பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/18/2013

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம்
ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் மீதான உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வுப் பயிற்சி, குழந்தைகளும் ஆசிரியர்களும் அதிக விழிப்போடு இருக்க உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 60 பேருக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பயிற்சி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

இவர்கள் கருத்தாளர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் மாதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துளிர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியை வழங்குகின்றனர்.

என்ன பயிற்சி?

எது பாலியல் வன்கொடுமை, பாலியல் கொடுமைக்கான அறிகுறிகள், சாதாரணமாக தொடுவதற்கும், தவறான நோக்கத்தில் தொடுவதற்கும் உள்ள வேறுபாடு, பாதிக்கப்படும் குழந்தைகளின் அச்சத்தைப் போக்குதல், தவறிழைத்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தருதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

குறிப்பாக பள்ளிகளிலோ, வெளியிலோ தனியான இடத்துக்கு யாரேனும் அழைத்தால் போகக் கூடாது உள்ளிட்ட பொதுவான ஆலோசனைகளும் ஆசிரியர்களின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மண்டலத்துக்கான பயிற்சியில் பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என பயிற்சியாளர் கூறியது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியர்களுக்கே இது குறித்து பேசுவதில் தயக்கம் இருக்கிறது. இந்தத் தயக்கத்தைப் போக்கி அவர்களை குழு விவாதத்துக்கு தயார் செய்யவே ஒருநாள் தேவைப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை குறித்த விழிப்புணர்வு பெற்றுச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் லேப்டாப்பை சொந்த வேலைக்கு பயன்படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் புகார்

மேலூர்: அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வழங்கப்பட்ட லேப்டாப் கள் ஆசிரியர்களின் சொந்த தேவைகளுக்குப் பயன்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பல பள்ளிகளில் லேப்டாப் திருடுபோனதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
மேலு£ர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி சம்பந்தமான அடிப்படை கல்வி கற்று கொடுக்க தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கியுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு கணினி சம்பந்தமான படிப்பு சொல்லி கொடுக்காமல் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளுக்குச் எடுத்து செல்வதாக மாணவர்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
ஏற்கெனவே பட்டூர் பள்ளியில் லேப்டாப் காணாமல் போனதாக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. அடுத்த சம்பவம் புலிப்பட்டி பள்ளியில் அரங்கேறியுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, Ôஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடல், கதை மற்றும் படிப்பு சம்பந்தமான கணினி சம்பந்தமான அடிப்படை கல்வி சொல்லி கொடுப்பதற்காக அரசு லேப்டாப் வழங்கி உள்ளது. ஆனால், சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக வீட்டிற்கு கொண்டு செல்வதாக தெரியவருகிறது. மேலும் புலிப்பட்டியில் காணாமல் போன மடிக்கணினி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்Õ என்றனர்.

தலைமை ஆசிரியர் தேசிய திறன் தேர்வு: விண்ணப்பம் வினியோகம்

சென்னை: "பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான விண்ணப்பங்களை, இன்று காலை 11 மணி முதல் பெறலாம்" என அரசு துறைகளுக்கான தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, தேசிய திறன் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, 17ம் தேதி (இன்று) முதல், 24ம் தேதி வரை, www.tngde.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதள "பாஸ்வேர்டு"களை, அந்தந்த பள்ளி மண்டல கல்வி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

9/17/2013

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு

முதுகலை ஆசிரியர் பணி
             மதுரை கோ.புதூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
             ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. எனவே, அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
           இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, இதுபோன்று ஏராளமான எழுத்துப்பிழைகளுடன் கேள்வித்தாள் தயாரித்து இருப்பதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 அர்த்தம் மாறும் வகையில் இல்லை
         விசாரணையின் போது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-
          “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்காக தயாரிக்கப்படும் கேள்விகள் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற அச்சகங்களில் மிகவும் ரகசியமாக தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் கேள்வித்தாள்கள் தேர்வு தினத்தன்று தான் பிரித்துப் பார்க்கப்படும். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. அச்சகத்தில் கேள்வித்தாளை உருவாக்கும் போது எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது.
               ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், கேள்வித்தாளில் ஏற்பட்டுள்ள எழுத்துப் பிழைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. யார் அச்சடிக்கிறார்களோ, அவர்கள் தான் எழுத்துப்பிழைக்கு முழு பொறுப்பாவார்கள். கேள்வித்தாளில் உள்ள எழுத்துப்பிழை சம்பந்தமாக ஆராய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கேள்விகளில் எழுத்துப்பிழை இருந்த போதிலும், அதன்காரணமாக கேள்விகளின் அர்த்தம் மாறும் வகையில் இல்லை. புரிந்து கொண்டு எழுதும் அளவுக்கு தான் கேள்விகள் உள்ளன என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.
           எனவே, கருணை மதிப்பெண் கொடுக்க முடியாது. முதல் 10 ரேங்குகளை பெற்றவர்களில் 6 பேர் ‘பி’ சீரியல் கொண்ட கேள்வித்தாள் மூலம் தேர்வு எழுதி உள்ளனர். மறுதேர்வு நடத்தப்பட்டால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.”
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கடமை
                அதன் பின்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொழி, தங்கம்மாள் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். விசாரணையின் போது நடந்த விவாதம் வருமாறு:-
           கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- பிரிண்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டுள்ளது.
               நீதிபதி:- பிரிண்டர் கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல. ஒரு தேர்வை நடத்தும் போது கேள்வித்தாளில் எந்தவித குளறுபடியும் இல்லாத அளவுக்கு கேள்வித்தாளை தயார் செய்து தேர்வை சரியாக நடத்த வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கடமை. பிரிண்டர் கோளாறு காரணமாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படலாமா?.
அதிருப்தி
           தேர்வு தொடங்கியதும் கேள்வித்தாளில் தவறு இருப்பதை பார்த்து ½ மணி நேரத்துக்குள் அத்தனை தேர்வு மையங்களுக்கும் பிழையை சரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கலாமே?. ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குளறுபடி குறித்து ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போது, ஐகோர்ட்டு தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்து இருந்தது. இருந்த போதிலும் தொடர்ந்து தவறு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக இந்த கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஏன் வரவில்லை?
கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- முக்கிய வேலை காரணமாக அவரால் வர இயலவில்லை.
நீதிபதி:- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே நாங்கள்(நீதிபதிகள்) இங்கு இருக்கிறோம். இது முக்கியமான வேலை இல்லையா?.
இவ்வாறு விவாதம் நடந்தது.
             அதன்பின்பு, “இந்த வழக்கு சம்பந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கருத்தை அறிய இந்த கோர்ட்டு விரும்புகிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நாளை(18-ந் தேதி) நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வினாத்தாளில் பிழை: டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரிய வழக்கில், "ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

             மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு: 605 முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், ஜூலை 21 ல் தேர்வு நடந்தது. "பி" வரிசை வினாத்தாள்களில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் பிரிவில் 150 கேள்விகள் இருந்தன. 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. 

                உதாரணமாக, வினா 75 ல் "தமிழ் மொழி பெருமை மிக்க பழைய வரலாறு உடையதாகும் என்று உரைத்தவர்? 76 ல் "மதுரையை தென் தமிழ் மதுரை" என குறிப்பிடும் நூல்? என அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.

              விசாரித்த நீதிபதி, "தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக வேண்டும்" என்றார்.

                    நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயகுமாரன் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர்கள் அறிவொளி, தங்கம்மாள் ஆஜராயினர்.

                 வாரிய செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு: வாரியம் கைப்பிரதியாக வினாத்தாள் தயாரித்து, ரகசியமாக அச்சடிக்கும். ஏதேனும் தவறுகள் உள்ளனவா? என அச்சுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், வினாத்தாளின் முதல் பிரதியில் சரிபார்ப்பர். அதன்படி "ஏ,பி,சி,டி" என வினாத்தாள் வரிசைப்படுத்தப்படும்.

                  இத்தேர்வில் "பி" வரிசை வினாத்தாளில் பிழைகள் ஏற்பட்டுள்ளன. இத்தவறுக்கு, அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பொறுப்பு. ரகசியம் கருதி, தேர்வு நாளன்று தான், வினாத்தாட்களை பிரித்து பார்ப்போம். அச்சடிக்கும் ரகசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

                பிழைகள் இருந்தாலும், வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, பதிலளிக்கக்கூடிய வகையில், வினாக்கள் அமைந்திருந்தன. தேர்வு எழுதியவர்களின் வினாத்தாட்களை ஆய்வு செய்தோம். முதல் 10 ரேங்க் பெற்றவர்களில், 6 பேர் "பி" வரிசை வினாத்தாட்கள்படி, எழுதியவர்கள். மறு தேர்வு, கருணை மதிப்பெண் என்ற கேள்விக்கு இடமில்லை. மறுதேர்வால், ஏற்கனவே அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர், என குறிப்பிட்டார்.
நீதிபதி: பிழைகள் ஏற்பட்டிருந்தாலும், தேர்வு துவங்கிய 30 நிமிடத்தில், சரிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஏற்கனவே, ஆசிரியர் நியமன தேர்வில் 73 கேள்விகளில் அச்சுப்பிழைகள் இருந்ததாக, வழக்கு தாக்கலானது. அப்போது, ஐகோர்ட் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது. தேர்வு எழுதுபவர்களுக்கு, வினாத்தாட்களை அச்சடிப்பவர்கள் யார்? என தெரியாது.

                   பிழையின்றி வினாத்தாட்கள் தயாரிக்க முடியவில்லை எனில், டி.ஆர்.பி., தலைவர் அப்பதவியை வகிக்க தகுதியற்றவராகி விடுகிறார். அவர் ஏன் ஆஜராகவில்லை? ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, மனு செய்துள்ளாரா?

                         அரசு வக்கீல்: அவருக்கு முக்கிய வேலை இருந்ததால், ஆஜராகவில்லை.

நீதிபதி: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க, இக்கோர்ட் உள்ளது. அச்சுப்பிழை எனக்கூறி, ஊழியர்கள் மீது பழியை சுமத்தி விட்டு, தப்பிக்க முடியாது. டி.ஆர்.பி., தலைவர் என்ற முறையில், சரிபார்க்கும் கடமை உள்ளது. அவரிடம் சில விளக்கம் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக வேண்டும், என்றார்.

தொடக்க கல்வித் துறையில் 2004-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்டு பதவி உயர்வின்றி தவிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

 தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடக்க கல்வித் துறையில் பதவி உயர்வின்றி தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

         தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

            தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயரத்தும் வகையில், பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2004-ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 2006, ஜூன் மாதம் முதல் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.

                 சம கல்வித் தகுதி, பணி, ஊதியம் மற்றும் தேர்வு முறை இருந்த போதும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண்ணை கருத்தில் கொள்ளாமல், பள்ளிக் கல்வித் துறையில் வழங்குவது போல, தொடக்க கல்வித் துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓரே பதவி உயர்வான நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், தற்போது ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் பதவி உயர்வு என்பது கனவாகி விட்டதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தரம் உயர்த்தப்படுóம் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறையில் இளையவராக கருதப்படுவதால் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                  இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்  கூட்டமைப்பின்  செயலர்  கூறும் போது, கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 720-ல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறை மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் அரசாணையில் திருத்தம் செய்யப்படவில்லை.

                    அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிரியர் போட்டித் தேர்வில் 2-ஆம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பயிற்றுநராக நியமிக்கப்பட்டு பதவி உயர்வுக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இதே தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் பட்டியலில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டதால் பதவி உயர்வுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

               தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் கருதி அரசாணை 720-ல் திருத்தம் செய்யவும், தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை என்ற வேறுபாடின்றி, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தேர்வுத் துறையில் அதிரடி மாற்றம்

 தேர்வுத் துறையில் அதிரடி மாற்றம்: இனி மதிப்பெண் முகாமில் இருந்து மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் வழியாக அனுப்பவும், மதிப்பீடு முடிந்த 5வது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

            பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிப்பெண் முகாம்களில் ஆசிரியர்கள் இனி மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் வழியாக அனுப்பினால் போதுமென்றும், பேனா மூலம் எழுதி சீல் வைக்க அவசியமில்லை எனவும், மதிப்பீடு பணி முடிந்த ஐந்தாவது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்வில் மதிப்பெண் முகாம் பட்டியலில் பார்கோடு முறை அமுல்படுத்தப்படுகிறது.

                 அதேபோல் அரக்குக்கு பதிலாக கையொப்பமிட்ட மேலுறையின் மீது பசை தடவி சீல் வைக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். விடைத்தாள் கட்டுகளை அஞ்சல் வழியில் அனுப்பும் முறை ரத்து செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் வருகிற அக்டோபர் மாதம் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

TNPSC -டிசம்பர் -2013 அரசுப் பணியாளர்களுக்கான அரசுத் துறைத் தேர்வுகள் அறிவிப்பு

9/16/2013

பிளஸ் 2 துணைப் பொதுத் தேர்வு : விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் கவனத்துக்கு.

செப்டம்பர்/அக்டோபர் 2013, மேல்நிலைத் துணைப் பொதுத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அரசு தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேல்நிலைத் தேர்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான அறிவுரைகளை tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தனித்தேர்வர்கள் தமது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் tndge.in என்ற இணையதளத்தில் 16.09.2013 ( திங்கட்கிழமை) மற்றும் 17.09.2013 ( செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ள வேண்டும். 17.09.2013 மாலை மணி 05.00-க்குப் பிறகு விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலாது.

தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் முழுமையாக விவரங்களைப் பதிவு செய்து தமது புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். பிறகு, புகைப்படத்துடன் பதிவு செய்த விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினையும், தேர்வுக்கட்டணத்தினை பணமாகச் செலுத்த வேண்டிய பதிவுச் சீட்டினையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

`எச்’ வகை தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு - ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-)‘எச்.பி’ வகை தேர்வர்கள் - ரூ.150 + 37 = ரூ.187/-ம் இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000/-த்தை செலுத்த வேண்டும். தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை Registration Slip-ல் குறிப்பிடப்பட்டிருக்கும். கட்டணத்தினை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

ஆன்-லைனில் புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை (Confirmation copy), Registration Slip மற்றும் உரிய இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள் 18.09.2013 (புதன்கிழமை) அன்று சென்னையில் அமைந்துள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளியில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.

மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி

(Presidency Girls Hr.Sec.School)

எழும்பூர், சென்னை 600 008.

தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் இறுதியாகப் பெற்ற தனித்தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய Print out-ல், மீண்டும் தனித்தேர்வரின் அதே மாதிரியான புகைப்படத்தினை ஒட்ட வேண்டும். புகைப்படத்தில் attestation பெற வேண்டிய அவசியமில்லை.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ் அனுப்பும் பொருட்டு விண்ணப்பத்துடன் ரூ.40/-ற்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறை ஒன்றினை இணைக்க வேண்டும்.

இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

பிளஸ்2 தேர்வில் 100% தேர்ச்சி இலக்கு பாடம் படிக்கும் நாமக்கல் ஆசிரியர்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்,2 பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் பெறும் வகையில் கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தை மட்டும் குறி வைத்து தனியார் பள்ளிகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றன. சில ஆண்டுகளாக இந்த மாவட்ட மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக பொது தேர்வில் மாநில அளவில் ராங்க் பெறுகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாவட்ட அரசு பள்ளிகள் தரம் உயர்த்த கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில் அரசு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு, அரசு பள்ளி மாணவர்கள் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்கு தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கற்பிப்பது போன்ற யுக்திகளை பின்பற்றாமல் இயல்பாக மாணவர்களை தேர்ச்சி பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர் பயிற்சிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஆசிரியர்களுக்கே கற்பிக்கும் முறைக்கான தேர்வு, பயிற்சியும் வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களை கொண்டு இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் வினாத்தாள் தயாரிக்கும் முறை, அரசு பள்ளிகளில் மாணவனின் அணுகுமுறை எப்படி இருக்கும், கற்றுக்கொள்வதில் உள்ள பிரச்னை, குடும்ப சூழல் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து சில அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு திறன் குறைந்த மாணவர்களை கண்டறிவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் கூறுகையில், ‘‘தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை அந்தந்த பாட ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்கள் குறைந்த பட்சம் பாஸ் மார்க் பெற என்ன வழி என்பதை கையாள வேண்டும். மாணவருக்கு பிடித்தமான பாடத்தில் அவர்களை பயிற்றுவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட சில பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த 412 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அத்தகைய அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு தான் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு ஆசிரியரால் சாதிக்கமுடியும் போது அதற்கு இணையான தகுதி படைத்த மற்ற ஆசிரியர்களால் முடியும். அதற்கு ஆசிரியர்களுக்கும் போதிய பயிற்சி அவசியம். அதை உணர்ந்தே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்

மாணவன் எனும் மூலதனம்

பள்ளியில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும், உணவைப் பகிர்ந்துண்ணவும், மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும், அடுத்த செஷனுக்கு மனதை தயார் செய்வதற்கேற்ற வகையிலும்தான் கால அட்டவணையில் உணவு இடைவேளைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையான பள்ளிகளில் அது ஆசிரியர்களின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.
60 நிமிட இடைவெளியை வெறும் 10 அல்லது 20 நிமிட இடைவேளையாக அவரவர் விருப்பத்துக்கு குறைக்கப்பட்டு, களவாடியபொழுதுகளில் திறமையான (மற்ற ஆசிரியருடன் போராடி வெற்றிபெறும் வல்லமை பொருந்தியவர் அல்லது தானே சிறந்த ஆசிரியர் என்று உணருபவர்) ஆசிரியர்கள் சிறு தேர்வுகள் வைத்து மாணவர்களை மிகச்சிறந்த மதிப்பெண் உற்பத்தி எந்திரங்களாக உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவர்.
பிள்ளைகள் உணவை அவசர அவசரமாக உண்டுவிட்டு ஓடுவர். மற்றவருடன் பேசவும் நேரம் இருப்பதில்லை; நன்கு படிக்கும் மாணவர்களிடம் இடைவேளையின்போது சந்தேகங்களைக் கேட்டுத் தெளியவும் நேரமிருப்பதில்லை. மகிழ்ச்சியாக விளையாடி மகிழவும் நேரமிருப்பதில்லை என்று மாணவர்கள் சில ஆசிரியர்களிடம் புலம்புவர். வீட்டுக்கு சென்று மதிய உணவு உண்ணும் மாணவர்களின் நிலைமை இன்னும் பரிதாபத்துக்கு உரியது. சாப்பிட்டால் நேரமாகிவிடுகிறது என்று சிலர் சாப்பிடாமல் பாக்ஸில் போட்டு எடுத்து வந்து இரண்டாம் பாடவேலையின்போது சாப்பிடுவர். வேறு சில மாணவர்கள் அவசர அவசரமாக அள்ளிபோட்டுக்கொண்டு ஓடிவருவர்.
மதிய நேர தேர்வுகளை அட்டெண்ட் பண்ணவில்லை என்றால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதால், சில மாணவர்கள் வீட்டுக்கு போகவும் பயந்து சாப்பிடாமலேயே இருந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நீதி நெறி கல்விக்கு என ஒதுக்கபட்டிருக்கும் பாடவேளைகளையும்கூட இவர்கள் பிடுங்கிக்கொள்வது கொடுமை எனில், மாணவர்கள் பயமின்றி தங்கள் உடலும் உள்ளமும் ஒன்றிணைந்து செயல்படும் ஓவியம், உடற்கல்வி ஆகிய பாடவேளைகளையும்கூட '10 ஆம் வகுப்புக்கு என்ன இதெல்லாம் வேண்டியிருக்கு' என்று பாட ஆசிரியர்கள் அதையும் பிடுங்கிக்கொள்வது கொடுமையிலும் கொடுமை!
அனைத்து ஆசிரியர்களும் மனித உளவியல், குழந்தைகள் உளவியல் என பலவிதமாகப் படித்துவிட்டுதான் வருகின்றனர். பிறகு ஏன் அவர்கள் மாணவர்களின் நிலையிலிருந்து பார்க்க தவறிவிடுகின்றனர்?
கல்வியாளர்கள் பல காலமாய் போராடி குழந்தை மையக்கல்வியை வகுப்பறைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசின் பல்வேறு கல்விக்கொள்கைகளும் காலத்துக்கேற்ப மாறுதல்களை உள்வாங்கி குழந்தைகள் மகிழ்வுடன் பள்ளிக்கு வர வழி செய்துள்ளன. அரசு பல நூறு கோடிகளை கல்விக்கென்று ஆண்டுதோறும் செலவழிக்கிறது. அது ஒரு தனி மனிதன் மீது அரசு செய்யும் மூலதனம். அவன் மீண்டும் அதை நாட்டுக்கு எந்த வகையிலாவது திரும்ப செலுத்தும்போது மட்டுமே அவன் நாட்டின் வளமாக கருதப்படுகிறான். இல்லையெனில், அவன் மீது செய்யப்பட்ட செலவு வீணாகிறது. அதனால்தான் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் (1776)கல்வியறிவு பெற்ற மனிதனை விலையுயர்ந்த எந்திரத்துக்கு ஒப்பிடுகிறார்.
கல்விக்காக நம் நாட்டில் எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வியின் மூலமே நல்ல குடிமக்களை உருவாக்க இயலும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், கல்வி என்பது என்ன என்பதைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்களிடம் இல்லாமல் போனதுவே சோகம்.
கல்வியறிவு பெற்ற மனிதன நாட்டுக்கு தக்க விதத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறான். நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டுபவனாகவும், சக உயிரினங்களை மதித்துத் தனக்கு சமமாய் நடத்துபவனாகவும், எளிய உயிரினங்களை அரவணைப்பவனாகவும், நல்ல நீதிநெறிகளை பின்பற்றுபவனாகவும் பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் திறன் மிக்கவனாகவும், கல்வியை சுய முன்னேற்றத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துபவனாகவும் இன்னும் பல குணநலன்களைக் கொண்டவனாகவும் எதிர்ப்பர்க்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட மனிதனைதான் பொருளாதார வல்லுனர்கள் Human Capital என்று வர்ணிக்கின்றனர். இப்படிப்பட்ட முழு ஆளுமைத்திறன் கொண்ட குடிமக்களை உருவாக்க ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்படுதல் அவசியம். வெறும் மதிப்பெண் உற்பத்தியை மட்டுமே நோக்கமாய் கொண்ட ஆசிரியர்களிடம் நிச்சயம் சுயநலவாதிகளை மட்டுமே உருவாக்க முடியும். ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர் ஒவ்வொருவரையும் ஒரு விலைமதிக்க முடியாத வளமாக கருதி, அவர்களை நாட்டுக்கு உகந்த வகையில் வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் வல்லரசு கனவு நிறைவேறும். இல்லையேல் எந்த நிஞ்சா டெக்னிக்கை பயன்படுத்தியும் எதையும் சாதிக்க முடியாது.
_________________ டி. விஜயலட்சுமி___________________
 Return to frontpage

ஓணம்:3 மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

சென்னை: சென்னை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓணம் பண்டிகை‌யை முன்னிட்டு இந்த 3 மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தவறுகளை தடுக்க இயக்குனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அவசியம் தேவை குமுறும் கல்வித்துறை பணியாளர்கள்

சிவகங்கை:கல்வித்துறையில் இயக்குனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலுள்ள அதிகாரிகளை நியமிக்காததால், இத்துறையில் தொடர்ந்து பல்வேறு குளறுபடி நடப்பதாக, கல்வித்துறை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசின் அனைத்து துறைகளிலும்,செயலர் பதவியில் ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்து உள்ள அதிகாரிகள் உள்ளனர்.இதே போன்று மற்ற துறை இயக்குனர், தலைவர் பதவியிலும் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளே இடம் பெறுகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் மட்டும், முதுகலையுடன் பி.எட், எம்.எட்., படித்த ஆசிரியர்கள்,நேரடி தேர்வு மூலமும் இயக்குனர் பதவி நிரப்பப்படுகிறது.

துறை ரீதியான விஷயங்கள் தெரியும் என்ற நோக்கில் நியமிக்கப்பட்டாலும், இவர்களுக்கு கீழ் பணிபுரிவோரை ஒழுங்குபடுத்த முடியாத நிலை உள்ளது. இதுவே,கல்வித்துறையில் சில தவறுகள், குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாகிறது. அரசியல்வாதிகளை அனுசரித்து போகவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இதனால், இத்துறையில் தவறு அதிகரிக்கிறது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனில்,முறைகேடு, தவறுகளுக்கு இடமளிக்க மாட்டார். சமீபத்தில் கல்வித்துறையில், வாட்ச்மேன், துப்புரவு ஊழியர், அலுவலக உதவியாளர் பணிக்கு 2 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். உயர் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே முறைகேடு நடந்திருப்பது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இது போன்ற தவறுகளை தடுக்க, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் நியமன அவசியத்தை வலியுறுத்தி, கல்வித்துறை பணியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும், அரசு நடைமுறைப்படுத்த தயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக நடக்கும் சில குளறுபடி, தவறுகளை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான இயக்குனர்களை நியமிக்க நடவடிக்கை தேவை என்ற, கோரிக்கை பல்வேறு தரப்பிலும் வலுக்கிறது.

கல்வித்துறையினர் கூறியதாவது: துவக்கத்தில் துறை சார்ந்தவர்களே இயக்குனர்களாக இருந்தால் எளிமையாக இருக்கும் என்ற கருத்து இருந்தது. இத்துறையில் தற்போது அதிகரிக்கும் தவறுகளை தடுக்க, ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளை நியமிக்கும் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனாலும்,அரசு கண்டு கொள்ளவில்லை.இதே துறையில் டி.ஆர்.பி.,போன்ற ஒருசில பிரிவிற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம் இருக்கும் போது, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிக்கு ஏன் பாரபட்சம். தவறுகளை தடுக்கவும், அரசியல்வாதி, அமைச்சர்களுக்கு துறை உயர் அதிகாரிகள் விலைபோகாமல் இருக்கவும் இத்துறையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இயக்குனர்களாக நியமிப்பது அவசியம்,'' என்றனர்.

பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு

ன்னை: பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், சிறப்பு கட்டணம் செலுத்தி, 16, 17 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வுத்துறை அறிவிப்பு: விரைவில் துவங்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வை எழுத, தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், "தத்கால்" திட்டத்தின் கீழ், வரும், 16, 17ம் தேதிகளில், www.tndge.in என்ற இணையதளம் வழியாக, பதிவு செய்யலாம். இணையதளத்தில், புகைப்படத்தை, "அப்லோட்" செய்ய வேண்டும்.
அதன் பின், புகைப்படத்துடன் கூடிய, பதிவு செய்த விண்ணப்பத்தையும், கட்டணம் செலுத்துவதற்கான செலானையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக, கூடுதலாக, 1,000 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் கட்டணத்தை, 18ம் தேதி, சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செலுத்த வேண்டும். இந்த வகை தேர்வர்களுக்கு, சென்னையில் மட்டும், தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

"நெட்" தேர்வு குளறுபடி: விவரம் வெளியிட மாணவர்கள் கோரிக்கை

சென்னை: "நெட்" தகுதி தேர்வில் நடந்த குளறுபடிக்கு, யு.ஜி.சி.,யின் தெளிவில்லாத விளம்பரமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, யு.ஜி.சி., மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) தேசிய தகுதி தேர்வான, "நெட்"டை, ஜூன், டிசம்பர் ஆகிய, இரு மாதங்களில் நடத்துகிறது. மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட், அகில இந்திய அளவில் நடத்தப்படும், நெட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில், வெற்றி பெற்றவர் மட்டுமே, கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிய தகுதியுடையவர்.
நெட் தேர்வில், 350 மதிப்பெண்களுக்கு, "அப்ஜெக்டிவ்" கேள்விகளுடன், கட்டுரை எழுதும் வகையிலான கேள்வியும் கேட்கப்படுகிறது. யு.ஜி.சி., 2012, ஜூன் மாதம் நடத்திய, நெட் தேர்வுக்கு, அனைத்து கேள்விகளும், "அப்ஜெக்டிவ்" முறையில் இருக்கும் என, அறிவித்தது. இந்த தேர்வை, நாடு முழுவதும், எட்டு லட்சம் பேர் எழுதினர். இதில், 40 ஆயிரம் பேரே தேர்ச்சி பெற்றனர்.
ஆனால், "யு.ஜி.சி., அறிவித்துள்ள, தகுதி மதிப்பெண் பெற்றுள்ளோம்; எங்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும்" என, 300க்கும் மேற்பட்டோர் கேரளா மற்றும் நாக்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து விசாரித்த கோர்ட், "பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, உடனே, யு.ஜி.சி., சான்றிதழ் வழங்க வேண்டும்" என தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், யு.ஜி.சி., வழக்கு தொடர்ந்தது. "தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் போது, தகுதி மதிப்பெண்ணுடன், தேர்வில் வெற்றி பெறுவதற்குரிய தகுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து தகுதிகளை பெற்றவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றங்களின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாது" என மேல்முறையீட்டு மனுவில், யு.ஜி.சி., கூறியுள்ளது.
கேள்வித்தாள் மாற்றத்துக்கு பின், தேர்வில் நடைபெற்ற குளறுபடி குறித்து, நெட், ஸ்லெட் சங்க செயலர் சுவாமிநாதன் கூறியதாவது: கடந்த, 2012, ஜூன் மாதம் நடந்த, நெட் தேர்வு குளறுபடிகளுக்கு, தெளிவில்லாத விளம்பரமும், கேள்வித்தாள் அமைப்பு மாற்றமுமே காரணம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறை, நல்ல ஆசிரியரை தேர்வு செய்ய உதவாது.
எனவே, பழைய முறையை பின்பற்றி, தேர்வுகளை நடத்த வேண்டும். இல்லையெனில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள தேர்வில், கேள்விகளுக்கு தவறான விடை அளிப்பதற்கு, "மைனஸ்" மதிப்பெண் வழங்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும்.
யு.ஜி.சி., இனி அறிவிக்கும், நெட் தேர்வு விளம்பரங்களை, தெளிவாக மாணவர்களுக்கு புரியும் வகையில் வெளியிட வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் கூறினார்.
கடந்த, 2012, ஜூன் மாதம் நடந்த," நெட்" தேர்வு குறித்து யு.ஜி.சி., அளித்த விளம்பரத்தில், மாணவர்களின் தேர்ச்சி முறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர விவரம், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது. முழு தகவல்களுக்கு தெளிவாகவும் இல்லை. இதனாலேயே குளறுபடிகளும் நிகழ்ந்துள்ளன.

9/15/2013

காலம் கடத்துவதால் யாருக்கு பயன்?

இடைநிலை ஆசிரியர் ஊதியமாற்றம் என்பது இன்று அனைத்து சங்க ஆசிரியர்களாலும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. தனிச்சங்க நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் கூட்டு நடவடிக்கை என்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும். கூட்டு நடவடிக்கைக்கு யார் அழைத்தாலும் சேரந்து போராட தயார் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளிப்படையாக தெரிவித்தும் கூட மற்ற இயக்கங்கள் இதில் மெத்தனம் காட்டுவதின் மர்மம் என்ன? என்பதுதான் இன்று அனைவரும் மனதிலும் எழுக்கூடிய கேள்வி. ஏன் வரத்தயங்குகிறீர்கள் என்று கேட்டால் 40 ஆண்டுக்கு முந்தைய வரலாறு சொல்வதும் அதற்கு மற்றவர்கள் பதில் சொல்வதும் நான் பெரியவன், நீ துரோகி என்ற கருத்து மோதல்கள் நடைபெறுவதும் என்பது அரசியல் களம் போல் ஆகி விட்டது. களம் அமைத்து போராடுவது பெரிய விசயமல்ல. கடைசி வரை களமாடுபவர்கள் யார் என்பதுதான் கேள்வி. கடந்த காலங்களில் நடந்த விசயங்களை மறந்து இயக்கத் தலைவர்கள் கோரிக்கை வென்றெடுக்க என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். இயக்கத்தில் பொறுப்பாளர்கள் யார் கட்டுப்பாடு இல்லாமல் சுததந்திரமாக முடிவெடுக்க முயல வேண்டும். இல்லையேல் வருங்கால சமுதாயம் நம்மை கடைநிலை ஊழியர்கள் நிலையில் கொண்டுபோய் வைத்துவிடும். கோரிக்கைகளை செவிமடுக்கும் இயக்குநராக தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளார். எனவே நம் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக அவரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதே நேரத்தில் நம் உரிமைகளை பெறுவதில் சிறிதும் தயங்காமல் ஒரு பெரிய போராட்ட நடவடிக்கையை கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிக்க வேண்டும். அறிவூட்டும் துறை தன்னுடைய உரிமையை பெற யாருக்கு அறிவூட்டுவது என தெரியாமல் திண்டாடுவது நகைப்புக்குறியதாகும். ஒற்றுமையே பலம் எனவும், கூடி வாழ்நதால் கோடி நன்மை என பாடம் நடத்தும் நமக்க யார் பாடம் நடத்துவது என்று தெரியவில்லை. இந்த கோரிக்கையை மையமாக வைத்து தெருவுக்கு ஒரு சங்ஙகம் தினமும் முளைத்துக்கொண்டிருக்கின்றன. இது நமது ஒற்றுமையின்மையை ஆட்சியாளர்களுக்கு படம் பிடித்து காட்டிவிடுகிறது. பரிதாப்ப்ட்ட இனமாய் இன்று இடைநிலை ஆசிரயர் சமுதாயம் உள்ளது. பத்திரிக்கைச் செய்திகள் யார் தலைமையேற்பது என்ற போட்டி சங்கங்களுக்கிடையில் நடக்கிறது என்று பத்தி வைக்கின்றன. இயக்கங்களை கட்டுப்படுத்தும் சக்திகள் துர விலகி நின்றாலே நமக்கான போராட்டத்தை நாம் வகுத்துக்கொள்ளலாம். ஒன்று சேர விடாமல் தடுக்கும் தீய சக்திகளை இயக்க நடவடிக்கைகளிலிருந்து துரத்தியடியுங்கள். நமக்கான உரிமையை நாம்தான் போரடி பெற வேண்டும். இங்கு யாருடைய தயவும் தேவையில்லை. எத்தனை காலம்தான் வாய் மூடி மௌனமாக காலம் கடத்த போகிறோம். முதலில் நாம் சார்ந்துள்ள இயக்கத்தில் நமக்கான உரிமையை கேட்டுப் பெறுங்கள். அதன்பின் அரசிடம் உள்ள உரிமைகளை கேட்பதற்கு துணிந்து விடுவீர்கள். பலங்கதைகள் பேசி நம்மை மழுங்கடிக்கும் நாசகார கும்பல்களிடம் இருந்து விடுதலை கோருங்கள். நமக்கான விடியல் வெகு தொலைவில் இல்லை. மீண்டும் எச்சரிக்கை செய்கின்றேன். உரிமை மீடக ஒன்று கூடுவோம். வென்றெடுப்போம்.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையை போராடிப் பெறுவோம்!!!
___________MP@TNPTF__________________

செப்டம்பர்/அக்டோபர் 2013, மேல்நிலைத் துணைப் பொதுத் தேர்வெழுத சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

செப்டம்பர்/அக்டோபர் 2013, மேல்நிலைத் துணைப் பொதுத்  தேர்வெழுத சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  tndge.in என்ற இணையதளத்தில்  16.09.2013 ( திங்கட்கிழமை) மற்றும் 17.09.2013 ( செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ள வேண்டும்.  
மேல்நிலைத் தேர்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான அறிவுரைகளை tndge.in என்ற இணையதளத்தில்  வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தனித்தேர்வர்கள் தமது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  tndge.in என்ற இணையதளத்தில்  16.09.2013 ( திங்கட்கிழமை) மற்றும் 17.09.2013 ( செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ள வேண்டும்.    17.09.2013 மாலை மணி 05.00-க்குப்  பிறகு விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலாது.
தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் முழுமையாக விவரங்களைப் பதிவு செய்து தமது புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும்.  பிறகு, புகைப்படத்துடன் பதிவு செய்த  விவரங்களுடன் கூடிய  விண்ணப்பத்தினையும், தேர்வுக்கட்டணத்தினை பணமாகச் செலுத்த வேண்டிய பதிவுச் சீட்டினையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
`எச்’ வகை தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு - ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-)‘எச்.பி’ வகை தேர்வர்கள் - ரூ.150 + 37 = ரூ.187/-ம் இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000/-த்தை  செலுத்த வேண்டும். தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை  Registration Slip-ல் குறிப்பிடப்பட்டிருக்கும். கட்டணத்தினை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
ஆன்-லைனில் புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை  (Confirmation copy), Registration Slip மற்றும்  உரிய இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள் 18.09.2013 (புதன்கிழமை)  அன்று சென்னையில் அமைந்துள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளியில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.
மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி
(Presidency Girls Hr.Sec.School)
எழும்பூர், சென்னை 600 008.
தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் இறுதியாகப் பெற்ற தனித்தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய Print out-ல், மீண்டும் தனித்தேர்வரின்  அதே மாதிரியான புகைப்படத்தினை ஒட்ட வேண்டும். புகைப்படத்தில்  attestation பெற வேண்டிய அவசியமில்லை.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ் அனுப்பும் பொருட்டு விண்ணப்பத்துடன் ரூ.40/-ற்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறை ஒன்றினை இணைக்க வேண்டும்.
இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும்  அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும்,  தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. 
தபால் மற்றும் தனியார் கொரியர் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

9/14/2013

கல்வித் துறையில் சூப்பர் உமன் ஆகிறாரா சபீதா..? - நான்கு அமைச்சர்கள் கல்தா

பள்ளிக்கல்வித் துறையில் மட்டுமே இதுவரை நான்கு அமைச்சர்கள் அதி ரடியாக மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதாவுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே நடந்த பனிப்போர்தான் பதவி பறிபோனதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

கல்வித் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''1991-96 ஆட்சிக் காலத்தில் ஜெய லலிதாவின் முதலமைச்சர் அலுவலகத்தில் சபீதா பணியாற்றினார். ஜெயலலிதா காவிரி பிரச்னைக்காக திடீரென்று கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தபோது, அருகில் இருந்து கவனித்துக் கொண்டவர் சபீதா. அதில் இருந்து ஜெயலலிதாவுக்கு சபீதா மீது நல்ல அபிப்ராயம். சபீதாவின் திருமணம் ஜெயலலிதாவின் ஆசியோடு நடந்தது. கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சபீதா நியமிக்கப்பட்டார். ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும் தேதியை சபீதா அறிவித்தார். அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'என் அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி அறிவிக்கலாம்?’ என்று கேட்க... விஷயம் பூதாகரமானது.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் சி.வி.சண்முகம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆனார். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆட்சி மேலிடம் கருதியது. உடனே, சமச்சீர் கல்வியை நிறுத்தி சபீதா உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தி.மு.க. கோர்ட்டுக்குச் சென்றது. இதுபற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, 'தி.மு.க. ஆட்சியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்த நீங்களே, இப்போது சமச்சீர் கல்வி வேண்டாம் என்று உத்தரவு போட்டால், எல்லோரும் சிரிப்பார்கள். கோர்ட்டும் ஏற்றுக்கொள்ளாது’ என்றாராம்.

'கோர்ட்டில் நமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும்’ என்ற சபீதா, பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கலாம் என்றாராம். 'அவசரப்பட வேண்டாம்’ என்று சி.வி.சண்முகம் சொல்ல... 'இல்லை சார்... மேம்கிட்ட (முதல்வர்) நான் பேசிக்கிறேன்’ என்று சபீதா சொல்லவும் வாயடைத்துப் போனாராம் சி.வி.சண்முகம். கடைசியில், இந்தப் பிரச்னையால்தான் சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு தோற்றது. இதோடு, சுமார் 50 கோடி ரூபாய் செலவில் அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்ட பழைய பாடத்திட்ட புத்தகங்கள் வீணானது.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து நடந்தபோது தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த முத்து பழனிச்சாமி மீதும் விமர்சனம் எழுந்தது. இவரை இணை இயக்குனராக்க நியமிக்க முடிவெடுத்ததிலும் சபீதாவின் கைதான் ஓங்கியிருந்தது. இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், சி.வி.சண்முகத்தின் பதவி காலியானது.

அடுத்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொஞ்ச நாட்களே தொடர முடிந்தது. அவருக்குப் பிறகு, சிவபதி வந்தார். அப்போதும் சபீதாவின் செல்வாக்கே ஓங்கியிருந்தது. முதல்வர் அலுவலகத்தில் சபீதாவுக்கு உள்ள செல்வாக்கால், அந்தத் துறைக்கு வந்த அமைச்சர்கள் பயந்து நடுங்கினர். சிவபதிக்குப் பின்னர் வைகைசெல்வன் வந்தார். கொஞ்ச நாட்களிலேயே சபீதாவுக்கும் அவருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது. ஆசிரியர் கவுன்சிலிங்கில் அமைச்சர் தரப்பு கொடுத்த டிரான்ஸ்ஃபர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. சமீபத்தில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் டிரான்ஸ்ஃபர்கள் செய்யப்பட்டனர்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த தேவராஜன் தொடரட்டும் என்று அமைச்சர் வைகைசெல்வன் சொல்ல... அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்த இடத்துக்கு ராமேஸ்வர முருகனைக் கொண்டுவந்தார் சபீதா. மொத்தத்தில் கல்வித் துறையை சூப்பர் உமன் போல செயல்படுகிறார்'' என்றார்கள்.
இதுதொடர்பாக விளக்கம் பெற சபீதாவை தொடர்புகொண்டோம். ''நான் ஒரு அரசு அதிகாரி.

உங்களுக்கு ஏதாவது விவரங்கள் தெரிய வேண்டும் என்றால், முதல்வர் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றார் சுருக்கமாக. அவரது ஆதரவு அதிகாரிகளிடம் பேசியபோது, ''ஊழலுக்கு ஆதரவாக நடந்துகொண்ட அமைச்சர்கள் விஷயத்தில் கறாராக நடந்துகொண்டார் சபீதா. அத னால் பாதிக்கப்பட்டவர்கள் அவதூறு கிளப் புகிறார்கள்'' என்றார்.

சபீதாவுக்கு எதிராக தகவல்களைத் திரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் அ.தி.மு.க. ஆதரவு தலைமைச் செயலக அதிகாரிகள். இதில் ஸ்குவாஸ் விளையாட்டு விவகாரம் பெரிதாகப் பேசப்படுகிறது. 

 thanks: Vanimedia

கல்வி அலுவலகத்தை ஆக்கிரமித்த ஆசிரியர்கள் ஒரு அறைக்கு இரு துறைகள் போட்டி

மதுரை : மதுரை தல்லாகுளம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில், உள்ள பயிற்சி அறைக்குள், ரெகுலர் சி.இ.ஓ., அனுமதியின்றி, எஸ்.எஸ்.ஏ., திட்ட
ஆசிரியர்கள் நேற்று புகுந்து ஆக்கிரமித்தனர்.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலம் மராமத்து செய்யப்பட்ட போது, ரெகுலர் சி.இ.ஓ., அலுவலகம், இதே வளாகத்தில் இருந்த, அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய அறைக்கு மாற்றப்பட்டது. சி.இ.ஒ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, புதிய கட்டடத்திற்கு அந்த அலுவலகம் கடந்த வாரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்பின், எஸ்.எஸ்.ஏ., திட்ட அறையை, தல்லாகுளம் கமலா தெருவில் இயங்கும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தை கொண்டுவர ரெகுலர் சி.இ.ஓ., நடவடிக்கை எடுத்தார்.
இதற்கு எஸ்.எஸ்.ஏ., அலுவலகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அறையை ரெகுலர் சி.இ.ஓ., ஒப்படைக்காத நிலையில், எஸ்.எஸ்.ஏ., அலுவலக ஆசிரியர் பயிற்றுனர்கள், அந்த அறைக்குள் திடீரென நுழைந்து, ஆக்கிரமித்தனர்.
சி.இ.ஓ., அமுதவல்லி கூறியதாவது: அந்த பயிற்சி அறையில் தற்போது அதிக எண்ணிக்கையில் பயிற்சிகள் நடப்பதில்லை. அனைத்து அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் இருந்தால் நல்லது என்று கருதிதான், வெளியே இயங்கும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தை இங்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தேன். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, என்றார்.
எஸ்.எஸ்.ஏ., திட்ட சி.இ.ஓ., பார்வதி கூறியதாவது:பல்வேறு பயிற்சிகள் இந்த அறையில் நடக்கின்றன. ரெகுலர் சி.இ.ஓ., பராமரிப்பு பணி முடிந்த பின் மீண்டும் எங்களிடம் அந்த அறையை
ஒப்படைக்கப்படவில்லை. அதில், ரூ.பல லட்சம் மதிப்பில் "ஸ்மார்ட் போர்டு கிளாஸ்' பொருட்கள் உள்ளன. தேவையில்லாமல், வேறு இடத்தில் செயல்படும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தை இங்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது, என்றார்.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொது தேர்வு எழுத இயலாது

வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1988 ஜூன் 1க்கு முன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, இடை நிலைஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமை ஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்டது. ஆனால், 1988 ஜூன் 1க்கு, பிறகு, 1995 டிச., 31 வரை, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்படவில்லை. இதையடுத்து, தமிழக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்த, 63 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டும், இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமைஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்க உத்தரவிடப்பட்டது. இதை பின்பற்றி, 1,528 பேர் மீண்டும் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்கும், வழக்கு தொடுக்காதவர்களுக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமைஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கவும், பணப்பலன் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. இதற்காக, அரசுக்கு பல கோடி ரூபாய் தேவைப்பட்டதால், அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், வழக்கு தொடுத்த 1,528 பேருக்கு மட்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப்பலன் வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

9/12/2013

அலுவலகங்களில் சிறப்புப் பதிவேடு!

சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தின்படி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள், தொடக்க, பள்ளிக் கல்வி இயக்ககங்களில் பதிவேடுகள் தயார் செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதிவேட்டில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளரது பெயர், பணிபுரியும் இடம், கோரிக்கை மனு வழங்கிய நாள், கோரிக்கை விவரம், தீர்வு செய்திருந்தால் அதன் விவரம் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை உயர் அலுவலர்களின் ஆய்வுக்குள்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
----- அ.சபிதா - தமிழக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலர்

போலி சான்றிதழ் கொடுத்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத முயன்ற தனித்தேர்வர்கள்!

கடலூர்: போலி பள்ளி சான்றிதழ் கொடுத்து பத்தாம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்கள் எழுத முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியின் பின்னணியில் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருத்தாச்சலத்தில் உள்ள மாவட்ட கல்வித் துறை அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் போது, சிலர் கொடுத்துள்ள தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை கல்வித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, போலீசில் புகார் செய்த கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஒவ்வொரு பாடத்திற்கும் சில ஆயிரம் ரூபாய் கொடுத்தால், அந்தந்த பாடங்களில் தேர்ச்சி அடைய செய்துவிடுவதாக சிலர் உறுதியளித்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


அவர்கள் சொல்லும் தேர்வு மையத்தில் தேர்வு எழுதினால், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் தேர்ச்சி பெற உதவி செய்வதாக, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் டியூஷன் சென்டர் ஆசிரியர் கூறியதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இவர்களைப் போல சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருத்தாச்சலம் கல்வி மாவட்டத்தில் தனித்தேர்வுக்கு, போலி சான்றிதழ்களை உருவாக்கி விண்ணப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஒரு நாள் தங்கி ஆண்டாய்வு செய்ய உத்தரவு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்து அறிக்கை வழங்குவது வழக்கம். இப்போது விரைவில் ஆண்டாய்வு தொடங்கவுள்ள நிலையில் ஆண்டாய்வு செய்வது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''ஒவ்வொரு யூனியனிலும் வாரத்திற்கு 2 பள்ளிகள் வீதம் ஆண்டாய்வுகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் ஒரு நாள் முழுவதும் (பள்ளி வேலை நேரம்) தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கல்வி தரம் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சிறப்பாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் மாணவர்களிடம் 2 மணி நேரம் கலந்துரையாட வேண்டும்.

இலவச சைக்கிள், இலவச சீருடை உள்பட அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்க கூடிய திறந்த வெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். தொடர்ந்து அந்த குறைகள் நீக்கப்பட்டதா என்பதை கண்காணிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

அரசாணை (நிலை) எண்.179 பள்ளிக் கல்வி (தொக1(2))த் துறை நாள் :06.09.2013-க்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை

சிங்கம்புணரி கருவூலத்தின் இயலாமையும் - பிரிவு அலுவலர்களின் ஆற்றாமையும்.

சிங்கம்புணரி கருவூலத்தில் கடந்த 46 நாட்களாக மெயின் சர்வர் செயல் இழந்து விட்டது. அரசு ஊழியர் -ஆசிரியர்களின் பணப்பலன்களை கையாளும் அலுவலகத்தின் அவல நிலையை எண்ணி சம்பளம் பெற்று வழங்கும் அலவலகங்களில் பணியாற்றும் அலவலர்கள் புலம்பி வருகிறார்கள். சம்பள பட்டியல் மற்றுமே பெற்றுக்கொள்வோம் என்றும், அதுவும் 15ந் தேதிக்குள் சிவகங்கை கொண்டு வரவேண்டும் என்று சொல்வதால் பல அலுவலக பணிகள் தேங்கியுள்ளன. தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் இருந்து வர வேண்டும் என்ற பல்லவி பல நாட்களாக சொல்லி வருவதாக அலுவலக பணியாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர். அயல் நாடுகளில் 5நிமிடத்தில் முடிக்கப்படும் இந்த மாதிரி குறைகளை மாதக்கணக்கில் இழுத்தடிப்பதுதான் சிறந்த நிர்வாகமா? சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஏன் மெத்தனமாக செயல்படுகிறார்கள்? இவ்வாறான செயல்பாடுகளால் அரசு அலுவலகங்களில் மீதான நம்பகத்தன்மை குறைய வாய்ப்புள்ளது. இது முதல்வரின் நிர்வாகத்திறனை கேள்வி குறியாக்கி விடாதா? எனவே கருவூலத்துறை இதில் அதிக கவனம் செலத்த வேண்டும். கருவூலத்துறை ஆணையாளர் மதிப்புமிகு  Dr. M. Veera Shanmugha Moni, I.A.S.,  அவரக்ளின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு TNPTF  திட்டமிட்டுள்ளது.
இதை அனைவரும் பகிரவும்.
உண்மையை உரக்கச்சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
__________________MP@TNPTF______________________

20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்

இரட்டைப்பட்டம் வழக்கு ...........இழுக்கும் ஜவ்வு?

நேற்று பட்டியலிடப்பட்ட வழக்கு இன்று காணவில்லை. காரணம் யார்? நான் இல்லை. நீ இல்லை என்ற இரைச்சலை தவிர ஒன்றும் கிடைக்கவில்லை. நேற்று நீதியரசரிடம் அனுமதி வாங்கியவர் யார்? என்பது மில்லியன் கணக்கு கேள்வி. அப்பா....... இப்பேயே கண்ணை கட்டுதே...
நண்பர்களே உங்களுக்கெல்லாம் தெரிவிப்பது என்னவென்றால் வழக்கு இனிமேல் 18.09.2013 அன்றுதான் வரும். அதுவரை வட தமிழகத்தில் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில வழக்குகளில் தீர்ப்பு வரும். மற்றவர்கள் நொய் நொய்யென்று இந்த வழக்கைப்பற்றியே விசாரிப்பதை விட்டுவிட்டு வேற உருப்படியான வேலையை பாருங்க. இந்த வாரம் கருத்து கணிப்பு இத்துடன் நிறைவு பெறுகிறது.
அடுத்த புதன்கிழமை உங்களை சந்திக்கும் வரை உங்களை சிந்திக்க வைத்த விடை பெறுவது உங்கள் சிங்கை முத்துப்பாண்டியன். நன்றி.

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
_____________________MP@TNPTF___________________________

பிளஸ்-2 விடைத்தாளை திருத்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கண்டிப்பாக வரவேண்டும்

பிளஸ்-2 விடைத்தாள் களை மதிப்பீடு செய்ய அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வரவேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்ப உள்ளார்.
ஒரு மதிப்பெண் மதிப்பு
தமிழ்நாட்டில் மாணவ- மாணவிகள் உயர்கல்வி படிக்க, குறிப்பாக தொழில் கல்வியான மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு பிளஸ்-2 மார்க் தேவை. இந்த மார்க்குகளில் ஒரு மார்க் குறைந்தாலும் அவர்கள் விரும்பும் படிப்பு கிடைக்காமல் போகலாம்.
எனவே மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் மிக மதிப்புள்ளதாக கருதுகிறார்கள். அதுபோல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மார்க் எடுத்தால்தான் பிளஸ்-1 வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவை பெறமுடியும். எனவே மாணவர்கள் போட்டி போட்டு படிக்கிறார்கள்.
அவ்வாறு படிக்கும் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஆசிரியருக்கு ஆசிரியர் 2 மார்க் அல்லது 3 மார்க் வித்தியாசம் இருக்கலாம். அதுவும் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் அந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது. ஆனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் பல குளறுபடிகள் நடக்கின்றன. அதனால்தான் மறுகூட்டல் என்றும், மறுமதிப்பீடு என்றும் நடக்கிறது.
எனவே விடைத்தாளை சரியாக மதிப்பீடு செய்ய என்ன செய்யப்போகிறீர்கள் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் கு.தேவராஜனிடம் நேற்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-
விடைத்தாள் மதிப்பீடு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள அனுபவம் மிக்க ஆசிரியர்கள் பலர் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வருவதில்லை. மறைந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு எடுக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் மதிப்பீடு செய்ய வேண்டும்.
சிலர் உடல் நலம் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் வரவேண்டும்.
இதற்காக இப்போதே தயாராக இருக்கிறோம். அதாவது எந்த பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் எந்த பாடத்தை எடுக்கிறார்கள் என்ற விவரத்தை பெறுகிறோம்.
முதல் முறையாக
பள்ளிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள் என்ற விவரம் தரும்போதே விடைத்தாள் திருத்துவதற்கும் ஆசிரியர்கள் பெயர்களை தரவேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கூட்டம் நடத்தி தெரிவிக்க உள்ளோம். கடிதமும் அனுப்பப்படும். 10 வருடம் அனுபவம் உள்ள சீனியர் ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்த கண்டிப்பாக வரவேண்டும்.
மேலும் விடைத்தாள்களும் 6 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் ஒரு பாடம் திருத்தி முடிக்கப்பட வேண்டும்.
இப்படி செய்வதால் விடைத்தாள் திருத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் கிடைக்கும். வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் கட்டமாக இந்த சீனியர் ஆசிரியர்களை வைத்து விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

பிளஸ்-2 விடைத்தாளை திருத்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கண்டிப்பாக வரவேண்டும்

பிளஸ்-2 விடைத்தாள் களை மதிப்பீடு செய்ய அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வரவேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்ப உள்ளார்.
ஒரு மதிப்பெண் மதிப்பு
தமிழ்நாட்டில் மாணவ- மாணவிகள் உயர்கல்வி படிக்க, குறிப்பாக தொழில் கல்வியான மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு பிளஸ்-2 மார்க் தேவை. இந்த மார்க்குகளில் ஒரு மார்க் குறைந்தாலும் அவர்கள் விரும்பும் படிப்பு கிடைக்காமல் போகலாம்.
எனவே மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் மிக மதிப்புள்ளதாக கருதுகிறார்கள். அதுபோல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மார்க் எடுத்தால்தான் பிளஸ்-1 வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவை பெறமுடியும். எனவே மாணவர்கள் போட்டி போட்டு படிக்கிறார்கள்.
அவ்வாறு படிக்கும் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஆசிரியருக்கு ஆசிரியர் 2 மார்க் அல்லது 3 மார்க் வித்தியாசம் இருக்கலாம். அதுவும் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் அந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது. ஆனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் பல குளறுபடிகள் நடக்கின்றன. அதனால்தான் மறுகூட்டல் என்றும், மறுமதிப்பீடு என்றும் நடக்கிறது.
எனவே விடைத்தாளை சரியாக மதிப்பீடு செய்ய என்ன செய்யப்போகிறீர்கள் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் கு.தேவராஜனிடம் நேற்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-
விடைத்தாள் மதிப்பீடு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள அனுபவம் மிக்க ஆசிரியர்கள் பலர் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வருவதில்லை. மறைந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு எடுக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் மதிப்பீடு செய்ய வேண்டும்.
சிலர் உடல் நலம் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் வரவேண்டும்.
இதற்காக இப்போதே தயாராக இருக்கிறோம். அதாவது எந்த பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் எந்த பாடத்தை எடுக்கிறார்கள் என்ற விவரத்தை பெறுகிறோம்.
முதல் முறையாக
பள்ளிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள் என்ற விவரம் தரும்போதே விடைத்தாள் திருத்துவதற்கும் ஆசிரியர்கள் பெயர்களை தரவேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கூட்டம் நடத்தி தெரிவிக்க உள்ளோம். கடிதமும் அனுப்பப்படும். 10 வருடம் அனுபவம் உள்ள சீனியர் ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்த கண்டிப்பாக வரவேண்டும்.
மேலும் விடைத்தாள்களும் 6 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் ஒரு பாடம் திருத்தி முடிக்கப்பட வேண்டும்.
இப்படி செய்வதால் விடைத்தாள் திருத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் கிடைக்கும். வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் கட்டமாக இந்த சீனியர் ஆசிரியர்களை வைத்து விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

புது மந்திரிக்கு நாளை "பாலபாடம்': ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

பள்ளி கல்வி துறைக்கு, ஐந்தாவது அமைச்சராக, கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள பழனியப்பனுக்கு, நாளை (13ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, துறை அதிகாரிகள், "பாலபாடம்' நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளில், அதிகாரிகள், தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

எந்த துறைகளுக்கும் இல்லாத அளவிற்கு, பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில், பள்ளி கல்வித்துறைக்குத் தான் அதிகம். 17 ஆயிரம் கோடி ரூபாய்! அதேபோல், அதிக அமைச்சர்களை பார்த்த துறையிலும், பள்ளி கல்வித்துறைக்குத் தான் முதலிடம். எதற்கும் சளைக்காத அளவிற்கு, சர்ச்சைகளும், பிரச்னைகளும், இந்த துறையில் தான் அதிகம். சி.வி.சண்முகம், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன் ஆகிய, நால்வரைத் தொடர்ந்து, உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், பள்ளி கல்வித்துறைக்கு, ஐந்தாவது அமைச்சராக, கூடுதல் பதவியை ஏற்றுள்ளார். கடந்த, 5ம் தேதி, வைகை செல்வன் நீக்கப்பட்டு, பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பு தரப்பட்டது. அமைச்சர்கள் வருவதும், போவதுமாக இருப்பதால், துறையில் முக்கியப் பணிகள், முடங்கிப்போய் உள்ளன. டி.பி.ஐ., வளாகத்தில், அறிவுசார் பூங்கா கட்டடம் கட்டும் திட்டம், கிடப்பில் உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, அறிவித்து, பல மாதங்களாகி விட்டன. கல்வியாண்டு துவங்கி, தற்போது, காலாண்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை அறிவிக்கவில்லை. இதனால், நடுநிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர், தனியார் பள்ளிகளுக்கு சென்று விட்டனர். இப்படி, பல பிரச்னைகளுக்கு நடுவே, ஒவ்வொருவராக வரும் அமைச்சர்களுக்கு, "பாலபாடம்' எடுப்பதே, அதிகாரிகளுக்கு, முக்கிய வேலையாகி விட்டது. அந்த வரிசையில், துறைக்கு புதிய அமைச்சரான பழனியப்பனுக்கு, நாளை மாலை, 4:00 மணிக்கு, "பாலபாடம்' நடத்த, அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் துறைகள், அந்தந்த துறைகளின் செயல்பாடுகள், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி, விரிவாக, அமைச்சரிடம் விளக்குவதற்கு, அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். நாளை மாலை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல்கழக கூட்ட அரங்கில், இந்த கூட்டம் நடக்கிறது. இதற்கு முன்னதாக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, இன்று காலை, 10:30 மணி முதல், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, துறை செயல்பாடுகள் குறித்து, விவாதிக்கிறார். இந்த கூட்டமும், பாடநூல்கழக கூட்ட அரங்கில் நடக்கிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் அக்.,31 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

இந்த திருத்த பணிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி மையத்தில் நடக்கிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருத்தபணிகள், விண்ணப்பங்கள், அடிக்கடி ஏற்படும் பிழைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், இந்த பயிற்சியை அளிப்பர். அக்.,1ல் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை, அக்.2, ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அந்த கிராமத்தில் பதிவு செய்த வாக்காளர் பட்டியலை பெயர் வாரியாக பொதுமக்கள் முன்னிலையில் படித்து, திருத்தம் செய்யவும் கூறப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்?: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு: அதிகாரி நிராகரிப்பு

கோவை:மாவட்ட அளவில் நடக்கும் கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கல்வித்துறை நிராகரித்துள்ளது.கோவையில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், மெட்ரிக் பள்ளி மாணவர்களின் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள், தரப்பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டனர். முன்னிலை இடங்கள் அனைத்து பிரிவுகளிலும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தட்டிச்சென்றுள்ளனர்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மணிகண்டன் கூறுகையில், ""மாவட்ட அளவில் நடக்கும் கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 7ம் தேதி நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் எவ்வித அறிவிப்பும் இன்றி, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ""சிறப்பு பயிற்சி வகுப்பில், பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று தரவரிசை பட்டியலில் உள்ள மெட்ரிக் பள்ளி மாணவர்களுடன், கடந்த ஓராண்டு காலமாக மட்டுமே பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களால், எவ்வாறு போட்டியிட முடியும்? ஒவ்வொரு முறையும் போதிய பயிற்சிகள் இன்றி அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். ""அரசு பள்ளி மாணவர்களுக்கு எவ்வித அனுபவமும் இல்லாத ஆசிரியர்கள் தான் பயிற்சி அளிக்கின்றனர்,'' என்றார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு) திருவளர்செல்வி கூறுகையில், ""அரசு விதிமுறைகளின் படி சர்வதேச போட்டிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நல்ல நோக்கத்துடன் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக போட்டிகள் நடத்த வேண்டும் என்பது மாவட்ட அதிகாரிகள் முடிவு செய்ய இயலாது. மாணவர்களின் திறமைகளை மட்டுமே மதிப்பீடு செய்கிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகளை அளித்து, திறமையான மாணவர்களாக உருவாக்காமல், தனியாக போட்டி நடத்த கோரிக்கை விடுவது, குறுகிய மனப்பான்மையை காட்டுவதாக உள்ளது,'' என்றார்.

ஆசிரியல்லாத பணியாளர்களும் குறைதீர் கூட்டத்தில பங்கேற்கலாம்

9/11/2013

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசித் தேர்வுக்கு பின் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News

சிங்கம்புணரியில் கையூட்டு நிறுத்தப்பட்ட வரலாறு.

சிங்கம்புணரியில் 2007க்கு முன்னால் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் மற்றும் கருவூலத்தில் சர்வ சாதரணமாக கையூட்டு பெறுவது என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 2007க்கு பின்னால் தமிழ்நாடு ஆரமப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறு கட்டமைப்பு செய்யப்பட்டு இயக்க எழுச்சி நாள் மூலம் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் பர்வதராஜன் அவர்களின் இயக்க பேரூரையோடு எழுச்சி கண்டது. அதன் பின்னாள் மாற்று இயக்கமில்லா ஒன்றியமாக சிங்கம்புணரி மாற்றம் கண்டது. இயக்கம் அலுவலகத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை கொஞசம் கொஞசமாக களைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கையூட்டு என்பது கருவூலக ஊழியர்கள் சிலரின் வலுக்கட்டாயமான வசூல் என்பது தெரியவந்தது. உடனடியாக இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் செய்தி ஊடகத்தோடு சிங்கம்புணரி கருவூலகம் முற்றுகையிடப்பட்டது. கருவூலத்தில் இருந்து குறிப்பிட்ட அலுவலரால் உதவித்தொடக்கக்கல்வி அலுவரகத்துக்கு அனுப்பப்பட்ட துண்டுச்சீட்டு நமக்கு கிடைத்தது. பார்த்ததும் அதிர்ச்சி. அதில் மளிகை கடை சிட்டை போல் வரவேண்டிய கையூட்டு பண பாக்கி இன வாரியாக, தேதி வாரியாக எழுதப்ட்டிருந்தது. இது குறித்து நீண்ட விவாதம் கருவூல அலவலரிடம் நடந்தது. அதன்பின் மறுநாள் தினத்தந்தி முக்கிய செய்தியாக சிங்கம்புணரி கருவூலகம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் முற்றுகை என தமிழகம் முழுமைக்கும் செய்தி வெளியிட்டது. அச்செய்தி உயர் அலுவலர்களின் பார்வைக்கு சென்று விசாரணை துவங்கியது. நாமும் மாவட்டக்கிளையின் உதவியோடு மாவட்ட கருவூலக அதிகாரியிடம் மனு அளித்தோம். அப்போதைய மாவட்ட கருவூலக அலவலர் திரு. முரளிதரன் அவர்கள் இயக்கத்தின் மீது அதிக மரியாதை செலுத்தி நாம் கொடுத்த மனுவிற்கு உடனடியாக விசாரணை அதிகாரியை நியமித்து அனைத்து உண்மைகளையும் வெளிகொணர்ந்து அதற்கு காரணமான அலுவலரை உடனடி இடமாற்றம் செய்தார். தனிப்பட்ட தொலை பேசி எண் கொடுத்து தினமும் ஒரு மாத காலத்திற்கு கருவூல செயல்பாடுகள் குறித்து அலைபேசியில்  நம்மிடம் உரையாடினார். நாமும் இது குறித்த அனைத்து தகவல்களையும் கருவூலத்துறையின் அப்போதைய ஆணையாளர் மதிப்புமிகு. மோகன் பியாரே அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தோம். இதன் காரணமாக அன்றைய தினம் நிறுத்தப்பட்ட கையூட்டு இதுநாள் வரையில் தொடர்கிறது. சிங்கம்புணரி கருவூலத்தில் பணம் பெறும் அனைத்து அலவலகங்களும் செய்ய தயங்கிய இச்செயலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டது. அதன் மூலம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் அடைந்தனர். உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கான மிக அவசியமான தேவைகளை நிறைவேற்ற தேவைப்படும் பணத்திற்காக இயக்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் மாதத்திற்கு ஆர்.டி.ரூ.500 செலுத்த ஏற்பாடு செய்தோம். அதன் மூலம் பெறப்படும் கமிசன் தொகையை அலுவலகத்தின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்திக்கோண்டோம் அதன் கணக்கு வழக்குகளை இயக்கத்திற்கு முறையாக தெரியப்புடுத்த கட்டாயப்படுத்தினோம். ஒன்றியம் கையூட்டு இல்லாத ஒன்றியமாக திகழ்கிறது. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. இது யார் மனதையும் புன்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெளியிட்டோம்.

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
_________________MP@TNPTF_______________________

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், +1,+2 பள்ளி மாணவர்களுக்கு ‌காலாண்டு தேர்வுகள் வழக்கம் போல்  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கி போன கருவூலக செயல்பாடுகள்

சிங்கம்புணரி கருவூலத்தில் உள்ள கணினியின் மையக்கட்டுபாட்டு செயலகம் கடந்த 45 நாட்களுக்கு மேல் முடங்கி பேயுள்ளது. சரி செய்கிறோம் என்று ஜவ்வாக இழுத்தடிக்கிறார்கள். இதனால் அரசு அலுவலரக்ள்-ஆசிரியர்களின் பண பலன்கள் பெறுவதற்கு 75கி.மீ.க்கு அப்பால் உள்ள சிவகங்கை மாவட்ட கருவூலகத்திற்கு அலவலர்கள் சென்று வரக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. மாதச்சம்பளம் தவிர மற்ற பலன்களை பெற முடியவில்லை. அதிகாரிகள் இவ்விசயத்தில் மெத்தனம் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உயர்மட்ட செயற்குழு கூடி இவ்விசயத்தில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்துள்ளது. ஆமை வேகத்தில் நடக்கும் கருவூலக செயல்பாடுகள் மீது உயர் அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இயக்கம் கேட்டுக்கொள்கிறது. சிங்கையில் பணியாற்றும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாயுள்ளனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!

47 கேள்விகளில் தவறு தமிழ் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட தடை

தமிழகத்தில் காலியாக உள்ள 605 தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான தேர்வு ஜூலை 21ல் நடந்தது. தேர்வின் போது, ஏ, பி, சி, டி என நான்கு பிரிவு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் பி பட்டியலில் இருந்த 150 கேள்விகளில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. இதனால், கேள்வியின் அர்த்தம் மாறியிருந்தது. விடைகளிலும் பிழை காணப்பட்டது.கேள்வித்தாளில் இருந்த தவறு குறித்து தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன்.

அவர் தவறை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, பிழையுள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கவும், என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள நேரத்தில் இதுபோன்ற தவறுகளுடன் கேள்வித்தாள் தயாரித்ததை ஏற்க முடியாது. இதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது கவனம் செலுத்தாமல் கேள்வித்தாள் தயாரித்தது தவறு. 47 கேள்விகளில் தவறு இருந்துள்ளது. இதை ஏற்க முடியாது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் இயக்குனர் செப். 16ல் நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்

செப்டம்பர் 11: மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று!

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!