் கணித விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய, இடைநிலை கல்வி வாரியத்திடம் விண்ணப்பித்தார்.
"இந்த விவகாரத்தில், தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்" என ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். சுமனின் மனுவை ஏற்ற ஐகோர்ட், அவரது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது. மறுமதிப்பீடு செய்ததில், சுமன் கணிதப் பாடத்தில், 89 மதிப்பெண்கள் பெற்றார். அவருக்கு, புது மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆனாலும், தேர்வு முடிவு வெளியாக கால தாமதமானதால், சுமன், உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இதையடுத்து, இடைநிலை கல்வி வாரியத்தின் பொறுப்பற்ற செயலால், தன் ஓராண்டு கால படிப்பு வீணாகி விட்டதால், நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில், சுமன் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட், "பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என, இடைநிலை கல்வி வாரியத்திற்கு உத்தரவிட்டது. இந்த தொகையை, விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியர்களிடமிருந்து, கல்வி வாரியம் வசூத்துக் கொள்ளலாம் எனவும், தெரிவித்தது.

ஆசிரியர் இடமாறுதல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

புதுடில்லி: ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதில் 2008-ம் ஆண்டு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது, இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது.

தீர்ப்பிற்கு பின்பும் நீதிமன்றத்தை நாட விடுவதா?

370 ஆசிரியர்களுக்கு விருது

வைகைச்செலவன் பதவியிழந்த இரகசியம்

பி.எப். கணக்கு விபரம் - இணையத்தில் பாரக்கலாம்

ஆசிரியர்களின் ஆதங்கம் - செய்தி தாள்

அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் நீக்கம் ஏன்?: பரபரப்பான பின்னணி தகவல்கள்


சென்னை: தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச் செல்வன் திடீரென இன்று நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில்  பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலம், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை அமைச்சர் வைகைச் செல்வன், அப்பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கவனித்து வந்த இலாகாவை அமைச்சர் பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பொறுப்பிலிருந்தும் நீக்கம்
இதனிடையே  அ.தி.மு.க. இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் வைகைச்செல்வன் நீக்கப்பட்டுள்ளார்.
பதவி பறிப்புக்கு காரணம் என்ன?
முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு சென்று திரும்பியதிலிருந்தே, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும், சில அமைச்சர்களின் தலை உருட்டப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இதனால் ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் நாமும் இடம்பெற்றிருக்கிறோமோ என்ற அச்சத்திலேயே பெரும்பாலான அமைச்சர்கள் 'திக்... திக்' என நாட்களை கடத்திவந்தனர். அதிலும் மூத்த பணிவு அமைச்சர் உள்பட குறிப்பிட்ட 4 அமைச்சர்கள் மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானதால், எந்த நேரத்திலும் அவர்களது பதவி நாற்காலிக்கு கத்தி வீசப்படலாம் என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான வைகைச் செல்வன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கத்திற்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சபீதாவுடன் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறையின் 7 இயக்குனர்கள் மாற்றப்பட்டனர். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதாகவும், இதனையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தனக்குள்ள நெருக்கமான செல்வாக்கை பயன்படுத்தி வைகைச் செல்வனுக்கு எதிராக சபீதா புகார் கூறியதாகவும், இதனைத் தொடர்ந்தே இந்த பதவி பறிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் வைகைச் செல்வனின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும் ஆட்சி மேலிடத்திற்கு பல்வேறு புகார்கள் பறந்ததாகவும், பதவி பறிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டதற்கு, அ.தி.மு.க.வின் மூத்த புள்ளிகளை அவர் மதிப்பதில்லை என்று கூறப்பட்ட புகார் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
10 ஆவது அமைச்சரவை மாற்றம்
வைகைச் செல்வன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம் தமிழக அமைச்சரவை இத்துடன் சேர்த்து 10 ஆவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கலக்கம்
வைகைச் செல்வனுக்கு கொடுக்கப்பட்டுள்ள கல்தாவை தொடர்ந்து, மேலும் சிலரும் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளதால் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

9/05/2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் தேர்வு பெற வாய்ப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் கணிப்பு

சென்னை, செப்.5-
ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்) தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 23.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதியதில் வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
அப்போது தேர்வு நேரம் (1½ மணி) போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதம் ஏறத்தாழ 3 சதவீதமாக உயர்ந்தது. ஆசிரியர் பணி காலி இடங்கள் உள்ள நிலையில், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் கிட்டதட்ட 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன.
6.62 லட்சம் பேர்
இந்த சூழ்நிலையில், 3-வது தகுதித்தேர்வு கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 2 லட்சத்து 62 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை 4 லட்சம் பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.
53 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற வாய்ப்பு
தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் வினாக்களையும், விடைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நிபுணர் குழு அளிக்கும் முடிவின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித்தேர்வில் 8 சதவீதம் பேர் அதாவது ஏறத்தாழ 53 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது.
மத்திய தகுதித்தேர்வு முடிவு
முந்தைய தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இரண்டிலும் சரி தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக கருத்து எழுந்தது. கேள்விகள், விடைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நிபுணர் குழுவின் முடிவின்படி உரிய மதிப்பெண் வழங்கப்படும்.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை அகில இந்திய அளவில் 7½ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவு 2-ந்தேதி வெளியானது. மொத்தம் 77 ஆயிரத்து 634 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது 10 சதவீத தேர்ச்சி, முந்தைய தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
விழிப்புணர்வு அதிகரிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

 

ஊழியர் விரோத பென்சன் மசோதா நிறைவேறியது : இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு

இடதுசாரிக் கட்சி களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய பென்சன் மசோ தாவை மன்மோகன் சிங் அரசு புதனன்று மக்கள வையில் நிறைவேற்றியது. இதன் மூலம் உத்தரவாதப் படுத்தப்பட்ட ஓய்வூதியத் திற்குப் பதிலாக ஊழியர் களின் ஓய்வூதியத்தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்து சூறையாட வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற் றக்கூடாது என்று தொழி லாளர்களும் ஊழியர்களும் நாடு முழுவதும் போராட் டம் நடத்தி வந்த நிலையில், இந்த ஊழியர் விரோத மசோதா நிறைவேற்றப்பட் டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 என்று பெயரிடப்பட் டுள்ள இந்த மசோதா இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நீண்ட காலம் கிடப்பில் போடப் பட்டிருந்தது. 2005ம் ஆண் டிலிருந்தே இம்மசோ தாவை நிறைவேற்ற அரசு துடித்தது.

2005ம் ஆண்டில் மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த மசோதா 2011ம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டது.இந்த மசோதா ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற் றும் வளர்ச்சி ஆணையத் திற்கு சட்ட ரீதியான அதி காரங்களை அளிக்க வகை செய்கிறது. 2003ம் ஆண்டு இந்த ஆணையம் அமைக் கப்பட்டது. இது இடைக் கால ஆணையம்தான் என் றும் பிறகு சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்ப டும் என்றும் அப்போதைய பாஜக அரசு கூறியது.

ஆனால் நிர்வாக உத்தரவு மூலம் 2004ம் ஆண்டு முதல் இந்த ஆணையம் செயல் படுத்தப்பட்டு வந்தது. இந்த மசோதாவில் நாடாளுமன்ற நிலைக்குழு சில முக்கிய திருத்தங்களை கொடுத்திருந்தது. இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளதன் மூலம் ஓய்வூதிய நிதி நிறு வனங்களிலும் அந்நிய மூல தனம் 49 சதவிதம் அளவுக்கு அனுமதிக்கப்படும் அபா யம் உள்ளது. மேலும் ஓய் வூதிய நிதியில் முற்றாக அந் நியரை அனுமதிக்கவும் மன் மோகன் சிங் அரசு திட்ட மிட்டுள்ளது.

இம்மசோதாவை நிறை வேற்றுவதில் மன்மோகன் சிங் அரசு குறியாக இருந்த நிலையில், புதனன்று நாடா ளுமன்றத்தில் நிலக்கரி பங்குகள் தொடர்பான கோப்புகள் மாயமான விவ காரம் வெடித்தது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தால் இம் மசோதா அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில், மார்க் சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், திமுக, திரிணா முல் காங்கிரஸ், சமாஜ் வாதிக் கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பங்குச்சந்தையில் ஓய்வூ திய நிதியை முதலீடு செய் வது மற்றும் அந்நியரை அனுமதிப்பதற்கு உறுப்பி னர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். அவையில் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அவசர அவசரமாக இம்மசோ தாவை நிறைவேற்றக் கூடாது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். விவாதத்திற்கு பதிலளித் துப்பேசிய ப.சிதம்பரம் நாடாளுமன்ற நிலைக்குழு வின் பெரும்பாலான திருத் தங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறினார்.

இம்மசோதா நிறைவேற்றப் படுவதால் ஊழியர்கள் பல னடைவார்கள் என்று கூறிய அவர், உறுதிப்படுத்தப் பட்ட ஓய்வூதியத்திற்கு ஆபத்து இருக்காது என்றார். பின் னர் இம்மசோதா அவை யில் நிறைவேற்றப் பட்டது.

9/04/2013

இரட்டைப்பட்டம் வழக்கு- நாளை ஏக்கம் தீருமா?

இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு ஒரு வேளை நாளை விசாரணைக்கு வந்தால் கிட்டதட்ட நிறைவடைந்துவிடும். ஜவ்வு மிட்டாய் போல் இழுக்கும் இவ்வழக்கு விரைவில் முடிந்தால் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்களின் ஏக்கம் தீரும்.

பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் துறைத் தேர்வு: முடிவுகள் வெளியாவதில் தாமதம்:

பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் துறைத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசுத் துறை ஊழியர்கள், அதிகாரிகளின் பதவி உயர்வு தாமதமாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் தனித்தனியே 2 முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மே மாதத்தில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகள் ஓரிரு மாதங்களில் வெளியாவது வழக்கம்.

இந்த ஆண்டு துறைத் தேர்வுகள் கடந்த மே மாதம் வழக்கம் போல் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளில் ஒரு சிலவற்றுக்கு மட்டும் கடந்த ஆகஸ்ட் 12-ல் முடிவுகள் வெளியிடப்பட்டன. மீதமுள்ள தேர்வுகளுக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.

பதவி உயர்வுக்காகவும், பணி நிரந்தரத்துக்காவும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் துறைத் தேர்வினை எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் பதவி உயர்வில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அரசுத் துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். துறைத் தேர்வுக்கான முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது?

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் 10 நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டன. முக்கிய விடைகள் தொடர்பாக 1,500 பேர் ஆட்சேபம் தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மனு அளித்திருந்தனர். இந்த ஆட்சேபங்களைப் பரிசீலித்த நிபுணர் குழுக்கள் தங்களது பரிந்துரைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சமர்ப்பித்தனர்.

சிவகங்கையில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

மாநில அளவிலான தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு

2.6 கோடி இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும், ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் முதல், இரண்டாம் பருவ பாடத்திட்டங்கள், நடத்தப்படும். இதற்கு, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, 150 அச்சகங்களில் நடந்து வருகின்றன.

90 சதவீதம் அளவிற்கு, பாடப்புத்தகங்கள் தயாராகிவிட்டன. இதையடுத்து, அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, புத்தகங்கள், அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, பாடநூல்கழக வட்டாரங்கள் கூறியதாவது: பெரும் அளவிற்கு, புத்தகங்கள், அச்சிடப்பட்டு விட்டன. எனவே, பெரும்பாலான மாவட்டங்களுக்கு, புத்தகங்கள் சென்று விட்டன. எனவே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதில், எவ்வித பிரச்னையும் ஏற்படாது. மாணவர்களுக்கு, முன்கூட்டியே, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறைக்குப்பின், அக்., 3ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இருந்தாலும், இந்த மாதத்திற்குள்ளாகவே, முழுமையான அளவில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கப்படும

். சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும், புத்தகங்களை கொண்டு சென்று, வினியோகம் செய்வதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை, முழுவீச்சில் செய்து வருகிறது. இவ்வாறு, பாடநூல்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாத இறுதியில் இருந்து, பாடநூல்கழக அலுவலகத்தில், இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

9/03/2013

ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்தி மாநில அரசு உத்தரவு

ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 65ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசை ஆசிரியர்கள் சங்கம் வற்புறுத்தி வந்தது.

இதனை ஏற்று, ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 65ஆக உயர்த்தி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மீதான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய உத்தரவின் மூலம் டெல்லி அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்று பலன் அடைவார்கள்.

டெல்லி சட்டசபை தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் சுமார் 3 லட்சம் குடும்பங்களின் ஓட்டுகளை கவர்வதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு:

மதுரை, செப்.3:மதுரை மாவட்டம் பேரையூர், கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு நடத்தினார்.
.
மதுரை மாவட்டம் பேரையூர் காந்திஜி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரதன் முத்துக்குமாரசாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் முன்னிலையில் பள்ளிக் கல்வி, விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் கல்வியின் தரம் குறித்து ஆய்வு நடத்தினார்.

அமைச்சர் ஆய்வின்போது தெரிவித்ததாவது:தமிழக முதல்வர், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கல்வித்துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளும் அனைத்து வசதிகளுடன் மாணவர்கள் கல்வி பயில எண்ணற்ற பல வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

கற்கும் பாரதத் திட்டம் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. அதுபோன்று இளமைக்கால கல்வி தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது. அனைவரும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்று இனிவரும்
காலங்களில் கல்வி கற்பது மிகமிக அவசியமாகும்.

கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி முன்னேறிட வேண்டும். வரும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சியை எய்திட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆய்வில் அமைச்சர் ஒவ் வொரு வகுப்பறைக்கும் சென்று தனித்தனியாக மாணவ, மாணவிகளிடம் கணிதம், அறிவியல் பாடங்கள் குறித்து கேட்டறிந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையையும் பார்த்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக அமைச்சர் சிலமரத்துப்பட்டியில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாடக மேடையை திறந்துவைத்தார்.

வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும் சிறந்த கல்வி வழங்கிடவும் ஆசிரியர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் திருமங்கலம் எம்எல்ஏ முத்துராமலிங்கம், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருச்செல்வம், வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் ராமசாமி, டி.கல்லுப்பட்டி பேரூராட்சித்தலைவர் மாணிக்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கண்ணாமூச்சி காட்டும் இரட்டைப்பட்டம் வழக்கு

இன்று, நாளை, நாளை மறுநாள் என்று தொடர்கதையாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வழக்கு இன்னும் இரு தினங்களில் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே தென்படுகின்றன. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்ல பல தோழர்கள் ஆவலாக உள்ள இந்த வழக்கின் முடிவை நாமும் ஆவலாகவே எதிர்பார்த்து உள்ளோம்.

இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு பெற்றோர்- சிவகங்கை மாவட்டம் (தொடக்கக்கல்வித்துறை)

1.திரு.வி.ஆர்.சுப்பிரமணியன் - காளையார்கோவில்
2. திருமதி.கருப்பாயி - சிவகங்கை
3. திரு.மாரீஸ்வரன் - மானாமதுரை
4. திரு.ஜெயபிரகாசம் - திருப்பத்தூர்
5. திருமதி. நாகலெட்சுமி - எஸ்.புதூர்
6. திரு.தெட்சிணாமூர்த்தி - தேவகோட்டை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது.

115 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தொடக்க கல்வித்துறையில், 115 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பதவி உயர்வு உத்தரவுகளை, சம்பந்தபட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கினர்.

9/02/2013

புதிய ஓய்வூதிய மசோதா (PFRDA Bill) இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் ஆவதை எதிர்த்து இன்று (02.09.2013) மாலை 05.00 மணிக்கு மத்திய/ மாநில தொழிற்சங்கங்களோடு இணைந்து TNPTF மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்... ஆசிரியர்கள் அனைவருக்கும் அழைப்பு...

புதிய ஓய்வூதிய மசோதா (PFRDA Bill) இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் ஆவதை எதிர்த்து இன்று (02.09.2013) மாலை 05.00 மணிக்கு மத்திய/ மாநில தொழிற்சங்கங்களோடு இணைந்து TNPTF மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்... ஆசிரியர்கள் அனைவருக்கும் அழைப்பு...

புதிய பென்சன் திட்ட மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசு, இன்று அம்மசோதாவை நிறை வேற்ற இன்றைய பாராளுமன்ற அலுவல் குறிப்பில் வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த மசோதாவை இடது சாரிகள் மட்டுமே எதிர்த்து வருவது மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சில மாற்றங்களை செய்து இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய/ மாநில அரசு ஊழியர் சங்கங்கள் (CITU, DREU, LIC, BSNLEU, BEFI, TNGEA மற்றும் TNPTF) அறிவித்திருக்கும் போராட்டத்தில் அச்சங்க கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பங்கு கொள்கிறது.

அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் இம்மசோதாவை நிறைவேற்றாமல் தடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வலுக்கொண்டு இம்மசோதாவை மத்திய/ மாநில தொழிற்சங்கங்கள் இணைந்து போராடினால் மட்டுமே சாத்தியம் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் அழைப்பு விடுத்துள்ளது.

குறைதீர்க்கும் முகாம் - தொடக்கக்கல்வி இயக்குநர்


 

PROFESSIONAL TAX- 2013 | தொழில் வரி

அரையாண்டு வருமானம் :
21 ,000 வரை : இல்லை
21,000 முதல் 30,000 வரை : ரூ. 94
30,001 முதல் 45,000 வரை : ரூ.238
45,001 முதல் 60,000 வரை : ரூ.469
60,001 முதல் 75,000 வரை : ரூ.706
75,001 முதல் 750 வரை : ரூ. 938

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது அடிப்படை சம்பளத்தில் 80 சதவீதமாக உள்ளது. இதை 10 சதவீதம் உயர்த்தி, 90 சதவீதம் ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அளவுக்கு அகவிலைப்படி உயர்வு செய்து இந்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது. இது ஜூலை 1&ந் தேதி முதல் அமலுக்கு வரும். தொழிற்சாலை ஊழியர்களுக்கான இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (ஜூன் மாத நிலவரம்) திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களுக்கான சில்லறை பண வீக்க விகிதம் (ஜூன் நிலவரம்) 11.63 சதவீதம். ஜூலை மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக சில்லறை பண வீக்க விகிதம் 11.06 சதவீதமாக இருந்தது. திருத்திய மதிப்பீடு வந்து விட்டதால் அதன்அடிப்படையில் நிதித்துறை அமைச்சகம் ஒரு திட்ட முன்வடிவை தயாரித்து அதை மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பும்.

3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இரட்டை இலக்க சதவீத அகவிலைப்படி உயர்வு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010 செப்டம்பர் மாதம்தான், இரட்டை இலக்க அளவாக 10 சதவீத அகவிலைப்படி உயர்வு செய்யப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

மத்திய அரசின் 10 சதவீத அகவிலைப்படி உயர்வினால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். பண்டிகைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.