3/17/2016
நமது அறிக்கை இன்றைய (17.3.2016) தினமலரில் வெளிவந்துள்ளது
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
3/16/2016
நமது அறிக்கை இன்றைய தினகரனில் வெளிவந்துள்ளது
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
3/10/2016
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காததால் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முற்றுகை. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நள்ளிரவு வரை போராட்டம்.
லேபிள்கள்:
SVG TNPTF
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக வரி விலக்கு கணக்கு எண்(TAN) பெறவில்லை என 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களிலில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் வரிவிலக்கு கணக்கு எண் மூலம் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் மாறுபட்டு செயல்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்கள். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் கடந்த 2ந் தேதி நடத்திய பேச்சு வார்த்தையில் மார்ச் 4ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இது வரை ஊதியம் வழங்கப்படாததால் 20க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினார்கள்.
நேற்று (9.3.16) மாலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்லல் வட்டாரத் தலைவர் ஜான் இக்னேஷியஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒன்று கூடினர். அதன்பின் மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளார் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், கல்லல் வட்டாரச் செயலாளர் சேவியர் சத்தியநாதன், மாவட்டத் துணைத் தலைவர் சூசைராஜ், பொருளாளர் ஜஸ்டின் திரவியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இராமர் அவர்களிடம் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து விளக்கம் கேட்டனர். மேலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூர்த்தி உடனடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி முற்றுகை போராட்டமாக மாறியது. ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று தராமல் அலுவலகத்தை விட்டு நகர மாட்டோம் என ஆசிரியர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களில் உள்ள நடைமுறைப்படி கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், கல்லல் காவல் ஆய்வாளர் கணபதி ஆகியோர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடனும் அலைபேசியில் பேச்சு வார்ததை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை முடிவில் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இராமர் ஆசிரியர்களின் ஊதிய பட்டியலில் உடனடியாக கையெழுத்திட்டார். மேலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூர்த்தி அவர்களின் கட்டுபாட்டில் உள்ள மற்ற 6 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 10ந் தேதி காலை சம்பள பட்டியல் கையெழுத்திட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் ஓரிரு நாட்களில் ஊதியம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததின் பேரில் ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.
3/06/2016
3/02/2016
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து தாலுகா அலுவலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்.
நாளை அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும் நாளை ஆர்ப்பாட்டம்
1. முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் எஞ்சியுள்ளவற்றிற்கு அரசாணை வெளியிட வேண்டுதல்
2. தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டுதல்
3. 7வது ஊதியக்குழு பரிந்துரை குழுவினை அறிவிப்பதோடு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பை சரி செய்யப்படும் என்ற உறுதி மொழியையும் இணைத்து ஆணை வெளியிட வேண்டுதல்.
4. வேலை நிறுத்த காலத்தை முறைப்படுத்தி ஆணை வெளியிட வேண்டுதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாலை அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் திரளாக பங்கேற்பீர்.
தோழமையுடன்...
ஆ.முத்துப்பாண்டியன்
சிவகங்கை மாவட்டச் செயலாளர்
2/25/2016
வருந்துகிறோம்.
லேபிள்கள்:
வருந்துகிறோம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் பொருளாளரும், சிறுமருதூர் நடுநிலைப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியருமான திரு.மு.பாலசுப்பிரமணியன் அவர்களின் பாட்டி திருமதி.குருவம்மாள் அவர்கள் தற்பொழுது காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு நாளை (26.2.2016) பிற்பகல் 3.00 மணிக்கு சிங்கம்புணரி பாரதிநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெறும். அம்மையாரின் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக் கிளை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
சிவகங்கையில் தொடர் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்
லேபிள்கள்:
SVG TNPTF
இனிய தோழமைகளே...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்த போராட்ட குழுவின் சார்பாக நடந்த தொடர் வேலை நிறுத்தம், அதையொட்டி நடைபெற்ற அமைச்சர் அளவிலான பேச்சு வார்த்தை மற்றும் துறை செயலர்களின் சந்திப்பு ஆகியவை குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் மாநில நிர்வாகிகள் வருகிற 27.2.2016 அன்று காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் விளக்க இருக்கிறார்கள். மேலும் தங்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க இருக்கிறார்கள். எனவே இயக்த்தின் மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டுகிறேன்.
என்றும் இயக்க பணியில்
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்

2/24/2016
இச்சந்திப்பில் முக்கிய துளிகள்
இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் திரு.பா.வி.டேவிதார் அவர்களையும் மற்றும் நிதி துறையில் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கே.சண்முகம் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இச்சந்திப்பில் முக்கிய துளிகள்:
1.முதல்வர் அறிவித்த அறிவிப்புகளில் எஞ்சியுள்ளவைகளுக்கு ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு
2. சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு உடனடியாக பங்கு தொகையுடன், அரசின் பங்கும் சேர்த்து தொகை வழங்கிட அரசாணை இரண்டு நாட்களுக்குள் வெளியிட உறுதி
3. சி.பி.எஸ். திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற அமைக்கப்படவுள்ள குழு உறுப்பினர்களின் பட்டியல் விரைவில் வெளியிட உறுதி.
4. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தற்பொழுது உள்ள சூழலில் இயலவில்லையென்றால் 7வது ஊதியக்குழுவில் இக்குறைகள் களையப்படும் வண்ணம் உடனடியாக குழு உறுப்பினர்களை அறிவிப்பது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தில் அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும் என நமது சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
5.வேலைநிறுத்த நாட்களில் ஊதியம் பிடித்தம் இல்லையெனவும், அதை முறைப்படுத்திடவும் ஆணை வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது
அலைபேசி வழி தகவல்: திரு.ச.மோசஸ், மாநிலத் தலைவர்
பகிர்வு: திரு.ஆ.முத்துப்பாண்டியன், சிவகங்கை மாவட்டச் செயலாளர்
2/22/2016
2/20/2016
வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு. அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டக்குழு அறிவிப்பு.
லேபிள்கள்:
TNPTF NEWS
இன்று நடைபெற்ற அரசு ஊழியர் மற்றும் அனைத்து ஆசிரியர் போராட்டக்குழு தற்பொழுது நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நமது போராட்டக்குழுவை தற்பொழுது பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. முதல்வரின் அறிவிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அறிக்கையையும் அமைச்சர் குழு கோரியுள்ளது.
முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த நமது அறிவிப்புகளை சில திருத்தங்களுடன் அரசாணை வெளியிடவும், மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை மையப்படுத்தியும் நமது போரட்டக்குழு சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் மாநில பொறுப்பாளர்கள் இன்று இரவு 8.00 மணிக்கு அமைச்சர் பெருமக்களை சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கோரிக்கைள் நிறைவேறாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போராட்டக்குழு கூடி முடிவு செய்யும்.
தகவல்: திரு.செ.பாலச்சந்தர், பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

2/16/2016
சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
Singai TNPTF NEWS
சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினரும் திங்கள்கிழமை இணைந்து போராடினர்.
சிவகங்கையில் அரண்மனைவாசல் முன்பாக அரசு ஊழியர்கள் அனைவரும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் செல்வக் குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து 707 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி:காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து, போராட்டக் குழுவின் சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்லமுத்து தலைமையில், காரைக்குடி வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக மறியல் செய்வதற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது டி.எஸ்.பி (பொறுப்பு) கருப்புச்சாமி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தி 312 பெண்கள் உள்பட 363 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரை: மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் பெண்கள் உள்பட 450 -க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மறியலின்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அண்ணாசிலையருகே நடைபெற்ற போராட்டத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ், வட்டக்கிளைச் செயலர் மகாலிங்க ஜெயகாந்தன் முன்னிலை வகிக்க அரசு ஊழியர் சங்கத்தினர் 460 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியலில் ஊரக வளர்ச்சித் துறை சாலைப்பணியாளர் சங்கம், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி: இளையான்குடி வாள்மேல்நடந்த அம்மன் கோயில் அருகே அரசு ஊழியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, ஊட்டச்சத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் 211 பெண்கள் உள்பட 258 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
2/14/2016
2/13/2016
இனியும் காலம் செல்லாது இடைநிலை ஆசிரியத் தோழனே!
லேபிள்கள்:
SVG TNPTF
இனியும் காலம் செல்லாது
இடைநிலை ஆசிரியத் தோழனே!
காரணங்கள் ஏதும் சொல்லாது
களமிறங்கு வேலை நிறுத்தத்தில்!!
இழப்பதற்கு இனியேதும் நமக்கில்லை
பெறுவதற்கு ஓய்வூதியம், ஊதியமிருக்கு!!
எதிர்வரப்போகுது தேர்தல் தேதி!
உடன்வரப்போகுது ஊதியக் குழு!!
கட்டம்பார்த்து காலம் கணிக்கும்
திட்டமேதும் உனக்கு இருக்கோ?
திட்டம்தீட்டி தலைமை அறிவிக்க
நாட்கள்தான் நமக்கு இருக்கோ?
நமக்கான வாழ்க்கை மட்டுமல்ல
நம் மக்களுக்கான வாழ்க்கையும்
நமது கரங்களில் தரப்பட்டுவிட்டது!
கையறு நிலையில் இருந்தோர்க்கு
கிடைத்தாயிற்று வேலை நிறுத்தத்
திறவுகோல் - திறந்திடத் தீவிரி!
சங்கம் பார்த்து சங்கமிக்க
மாநாட்டு கூட்டத்திற்கு அல்ல,
வாழ்வாதார உரிமைப் போராட்டத்தில்
கருதிய களத்திற்கு உண்மையோடு,
ஆசிரியப் பேரின உரிமையில்
ஆ.ப கூட்டணி அழைக்கிறது!
உறுதியோடு எழுந்துவா தோழனே!!
நம்மிடம் பாடம் பயின்றிட்ட
அரசூழியரின் போராட்டம் பார்!
கற்றோரின் உரிமை வேட்கையே
இத்தனை மாபெரிது எனில்,
கற்பிப்போராகிய நம் வீரம்
அதனினும் மேல் அன்றோ!
மாற்றுத் திறனாளி மையத்தினர்
மாற்றம் நிகழவில்லை எனில்
முற்றுகை உடன் நிகழ்த்தப்படும்
என்று உரைத்த துணிவங்கே!
முழுத்திறனும் நமக்கு இருந்தும்
முதல்வர் சொல்லும் வரை
பொறுப்போம் எனும் குனிவிங்கே!
மறியலில் சிறை நிறைத்தும்
மனந்திறக்க மனதில்லை அரசிற்கு!
அமைச்சர் கூட்டத்தின் நிகழ்வினை
அறிவிக்க மனமில்லை தலைமைக்கு!
16-ல் பதில் சொல்லாவிட்டால்
17-ல் கூடுவோம் என்கின்றனர்,
2011-ல் அளித்த வாக்கை
இன்று வரை காக்காதவர்
நாளை செய்வார் என்று
நம்பி வந்த காரணமேனோ?
உடன்பாடு எட்டப்படா விட்டால்
உடனே அடுத்த அறிவிப்பென,
காலையில் கூடியெடுத்த முடிவு
மாலையில் மாயமான காரணமேனோ?
40ஆண்டுகள் போராடிப் பெற்றதை
நாசமாக்கியது போன ஆட்சி!
நாலரை ஆண்டுப் போராட்டங்களுக்கு
மசியவேயில்லை இந்த ஆட்சி!!
இறுதி மறியலுக்குப்பின் - அடுத்த
அறிவிப்பேயில்லை, ஜேக்டோ சாட்சி!!!
ஆட்சியைப் நெருக்கும் காலமிது
புரட்சியைப் பெருக்கும் காலமிது
பறிக்கப்பட்ட உரிமை அனைத்தையும்
இருந்தபடி மீட்டெடுக்க - அறிவியுங்கள்
அடுத்தகட்ட போராட்டத்தை என்று
நீயும்நானும் கேட்டது போன்று
போராளிப் பாசறையும் கேட்டதன்று!
கூட்டமைப்பில் பதிலில்லை எனினும்
கூட்டணிக்குள் பதில் உரைக்க
கூட்டிய மாநாட்டில் ஒலித்தது,
ஆசிரியர் வாழ்வினைக் காத்திட
அனைவர் உணர்வினை மதித்திட
உறுதியான இறுதிப் போராட்டமாம்
வேலை நிறுத்தப் போராட்டம்!!
மாநாட்டுப் பிரகடனத்தை - நம்
மனம் விரும்பிய தீர்மானத்தை
மாநிலக் கூட்டமைப்பிற்கு அறிவித்து
மறுபதிலேதும் இதுவரை இல்லை!
பொறுமைக்கான காலமோ நமக்கில்லை!
கூட்டமைப்பு உடையவில்லை என்று,
கூட்டணித் தீர்மானப்படியே இன்று
இறுதியான தீர்மானத்தை, திருச்சியில்
உறுதியுடன் அறிவித்துள்ளது - அரசு
ஊழியருடன் வேலை நிறுத்தத்தில்
உடன் சேர்கிறோம் நாங்களுமென்று!
1988, 2002-03 ஆண்டுகள் போன்று!!
சிவப்புப் காரர்கள் கூட்டமது
சேராதே நீயும் என்னும்
சிறுபுத்திக் காரர்கள் கூற்றை
சிந்தையில் ஏற்றும் முன்னர்,
சிவப்புக் கம்பளம் விரித்துச்
சிறப்பிக்க நாதியுண்டா நாட்டிலென
சிந்தித்துச் சீர் பொருந்து!
உறுதியான உரிமைப் போராட்டமே
இறுதியான உயிர்ப்பு மருந்து!!
வேலையற்ற வீணர்கள் சொல்லும்
தேவையற்ற வாதங்கள் போல
வெண்ணெய் திரண்டு வரும்போது
பானையை உடைக்க அல்ல!
வெருங்கையோடு அமர்ந்து இருக்காது
வெண்ணெய்யைத் திரளச் செய்யவே,
கடைபவர்களுடன் கரம் கோர்க்க
களம் நோக்கி அழைக்கிறது!
இனியும் காலம் செல்லாது
இடைநிலை ஆசிரியத் தோழனே!
இழப்பதற்கு இனியேதும் நமக்கில்லை
பெறுவதற்கு ஓய்வூதியம், ஊதியமிருக்கு!!
கையறு நிலையில் இருந்தநமக்கு
கிடைத்தாயிற்று வேலை நிறுத்தத்
திறவுகோல் - திறந்திடத் தீவிரி!
கற்றுத் தந்த வரலாற்றுப்படி,
பற்றி எரியட்டும் போராட்டத்தீ!
ஆணவப் போக்கைச் சாம்பலாக்கி
ஆவணம் படைப்போம் ஒன்றாகி!!
கோடிக்கைகள் ஒன்றிணைவோம்!
கோரிக்கைகள் வென்றிடுவோம்!!
உரிமைகளை மீட்டெடுக்க
ஓங்கி ஒலிக்கட்டும்
ஆசிரியர் அரசூழியரின்
ஆக்கப்பூர்வ ஒற்றுமை❗❗
அரசூழியர் இயக்கங்களுடனான
வேலைநிறுத்த அழைப்பிற்காக,
✒செல்வ.ரஞ்சித்குமார் (செ.கு.உ)
த.நா ஆ.ப ஆசிரியர் கூட்டணி,
பொன்னமராவதி.
வேலைநிறுத்த அழைப்பிற்காக,
✒செல்வ.ரஞ்சித்குமார் (செ.கு.உ)
த.நா ஆ.ப ஆசிரியர் கூட்டணி,
பொன்னமராவதி.
2/11/2016
நமது செய்தி பல்வேறு செய்தி தாள்களில்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
அவசர மாநிலச் செயற்குழு கூட்டம்.
லேபிள்கள்:
TNPTF NEWS
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்று சிறப்பு மிக்க மாநில மாநாடு தீர்மானங்களை நிறைவேற்ற கோரியும், ஜேக்டோவின் அமைச்சரவை மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு பின்னால் தற்போதை சூழலில் மாநில மாநாடு தீர்மானங்களை எவ்வாறு அமுல்படுத்திட வேண்டும் என்பது குறித்து முடிவாற்றவும் அவசர மாநிலச் செயற்குழு நாளை (12.2.2016) காலை 10.00 மணிக்கு திருச்சியில் கூடுவதாகவும், அதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்றிடவும் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பாலச்சந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையும் வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன் போராட்ட நிலையில் இருந்து ஒரு அடி கூட பின் வாங்காது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையும் வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன் போராட்ட நிலையில் இருந்து ஒரு அடி கூட பின் வாங்காது.
2/09/2016
அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.
சத்துணவு பணிகளை ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டவட்டம்.
சிவகங்கை: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 68 சங்கங்களை சார்ந்த 4 இலட்ச அரசு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் சத்துணவு ஊழியர்களும் முழுமையாக ஈடுபட உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தலைமையாசிரியர்கள் சத்தணவு வழங்கும் பொறுப்பை ஏற்று மாணவர்களுக்கு தரமான சத்துணவை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவிற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் மு.குமரேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து பல்வேறு கட்டங்களாக கடந்த நான்கரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களது நியாயத்தை உணர்ந்து அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களது போராட்டத்தை நசுக்கும் விதமாக சத்துணவு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடு வைக்க முயற்சிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் ஆசிரியர்கள் சத்துணவு பணிகளை ஏற்க மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகத்திற்கு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம். மேலும் அரசு ஊழியர் சங்கங்களின் தொடர் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு முன்னாள் நாளை மாலை 5.00 மணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு கான வேண்டும் இல்லையேல் ஆசிரியர்களும் அவர்களுடன் இணைந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தார்கள்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியம் வழங்கக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
TNPTF NEWS
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியம் வழங்கக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாடு பிரகடனம்
கோவில்பட்டி, பிப். 8 -
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ச.மோசஸ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ச.மயில் வர வேற்புரையாற்றினார்.கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப் பாண்டியன், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தி யப் பொருளாளர் தி.கண்ணன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ சிறப் புரையாற்றினார். மாநாட்டுப் பிரகட னத்தைப் பொதுச் செயலாளர் செ. பாலசந்தர் வெளியிட்டுப் பேசினார்.அப்போது அவர் வெளியிட்ட மாநாட்டுப் பிரகடனம் வருமாறு:ஆசிரியர் இயக்க முன்னோடிகள், நமது இயக்கத் தோழர்கள் 40 ஆண்டுகாலம் மிகக்கடுமையாகப் போராடி, கண்ணீரும் செந்நீரும் சிந்திதங்கள் இன்னுயிரை ஈந்து 01.06.1988 முதல் பெற்றுத் தந்த மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது, ஆறாவது ஊதியக் குழுவை அமல்படுத்தியதன் மூலமாக01.01.2006 முதல் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இடை நிலை ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகாலமாக குமுறலுடனும், கொந் தளிப்புடனும் உள்ளனர்.
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்தியஊதியம் பெறுவதற்காக முதன் முதலாக போராட்டக்களம் கண்டதுநமது பேரியக்கம். அதற்காக வேறுஎந்த இயக்கத்தையும்விட தனிச்சங்க நடவடிக்கையாக அதிகப் போராட்டங்களை நடத்திய நமதுஇயக்கம், கூட்டுப் போராட்டங்களி லும் முழுமையாக ஈடுபட்டு இன்று வரை சமரசமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இப்பெரும் அநீதி உடனடியாகக் களைப்பட வேண்டும். தமிழக அரசு உடனடியாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும்.ஆசிரியர்கள், அரசு ஊழியர் களின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பறித்து, அவர்களது எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி, அவர்களின் முதுமைக் காலத்தை இருண்டகாலமாக்கிவிட்ட தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திடக்கோரி வேறு எந்த ஆசிரியர் அமைப்புகளையும் விட மிகக்கடுமையான போராட்ட நடவடிக்கைகளிலும், அகில இந்தியவேலைநிறுத்தப் போராட்டங்களி லும் தொடர்ந்து ஈடுபட்டு வரும்நமது இயக்கம் இம்மாநில மாநாட்டின் மூலமாக தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட இரண்டு கோரிக்கை கள் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி ஜேக்டோ பேரமைப்பின் சார்பில் பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளாத நிலையில் இன்றைய காலச்சூழ் நிலைகளையும், தமிழ்நாட்டு ஆசிரியர்களின் உணர்வுகளையும், அவர்களின் கொந்தளிப்பான மனநிலையையும் கருத்தில் கொண்டு ஜேக் டோ பேரமைப்பு உடனடியாகக் கூடிதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்10.02.2016 முதல் நடைபெறுவதாக அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இணைந்த போராட்ட நடவடிக் கைகளை அறிவித்திட வேண்டும் எனவும், அவ்வாறு ஜேக்டோ பேரமைப்பு முடிவெடுப்பதில் கால தாமதம் ஏற்படும் சூழலில், தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திட மாநிலச் செயற்குழு தீர்மானித்துள்ளதை இம்மாநில மாநாடு அங்கீகரிக்கிறது. கூட்ட முடிவில் மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் நன்றி கூறினார்.
2/01/2016
1/27/2016
துயில் மறப்போம்... துயர் துடைப்போம்....
லேபிள்கள்:
SVG TNPTF
தோழமையே...
நமது பேரியக்கத்தின் 6வது மாநில மநாடு பணி ஒருபுறம், ஜேக்டோ மாவட்ட மறியல் மறுபுறம் என உனது ஓய்வறியா பணியினை நானறிவேன். இருந்தாலும் கூட இன்றைய நிலையில் மாநில மாநடு பணிக்கு சற்று ஓய்வு கொடு. எதிர்கால ஆசிரியர் சமுதாயத்தை இன்னல்களிலிருந்து மீட்டெடுக்க உனது வேண்டுகோளுக்கிணங்க கட்டமைக்கப்பட்ட ஜேக்டோ மாவட்ட மறியல் வருகிற ஜனவரி 30, 31, பிப்ரவரி 1 ஆகிய தினங்களில் மாவட்ட தலைநகரில் நடைபெற உள்ளதால் மறியலில் நமது அமைப்பிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக பங்கெடுக்க மாநில மையம் உத்தரவிட்டுள்ளது. மாநில மையத்தின் முடிவினை சிரமேற்கெண்டு செயலாற்றும் உனது ஆர்வத்தை நானறிவேன். இருந்தாலும் உன்னை உசுப்பேற்ற வேண்டிய கடமை எனக்குள்ளது. மற்ற இயக்கங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் களப்பணியாற்றி நமது இயக்கத்தின் 60,000த்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களை முழுமையாக பங்கேற்பதை உறுதி செய்யவும். அதுவரை துயில் மறப்பபோம் ஆசிரியர் தோழர்களின் துயர் துடைப்போம்.
தோழமையுடன்...
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மவாட்டம்

1/26/2016
1/22/2016
இனிய தோழமைகளே!!!
லேபிள்கள்:
TNPTF NEWS
இனிய தோழமைகளே!!!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, 6வது மாநில மாநாடு நடக்கும் கோவில்பட்டி நகர் முழுவதும் மாநாடு கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர்களின்
பொது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக கருத்து சித்திரத்துடன் கூடிய விளம்பர பதாகைகள் வைக்க மாநாடு விளம்பரக்குழு முடிவாற்றியுள்ளது. 100க்கும் மேற்பட்ட பதாகைகள் வைக்க உள்ளதால் அப்பதாகைகளில் இடம் பெற வேண்டிய வாசகங்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன். இரண்டு வரிக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
எ.கா:
1. வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை வழங்கிடு
2 ஆசிரியர்களின் எதிர்'கால வாழ்வை கேள்விக்குறியாக்கிய தன்பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தை கைவிடு
3. கல்வியை வணிகமயமாக்குவதை கைவிடு
4. காவிமயமான கல்விக்கொள்கையை கைவிடு
5. புற்றீசல் போல் பெருகும் சுயநிதி பள்ளிகளை கட்டுபடுத்தி அரசு பள்ளிகளை மீட்டெடு மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் போல் தங்கள் நடையில் எழுதி எனது மின்னஞ்சல் முகவரிக்கு (Email: tnptfmuthupandian@gmail.com (or)
tnptfsvga@gmail.com ) அனுப்புமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்...
ஆ.முத்துப்பாண்டியன்
சிவகங்கை மாவட்டச் செயலாளர்
மாநாடு விளம்பரக்குழு உறுப்பினர்

1/21/2016
6வது மாநில மாநாடு விளம்பரக்குழு கூட்டம்
லேபிள்கள்:
TNPTF NEWS
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாடு விளம்பரக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் திரு.மோசஸ் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்தது. மாநிலத் துணைப்பொதுச் செயலாளரும், விளம்பரக்குழு தலைவருமான திரு.மயில் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன்., தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு.செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.ரவீந்திரராஜன், திரு.சுரேஷ், கருங்குளம் வட்டாரத் தலைவர் திரு.லூயிஸ் பி.ராயன், விளாத்திக்குளம் வட்டாரப் பொருளாளர் திரு.இப்ராஹீம், ஸ்ரீவைகுண்டம் வட்டாரப் பொருளாளர் திரு.தாம்சன் ஆகியோர் பங்குபெற்று தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்குழு மீண்டும் வருகிற 3.2.2016 அன்று கோவில்பட்டியில் கூடுகிறது.
1/20/2016
18.1.2016 திருச்சியில் நடைபெற்ற மாநிலச் செயற்குழு முடிவுகள்
லேபிள்கள்:
TNPTF NEWS
1/19/2016
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு - திருச்சி (18.1.2016)
லேபிள்கள்:
SVG TNPTF
1. சென்சஸ் கணக்கெடுப்பு பணி ஆசிரியர்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து மாநில அமைப்பின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு.
2. மாநில மாநாட்டில் சமூக ஆர்வலர்களான எழுத்தாளர் சமஸ் மற்றும் நடிகை ரோகினி பங்கேற்க செய்ய முடிவு. மேலும் முத்துசுந்தரம் மற்றும் துரைபாண்டியன் ஆகியோரின் உரை வீச்சு. இவர்களுடன் திருவாளர்கள் கண்ணன்இ ராஜேந்திரன்இ சவுந்திரராஜன்இ சுகுமாறன்இ தமிழ்ச்செல்விஇ இசக்கியப்பன்இ உச்சிமாகாளிஇ வத்சலாஇ சுரேஷ்இ சுப்புராஜ்இ பாலசுப்பிரமணியன்இ கணேசன்இ அருணன் ஆகியோருடன் தொழிற்சங்க தோழர்கள்இ அண்டை மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்பு.
3. மாநாட்டு தீர்மானங்கள் ஏதுமிருப்பின் திரு.மயில் துணைப்பொதுச்செயலாளர் மற்றும் மாநாடு தீர்மானக்குழு தலைவர் என தலைப்பிட்டு தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் திரு.செல்வராஜ் முகவரிக்கு 25.1.2016க்குள் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
4. மாநாடு நிதி பங்கீட்டை உடனடியாக செலுத்த முடிவாற்றப்பட்டது

சென்சஸ் பணிக்கு எதிர்ப்பு - தினகரன் செய்தி வெளியீடு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
சென்சஸ் பணிக்கு எதிர்ப்பு - தினமலர் செய்தி வெளியீடு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
1/17/2016
1/11/2016
1/10/2016
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
By சிவகங்கை
First Published : 09 January 2016 04:28 AM IST
மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபக்கம், மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் படுத்தக் கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறுபக்கம், மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவர் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
1/08/2016
அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்.
லேபிள்கள்:
TNPTF NEWS
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
கடந்த சில காலங்களாகவே ஆசிரியர் சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. வகுப்பறைக்குள்ளே ஆசிரியர்கள் கொலை செய்யபடுவதிலிருந்து பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி வணிக பொருளாக்கப்பட்டு கல்வியின் மகத்துவத்தை சின்னபின்னமாக்கிய அரசுகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இலாப வேட்கை கொண்ட கார்ப்பரேட்டுகள் கல்வி நிறுவனங்களை தங்களின் மூலதனம் பெருகுவதை இலக்காக கொண்டதன் விளைவு, இந்த நாட்டின் எதிர்காலமாக திகழ வேண்டிய மாணவர் சமுதாயம் மாயை உலகின் பின்னால் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆசிரியர் சமுதாயம் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் பேராசியர் சிவராமன் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் சில சமூக விரோதிகளால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்ட ரீதியான தண்டனை பெற்றுத் தர வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஆசிரியர் சமுதாயம் அச்ச உணர்வின்றி பாதுகாப்பாக பணியாற்ற உரிய சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
3.1.2016 கோவில்பட்டி மாநிலச் செயற்குழு முடிவுகள்
லேபிள்கள்:
TNPTF NEWS
சிவகங்கை மாவட்டத்தில் 6வது மாநில மாநாடு சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள்.
லேபிள்கள்:
SVG TNPTF
தமிழ்நாடு ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டத்தில் மாநில மாநாடு சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறி வருகின்றன.
27.12.15 - மாவட்ட பொதுக்குழு கூட்டம் நிறைவு. மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மயில் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு.ஜோசப் ரோஸ் பங்கேற்பு. முதல் கட்ட மாநாடு நிதி அளிப்பு
3.1.2016 - தோவோட்டை வட்டாரம் நிறைவு. மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் பங்கேற்பு
3.1.2106 - சாக்கோட்டை வட்டாரம் நிறைவு. மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் பங்கேற்பு
3.1.2016 - சிவகங்கை வட்டாரம் நிறைவு. மாநிலத் துணைத் தலைவர் திருமதி.மல்லிகா மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு.குமரேசன் பங்கேற்பு
9.1.2016 - காளையார் கோயில் வட்டாரம். மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மயில் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு.ஜோசப் ரோஸ் பங்கேற்பு. இரண்டாம் கட்ட மாநாடு நிதி ரூ 1 லட்சம் அளிக்க முடிவு. உடன் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
10.1.2016 - கல்லல் வட்டாரம் - மாவட்டச்செயலாளர் திரு.முத்துப்பாண்டியன் பங்கேற்பு.
11.1.2016 - திருப்பத்தூர் வட்டாரம் - மாவட்டச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.புரட்சித்தம்பி பங்கேற்பு.
11.1.2016 - மானாமதுரை வட்டாரம். மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு.குமரேசன் பங்கேற்பு.
12.1.2016 - எஸ்.புதூர் வட்டாரம். மாவட்டச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன் பங்கேற்பு.
மற்ற வட்டாரங்கள் தங்கள் பொதுக்குழு தேதியினை முடிவு செய்து மாவட்டச் செயலாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற கேட்டுக்கொள்கிறேன்.
18.1.2016 - திருச்சியில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மூன்றாம் கட்ட மாநாடு நிதியாக ரூ 1லட்சம் கொடுக்க ஏற்பாடு.
மாநில மாநாட்டில் குடும்பத்துடன் பங்கெடுப்போம். உரிமைக்காக குரல் கொடுப்போம்.
தோழமையுடன்..
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்.

1/07/2016
மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்களுடன் மாநில நிர்வாகிகள் இன்று (7.1.16) சந்திப்பு
லேபிள்கள்:
TNPTF NEWS
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி ஊரக வளர்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.ச.மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் திரு.ச.மயில் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்பொழுது ஊராட்சி ஒன்றி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே துப்புரவு பணியாளர்கள் நியமிக்க உத்தரவு உள்ளதாகவும் மற்ற நகர, மாநகராட்சி பள்ளிகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை என்பதை எடுத்துரைத்தார்கள். எனவே அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த கேட்டுக்கொண்டார்கள். மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்கள் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்களுடன் TNPTF மாநில நிர்வாகிகள் இன்று (7.1.16) சந்திப்பு
லேபிள்கள்:
TNPTF NEWS
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி ஊரக வளர்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.ச.மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் திரு.ச.மயில் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
அப்பொழுது பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமிப்பதில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறுபட்ட நடைமுறைகளை பின்பற்றுவதால் தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நடைமுறைகளை பின்பற்ற சரியான வழிகாட்டுதலை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்கள் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
1/03/2016
TNPTFன் கோரிக்கை தினகரன் நாளிதழில் 2.1.2016
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
1/01/2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)