பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/30/2014

சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம் - 30.6.2014 நிலவரப்படி

சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அதன் விபரம் வட்டாரம் வாரியாக வட்டாரச் செயலளார்களின் தொலைபேசி எண்ணுடன்  வெளியிடப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்களின் தெலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். வட்டாரப் பொறுப்பாளர்கள் அளித்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.

I.தேவகோட்டை வட்டாரம்  ( திரு. தனுஷ்கோடி - 9443181443)

அறிவியல் பட்டதாரி பணியிடம் : 
1. காவுதுகுடி
2. பிடாரனேந்தல்
3. உருவாட்டி

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. காவுதுகுடி
2. பாரதி வேலாங்குளம்
3. ஆந்தகுடி
4. பிடாரனேந்தல்
5. சிறுநல்லூர்
6. செங்கர் கோவில்

II.சிங்கம்புணரி வட்டாரம் (திரு.நா.பாலகிருஷ்ணன் -9865352562)

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. எருமைப்பட்டி
2. சிறுமருதூர்

அறிவியல் பட்டதாரி பணியிடம் : 
1. கல்லமபட்டி
2. எஸ்.செவல்பட்டி
3. சிறுமருதூர்

III.இளையான்குடி வட்டாரம் (திரு.ஜான் பீட்டர் தோமை - 9486671498)

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. துகவூர்
2. வடக்கு அண்டக்குடி
3. புதூர் வலசை

அறிவியல் பட்டதாரி பணியிடம் : 
1. வடக்கு அண்டக்குடி
2. எஸ்.காரைக்குடி
3. மேலாயூர்
4. மேலதுரையூர்

IV.கல்லல் வட்டாரம் ( திரு.சேவியர் சத்தியநாதன் - 9787491475)

அறிவியல் பட்டதாரி பணியிடம் : 
1. பாடத்தான்பட்டி
2. கே.வலையபட்டி

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. பிளார்

V.காளையார்கோயில் வட்டாரம் ( திரு.ஜான் - 9442049820)

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. முடிக்கரை

அறிவியல் பட்டதாரி பணியிடம் :
1. சேம்பார்
2. பொட்டக வயல்
3. பெரிய ஓலைக்குடிப்பட்டி
4. முடிக்கரை

VI.கண்ணங்குடி வட்டாரம் ( திரு.மு.க. புரட்சித்தம்பி - 9486694280)

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. மங்களம்
2. கொடிக்குளம்

VII.திருப்பத்தூர் வட்டாரம் (திரு.சிஙகராயர் - 9443871304)

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. மார்கண்டேயன்பட்டி
2. சுண்டக்காடு

 அறிவியல் பட்டதாரி பணியிடம் : 
1. மார்கண்டேயன்பட்டி
2. மிதிலைப்பட்டி
3. மேலையான்பட்டி
4. கணக்கன்பட்டி

VIII.எஸ் புதூர் வட்டாரம் ( திரு. சுதர்ஸன் - 9159461165)

அறிவியல் பட்டதாரி பணியிடம் : 
1. கே.புதுப்பட்டி

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. கே.புதுப்பட்டி
2. மேல வண்ணாரிருப்பு
3. வாராப்பூர்
4. கிளவயல்
5. வெள்ளியங்குடிப்பட்டி
6. தர்மபட்டி
7. உரத்துப்பட்டி

IX.மானாமதுரை வட்டாரம் ( திரு.தங்கமாரியப்பன் - 9787315793)

ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்:
1. குளையனூர்
2. சன்னதி புதுக்குளம்
3. விளத்தூர்

தகவல் பகிர்வு:
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்
சிவகங்கை மாவட்டம்.

சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம் விரைவில் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பணியடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அதன் விபரம் வட்டாரம் வாரியாக வட்டாரச் செயலளார்களின் தொலைபேசி எண்ணுடன் நம் வலைதளம் முகவரியான  www.mptnptf.blogspot.com என்ற தளத்திலும், நமது முக நூல் பக்கமான www.facebook.com/tnptfmuthupandian  முகவரியிலும் விரைவில் வெளியிடப்படும். அதற்கான கேட்பு விபரம் அனைத்து வட்டாரச் செயலாளர்களிடமும் கோரப்பட்டுள்ளது.

ஜூலை -2014 நாட்காட்டி


6/28/2014

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம்

சிவகங்கை மாவட்டத்தில் 26.6.2014 நிலவரப்படி கீழ்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களின் மேல் விபரங்களுக்கு அடைப்புகளுக்கு உள்ள எமது வட்டாரப் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
(கீழ்கண்ட தகவல்கள் அனைத்தும் TNPTF வட்டாரச் செயலாளர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே சில இடங்கள் மாறுதல்களுக்கு உடபட்டது. )

சிவகங்கை ( Kumaresan - 986553847)
1. திருமலை
2. கருத்தன்பட்டி
3. வீரவலசை
4. சிங்கிணிப்பட்டி
5. பெரிய கோட்டைப்பட்டி

சிங்கம்புணரி ( Balakrishnan - 9865352562)
1. சிங்கம்புணரி, பள்ளி எண் -5
2. ஐநூத்திப்பட்டி
3. கொள்ளுகுடிப்பட்டி

இளையான்குடி (9486671498)
1. பெரும்பாலை
2. வடக்கு அண்டக்குடி
3. நன்னியாப்பூர்
4. சுண்டனேந்தல்
5. முத்தூர்
6. கீழ ஆயக்குடி
7. குறிச்சி
8. பஞ்சனூர்

தேவகோட்டை ( Danuskodi - 9443181443)
1. வாபு நல்லூர்
2. வெற்றி ஆலங்குளம்
3 அடச்சி வயல்

கண்ணங்குடி (Purachithambi - 9486694280)
1. திருப்பக்கோட்டை
2. அண்டக்குடி
3. கொடிக்குளம்
4. தேவந்திர தாவூர்
5. கடம்பக்குடி

கல்லல் (Xevier - 9787491475)
1.கே.வலையபட்டி
2. கட்டுக்கன்பட்டி
3. வேப்பங்குளம்

திருப்பத்தூர் ( Singarayar - 9443871304)
1. கீரணிப்பட்டி
2. சுண்டக்காடு
3. கொண்ணத்தான்பட்டி
4. மேலையான்பட்டி
5. கணக்கன்பட்டி
6.கணக்கன்பட்டி
7.வையாபுரி
8. நாகப்பன்பட்டி
9. சேவினிப்பட்டி
10. சேவினிப்பட்டி
11. கிளாமடம்
12. எஸ்.வேலங்குடி
13. மகிபாலன்பட்டி
14. கருமிச்சான்பட்டி
15. அம்மாபட்டி
16. பூலாங்குறிச்சி
17. திருவிடையார்பட்டி
18. இளையாத்தன்குடி

எஸ்.புதூர் ( Sudarshan - 9195461165)
1. சேர்வைகாரன்பட்டி
2. கட்டையன்பட்டி
3. திருமலைக்குடி
4. கருங்குறிசிசப்பட்டி
5. கிளவயல்
6. குறும்பலு10ர்
7. மேத்தாம்பட்டி

சாக்கோட்டை ( James - 9442756749)
1. நெம்மேணி

தகவல் பகிர்வு:
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்
சிவகங்கை மாவட்டம்.

6/27/2014

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்

படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கல்விச் செயல்பாடுகள், படைப்பாற்றல் கல்வி, கல்வி இணைச் செயல்பாடுகள், எளிய செயல்வழிக் கற்றல், எளிய படைப்பாற்றல் கல்வி உள்ளிட்ட கல்வி கற்பிக்கும முறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் ஆய்வு செய்கின்றனர். இதில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்னும் அடிப்படையில், ஏ,பி,சி,டி, என்ற கிரேடுகளை கல்வித்துறை மூலம், அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில், பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து, இக்கல்வி முறைகளை ஆய்வு செய்வதை காட்டிலும், வகுப்பு வாரியாகவும், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரிடத்தும், படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி முறைகள் குறித்து ஆய்வு நடத்தி, கிரேடு வழங்க திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் கற்பனைத்திறன்களை வெளிப்படுத்தவும், பாடங்கள் எளிதில் மனதில் பதிய வேண்டிய செயல்வழி மற்றும் படைப்பாற்றல் கல்வி வகுப்புகள் முறையை பின்பற்றப்படுகிறது. இம்முறை முழுமையாக பயனுள்ளதாக இருக்க, ஆசிரியர்களும் இக்கல்வி முறைகள் குறித்து அறிந்திருக்கவும், பின்பற்றவும் வேண்டும். ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.<

மாவட்ட மாறுதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் செயல்முறைகள்



6/21/2014

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


பள்ளிகளில் கலவை சாதம் திட்டம் - அரசு முடிவு


பள்ளி திறந்த பின் பணி மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் அவதி

பள்ளி திறந்து ஒரு மாதம் முடிய உள்ள நிலையில் தற்போது நடத்தப்படும் பணியிட மாறுதல் கலந்தாய்வால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் பயிற்றுனர்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று சென்னையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மே இறுதிக்குள் நடத்தினால், புதிய பணியிடங்களில் சேர்வதற்கு ஏற்ப தேவையான ஏற்பாடுகளை ஆசிரியர்களால் செய்ய முடியும். ஆனால், பெரும்பாலும் ஜூன், ஜூலை மாதங்களில் தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, லோக்சபா தேர்தல் காரணமாக தாமதமாக இப்போது கலந்தாய்வு நடத்துவதாக கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
 எனினும், தற்போது நடந்து வரும் கலந்தாய்வால் பல ஆசிரியர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று சென்னையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 4,000 ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றி வருகிறோம். எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, கல்வி திட்ட பணிகளை மேற்பார்வை செய்வது எங்களின் பணி. எங்களுக்கு நாளை (இன்று) பணி மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
பள்ளி திறந்து ஒரு மாதம் முடியப்போகிறது. குழந்தைகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தி விட்டோம். இப்போது திடீரென எங்களை பணியிட மாறுதல் செய்தால் எங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் எப்படி சேர்க்க முடியும்? குடும்பத்தை மாற்றுவது உள்ளிட்ட பல பணிகளை செய்ய வேண்டி உள்ளன.
அனுமதிக்க வேண்டும்
ஒரு வட்டாரத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்ய முடியாது என்பதால், தற்போது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிற ஆசிரியர் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்வதை அனுமதிக்கும் கல்வித்துறை, எங்களையும் அனுமதிக்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

3 மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்-பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா.

தமிழகம் முழுவதும் உள்ள 57 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவர்கள், 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்கான www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டத்தைச்செயல்படுத்துவதற்காக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இந்த மையத்தையும், இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சியையும் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நிருபர்களிடம் கே.சி. வீரமணி, சபிதா ஆகியோர் கூறியது: சர்வர் பராமரிப்பு, தகவல் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை புதிய மாற்றங்களுடன் நிரந்தரமாக பராமரிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கு சொந்தமாக உயர்தர சர்வர் வாங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் விதமாக மாணவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் தொகுக்கப்பட உள்ளது. ஏற்கெனவே 2012-13 ஆம் கல்வியாண்டில் இருந்து பராமரிக்கப்படும் புள்ளி விவரங்கள் நடப்பு கல்வியாண்டுக்கு மாற்றம் செய்யும் விதமாக முதல், இரண்டாம் வகுப்பு நீங்கலாக பிற மாணவர்களின் புள்ளி விவரங்கள் தானாக "அப்டேட்' செய்யப்பட்டுவிடும் என்றார்.<

தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் குறித்தும் தகவல் அறிய இணையதளம்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியுள்ளது. www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சுமார் 57 ஆயிரம் பள்ளிகள், ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல்கள் இடம் பெற உள்ளன. இந்த இணையதளத்தை பராமரிப்பதற்காக, கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்ட 45 பேர் அடங்கிய குழுவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பயிற்சி அளிக்க உள்ளது. எழும்பூரில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்ககத்தில் பயிற்சி முகாமை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் பாடக் குறிப்புகள், அரசு வழங்கும் உதவித் திட்டங்கள் குறித்த தகவல்கள் என பள்ளிக் கல்வித்துறை சார்பான அனைத்து தகவல்களும் இதில் தொகுக்கப்பட உள்ளன. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்கான மையத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி. உடன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபிதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர்.


சமச்சீர் பாடத்திட்டத்தை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் ஆய்வில் பரிந்துரை

சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமச்சீர் பாடத்திட்டத்தின் தாக்கம் தொடர்பாக டான் பாஸ்கோ கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் மற்றும் டேலன்ட்ஈஸ் ஆகிய அமைப்புகள் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 106 மாணவர்கள், 106 ஆசிரியர்கள், 109 பெற்றோர், 23 பள்ளி நிர்வாகிகள் என மொத்தம் 344 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை டான் பாஸ்கோ பள்ளிகளின் தாளாளர் பாதிரியார் ஜான் அலெக்சாண்டர் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். ஆய்வு முடிவுகளின் விவரம்: மெட்ரிக் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என இந்தப் பாடத்திட்டங்களோடு சமச்சீர் பாடத்திட்டங்களோடு ஒப்பிட்டபோது பெரும்பாலானோர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்தான் சிறந்தது என கூறியுள்ளனர். சமச்சீர் பாடத்திட்டத்தால் மாணவர்களின் சுமை குறைந்துள்ளதாக பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் சராசரியாக 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இந்தப் பாடத்திட்டம் மாணவர்களின் எதிர்காலத்துக்கோ, போட்டித் தேர்வுகளுக்கோ தயார் செய்வதற்கு உதவிகரமாக இருக்காது என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம், மனப்பாடம் செய்யும் முறைக்குப் பதிலாக சிந்திக்கும் முறை போன்ற நல்ல அம்சங்கள் இருக்கின்றன. நல்ல நோக்கமாக இருந்தாலும் மிக மோசமான முறையில் அது செயல்படுத்தப்படுவதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமச்சீர் பாடங்களில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கம்ப்யூட்டர் அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் பாடப்புத்தகங்கள் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு பார்ப்பதற்கும், படிப்பதற்கும் நன்றாக உள்ளன. ஆனால், அந்தப் புத்தகங்களில் ஏராளமான இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் உள்ளன. இந்த பாடத்திட்டம் அவ்வப்போது ஆய்வுசெய்யப்பட்டு முழுமையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அதேபோல், பாடத்திட்டத்தை நவீனப்படுத்தும்போது பள்ளிகள், ஆசிரியர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சஞ்சய் பின்டோ, டேலன்ட் ஈஸ் அமைப்பின் தலைமை செயல் இயக்குநர் லியோ பெர்னான்டஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அதிரடி மாற்றம்.



பிரசாரம் இல்லை... கவர்ச்சி அறிவிப்பு இல்லை... அமைதியாக நடந்தது ஒரு தேர்தல்

ஆரவாரம் இல்லை...கவர்ச்சி அறிவிப்புகளும் இல்லை. பொள்ளாச்சியில் அமைதியாக நடந்து முடிந்தது அந்த தேர்தல். தேர்தல் என்றாலே மக்களை கவர அரசியல்வாதிகள் பல கவர்ச்சியான அறிவிப்புகளை கொண்ட தேர்தல் அறிக்கையினை வெளியிடுவதும், பல்வேறு சலுகைகளை வாக்குறுதிகளாக வீசியும், மக்களிடம் ஓட்டு சேகரிப்பது வழக்கம். ஆனால் இதுபோன்று எவ்வித நடைமுறைகளும் இல்லாமல், ஒரு தேர்தல் பொள்ளாச்சி அருகே சப்தமின்றி நடந்துள்ளது. பொள்ளாச்சி தாளக்கரை நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஓட்டளிப்பதின் அவசியத்தை விளக்கும் வகையிலும் மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் 11 பேர் 'போட்டியிட்டனர்'. அவர்களுக்காக சின்னங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர்களான, மற்ற மாணவர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்டனர். 'வாக்குறுதி அளிக்கலாம்; ஓட்டு அளித்தால் சலுகைகள் மற்றும் மிட்டாய் வாங்கித்தருவோம் என்றெல்லாம் ஆசை காட்டினால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ப்படுவார்' என அறிவிக்கப்பட்டது. மாணவர்களிடம் ஓட்டுகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் விளக்கினர். 'வெற்றி பெற்றால் என்ன செய்வோம்' என்று மற்ற மாணவர்களிடம் வலியுறுத்தினர். இறுதியாக, நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு ஓட்டுச்சீட்டாக பள்ளி பெயர் மற்றும் பள்ளி மாணவர் பதிவெண் அச்சிடப்பட்ட சீட்டு வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலராக ஆசிரியர் நாகராஜ் செயல்பட்டார். ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை எண் 1,2,3 என அனைத்திலும் மாணவர்களே அமர வைக்கப்பட்டிருந்தனர். ஓட்டுப்பதிவு மையத்தின் சுவரில், வேட்பாளர் பெயர், வகுப்பு மற்றும் சின்னம் ஒட்டப்பட்டிருந்தது. எந்த வித அசம்பாவிதமோ, சப்தமோ, சலசலப்போ இல்லாமல், மாணவர்கள் அமைதியாக வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். 'வாக்காளரின்' விரலில் மை தடவப்பட்டது. ஓட்டளிப்பது, ஓட்டுச்சாவடி அமைப்பு போன்றவை உண்மையான தேர்தல் நடப்பது போன்றே அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்தல் குறித்து தலைமையாசிரியர் சந்திரா கூறியதாவது: மாணவர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர் தேர்தல் நடத்த திட்டமிட்டோம். முறையான தேர்தலாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு செயல்படுத்தினோம். 3ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 125 பேர் ஓட்டளித்தனர். 85 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இரண்டு நாட்களுக்கு பின் முடிவுகள் அறிவிக்கப்படும். வெற்றி விழா கூட்டமும் நடத்தப்படும். வெற்றி பெற்றவர் யார் என்பதை 'சஸ்பென்ஸ்' ஆக வைக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு நாட்கள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.

இதற்கானஉத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளதாக  துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பணம் கையாடல் உள்ளிட்டப்புகார்களின் காரணமாக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

6/20/2014

TNPTF அனைவரையும் நட்புடன் அழைக்கிறது.



பிளஸ் 1 புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு - பெற்றோர் கடை கடையாக அலைகின்றனர்!

மதுரை: பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.
ஜூன் 16 முதல் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. வகுப்புகள் துவங்கிய நாளிலேயே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. மதுரை மாவட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு காரணம் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, ஒவ்வொரு அரசு பள்ளியிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டு அதில் இருந்து 10 சதவீதம் அதிகம் வைத்து, பிளஸ் 1 புத்தகங்களின் தேவையை முதற்கட்டமாக அதிகாரிகளுக்கு தெரிவிப்பர். இதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், இந்தாண்டு பிளஸ் 1ல் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருந்ததால் 30 சதவீதம் மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்களே வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கான புத்தகங்கள் தேவை குறித்து மீண்டும் ஒரு பட்டியலை கல்வித்துறைக்கு பள்ளிகள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் நிலை இப்படியென்றால், மெட்ரிக் பள்ளிகள் குறித்து கேட்கவே வேண்டாம். பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 4ல் துவங்கிவிட்டன.
ஆனால் பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைத்தபாடில்லை என பெற்றோர் புலம்புகின்றனர். இவற்றில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மதுரை புதுமண்டபத்தில் உள்ள புத்தக கடைகளில் பெற்றோர் ஏராளமானோர் நேற்று பிளஸ் 1 புத்தகங்கள் கேட்டு கடை கடையாக ஏறி இறங்கியும், மொத்த புத்தகங்கள் (செட்) எங்கும் கிடைக்கவில்லை.
மதுரையை சேர்ந்த சேனாதிராஜன் கூறியதாவது: எனது மகள் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 சேர்த்துள்ளார். ஜூன் 4ல் பள்ளி துவங்கியது. பயோ கணிதம் பாடப் புத்தகங்கள் இதுவரை கிடைத்தபாடில்லை. ஒருசில கடைகளில் கிடைத்தாலும், புத்தகங்களுக்கான அனைத்து நோட்ஸ்களும் வாங்க வற்புறுத்துகின்றனர். புத்தக செட் விலை ரூ.240க்குள். ஆனால், நோட்ஸ்கள் விலை ரூ.ஆயிரத்தை தாண்டி விடுகிறது. எளிதில் புத்தகங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும், என்றார்.
புத்தக கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "செட் புத்தகங்கள் அதிகம் வருவதில்லை. சில புத்தகங்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். அடுத்தாண்டு பாடத் திட்டங்கள் மாறும் என கூறுவதால் யாரும் புத்தகங்களை மொத்தமாக வாங்கி வைக்க முன்வருவதில்லை" என்றார்.
மதுரையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கல்வியல் பணிகள் கழகம் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டன. மேலும் தேவைப்படும் புத்தகங்களையும் வழங்க தயாராக உள்ளோம். மெட்ரிக் பள்ளிகளுக்கும் தொடர்ந்து புத்தகங்கள் அனுப்பி கொண்டு தான் உள்ளோம்.
பல பள்ளிகள் உரிய டிடிக்களை வழங்காததால்,அப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி சில நாட்கள் தான் ஆகின்றன. 48 பாடப்பிரிவுகளில் புத்தகங்கள் வழங்க வேண்டியுள்ளன. விரைவில், மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம்

தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத், சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கொண்டை கடலை புலாவ், கறிவேப்பிலை சாதம், மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறி சாதம், தக்காளி சாதம் என வழங்கப்படுகிறது.
இதுதவிர ஆம்லேட், முட்டை பொடிமாஸ், முட்டை வறுவல், அவித்த முட்டை என 4 வகையாக முட்டை 5 நாட்கள் வழங்கப்படுகிறது. சென்னையிலிருந்து 20 சிறந்த சமையல் கலை வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டு 32 மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள சத்துணவு பணியாளர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2013&2014ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.1588,65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலவை சாதம் திட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட மாறுதல் விண்ணப்பம்





மழை நீர் கேரிப்பு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்


HIV பாதித்த குழந்தைகளை சமமாக நடத்த தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்


Centre may hike Income Tax exemption limit from Rs 2 lakh to Rs 5 lakh

According to CNN -IBN  Report, the Central Government is likely to increase the Income Tax Slab Limit from 2 Lakh to 5 Lakh and the CBTD is likely to submit a proposal by June 20. Here is the report of CNN IBN ..
“In what could probably become one of the landmark reforms by the Narendra Modi government, sources tell CNN-IBN that the Centre is likely to increase the Income Tax slab limit for exemption from Rs 2 lakh to Rs 5 lakh.
The Finance Ministry has also sought a report on the same from the I-T department, say sources. The CBTD is likely to submit a proposal by June 20, added sources.
Sources further said that the government is also considering raising the tax exemption limit on home loans and health insurance premium.
The health insurance premium is likely to be raised by Rs 5,000, as per sources”
Source : CNN-IBN

Raise 80C deductions to Rs 2.5 lakh, says CII.

Moneycontrol Bureau: The Confederation of Indian Industries, in its pre-Budget wish list to the Finance Ministry, has suggested that the consolidated deduction under Section 80C be raised to Rs 2.5 lakh from the current Rs 1 lakh. Currently, a total Rs 1 lakh in all long term and short term saving instruments including Provident Fund, Pension Fund is exempt from tax. The CII wish list has also recommended that a separate section for tuition fees be provided over the limit prescribed under Section 80C since tuition fee does not fall into the category of investments. At present Section 80C covers expenditure on tuition fees paid for the education of children, but within the limit of Section 80C. Among other suggestions, the industry body has said that deduction on interest income earned on savings bank accounts, should be raised to Rs 25,000 from Rs 10,000 at present Also, CII has recommended that deduction of interest on housing loans upto Rs 1.5 lakh under Section 24 for self-occupied property should be increased to Rs 5 lakh. Source:Moneycontrol

பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன? பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலர்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.சலசலப்பு:சமீபத்தில் நடந்து முடிந்த இரு பொதுத் தேர்வுகளிலும், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. வழக்கமாக, தேர்ச்சி சதவீதம், 90க்குள் தான் இருக்கும். இந்த முறை, 90ஐ கடந்ததுடன், அதிகமான பாடங்களில், 'சென்டம் எடுத்தவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்தது.இதனால், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, தேர்வு முடிவு, பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள், டாக்டர்கள் உட்பட பலர், தேர்வு முடிவை விமர்சித்துஉள்ளனர். மாணவர்கள், அதிக மதிப்பெண் குவித்ததால், பொறியியல், 'கட்-ஆப்' மதிப்பெண் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 11 மாணவர்கள் மட்டுமே, 'கட்-ஆப்' மதிப்பெண், 200க்கு 200 எடுத்தனர். கடும் போட்டி:ஆனால், இந்த ஆண்டு, 271 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண் பெற்றுவிட்டனர். மேலும், 'ரேண்டம்' எண் பயன்பாடும், 24ல் இருந்து, 124 ஆக அதிகரித்துள்ளது.இதேபோல், கலை, அறிவியல் கல்லுாரிகளில், முக்கிய பாடப் பிரிவுகளில் சேர, கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள், முதல் மற்றும் இரண்டாவது, 'குரூப்' பெறுவதிலும், கடும் போட்டி நிலவுகிறது.பொதுத் தேர்வு தேர்ச்சி அதிகரிப்பும், அதிக மதிப்பெண் குவிப்பும், பல நிலைகளில், தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, நேற்று கூறியதாவது: தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. ஐந்தாம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்பது, தேசிய சராசரியாக உள்ளது. தமிழகத்தில், 1:26 என்ற நிலை உள்ளது. 6, 7, 8ம் வகுப்பு களில், 1:35க்கு பதிலாக, 1:27 என்ற நிலையும், 9 முதல், பிளஸ் 2 வரை, 1:40 என்பதற்கு பதில், 1:28 என்ற நிலையும், தமிழகத்தில் உள்ளது. கூடுதல் கவனம்:ஆசிரியர் - மாணவர் சதவீதம் குறைவு காரணமாக, மாணவர்கள் மீது, ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கின்றனர். மேலும், அரசு பள்ளிகளில், காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பினோம்.கடந்த, 2012ல், பல்வேறு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களாக இருந்த, 10 ஆயிரம் பேரை, பற்றாக்குறை மற்றும் காலி பணியிடங்களுக்கு மாற்றினோம். இது, கடந்த பொதுத் தேர்வில், நல்ல பலனைத் தந்துள்ளது.இவ்வாறு, சபிதா தெரிவித்தார்.

TNPTF மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

நடுநிலைப்பள்ளிகளில் தேவைப்பட்டியலில் உள்ள பட்டதாரி காலிப்பணியிடங்களை பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற திங்கள்கிழமை மாவட்ட அளவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. தஞ்சாவூரில் கடந்த 3 வருடங்களாக கூடுதலாக பட்டதாரி ஆசிரியர் தேவைப்படும் நடுநிலைப்பள்ளிகளில் Need post create செய்யவில்லை. இதனால் பதவி உயர்வில் உள்ள இ.நி.ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்பொழுது 97 பட்டதாரி பணியிடங்களை (need post) மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் இயக்குனரிடம் கோரியுள்ளது. அந்த பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலமாக நிரப்ப உள்ளனர் (need post fill only new appointment ) 3 ஆண்டுகளாக need post பெறாதது மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் தவறு, 3 ஆண்டுகளாக need post கோரியும் வழங்காதது அரசின் தவறு, அப்படியிருக்க எந்த வகையில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படலாம்..? need post-ஐ புதிய நியமனத்தில் தான் நிரப்ப வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவில் இல்லை. எனவே குறைந்தது need post-ல் உள்ள 50% காலிப்பணியிடங்களை பதவி உயர்வில் உள்ள இ.நி.ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வரும் திங்கள் கிழமை(23.06.14) மாபெரும் உண்ணாவிரதம் TNPTF-ஆல் தஞ்சாவூரில் நடக்கவுள்ளது . இந்த பாதிப்பு பரவலாக பல மாவட்டங்களில் உள்ளது. எனவே இந்த கோரிக்கையை கூடிய விரைவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பிடம் எடுத்துக் கூறி மாநில அளவில் போராட்டம் நடத்த வலியுறுத்த உள்ளதாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் உயர்திரு .குருசாமி அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.

6/19/2014

மாவட்ட மறுதல் -ஓர் விளக்கம்

1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்
2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
3. ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்
4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
6. தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திலேயே மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
7. ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணபங்கள் சமர்பித்தால் தங்கள் பெயர் தானாகவே நிராகரிக்கப்படும்.
8. காலிப் பணியிடங்கள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும்
9. விண்ணபத்தின் விபரங்கள் அந்தந்த வட்டாரங்களிலே ஆன் லைனில் ஏற்றப்படும்
11. இடைநிலையாசிரிர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாவட்ட மாறுதல் ஆன் லைனில் மட்டுமே நடக்கும்
11. மேலும் விபரங்களுக்கு தாங்கள் சார்ந்த அமைப்பின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

 வெளியீடு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டம் (கிளை)

வாழ்த்துகிறோம்!!!

சிங்கம்புணரி ஒன்றியத்தில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலராக இன்று பணியேற்றுள்ள திரு.குமார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.


மாவட்ட மாறுதலுக்காக பிரிக்கப்பட்ட மண்டலங்கள் பட்டியல்


மாவட்ட மாறுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்




பள்ளிகளுக்கு நேரடியாக இணைய வழி பண பரிமாற்றம்: இடைநிலைக்கல்வி திட்டத்தில் புது ஏற்பாடு

சேலம்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில் நேரடியாக பள்ளிகளுக்கு நிதியினை "ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர்" செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பயிற்சி மற்றும் பள்ளி பராமரிப்புக்கு மானிய நிதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீட்டை பொருத்தவரை, மத்திய அரசு மாநிலத்துக்கு ஒதுக்கிய பின், மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். பின் இவை பள்ளிகளுக்கு காசோலை மூலம் வழங்கப்படுவதும், செலவழித்தமைக்கான பில், ரசீதுகளை கொண்டு ஆடிட் செய்வதும் என்பது நடைமுறையாக உள்ளது.
தற்போது, ஒதுக்கீடு செய்யும் நிதி எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், எங்கு தேங்கியுள்ளது என, கண்காணிக்கும் வகையில், அனைத்து பள்ளிகளும் இன்டர்நெட் வங்கி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதற்காக, பள்ளியின் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கியின் விபரம், ஐ.எஃப்.எஸ்.சி. கோடு எண், கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
இதன் மூலம், பள்ளிக்கு வழங்க வேண்டிய கட்டிட நிதி, மானியம் உள்ளிட்ட அனைத்து நிதி ஒதுக்கீடும் "ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர்" முறையில் நேரடியாக பள்ளியின் வங்கிக்கணக்குக்கு வரவு வைக்கப்பட உள்ளது. அதில் எந்த அளவுக்கு செலவழித்துள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், திட்ட அலுவலர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் மாவட்ட மாறுதல்: கலந்தாய்வு தேதி மாற்றம்

சென்னை: தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு: தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இம்மாதம் 16ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலன் கருதி, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இணைய வழி மூலம் நடக்க உள்ளதால் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
* இடை நிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 28க்கு பதிலாக ஜூன் 30, ஜூலை 1 என இரண்டு நாட்கள் நடக்கும்.
* பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஜூன் 21க்கு பதிலாக ஜூலை 2ம் தேதி நடக்கும்.
இந்த இரு கலந்தாய்வுகளும் ஆசிரியர்களின் நேரம், பயண நேரத்தை குறைக்கும் வகையில், தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் இருந்தே, தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்வு செய்யும் வகையில் இணையதளம் மூலம் நடக்கும்.
 மற்ற கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டபடி வழக்கம்போல் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை

மதுரை: தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மாறுதல் கவுன்சிலிங் ஜூன் 26ல் நடக்கிறது.
இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் சர்பிளஸ் ஆக கணக்கிட்டு பணி நிரவல் அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக சர்பிளஸ் ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் கவுன்சிலிங் முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது. மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 26 சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது" என்றார்.

தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - மாவட்டம் விட்டு மாறுதல் - இணையதளவழி (ONLINE) கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கி உத்தரவு


5 வயது முடியாதவர்களுக்கு தவிர்ப்பாணை வழங்க இயலாது. RTI பதில்



சனிக்கிழமை பள்ளி முழு நேரம் செயல்பட தேவையில்லை. RTI பதில்

 


6/17/2014

ஆசிரியர் கலந்தாய்வில் குளறுபடி கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

விருதுநகர்: எந்த குளறுபடியும் இன்றி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பயிற்றுனர் பணி நிரவல், ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கவுன்சிலிங், நேற்று துவங்கி ஜூன் 29 வரை நடக்கிறது. இதற்காக ஆசிரியர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் ஒப்புதலோடு, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் செய்தனர். அதற்கான ஒப்புகை சீட்டு அவர்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இக்கவுன்சிலிங்கை எந்த குளறுபடியும் இன்றி நடத்தி முடிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், "கவுன்சிலிங்கிற்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்தபோதே அவர்களது பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, தற்போதைய பணியிடம், மாறுதல் கேட்கும் மாவட்டம், என்ன காரணம் என்பன போன்ற பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் டைப் செய்து, அவர்களிடம் பிரின்ட் அவுட் தரப்பட்டது. அதில் பிழை இருந்தால் திருத்தி, சரியான விபரங்களுடன், அவர்களது விண்ணப்பம் ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சிபாரிசின் அடிப்படையில் வேண்டியவர்களுக்கு மட்டும் கேட்ட இடம் ஒதுக்கப்பட்டதாக, இதில் புகார் எழ வாய்ப்பில்லை. எனினும், குளறுபடியின்றி கவுன்சிலிங் நடத்தி, மாறுதல் உத்தரவு வழங்க, பள்ளிகல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

பாடப்பிரிவை ஏற்க மறுக்கும் டி.ஆர்.பி.: படித்த மாணவிகள் பாதிப்பு.

திண்டுக்கல் அரசு கல்லூரி பாடப்பிரிவை டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஏற்காததால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை கட்டுப்பாட்டில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவில் ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர்.இங்கு படித்த 100 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளனர். தேர்வில தேர்ச்சி பெற்றபோதும், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவு, பி.எஸ்.சி. விலங்கியல் பாடத்திற்கு சமமானதற்கான அரசாணை இல்லை என்று கூறி, அவர்களுக்கு ஆசிரியர் பணி தர டி.ஆர்.பி. மறுத்துவிட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "பி.எஸ்.சி. விலங்கியல் பாடப்பிரிவும், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவும் சமமான படிப்பு என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால் படித்தோம். ஆனால், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவை டி.ஆர்.பி. ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து கல்லூரி மற்றும் அன்னை தெரசா பல்கலையில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை" என்றனர்.கல்லூரி முதல்வர் பத்மலதா கூறுகையில், "அரசாணை வெளியிடுவது தொடர்பாக அரசுக்கும், பல்கலைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்" என்றார்.

காலிப்பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்க கல்வித்துறை ஆலோசணை


சிவகங்கை மாவட்டத்தில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் நாளை பதவியேற்பார்கள் என எதிர்பார்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் மாறுதலாகி வந்துள்ள உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் நாளை தங்களின் புதிய பணியிடத்தில் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சிங்கம்புணரிக்கு திரு.குமார், இளையான்குடிக்கு திரு.ஜஸ்டின், காளையார் கோவிலுக்கு திரு.பூசைதுரை, மானாமதுரைக்கு திரு.பாஸ்கல் பாய்லோன், எஸ்.புதூருக்கு திரு.இராதாகிருஷ்ணன் ஆகியோர் உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவியேற்பார்கள் என தெரிகிறது.
மேலும் சில வட்டாரங்களில் பணியாற்றும் உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்க்கல்வி அலுவலர்கள் மீண்டும் பள்ளிகளுக்கோ அல்லது மாற்று ஒன்றியங்களுக்கோ ஓரிரு நாட்களில் மாற்றப்படலாம் என தொடக்கக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சில அலுவலர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்

பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் 344 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த நேரடி கலந்தாய்வில் 156 பேர் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான பணி மாறுதல் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டன. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

2014 - வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியல்


2014-15ம் கல்வியாண்டிற்கான விடுமுறைப்பட்டியல்


இயக்கவரலாற்றில் எனது நினைவலைகள்’ நூல்வெளியீட்டுவிழா.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநிலத்தலைவர் மா.ச.முனுசாமியின் ‘ஆசிரியர் இயக்கவரலாற்றில் எனது நினைவலைகள்’ நூல்வெளியீட்டுவிழா. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. நூலைவெளியிடுகிறார். கல்வியாளர் டாக்டர்.எஸ்,எஸ்,ராஜகோபலன் முதல்பிரதியைப்பெற்றுக்கொள்கிறார். நூலை அறிமுகப்படுத்தி செ.நடேசன்,ந.பர்வதராஜன் உரையாற்றினர். நூலாசிரியர் மா.ச.முனுசாமி ஏற்புரையாற்றினார்.ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மா நிலத்தலைவர் தி.கண்ணன்,பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர்,பொருளாளர் ச.மோசஸ், STFI துணைத்தலைவர் தா.கணேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநிலத்தலைவர் மா.ச.முனுசாமியின் மா.ச.முனுசாமியின் ‘ஆசிரியர் இயக்கவரலாற்றில் எனது நினைவலைகள்’ நூல்பெற மா.ச.பதிப்பகம், எண்.2.பிள்ளையார்கோவில் கிழக்குத்தெரு, கருங்குழி 603303 காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம். அலைபேசி எண்: 94436 20563. நூலின் விலை ரூ.100/


6/16/2014

ஆசிரியர்கள் அச்சமடைய தேவையில்லை. TNPTF வேண்டுகோள்.

பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை. ஆசிரியர்கள் பாதிக்காதவாறு நிரவல் மேற்கொள்ளப்படும் என் இயக்குநர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார். எனவே ஆசிரியர்கள் அச்சமடையத் தேவையில்லை.
பதவி உயர்வு ஏற்கனவே நாம் வெளியிட்ட கருத்தின்படி 1.1.2013 முன்னுரிமையும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமையும் பின்பற்றப்படும். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் அனைத்து ஆசிரியர்களையும் TNPTF கேட்டுக்கொள்கிறது.

2015ம் ஆண்டின் மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 6 நாள் வேலை நாளாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், 2015ம் ஆண்டின் விடுமுறை நாட்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
நாள் கிழமை நிகழ்ச்சி
ஜன.,4 ஞாயிறு மிலாடிநபி.
ஜன.,26 திங்கள் குடியரசுதினம்
ஏப்.,2 வியாழன் மகாவீர் ஜெயந்தி
ஏப்.,3 வெள்ளி புனிதவெள்ளி
மே4 திங்கள் புத்த பவுர்ணமி
ஜூலை18 சனி ரம்ஜான்
ஆக.,15 சனி சுதந்திர தினம்
செப்.,25 வெள்ளி பக்ரீத்
அக்.,2 வெள்ளி காந்திஜெயந்தி
அக்.,22 வியாழன் விஜயதசமி
அக்.,24 சனி மொகரம்
நவ.,10 செவ்வாய் தீபாவளி
நவ.,25 புதன் குருநானக் பிறந்தநாள்
டிச.,25 வெள்ளி கிறிஸ்துமஸ்
மேற்கண்ட நாட்கள் தவிர மேலும் 3 நாட்களை தங்கள் மாநிலம் தொடர்பான விசேஷங்களுக்காக விடுமுறையை அறிவிக்கலாம். இதனை மத்தியஅரசு பணியாளர் நலன் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்யும்.
அவை வருமாறு: பொங்கல், ஓணம், மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி, ஹோலி, தசரா, கிருஷ்ணஜெயந்தி.இவற்றில் தமிழகத்திற்கு பொங்கல் (ஜன.,15, வியாழன்), விநாயகர் சதுர்த்தி (செப்.,17, வியாழன்), கிருஷ்ணஜெயந்தி (செப்.,5, சனி) அறிவிக்கப்பட்டுஉள்ளது

ஆசிரியர் பணிநிரவல்:டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். 2011 செப்.,1ல் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை படி, ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். அவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்யவேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2,900 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், பணிநிரவல் மூலம் உபரி ஆசிரியர்களால் நியமிக்கப்பட உள்ளது. இதனால், 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையினர் கூறுகையில், "" ஆசிரியர் பணியிடங்கள் குறையாமல் இருக்க ஆங்கில வழி கல்வியை துவங்கி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வருகிறோம்,'' என்றார்.

6/15/2014

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை,:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தேவராஜசேகரன், ஜான்கென்னடி முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ஜோசப்ரோஸ், மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன் பேசினர். தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ வாழ்த்தி பேசினார். வட்டார செயலாளர் குமரேசன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர் கலந்து கொண்டனர்.
பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சேம நலநிதி கணக்கை முடித்து உடனடியாக கணக்கு சீட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ரூ.2 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக நிதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது அரசின் சாதனைகளில் ஒன்றாக வருமான வரி வரம்பு உச்சவரம்பை அறிவிக்க மோடி முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வருமானவரி துறையிடம் இருந்து நிதித்துறை அறிக்கை பெற்றிருப்பதாக தெரிகிறது. வருமானவரி உச்சவரம்பை உயர்துவதோடு பல நிதிச்சலுகைகளும் அறிவிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டுக்கடன் மீதான வரிச்சலுகை வரம்பை உயர்த்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதே போல மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பரிமியம் மீதான வரிச்சலுகை வரம்பும் உயர்த்தபட வாய்ப்புள்ளதாக நிதித்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. தமது அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டிலேயே அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்கள் பலவும் இடம்பெற நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
வருமானவரி வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இதை அமல்படுத்த வேண்டும் என்பது நிதித்துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


          ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை,ஜூன்.14-ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சிவகங்கையில் ஆர்ப் பாட்டம் நடத்தி னர்.ஆர்ப்பாட்டம் உபரி பணியிட மாறுதல் களை கைவிட வேண்டும். முறை யற்ற மாறுதல் ஆணை களை ரத்து செய்து ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத் திட வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை யில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துப் பாண்டியன் தலைமை தாங்கி னார். மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ் இமானுவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப் பாட்டத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் வேத ராஜசேகரன், ஜான்கென்னடி, தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் இளங்கோ, மாவட்ட செயலா ளர் தாமஸ் அமல நாதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட பொரு ளாளர் சிங்க ராயர் நன்றி கூறினார்.சேமநலநிதிமேலும் இந்த ஆர்ப்பாட் டத்தில் பதவி உயர்வின் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பிட வேண் டும். சேம நல நிதி கணக்குகளை முறைப்படுத்தி கணக்கு சீட்டு வழங்கிட« வண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை ஒழுங்குப் படுத்தி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கை களும் வலியுறுத்தப்பட்டது. 

 

6/06/2014

RMSA திட்டத்தில் தொய்வு. தரம் உயர்த்தும் பள்ளிகள் தாமதம்


உபரி பணியிடம் கணக்கெடுப்பு. அச்சமடையும் ஆசிரியர்கள்


ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்கள். TRB தகவல்


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறுஞ்செய்தி வதந்தி. அரசு அறிவிப்பு வரும்வரை வதந்திகளை நம்ப வேண்டாம். TNPTF வேண்டுகோள்

கடந்த 4 நாடகளாக பல்வேறு வட்டாரச் செயலாளர்கள் நம்மை தொடர்பு கொண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து குறுந்தகவல்கள் ஒரு குறிப்பிட்ட இயக்க பொறுப்பாளர்களால் பரப்பபட்டு வருவதாகவும், அது குறித்து உண்மைத் தகவல்களை தெரவிக்க வேண்டினர். நாம் அவை வெறும் வதந்திகள் என்று பதில் அளித்தும் வதந்தி ஓய்ந்தபாடில்லை. கடைக்கோடி உறுப்பினர்களும் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். இது பொது மாறுதல் கலந்தாய்வு மீது ஆசிரியர்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையையும், ஆர்வத்தையுமே காட்டுகிறது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்கள் இயக்குநரிடம் மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஊடகங்களிலும் இது குறித்து மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் பேட்டியளித்துள்ளார். எனவே அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை ஆசிரியர்கள் இது குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என TNPTF கேட்டுக்கொள்கிறது. உண்மைச் செய்திகளை மட்டுமே இயக்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என இயக்க பொறுப்பாளர்களளை TNPTF கேட்டுக்கொள்கிறது.

தொடக்க-நடுநிலைப்பள்ளிகள் வேலைநாடக்ள் - ஆண்டு நாட்காட்டி


6/04/2014

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 7.6.2014 அன்று சிவகங்கை மாவட்ட இயக்க கட்டிடத்தில் நடைபெற உள்ளது. வருகிற 12.6.2014 அன்று நடைபெற உள்ள மாவட்ட ஆர்ப்பாட்டம் குறித்து விவாதிக்க உள்ளதால் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

ஜூன் 2014 நாட்காட்டி .


உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: கல்வித் துறை நடவடிக்கை

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளில் நியமிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திலுள்ள பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தைவிட கூடுதல் ஆசிரியர்கள் (பாடவாரியாக தேவைப்படும் ஆசிரியர்களைவிட கூடுதல் எண்ணிக்கையில்) உள்ளனர். இந்நிலையில், கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவல் மூல<ம் வேறு பள்ளிகளுக்கு மாற்ற கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும், கூடுதல் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் மற்றும் உபரி ஆசிரியர் விவரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் கல்வித் துறை தயாரித்துள்ளது. 31-5-2014 நிலவரப்படி, உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல், கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள், பள்ளிகளில் ஏற்கெனவே காலியாக உள்ள பணியிடங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாகத் தயாரித்து அனுப்புமாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

6/02/2014

வருந்துகிறோம்!!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டாரக்கிளையின் தலைவர் திரு.மதிவாணன் அவர்களின் தாயர் சற்று நேரத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்தார். அம்மையாரின் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. சகோதரரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கிறோம்.

உபரி என்ற பெயரில் பந்தாட திட்டம்? கலக்கத்தில் ஆசிரியர்கள்

தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுமோ என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.ஒவ்வொரு, ஆண்டும் மே இறுதியில் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன் மாதம் புதிய பள்ளிகளில் பணியல் சேர்வது வழக்கம். ஆனால், இக்கல்வியாண்டிற்கான கலந்தாய்வு குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2013 செப். 1ல் பள்ளிகளின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1:35 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் உபரி ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர். உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு என்பது ஒவ்வொரு பள்ளியிலும் பாடவாரியாக கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு, ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்படுவர். 99 சதவீத ஆசிரியர்களுக்கு, இக்கலந்தாய்வின்படி கட்டாய மாறுதல் வழங்கப்படுகிறது. இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது. இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல், உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வின் வாயிலாக, 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்து விட்டு, உபரி ஆசிரியர்கள் கணக்கிடுவது முரண்பாடுகளுடன் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், "இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்த பின், பள்ளிகளில் பல இடங்கள் காலியாகும். அதன்பின், ஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதை விடுத்து உபரி என்ற பெயரில், பிற மாவட்டங்களுக்கும், ஒன்றியங்களுக்கும் ஆசிரியர்களை பந்தாடுவது ஏற்புடையதல்ல. மேலும், 2013 ஆக. 1ன் படி உபரி ஆசிரியர்கள் பட்டியல் கணக்கிட்டுள்ளனர். அதை விடுத்து, இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பின் 2014 ஆக. 1ன் படி உபரி ஆசிரியர் பட்டியல் தயார் செய்தால், ஆசிரியர்களுக்கு சிரமங்களோ, கலந்தாய்வில் முறைகேடுகளோ இருக்காது" என்றார்.

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி TNPTF மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்


பிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.
கோடை விடுமுறை
கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டன. தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 200 தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 700 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
இந்த பள்ளிக்கூடங்களில் 6 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். 1 கோடியே 50 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.
இவர்களில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 30–ந்தேதி வரை நடந்தது. அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்பட்டது. உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 23–ந்தேதி முடிவடைந்து விடுமுறை விடப்பட்டன.
பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படுகின்றன. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறுகையில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிக்கூடங்களும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன என்றும் பிளஸ்–1 வகுப்புகள் மட்டும் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுவதையொட்டி விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றிருந்த மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் அவர்களின் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

பள்ளிகளின் சுற்றுச்சூழல் மன்றங்கள் - 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

மதுரை: மதுரை மாவட்டத்தில், பள்ளிகளின் சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில், இந்தாண்டு 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 500 அரசு மற்றும் உதவிபெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகின்றன. பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுவது, தோட்டம் அமைத்து, பள்ளி வளாகத்தில் பசுமை சூழலை ஏற்படுத்துவதும், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இம்மன்றங்களின் நோக்கம்.
இதற்காக, மன்றங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.2,500 பராமரிப்பு தொகை அரசு வழங்குகிறது. இவற்றின் மூலம் இந்தாண்டு பள்ளிகளில், 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஜூ-ன் முதல் ஆக., வரை ஒரு லட்சம் கன்றுகள் நடுவதற்கும் ஆயத்த பணிகள் நடக்கின்றன. எந்தெந்த பள்ளிகளுக்கு எத்தனை கன்றுகள் தேவை என்ற கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி கூறியதாவது: இம்மன்றங்கள் மூலம் கடந்தாண்டு ஒன்றரை லட்சம் கன்றுகள் பள்ளிகளில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 3 லட்சம் கன்றுகள் வரை நட திட்டமிட்டுள்ளோம்.
பள்ளி வளாகத்தில் மாணவர்களே பராமரிக்கும் தோட்டங்கள் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பராமரிப்பிற்காக பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி, முறையாக செலவிடப்படுகிறதா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பள்ளி மாணவர்கள் செல்லும் பஸ்களில் படம் மற்றும் பாடல்கள் போடுவதை தடுக்க உத்தரவு

பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும், பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன், போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 ன் கீழ் பதிவாகும் வழக்குகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் மறுவாழ்வு நிதியை பெற்றுத்தர உதவிட வேண்டும். ஒவ்வொரு யூனியன் அளவில், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து வட்டார வள மைய பயிற்றுநர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலம் மூலம் பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுன் பஸ்களில், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முன்பகுதியில் இருக்கைகள் ஒதுக்கித் தரவும், மாணவ, மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும் மற்றும் பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடை விதிக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 குறித்து, போலீஸ் துறையில் செயல்படும் சிறப்பு இளைஞர் போலீஸாருக்கும், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் நியமிக்கப்பட்டு குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றும் போலீஸாருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில், இடையில் நின்ற குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்வது, அனைத்து குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு விடுதிகளில் குழந்தைகளின் பிரச்னைகளை தெரியப்படுத்த, 24 மணி நேரமும் செயல்படும், கலெக்டரின் நேரடி கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 என்ற எண்ணையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண், 04342-232234 ஆகிய எண்களை தெளிவாக ஒட்டி வைக்க வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களான கலெக்டர் அலுவலகம், மருத்துவமனைகள், பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள், சார்நிலை அலுவலகம் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு தரப்படும் தண்டனையை, விவரத்துடன், விழிப்புணர்வு பேனர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, எட்டு யூனியன்களில் செயல்படும் ஒன்றிய குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும், 251 பஞ்சாயத்துகளில் செயல்படும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில், பதிவு பெறாத இல்லங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இளஞ்சிறார் நீதிச் சட்டம், 2012 கீழ் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.