பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/24/2013

364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்

 முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
              ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
               2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் பெறப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகிய அனைத்து வகையான ஆசிரியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களின் பட்டியல் 27-ந் தேதி இறுதிசெய்யப்படுகிறது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதி சென்னை சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.
                  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

தகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு
              பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 17, 18–ந் தேதிகளில் நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி உள்ளனர்.
                 தகுதித்தேர்வுக்கான ’கீ ஆன்சர்’ ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு தனியார் இணையதளங்கள் தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர்–ஐ வெளியிட்டு உள்ளன. தேர்வு எழுதிய ஆசிரியர்களும் அதைப் பார்த்து தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும்? என்று கணக்கு போட்ட வண்ணம் உள்ளனர். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ கீ ஆன்சர் படிதான் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பதால் மதிப்பெண்ணை துல்லியமாக அறிந்துகொள்ள ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.
14 ஆயிரம் காலி இடங்கள்
                    கடந்த தகுதித்தேர்வில் 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 8,849 பேர் பட்டதாரி ஆசிரியர்கள். 10,397 பேர் இடைநிலை ஆசிரியர்கள். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு காலி இடங்கள் அதிகமாக இருந்ததால் அதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே வேலை கிடைத்துவிட்டது. ஆனால், இடைநிலை ஆசிரியர் பணியில் காலி இடங்கள் குறைவாக இருந்ததால் தேர்ச்சி பெற்ற எல்லாருக்கும் வேலைகிடைக்கவில்லை.

                        தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 சதவீதம்பேர் தேர்ச்சி பெறுவார்கள் (சுமார் 50 ஆயிரம் பேர்) என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்தான். இதில் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும், ஆயிரம் இடைநிலை ஆசிரியர் இடங்களும் அடங்கும்.
பணிநியமன முறை
                             தற்போதைய நடைமுறையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறையிலும் (தகுதித்தேர்வு, பிளஸ்–2, டிகிரி, பி.எட். என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்படும்) நியமிக்கப்படுவார்கள். எனவே, குறிப்பிட்ட பாடத்தில் காலி இடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும்.

                              அதேநேரத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதிக பதிவுமூப்பு உடையவர்களுக்கும் (இடைநிலை ஆசிரியர்கள்), கட் ஆப் மதிப்பெண் அதிகம் பெறுவோருக்கும் மட்டுமே வேலை கிடைக்கும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வேலைவாய்ப்புகள் காத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
                         தகுதித்தேர்வு முடிவை செப்டம்பர் மாதம் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும். அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இருந்து பதிவுமூப்பு அடிப்படையிலும் (இடைநிலை ஆசிரியர் நியமனம்), அதிக கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்) ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

                             14 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணியை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. ஒருவேளை நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் காலி பணி இடங்களையும் சேர்த்து நிரப்ப அரசு முடிவு செய்தால் கூடுதலான ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


              அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 புதிய ஆங்கில வார்த்தைகளாவது கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

                     அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என இந்த ஆண்டு 3,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அதோடு, ஏற்கெனவே ஆங்கில வழி வகுப்புகள் உள்ள 320 பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

                  இந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தர பல்வேறு புதிய திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வகுத்துள்ளது.

                       முதல் கட்டமாக, இந்த மாணவர்களுக்கு ஆங்கில வழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.24) பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

                ஆசிரியர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்ப்பதற்கான எளிய முறைகள் இந்தப் பயிற்சியின்போது கற்றுத்தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில வழி வகுப்புகளைப் பொருத்தவரை ஆங்கில எழுத்துகள், வார்த்தைகளோடு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                       வெறும் கரும்பலகையின் மூலம் மட்டுமே ஆங்கிலத்தைக் கற்பிக்காமல், விடியோ, ஆடியோ சி.டி.க்கள் மூலமும் மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி

சென்னை: "டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை" என டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார்.
இம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று, தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய விவகாரம், தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது.
தேர்வு சர்ச்சை குறித்து, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் கூறியதாவது: மோசடி கும்பல், போலியான கேள்விகளை தயாரித்து, தேர்வு எழுதுவோரை ஏமாற்றி உள்ளது. இதற்கும், டி.ஆர்.பி.,க்கும், எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., எழுத்துப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளார். தேர்வில், துளி அளவிற்குக் கூட, முறைகேடுகள் நடக்கவில்லை. இதை உறுதியாக கூற முடியும்.
முறைகேடாக தேர்வு எழுத முயற்சிக்கும் தேர்வர்களை, டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளை எழுத தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு விடைத்தாள்கள், "ஸ்கேன்" செய்யும் பணி, நேற்று துவங்கியது. டி.இ.டி., தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் ஆகிய, இரண்டையும் சேர்த்து, ஒரே தேர்வுப் பட்டியலாக வெளியிடலாமா என, ஆலோசித்து வருகிறோம். விரைவாக, தேர்வு முடிவை வெளியிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு, விபு நய்யர் கூறினார்.

பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெயரும் பதிவு

தூத்துக்குடி: பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், புதிதாக தேர்வு எழுதும் மாணவரின் தாய் பெயரும் சேர்த்து, பதிவு செய்யப்படுகிறது.
அனைத்துப் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை, பள்ளிக்கு வரவழைத்து, பெயர் பட்டியல்கள் தயாரிப்பதற்காக, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவர் பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, ஜாதி, ரேஷன் கார்டு எண், ஆதார் அடையாள அட்டை எண் உட்பட, 11 விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதில் தவறு ஏற்படாமல் இருக்க, மாணவரின் தந்தை, வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் ஆகியோரின் கையெழுத்துடன், இந்தாண்டு புதியதாக தேர்வு எழுதும் மாணவரின் தாய் பெயரையும், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கேட்டுள்ளது.

குரூப்- 4 தேர்வு: "திக்... திக்..." நிலையில் டி.என்.பி.எஸ்.சி.,

சென்னை: ஏற்கனவே, குரூப்-2 தேர்வில், கேள்வித்தாள், வெளியான ஆன விவகாரம், சமீபத்தில், தர்மபுரியில், டி.இ.டி., தேர்வில் எழுந்த சர்ச்சை ஆகியவற்றால், டி.என்.பி.எஸ்.சி., "திக்..திக்..." நிலையில் உள்ளது. நாளை நடக்கும் குரூப்-4 தேர்வில், எவ்வித பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, உறுப்பினர்களை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது.
தேர்வாணைய தலைவராக நடராஜ் இருந்த போது, அவரின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, குரூப்-2 தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே,  வெளியானது. அதிர்ச்சி அடைந்த நடராஜ், அந்த தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வை நடத்தினார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த டி.இ.டி., தேர்வில், தர்மபுரி மாவட்டத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், நாளை நடக்கும் குரூப்-4 தேர்வில், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என, தேர்வாணையம், பதற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள தேர்வாணையம், தற்போது, தேர்வாணைய உறுப்பினர்களையும், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தி உள்ளது.
உறுப்பினர்கள், ஒவ்வொருவருக்கும், தனித்தனி மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள், இன்று, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு செல்கின்றனர். நாளை, தேர்வுப் பணிகளை, முழுமையாக பார்வையிட்டு, விடைத்தாள் கட்டுகளை, "சீல்" வைத்து, வாகனங்களில் எடுத்துச் செல்வது வரை, உறுப்பினர்கள் கண்காணிக்க உள்ளனர்.

40 ஆயிரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி

சென்னை: மாநிலம் முழுவதும், 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, சதுரங்கப் போட்டி துவங்கியது. செப்டம்பர் இறுதியில், மாநில அளவில், இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.
மாணவர்களிடையே, அறிவாற்றலை வளர்க்க வேண்டும் என்பதற்காக, பள்ளி அளவில் துவங்கி, மாநில அளவில் வரைக்கும், பல்வேறு நிலைகளில், சதுரங்கப் போட்டிகளை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, போட்டிகள் துவங்கின.
சென்னை மாவட்டத்தில், 400 பள்ளிகளில் போட்டிகள் நடந்தன. அசோக் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளை, முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பார்வையிட்டார். செப்டம்பர் இறுதியில், மாநில அளவில், இறுதிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்.

8/23/2013

தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்?

தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்? இல்லை தூங்குவது போல் பாசாங்கு செய்கிறாயா? ஒரு இனத்தின் தரத்தை தரமிடப்போகின்ற நேரத்தில் உனக்கு உறக்கமா? தரமில்லாமல் தாழ்ந்து போன உன் விடியலுக்காக ஆகஸ்ட் - 30 இயக்கம் நடத்தும் மாபெரும் மறியலில் இயக்கம் கடந்து சங்கமிப்போம் - சாதித்து காட்டுவோம். சாதிக்க துடிக்கும் இளைஞர் பட்டாளம் நிறைந்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோட்டை. போர் முரசு கொட்டி பகை விரட்டி, கோரிக்கைகள் வெற்றி பெற தோழனே உடனே புறப்படு. பகல் முழுதும் ஆசிரியர் சந்திப்பு, இரவு திட்டமிடல் எளிதான வெற்றியின் சூத்திரம். தர்மம் தன்னை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும். தர்மம் வெல்ல புறப்படும் படை இது. யார் தடுத்தாலும் நிற்காது. ஆகத்து -25ல் குற்றால மாநில செயற்குழுவில்  நமது பிரச்சனைகள் விரிவாக ஆலோசிக்கப்படும். போராட்ட களம் பல கண்ட நமக்கு சொல்லி தெரிவதில்லை. களத்தை சூடுபடுத்து. பாதிப்பை அறியாத பாவப்பட்ட ஆசிரிய இனத்தை தட்டி எழுப்பு. பிறர் எழுப்புவார் என்று இருந்து விடாதே1 மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாமல் உன் இயக்க பணியை மேற்கொள். இந்தியா சுதந்திரம் அடைந்த இந்த மாதமே நமக்கும் விடியல் ஏற்படடுட்டும். ஆகஸ்ட்-30 அணி அணியாய் திரள்வோம். ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவோம். ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் ஒப்பாரி வைத்தே நம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. இப்பொழுதும் ஒப்பாரி வைப்போம். நமக்கு ஏற்பட்ட அநீதிகளை நாடறியும் வகையில் ஒப்பாரி வைப்போம். நமது ஒப்பாரி உரிமைக்கான ஒப்பாரி. தலைமை அறிவித்துள்ள போராட்ட வியூகங்களை முறையாக கடைப்பிடித்து உரிமையை மீட்போம். உரிமைக்கு உரத்த குரல் கொடுக்கவில்லையென்றால் நம்மை உதவாக்கரைகள் என்று வரலாறு பேசும். நாம் பிறக்கும் பொழுதே போராட்ட குணத்துடன் பிறந்தவர்கள். உதிக்கும்பொழுதே போராட்டத்தில குதித்த ஒரே இயக்கம். போராடுவதற்கும், போராட்டத்திற்கு அழைப்பதற்கும் தகுதியும், திராணியும் நம்மிடம் நிறையவே உண்டு. மனம் சோராமல் மடை திறந்த வெள்ளம் போல் மடமடவென மறியலில் குதிப்போம். மறியல் ஒன்றே நமது நிலயை மாற்றும். நம் நிலை உயரும் வரை போராட்டத்தை கைவிடோம் என சபதம ஏற்போம். நெஞ்சில் மூண்ட நெருப்பிற்கு சமரசம் ஏதுமில்லை என்ற பதாகையை உயர்த்தி பிடிப்போம். மஞ்சள் கொடியால் மாவட்டத்தை நிரப்புவோம். மறியலில் உன் போராட்ட வீச்சினை மற்றவர்களும் கடைப்பிடிக்கட்டும்.
ஆகவே யார் ஒதுங்கினாலும் நம் வீரப் போராட்டம் நமக்கு நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்!
வாழ்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!
வெல்க நம் மறியல் போராட்டம்!

தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com

8/22/2013

ஆகஸ்ட் 30 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாபெரும் மறியல் போராட்டம்.

ஆகஸ்ட்-15 இந்தியத் திருநாடு அந்நியர் பிடியிலிருந்த விடுதலை பெற்ற நாள். நம் தாய்திருநாட்டின் விடுதலை போராடாமல் கிடைக்கவில்லை. பல விடுதலைப் போராட்ட வீரர்களின் வீரத்தாலும் தியாகத்தாலும் விளைந்தது.பல விடுதலைப் போராட்ட வீரர்களின் உயிரை விலையாகக் கொடுத்து விலைமதிப்பில்லா விடுதலை கிடைத்தது. தாய்த்திருநாடு விடுதலை அடைவதே லட்சியமெனக் கொண்டு நம் தலைவர்கள் போராடிக் கொண்டிருந்த போது ஆங்கில அரசு அதனை அடக்க பல அடக்குமுறைகளை ஏவியது. சூழ்ச்சிகள் பல செய்தது. சுய நலத்திற்க்காக சிலர் ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்ததுடன் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்து நம் வீரமறவர்களைக் காட்டிக்கொடுத்ததாகவும் வரலாறு கூறுகின்றது. எண்ணிலடங்கா விடுதலை வீரர்களின் எண்ணமெல்லாம் தேச விடுதலை ஒன்றையே லட்சியமாய்க் கொண்டிருந்தது. பல அடக்குமுறைகளையும் சூழ்ச்சிகளையும் துரோகத்தையும் வேரறுத்து விளைந்தது நம் தேச விடுதலை. பல தியாக தீபங்களின் செந்நீர் பட்டு பாறாங்கல் தடைகளையும் பிளந்தெறிந்து முளைத்தெழுந்தது நம் தேசத்தின் விடுதலை விதை.

இப்படியெல்லாம் போராடிய வீர மறவர்களின் வழித்தோன்றல்கள் தான் நாம். நமக்குள்ளேயும் நம் முன்னோர்களின் வீரமும் நெஞ்சுரமும் தியாகமும் போர்க்குணமும் விதைக்கப்பட்டுள்ளது. நமக்குள்ளே ஆயிரம் பகத்சிங்கின் வீரமும் சுபாஸ் சந்திரபோஸின் வீரமும் விதைக்கப்பட்டு வெளிவரத் துடித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வீரத்தினை போர்க்குணத்தினை வெளிப்படுத்த வேண்டிய நாள் தான் ஆகஸ்ட் 30 நம் உரிமை மீட்டெடுக்கும் மறியல் போராட்ட நாள்.
இழந்தையெல்லாம் பட்டியலிட்டு புலம்பிக்கொண்டிருக்க நாமென்ன கோழைகளா?
உரிமை மீட்டெடுக்க மறியலென்னும் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கும் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள்!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; -தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
அந்த அக்கினிக் குஞ்சினை போராட்ட களத்திலே வைக்கும் நாள் தான் ஆகஸ்ட்-15. நாம் மூட்டும் போராட்ட நெருப்பின் சூடு தாங்காமல் போராடாமல் பதவி சுகங்கண்டு வாழும் கொழுத்துப் பருத்த ஜீவனெல்லாம் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகப் போகின்றது.
தனியாகப் போராடினாலும் கூட்டாகப் போராடினாலும் தனி முத்திரை பதிப்பவர்கள் நாம். டிசம்பர்-2010 லே பலரும் போராட்டத்தை போதும் என்று முடித்துக் கொண்ட போதிலும் இன்று வரை போராட்ட களத்திலே நெஞ்சுயர்த்தி கோரிக்கை நிறைவேறாது ஓயாது எம் போராட்டம் என நிற்பவர்கள் நாம் மட்டும் தான். நடை தளர்ந்தவனுக்கு நடக்க துணை தேவை நமக்கெதற்கு! போராடவே யோசிப்பவனின் துணை நமக்கெதற்கு?
சிறை நிரப்புவோம்! நம் உரிமை வேண்டி!
அரசின் கவனம் ஈர்ப்போம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டி!
பலர் சூழ்ச்சி செய்து சுய நலத்தோடு ஆங்கில அரசுக்கு விசுவாசமாக விடுதலைப் போரில் ஒதுங்கியிருந்ததால் நம் தேசத்திற்கு விடுதலை கிடைக்காமல் போகவில்லை.
வீர மறவர்களின் வீரத்தாலும் தியாகத்தாலும் விளைந்தது விடுதலை. ஆகவே யார் ஒதுங்கினாலும் நம் வீரப் போராட்டம் நமக்கு நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்!
வாழ்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி! வெல்க நம் மறியல் போராட்டம்!

ம.ஜெகதீஸ் மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- கரூர் மாவட்டம்.

அரசுப் பள்ளிகளில் அதிரடி ரெய்டு: போதை பாக்குகள், மெமரி கார்டுகள் பறிமுதல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சி.இ.ஓ. நடத்திய அதிரடி ரெய்டில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய பிளஸ் 2 மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
பள்ளி மாணவர்களிடையே செல்போன், மெமரி கார்டு மோகம் பரவலாக இருந்து வருகிறது. இவற்றை வீட்டில் பயன்படுத்துவதை விடுத்து பள்ளிகளில் வகுப்பறை வரை கொண்டு வந்து பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருவது ஆரோக்கியமற்றதாக உள்ளது. தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை பாக்குகளையும் மாணவர்கள் பயன்படுத்தும் அதிர்ச்சி தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சில அரசு பள்ளிகளில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
மணிக்கட்டி பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளி, இடலாக்குடி அரசு பள்ளி, கொட்டாரம் அரசு பள்ளி ஆகியவற்றில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களிடம் திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் படிக்கும் நேரத்தில் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவர்களிடம் செல்போன்கள் 4, அவற்றில் பயன்படுத்திய மெமரி கார்டுகள், சென்ட் பாட்டில்கள், தனியாக வைத்திருந்த சிம் கார்டுகள், பிரேஸ்லெட், பெரிய பக்கிள்சுடன் கூடிய பெல்டுக்கள், வெளிநாட்டு, மற்றும் கோல்டு வாட்சுகள், போதை பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள், நவீனநாகரீக சீப்புகள் போன்றவை மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதைப்போல் சில மாணவர்களின் முடி அலங்காரம் சினிமா நடிகர்கள் பாணியில் வளர்த்தும், மோசமான தோற்றத்தில் டை அடித்து மாற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சி.இ.ஓ. அறிவுரை வழங்கினார். மேலும் படிக்கும் காலகட்டத்தில் இதுபோன்று கவனத்தை திசைதிருப்பி தவறான பாதையில் செல்லவைக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பள்ளிகளில் நடத்திய திடீர் ரெய்டு குறித்து சி.இ.ஓ. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது;
ஒழுக்கமுள்ள பள்ளியை உருவாக்க முதலில் ஆசிரியர்கள் ஒன்றுபட்ட கூட்டு செயல்பாட்டை உருவாக்கவேண்டும். ஆசிரியர்களின் கடமை கற்பித்தலோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. ஒழுக்கம் குறைந்த மாணவர்களை திருத்துவதோடு, ஏழ்மையான குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும். ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தும்போது அவர்களையும் திருத்தமுடியும் என்ற நம்பிக்கை உருவாகும். ஒழுக்கமும், பண்பும் உள்ள மாணவர்கள் வாழ்வின் அனைத்து பருவங்களிலும் மிகச்சிறந்த மனிதர்களாக திகழமுடியும் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
அவர்களின் ஒழுக்கமே பள்ளியின் நிறை, குறைகளுக்கெல்லாம் காரணமாக அமைகிறது. மாணவன் ஒழுக்கம் உள்ளவரா என்பதை அவனது நடத்தை, புறத்தோற்றம், உடல்மொழி போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பள்ளிகளில் ஒழுக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற தவிப்பு ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பள்ளியும், மாணவர்களும் சிறந்த மதிப்பு மிக்கவர்களாக உயர்வர்.
மேலும் ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளும் அவர்களின் நடத்தையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே முக்கியமான பள்ளி பருவத்தில் உபயோகிக்கக்கூடாத பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நல்ல பாதைக்கு அழைத்து செல்லவே இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்றார்.
முதற்கட்டமாக குமரி மாவட்டத்தில் உள்ள 3 அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் நடத்தப்பட்ட திடீர் ரெய்டால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் இருந்தே மாவட்டத்தில் உள்ள பரவலான பள்ளிகளில் மாணவர்கள் போதைபாக்கு, செல்போன், மற்றும் நவநாகரீக பொருட்கள் கொண்டுவரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளிகளில் நடத்தப்பட்ட இந்த ஆரோக்கியமான ரெய்டை பரவலான மக்கள் பாராட்டியுள்ளனர்.
பள்ளி மாணவர்களிடம் நடத்திய ரெய்டின்போது பல நடிகைகளின் போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் அவர்கள் பேண்ட், மற்றும் சட்டைபாக்கெட்டில் வைத்திருந்த யூனிபார்முடன் கூடிய பல மாணவிகளின் போட்டோவை பார்த்து சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களிடம் அறிவுரை கூறியதுடன் அவர்களின் பெயர் விவரங்களை வெளியிடவேண்டாம் என ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
போதை பாக்குகள் வைத்திருந்த மாணவர்களிடம் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து விளக்கப்பட்டது. பள்ளி அருகாமையில் இருக்கும் கடைகளில் போதை பாக்குகள் ரகசியமாக விற்கப்படுகின்றனவா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளிடமும் படிக்கும் காலத்தில் செல்போன், மற்றும் ஆடம்பர பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாட்ச், செல்போன் போன்ற பொருட்களை மாணவர்களிடம் பள்ளிகளுக்கு எடுத்து வரவேண்டாம் என அறிவுறை கூறி திருப்பி கொடுக்கப்பட உள்ளது.
பெற்றோர்களுக்கு வீடுதேடி வருகிறது கவுன்சிலிங்
குமரி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற நடைமுறைகளை களையும் பொருட்டு பள்ளிகள் அனைத்திலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் கவுன்சிலிங் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது மாணவர்களின் மோசமான நடத்தை அதிகம் உள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு அப்பள்ளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளது.
ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் பெற்றோர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களிடம் கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது. வாரம் ஒருமுறை திடீரென பள்ளிகளில் ரெய்டு நடத்தப்படும். மதிப்புக்கல்வி, ஒழுக்க நெறிக்கல்வி பள்ளிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

கூட்டுப்போராட்டத்திற்கு வேட்டு வைப்பதா?

கூட்டு போராட்டத்திற்கு கூவி கூவி நாம அழைத்தால் அதை பகிராமல் சில தோழர்கள் பங்காளி சண்டைக்கு வரிந்து கட்டிக்கொண்டடு முக நூலில் பதிவுகள் இடுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாவபப்பட்ட ஆசிரியன் வாழ்வாதரத்திற்கு  போராடும்பொழுது வாரிசு சண்டையில் நான் துரோகியா? நீ துரோகியா? என்ற பட்டி மன்றம் நடக்குது. துரோகம் யார் செய்தாலும் அவரவர் மன நிலைக்கே விட்டுவிடுவோம். இனி நடக்கப்போவதை நல்லதாகவே நினைப்போம். அனைவரையும் அரவனைத்து செல்வதுதான் கூட்டு போராட்டத்தின் வெற்றியாக அமையும். கடந்த கால நினைவுகளை அசை போடுவதால் தர்ம சங்கட்டமே மிஞ்சும். ஒரு பக்கம் இயக்க தலைமைகளுக்கிடையில் ஈகோ. மற்ற பக்கத்தில் இயக்க பொறுப்பாளர்களிடம் கருத்துமோதல்கள். இடையில் நசுங்குவது என்னவோ இடைநிலை ஆசிரியனின் கோரிக்கைகள்தான். தனிச்சங்க நடவடிக்கை ஒரு புறம் இருந்தாலும் கூட்டு நடவடிக்கையே நாம் முன்னெடுக்க வேண்டும். தேவையில்லாத கருத்துக்களை பதிவிடுவதால் தேவையற்ற பின்னூட்டங்கள்  ஒற்றுமைக்கு உலை வைத்துவிடும். கூட்டுப்போராட்டத்திற்கு சங்க தலைமைகளை வலியுறுத்துவதை விட்டுவிட்டு பங்காளி சண்டையிடுவதால் பயன் என்ன? என்பதை நண்பர்கள் சிந்திக்க வேண்டும். முகநூலில் வரும் பதிவுகள் அனைத்திற்கும் பின்னூட்டம் இட வேண்டிய அவசியமோ, அவசரமோ இல்லை. பின்னூட்டம் இடாததால் மற்றவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்றாகி விடாது. கடந்த கால வரலாறு அனைவரும் அறிந்ததே. அதை அம்பலத்தில் ஏற்றுவதால் ஆகிய பயன் என்ன? சொல்லிய சொல்லும், எழுதிய எழுத்தும் மீட்டெடுக்க இயலாது. எண்ணிக்கையில் அதிகம் இருக்கின்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய உரிமைகளை இழந்து நிற்கின்ற பரிதாபத்துக்குறிய அறிவூட்டிகளின் நிலையை கருத்தில்கொண்டு கருத்து மோதல்களுக்கு முற்றுபுள்ளி வைப்போம். காரியம் கைகூட கைகோர்ப்போம். நம் கை இனைந்தால் கரம் வலுக்கும். கரம் வலுத்தால் காரியம் தானகவே முடியும். அதை விட்டுவிட்டு கீழ்த்தரமான விமர்சனங்களை பதிவிட்டு ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதை தவிர்ப்போம். சக ஆசிரியனை சகோதரராக ஏற்போம். சங்கம் வளர்ப்பது முக்கியமல்ல. சாதனை படைப்பதுதான் முக்கியம். ஒன்று கூடி எழுப்பப்போகும் கோஷங்கள் உரிமையை மீட்டெடுக்கும் வெற்றி ஓசையாக அமையட்டும். டிட்டோஜாக் அமைப்பை மீண்டும் கட்டமைப்போம். இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். இயக்கம் பாராமல் இணைவோம். தொடர்ந்து வெளியிடப்படும் பதிவுகளை மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து களம் சூடு மாறாமல் பாதுகாப்போம். இறுதி வெற்றி நமதே!!!
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF  மாவட்டத்தலைவர், சிவகங்கை மாவட்டம்

இரட்டைப்பட்டம் வழக்கு - ஏமாற்றமே!

இன்று முதல் அமர்வில் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவது இயலாத நிலையில் உள்ளது. ஏனென்றால் தலைமை நீதிபதி தலைமை செயலகத்தில் மதியம் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள செல்வதாலும், மாலையில் நீதி மன்ற வளாகத்தில் நடைபெறும் மற்றொரு பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாலும் முதல் அமர்வு செயல்படாது என தெரிகிறது. ஒரு சில காரணங்களால் வழக்கு வருகிற செவ்வாய் கிழமைதான் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்ட தோழர்கள் கலியமூர்த்தி மற்றும் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு நன்றி. பல்வேறு காரணங்களால் வழக்கு தள்ளி போவது ஆசிரியர்களை சோர்வடைய செய்துள்ளது.
 

தலைமை ஆசிரியர் உட்பட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்

சிறப்புப்படி (S.A).மற்றும் தனி ஊதியம் (P.P) பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்

SPECIAL ALLOWANCE  பற்றிய   விளக்கம் :
          இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 

          அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010.
    இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர். 



பின்னர் 12.01.2011 இல் அரசாணை  23 இன் படி தனி ஊதியம்.

   இதில் பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
     மேலும் பத்தி 4 - இன் இறுதியில் " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்றும் உள்ளது. 
சிறுவிளக்கம் உங்களுக்காக:
     இதில் குறிப்பிடப்பட்டுள்ள "சாதாரண நிலையில்" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.
      அதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800 இல் ஊதிய  நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750 பெற இயலாது என்பதாகவும், ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.



இங்கு கொஞ்சம்  பொறுமையாக படியுங்கள்.
  S.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால் 
1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண     நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )
2.  1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று  5200 - 20200 + தனி ஊதியம் 2800                 பெற்றுகொண்டிருப்போர்.
3.   இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300 நிலையினர்.
4.   இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500 நிலையினர்            
(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )
  
           இதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண்  3 மற்றும் 4 இல் உள்ளவர்கள்  அரசாணை  23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள  " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.
இவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால், இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை? 
             அவர்களுக்கு  "தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



பத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:
            பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு  தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர். 

    இவர்களை தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்,சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவா? அப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும்  தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.

             இதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள். 
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு 

             (மேற்காணும் கட்டுரை அறிந்த வரையில் விளக்கப்பட்டுள்ளது, சார்ந்து தெளிவுரை தேவைப்பட்டு அரசால் அளிக்கப்பட்டால் அவையும் வெளியிடப்படும், மேலும் தங்களின் மேலான கருத்துக்கள் கட்டுரைக்கு வலு சேர்க்கும்)

ஆசிரியர் நியமனத்தில் விதி மீறல் - மறு கலந்தாய்வுக்கு வேண்டுகோள்

எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்

தூத்துக்குடி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் செப்., 1 முதல் 30ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன்-லைனில் பதிவு செய்யப்படும் மாணவர்களின் விபரங்களான, பெயர், ஜாதி, பிறந்த தேதி, போட்டோ ஆகியவை தவறு இல்லாமல் பதிவு செய்ய தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் மாணவர்களின் விபரங்களை தவறுகள் இல்லாமல் பெற்று, ஆன்- லைனில் செப்., 30 க்குள் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விபரங்கள் பெறும் போது மாணவர்களின் தொடர்புக்காக மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு ஆன்- லைனில் பதிவு செய்யப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில், தொடர்புக்காக வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்களில் மாணவர்கள் தேர்ச்சி, மதிப்பெண் விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ள இந்த ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்து வருகிறது.

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணையை இன்று தொடுமா?

 இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மாண்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சதியநாரயணன் முன்னிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆனால் பட்டியலில் 152வது அயிட்டமாக இருப்பதால் நீதி மன்ற நேரத்திற்குள் அந்த எல்லையை தொடுமா என்பது சந்தேகம்தான். பட்டியலில் உள்ள வழக்குகளின் தன்மையை பொறுத்துதான் இந்த கால அளவை கணிக்க முடியும். இருநதாலும் இன்று சந்தேகம்தான். வழக்கு சம்பந்தமாக உள்ள உடனடி நிலைகளை  நமது வலைதளத்தில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள் இதனால் மனச்சோர்வு அடைந்துள்ளனர்.

52.   WA.529/2013     M/S. G. SANKARAN         M/S.ROW AND REDDY                    
       (W.A.)          E.RANGANAYAKI            S.SATISHKUMAR                
                       B.THINGALAVAL             V.GOVARDHANAM                
                                                  L.PARVIN BANU FOR R
1.       
                                              M/S. J.NEDUNCHEZHIYAN        
                                               FOR RR 42 TO 111             
                                               M/S.DAKSHAYANI REDDY         
                                                FOR RR 112 TO 189            
                                               M/S.C.S.ASSOCIATES FOR R190  
                                                PETITION AFFIDAVIT DUE REG.  
                                                  R2 TO R41                    
                              For Stay
       MP.1/2013              - DO -


சம்பள உயர்வுக்கு காத்திருக்கும் "சூப்பர் கிரேடு' ஆசிரியர்கள்

மதுரை : தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் குழப்பத்தில் உள்ளனர்.
ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளித்த "மூன்று நபர் கமிஷன்' பரிந்துரைப்படி, பத்து ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றிய தேர்வுநிலை ஆசிரியர்களுக்கும், 20 ஆண்டுகள் பணியாற்றிய சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கும், 3 சதவீதமாக இருந்த ஊக்க சம்பளம் 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு முதுநிலை ஆசிரியர்கள் புகாரின்றி 30 ஆண்டுகளை கடந்து பணியாற்றும் "சூப்பர் கிரேடு' ஆசிரியர்களுக்கான ஊக்க சம்பளம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மாநிலத்தில் 10 ஆயிரம் "சூப்பர் கிரேடு' (30 ஆண்டுகள் பணியாற்றிய) ஆசிரியர்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வு வயதை எட்டியுள்ளனர்.
மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை களைய தமிழக அரசு இதுவரை 89 அரசாணைகள் வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை சார்பில் மூன்று அரசாணைகள் வெளியிடப்பட்டன. இதில் அரசாணை 23ன் படி, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு ஊக்க சம்பளம் அளிக்கப்பட்டது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றி, பதவி உயர்வு இல்லாத "சூப்பர் கிரேடு' ஆசிரியர்களுக்கு, "மூன்று நபர் கமிஷன்' பரிந்துரையின்படி ஊக்க சம்பளம் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலை அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும் நீடிக்கிறது. கமிஷன் பரிந்துரை 30 ஆண்டு பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? என அரசு விளக்கமளித்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றார்.
 

8/21/2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள் ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை
சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப்
பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள்
மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும்
அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள
ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை
கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிரு
நாளில் தொடங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல்
தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக்
கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர் தகுதித்
தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என
அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு: விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும்
பணிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு,
தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.

அதன்பிறகு, இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும்
செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 வாரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு: முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட
உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம்
பேர் எழுதினர்.

முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை
அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான
ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.

இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது
குறிப்பிடத்தக்கது.

தவறான கேள்விகள், அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு
செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு
எடுக்கும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக, முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

உதவிப் பேராசிரியர் நியமனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்
தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.

தேர்வர்கள் ஏமாற வேண்டாம்

ஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையான முறையில், தகுதியின் அடிப்படையில்
மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான முறைகளில் இந்த நியமனத்தைப்
பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என ஆசிரியர்
தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே
வழங்குவதாகவும், மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள்
தமிழகம் முழுவதும் தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள்
தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில்
தேர்வர்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக
தருமபுரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும்
நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர்
தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எழுந்திரு தோழா! விடியல் உனக்காக காத்திருக்கு.......





TNPTF

என் இனிய தோழனே! நாளைய விடியல் நமக்காக, நமது ஊதிய மாற்றத்திற்கான விடியலாக இருக்கட்டும். உலகின் எந்த தேசத்திலும் உழைக்கும் வர்க்கத்தை முடக்கி அந்த தேசம் உயர்ந்ததாக வரலாறு இல்லை. உழைப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் ஆள்பவர்களின் அடிநாதமே ஆட்டம் கண்டு விடும். இந்த நாட்டை ஆளும் முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் தானகவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தயங்குகிறார் என்றால் ஒன்று நம்மிடம் ஒற்றுமையில்லை அல்லது முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்த இடை;யில் குள்ள நரி கூட்டம் அரசு அதிகாரிகள் என்ற பெயரில் தன்னுடைய தீரா பகையை பாவப்பட்ட இடைநில ஆசிரியரிடம் வஞ்சம் தீர்த்துகொள்ள முனைகிறது. இந்த குள்ள நரிகளை கூண்டோடு விரட்டி அடிக்க இயக்கம் பாராமல் இடைநிலை ஆசிரியர்களே ஆகத்து-30ல் உன் மாவட்ட மறியலை வெற்றியாக்கிடு. அளவு மாற்றம் குண மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே நீ திரட்டப்போகின்ற கூட்டம்தான் உன் ஊதியத்தை மாற்றும். நீ கோபத்துடன் இருக்கிறாய் என்பதை நான் நன்கு அறிவேன். கூட்டு போராட்டத்திற்கு வேட்டு வைக்க நயவஞசகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆட்சியாளர்களின் கோபகனைகள் தன்மீது பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளது. நாம் அப்படி அல்ல. நமது உரிமைகளை அடைய பல போராட்டங்களில் களம் கண்டவர்கள். நமது பிரச்சனைகளக்கு மட்டுமில்லாது மாணவர், தேச நலனுக்காக பல போராட்டங்களை கண்டவர்கள். மற்ற இயக்கங்கள் செய்ய மறந்த - செய்ய மறுத்த கோரிக்கைகளை நாம் கையிலெடுத்து வெற்றி பெற்று இருக்கிறோம். இயக்கம் உனக்கு கட்டளையிட்ட ஆசிரியர் சந்திப்புக்களை நடத்தி அவர்களை களம் காண தயார்படுத்து. ஒன்றுபட்ட போராட்டம் வெற்றியைத்தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மாற்று கருத்து உள்ள இயக்க தலைமைகளை ஒன்றினைப்பதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முனைப்பாக உள்ளது. அது ஒரு பக்கம் இருந்தாலும் ஆகத்து-30 ஆள்பவர்களை அசைத்து பார்க்கும் நாளாக அமையட்டும். உனது மறியல் போர் மாநிலத்தையே குலுக்கட்டும். பள்ளி வேலை நாளில் செய்யும் மறியல்தான் மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றம் எற்படும் வரை மாற்றி அமைக்க இந்த படை தயாராகவே உள்ளது என்பதை குள்ள நரி கூட்டம் உணரட்டும். ஒவ்வொரு இடைநிலை ஆசிரியனும் 10 ஆசிரியர்களை போராட்ட களத்திற்கு அழைத்து வருவதை சபதமாக எடுத்துக்கொள். பகல் வேஷம் போட்டு பகட்டு காட்டி ஆசிரியர்களை அடி முட்டாள் ஆக்குவதை அனுமதியோம்.
புறப்படு புயலென. நாளைய விடியல் நமக்காக...
சரித்திரம் மாற்றும் சாதனை படைப்போம்.
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF  மாவட்டத்தலைவர், சிவகங்கை மாவட்டம்

01.06.1988 -- தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க கோரி பெறப்பட்ட இறுதியாணைகளுக்கு பொது ஆணை பிறப்பிக்க வழக்கு தொடுத்த அனைவர்களின் விவரங்களையும் 20.08.2013க்குள் சமர்பிக்க தொடக்கக் கல்வி துறை உத்தரவு.

இடைநிலை ஆசிரியரின் தனி ஊதியம் சம்பந்தமாக சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதம்

FLASH NEWS - DOUBLE DEGREE CASE

அவசர தகவல். உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் விடுமுறையில் இருப்பதால் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு நாளை முதல் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்கு தீவிரமாக முயற்சி செய்த திரு.கலியமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். வழக்கு ஏறத்தாழ நாளை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்ந்து பூச்சாண்டி காட்டும் இரட்டைப்படம் வழக்கு. ஏமாற்றத்தில் ஆசிரியர்கள்.

நாளை விசாரணைக்கு வரவேண்டிய இரட்டைப்பட்டம் வழக்கு நிர்வாக காரணங்களால் வர இயலாத நிலையில் உள்ளது. நீதி மன்றத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் நாளை பட்டியலில் இடம்பெறுவது என்பது சந்தேகம்தான். வழக்கு அடுத்த வாரம் தள்ளி போகும் நிலை கூட வரும் என வழக்கை நடத்தி வரும் தோழர் திரு.கலியமூர்த்தி நம்மிடம் தெரிவித்தார். இதனால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

விரைவில் "கற்க கசடற' பள்ளிக்கல்வித்துறை திட்டம்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் "கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு கல்வியாண்டின், கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாத இதழ் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் இதற்கான பணிகள் துவக்கப்பட்டது.கற்க கசடற என்ற தலைப்பில் வெளிவர உள்ள இந்த மாத இதழில் துறை சார்ந்த சிறப்பு நிகழ்வுகள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், சிறப்பு செய்திகள், முப்பருவ கல்வி முறை விளக்கங்கள், தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் சேர்க்கை, ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இடம்பெற்று இருக்கும்.பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஒரு மாத காலத்தில் இந்த மாத இதழ் வெளியிடப்படும்' என்றார்.

கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்ப்பு

 மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், 652 பேரை, அரசு பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிளஸ் 2 கணினி பிரிவு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது என, மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாதவர்களை பணிநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழக அரசு, 652 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தது.
இதனால், பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் தான் தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆசிரியர்கள், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கணினி பட்டயம் பெற்றவர்கள்.
மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்த பி.எட்., பட்டாதாரிகளை நியமிக்க வேண்டும் என்பது விதிமுறை. பெரும்பாலான பள்ளிகளில் பகுதிநேர கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. சில இடங்களில், மாற்றுப் பணியாக அருகில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை கொண்டு வாரத்தில், இரண்டு நாட்கள் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால், அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும் மாணவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணினி ஆசிரியர்கள் நியமனம் குறித்து ஆலோசித்து வருகிறோம். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்," என்றார்.

குரூப்-4 தேர்வு: 2வது கட்டமாக ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: குரூப்-4 தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெறாதவர்களுக்கு அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், நேற்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. வரும், 25ம் தேதி, குரூப்-4 தேர்வு நடக்கிறது.
இதை 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் கடந்த, 14ம் தேதி www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வுக்கு, முறையாக விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியும் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை 19ம் தேதிக்குள் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி தேர்வாணையம் கேட்டுக் கொண்டிருந்தது.
அதன்படி 19ம் தேதி வரை விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வாணைய இணையதளத்தில் நேற்று ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. மின்னஞ்சல் அனுப்பியும் ஹால் டிக்கெட் கிடைக்காத தேர்வர்கள் இருந்தால், அவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும், தேர்வாணைய அலுவலரை 23, 24ம் தேதிகளில் அணுகலாம் என டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா தெரிவித்து உள்ளார்.

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடக்கம்

சென்னை: எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 21 தொடங்கி, 29ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங் விபரங்கள், கட்-ஆப் மதிப்பெண் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன.
2013, செல்லத்தக்க ஜி.ஏ.டி.இ.,(GATE) மதிப்பெண் அடிப்படையில்...
ஆகஸ்ட் 21 - 40 முதல் 23 GATE மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
டேன்செட் மதிப்பெண் அடிப்படையிலான கலந்தாய்வு விபரம்
ஆகஸ்ட் 22 - காலை முதல் மதியம் வரை, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
மதியம் முதல் மாலை வரை - 49.381 முதல் 42.525 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 23 - 41.331 முதல் 36.401 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 24 - 35.905 முதல் 33.142 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 25 - 32.783 முதல் 30.648 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 26 - 30.353 முதல் 28.356 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 27 - 27.964 முதல் 25.082 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 28 - 24.670 முதல் 21.283 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 29 - 20.695 முதல் 15.070 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு.

டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது

சென்னை, ஆக.21 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 பணிகளுக்கான தேர்வ வருகிற 25.08.13 அன்று நடைபெறயுள்ளது. என தேர்வாணையம் குறிப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், வருகிற 25.08.2013 அன்று தொகுதி-4 பணிகளுக்கான தேர்வினை நடத்துகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கடந்த 14.08.2013 அன்று வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கென விண்ணப்பித்து உரிய கட்டணம் செலுத்தியும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள், தாங்கள் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தினை 19.08.2013 க்குள், தேர்வாணையத்திற்கு, மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். அவ்வாறு 19.08.2013 வரை மின்னஞ்சல் அனுப்பியவர்களில், தொகுதி-4 க்கு விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் இன்று (20.08.2013) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களது தொகுதி-4 க்குரிய பதிவெண்ணை (சுநபளைவசயவழை ெஐனு) உள்ளீடு செய்து  தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அவ்வாறு மின்னஞ்சல் அனுப்பியும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள், தாங்களின் விண்ணப்பம் மற்றும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு ஆகியவற்றின் நகலுடன், அவர்கள் தேர்வு எழுதுவதற்கென தேர்வு செய்த தேர்வுமையம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியிலிருக்கும் தேர்வாணைய அலுவலரை 23.08.2013 மற்றும் 24.08.2013 அன்று அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிரந்தரப் பதிவில் மட்டுமே பதிவுசெய்து, தொகுதி-4 க்கு விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்பக்கட்டணம், தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள் இத்தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். 

தேர்தல் பணிக்காக ஆசிரியர் விபரங்களை கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம்