பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/29/2013

TNPTF - மாநில மையக்கூட்டம் விபரம்

மாவட்ட செயலாளர்கள் கூட்ட அழைப்பிதழ்

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!! உரிமையைப் போராடி பெறுவோம்!!!!

தமிழ்நாட்டடில் பணிபுரியும் அரசு ஊழியர் - ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் ஆட்சியாளர்களின் மாற்றந்தாய் மகனாக மாற்றப்பட்டதன் மர்மம் என்ன? எங்களை ஆட்சியாளர்களின் மனத்திறையிலிருந்து பிரித்த கயவர்கள் யார்? ஒரே பணி நிலை - ஒரே கல்வி நிலை - மாறுபட்ட ஊதியம் ஏன்? விளக்கினார்களா? முதல்வருக்கு. இல்லை முதல்வர்தான் விளக்கம் கேட்டாரா? என்ன நடக்கிறது இங்கே? ஒரு ஜனநாயக நாட்டில் இதைவிட அறவழியில் எவ்வர்று நம் உரிமையை கேட்பது. கேட்பது உரிமை என்று தெரிந்தும் அரசு ஊமையாய் இருப்பது ஏன்? புலனாய்வு அதிகாரிகள் முதல்வருக்கு அனுப்பிய அறிக்கையில் 40000 இடைநிலை ஆசிரியர்களின் அவல நிலையை உணர்த்தவில்லையா? இல்லை முதல்வர் உணர விரும்பவில்லையா? ஒரு தாய் தன் பிள்ளைகளின் பசியறிந்து உணவளிக்க வேண்டாமா? பிள்ளை அழுது புலம்பி நா வற்றியும் கூட வரம் தர வில்லையென்றால் என்ன செய்வது? சுயநலமிக்க சில தலைவர்களின் தான்தோன்றிதனமான முடிவுகளால் தரம் தாழந்து போன எங்களின் வாழ்வை மீட்டெடுப்பது எப்போது? அருமை தோழர்களே தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்தின் மாநிலத் தலைமையின் அலை பேசியை தொடர்ந்து அலையுங்கள். கூட்டுப்போராட்டம் நடத்துவதற்கு நெருக்குதல் கொடுங்கள். டிட்டோ-ஜேக் கூட்டம் ஏன் கூட்ட மறுக்கிறீர்கள் என்று வினா தொடுங்கள். வர மறுக்கும் தலைமைகளை இயக்க நடவடிக்கைகளிலிருந்து அப்புறப்படுத்துங்கள். நம்மை வைத்து சுக போக வாழ்க்கை வாழும் அவர்களின் முகத்திரையை கிழித்தெறியுங்கள். யோசிக்க நேரமில்லை. சிந்தித்து சிந்தித்து செயலற்று போய்விட்டோம்? உள்ளே நடக்கும் திரை மறைவு வேலைகளை நம்மிடம் மறைத்து தவறான வரலாற்றை நம் மனதில் பதியவைத்து நம்மை அடி முட்டாளாக ஆக்குவதை அம்பலப்படுத்துங்கள். கேள்வி கேட்க முடியாத உயரத்தில் இருக்கும் தலைமை நமக்கு வேண்டாம. நம்மை உறுப்பினாரக கொண்டுள்ள இயக்கத்தில் கேள்வி தொடுக்க முழு உரிமை நமக்கு உண்டு என்பதை உணருங்கள். உசுப்புங்கள் உங்கள் தலைமையை. தனிச்சஙக் நடவடிக்கை தவிர்த்து கூட்டு நடவடிக்கைக்கு கூப்பாடு போடுங்கள். உறங்க நேரமின்றி உழைக்க தயாராகுங்கள். உண்மையான போர்களம் எது என்பதை உலகிற்கு புரிய வையுங்கள். உன்னோடு களம் காண ஆவலாக உள்ளேன். உரிமை போரின் சங்கொலி என் காதில் ஒலிக்கத் தொடங்கி விட்டது. போர்! போர்! வீர வேல்! வெற்றி வேல்!!
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!!
தோழமையுடன்...
A.Muthuppandian
TNPTF _ Singampunari

TET தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி.

கொடுப்பதில் மகிழ்வு வாரம் - பள்ளிகளில் கொண்டாட வேண்டும்

ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனைக் குழு

9/28/2013

Watch Makkal T.V.

இன்று (28.9.2013) மக்கள் தொலைக்காட்சியில் காலை 11.00 மணி முதல் முதல் நண்பகல் 12.00 மணி வரை ரேடியாக ஒளிபரப்பப்படும் நீதியின் குரல் என்னும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் தோழர் தி.கண்ணன் அவர்கள் பங்கேற்கிறார். அனைவரும் கண்டு பயனடைய வேண்டுகிறோம். இத்தகவலை மற்றவர்களுக்கும் பகிரவும்.
தோழமையுடன்........
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டத்தலைவர்

இன்று மாவீரன் தோழர் பகத்சிங் பிறந்தநாள்

 

தோழர்களே அழையுங்கள் - அளியுங்கள் - பகிருங்கள்

சிங்கம்புணரி பள்ளி எண்-1ல் பணியாற்றும் இடைநிலையாசிரியர் திருமதி.சித்ராதேவி அவர்களின் சகோதரர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவருக்கு அவசரமாக B+ இரத்தம் தேவைப்படுகிறது. குருதி கொடையாளர்கள், கொடையுள்ளம் கொண்டோர் சகோதரி அவர்களை 9487482108 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும். அதிகம் இரத்தம் தேவைப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வில்லை

அக். 3 : சர்வதேச போராட்ட தினம்

உலக தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வோராண்டும் அக்டோபர் 3 ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உலகில் உள்ள உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் அறை கூவல் விடுத்திருக்கிறது
.கடந்த மூன்றாண்டு காலமாக உலகத் தொழிற்சங்க சம்மேளனம் சர்வதேச போராட்ட தினத்தைக் கொண்டாடி வருகிறது. 2009 ஏப்ரல் 1 அன்று சுரண்டலுக்கு எதி ராக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்ற முழக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்பட்டது.2010இல் செப்டம்பர் 7 அன்று இந்நாள் அனுசரிக்கப்பட்டது. முதலாளித்துவ உலகம் ஆழமான நெருக்கடிக்குள்ளாகி சிக்கித் தவித் துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘இந் நெருக்கடிக்கு நாம் உதவிட முடியாது’’ என்ற முழக்கம் அன்றைய தினம் முன்வைக்கப்பட்டது.

மிக வும் கடினமாகப் போராடி ஈட்டிய உரிமை களைப் பாதுகாத்திடுவோம் என்றும் முழக்க மிடப்பட்டது.இந்தியாவில், ஆட்சியாளர்களின் கொள் கை களை மாற்றக் கோரியும், உழைக்கும் மக்க ளின் அத்தியாவசியக் கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய அளவில் மத்தி யத் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம் மேளனங்கள் இணைந்து நடத்திய நாடு தழு விய அளவிலான வேலை நிறுத்தமும் அனு சரிக்கப்பட்டதும், அதே நாளில் தற்செயலாக நடந்தது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் 16 ஆவது மாநாடு, 2011 ஏப்ரலில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட் டின் போதுதான் உலகத் தொழிற்சங்க சம் மேளனத்தின் அமைப்பு தினமான அக்டோபர் 3 அன்று சர்வதேச போராட்ட தினம் அனு சரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிற்சங்க சம்மேளனம் 1945 அக்டோபர் 3 - 8 தேதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாட்டில் அமைக்கப்பட்டது.

உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வரலாற்றின் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கேற்ப வர்க்கரீதியாக அமைந்த சர்வதேச தொழிற்சங்கமாக இன்றளவும் தொடர்கிறது. 16ஆவது மாநாட்டின் அடிப்படையில், 2011 அக்டோபர் 3, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, கூட்டு பேர உரிமைகளை உத்தர வாதப்படுத்துதல், தொழிற்சங்க மற்றும் ஜன நாயக உரிமைகளை வழங்குதல், வாரத்தில் ஐந்து நாட்களுடன் 35 மணி நேர வேலை, சிறந்த ஊதியம் ஆகிய கோரிக்கை சாசனங் களுடன் அனுசரிக்கப்பட்டது.2012ஆம் ஆண்டு இந்நாள் உலகம் முழு வதும் உண்ண உணவு, குடிதண்ணீர், சுகா தாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனுசரிக்கப் பட்டது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் இக்கோரிக்கைகளை இறுதிப்படுத்துகையில், தொழிற்சங்கங்கள் மனிதகுலத்தின் இந்த அடிப்படைக் கோரிக் கைகளை எழுப்பிட வேண்டும் என்று குறிப் பிட்டது. உலகில் உள்ள பன்னாட்டு நிறுவனங் கள் பல நாடுகளிலும் உள்ள இயற்கைச் செல் வங்களை சூறையாடிச் செல்வதை அடுத்து இவ்வாறு கோரிக்கைகளை உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வடிவமைத்தது. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் இயற் கைச் செல்வங்களைச் சூறையாடிச் செல்லும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விதத்தில் இக்கோரிக்கைகளின் மீதான பிரச்சாரங்கள் நடைபெற வேண்டும் என்றும் உலகத் தொழிற் சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.2013இல் இயக்க தினம்உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் 2012ஆம் ஆண்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சமயத்தில், நாம் இந்த அடிப்படைக் கோரிக்கைகளின் மீதான பிரச்சாரத்தைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது.

மனிதகுலம் உயிர்வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்போது மறுக்கப் பட்டிருக்கின்றன. எந்த விதத்திலாவது கொள் ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற சுரண் டும் கூட்டத்தினரின் வேட்கையானது, இயற் கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும், மக்களை இரக்கமின்றி சுரண்டுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.எனவே, இந்த ஆண்டும் உணவு, தண் ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி முதலியவற்றிற்கான கோரிக்கைகளின் அடிப்படையில் நம் போராட்டங்கள் தொடரும். 85 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஊட்டச் சத்துக்குறைவால் பட்டினி கிடந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் பன் னாட்டு நிறுவனங்கள் உலகின் ஒட்டுமொத்த உணவுத் துறையையும் தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் கூட நம் வேளாண் துறையா னது கார்ப்பரேட்மயமாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் அனைவருக்குமான பொது விநியோக முறை வேண்டுமென்கிற கோரிக் கையை ஏற்க மறுப்பதன் மூலமாக உணவுப் பாதுகாப்பு என்பதும் காலங்கடத்துவதற்கான பசப்பு வார்த்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவு, எடை குறை வாயிருக்கும் குழந்தைகள், ரத்தச்சோகை, மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு குழந் தைகள் ஆளாகியிருத்தல் ஆகிய அனைத்திற் கும் முறையான உணவு அவர்கள் உட்கொள் ளாததே காரணங்களாகும். உலகில் குழந்தை கள் அதிகம் உள்ள நாடு நம் நாடுதான். இதில் 40 விழுக்காட்டுக் குழந்தைகள் போதிய ஊட் டச்சத்தின்றி வாடி வதங்கிக் கொண்டிருக் கின்றன.நாட்டின் மக்கள்தொகையில் கணிசமான அளவிற்கு உணவு நெருக்கடியால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் வறுமை குறைந்துவிட்டதாக மிகவும் நகைக்கத்தக்க விதத்தில் ஆட்சியாளர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த போதிலும் இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் தரமான, பாதுகாப்பான, மலிவான விலையில் உணவுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உலகத் தொழிற் சங்க சம்மேளனம் கோருகிறது. இந்தியாவில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரிசி/கோதுமை கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் மாதத்திற்கு 35 கிலோ கிராம் அனைவருக்கு மான பொது விநியோக முறை மூலமாக வழங் கப்பட வேண்டும் என்பதை நாம் கோரிக்கை யாக வைத்திருக்கிறோம்.தண்ணீர்மூன்றாம் உலகப் போருக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக தண்ணீர் தற்போது சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுத்த மான தண்ணீருக்கான உரிமை அடிப்படை உரிமையாகும். ஆயினும் நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் இது இன்றளவும் கன வாகவே நீடிக்கிறது.சர்வதேச அளவில், தண்ணீர் என்பது பன் னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய வர்த்தக மாக மாறியிருக்கிறது. உலகில் ஐந்து வயதுக் குக் குறைவாகவுள்ள 15 லட்சம் குழந்தைகள் போதிய அளவு பாதுகாப்பான குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததன் காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மக்களுக்கு நாள்தோறும் கிடைக்க வேண் டிய அடிப்படைத் தேவை தண்ணீர் என் பதையும், பாசனத்திற்கும் தண்ணீர் அவசியம் தேவை என்பதையும் ஆட்சியாளர்கள் அடி யோடு மறந்து விட்டு, மத்திய அரசு தன்னு டைய தண்ணீர்க் கொள்கையையும் அனைத்து நீர்வள ஆதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கக் கூடிய விதத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.உலகத் தொழிற்சங்க சம்மேளனம், உல கில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்கப்படுவது உத்தரவாத மாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. கல்விஅனைவருக்கும் கல்வி என்பது உலகளா விய கோரிக்கையாகும். பல நாடுகளில் நவீன தாராளமயக் கொள்கைகள் ஆதிக்கம் செலுத் தக்கூடிய நிலையில், கல்வி என்பது மிகவும் லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. அரசாங்கம் கல்வி அளிக்க வேண்டும் என்பது அநேகமாக கைவிடப் பட்டு வருகிறது. கல்வித்துறையில் நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருப்பதை அடுத்து, இளைஞர்கள் கல்வி கற்பதற்கான தங்கள் அடிப்படை உரி மைகள் மறுக்கப்படுகிறார்கள். இந்தியாவின் கல்வி முறை அனைத்து அம்சங்களிலும் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. இது மாணவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. மத்திய அரசும் அடிப் படைக் கல்வியை ஓர் அடிப்படை உரிமை யாக்கி இருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால். முறையான உள்கட்டமைப்பு வசதி கள் இல்லாமல், போதிய அளவிற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், கல்வி அமைப்பு முறையும் கூட வர்க்க அடிப் படையில் பிளவுபட்டு நிற்கிறது. வசதி படைத்த ஒரு சிறிய அளவிலான கூட்டம் மட்டுமே பணத்தை வாரி இறைத்து தாங்கள் விரும்பும் கல்வியைப் பெறுவதை உத்தர வாதப்படுத்திக் கொண்டுள்ளது. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த் தெடுப்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் கல்வி முறை அமைந்திட வேண் டும். இதற்கு, முன்பு குறிப்பிட்டிருப்பதைப் போல, ஆரம்ப நிலையிலிருந்து உயர் நிலை வரை நாட்டின் கல்விக் கொள்கையில் முழு மையாக மாற்றம் செய்யப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வி என்கிற நம் பிரச்சாரம் தொடர வேண்டும்.சுகாதாரம்சுகாதாரம் அளிக்கப்படுவது என்பது வர்த் தகமல்ல என்று கூறப்பட்டாலும்கூட, இந்திய மற்றும் பன்னாட்டு வர்த்தகக் கார்ப்பரேட்டு களின் கைகளில் அது ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக மாறி இருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு என்பது பிரதானமாகத் தனியார் துறையிடம் சென்றுவிட்டது. பொதுவாக மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் மிகப் பெரிய தொகையை இதற்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டிருக் கிறார்கள். சமூகப் பாதுகாப்பு என்பது தொழிற்சங்கங் களின் சாதனைகளில் முதன்மையான இடத்தை வகிக்கக்கூடியது. அது இன்றைய தினம் கைகழுவப்பட்டுக் கொண்டிருக் கிறது. உயிர்காக்கும் மருந்துகள் கூட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற் குள் முழுமையாகச் சென்றுவிட்டன. இந்தியா வில் மேற்கொள்ளப்படும் மருந்து உற்பத்தி எதுவாக இருந்தாலும் அது பன்னாட்டு பகாசுர கம்பெனிகளால் விழுங்கப்பட்டு விடுகின்றன. அரசுத்தரப்பில் அடிக்கடித் தம்பட்டம் அடிக்கப்படும் மருந்து விலைக் கட்டுப்பாடு, சுகாதார மிஷன் போன்றவை அரசாங்கத் தரப்பில் கூறப்படுவதுபோல் எந்தப் பாதிப்பை யும் ஏற்படுத்திட வில்லை.சுகாதாரப் பாதுகாப்பு என்பது முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் கோரிக்கையாகும். அவ்வாறு செய்யப்படு வதன் மூலமாகத்தான் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போதும் சரி, ஓய்வுபெற்ற பின்னரும் சரி ஒரு சுகாதாரமான வாழ்க்கைக் கான அனைத்து அம்சங்களையும் உத்தர வாதப்படுத்திட முடியும்.வீட்டுவசதி வீட்டுமனைகளின் விலைகள் விண் ணை நோக்கி சென்றுகொண்டிருக்கக்கூடிய நிலையில், நாட்டில் நகரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், வீட்டு வசதி என்பது நாட்டு மக்களை எதிர்நோக்கி இருக் கக்கூடிய மிக ஆழமான பிரச்சனையாக மாறி இருக்கிறது.

பாதுகாப்பான, வசிக்கத்தக்க மற் றும் மக்களால் வாங்கத்தக்க அளவிற்கான இல்லம் என்பதும் அவ்வாறு வாங்கப்படும் இல்லம் ஒருவர் அமைதியாகவும் கண்ணியத் துடனும் வாழ்வதற்கு உகந்ததாக அமையக் கூடிய விதத்திலும், எவராலும் வலுக்கட்டாய மாக வெளியேற்றப்பட முடியாத நிலையிலும் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தினால் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கையாகும். நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் மிக வும் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் குடி சைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் பகுதியினர் வீடற்றவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வீட்டுவசதிக்கான நம்முடைய பிரச்சாரமும் போராட்டமும் நம் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.உலகத் தொழிற்சங்க சம்மேளனம் எழுப்பி யிருக்கின்ற இவ்வனைத்துக் கோரிக்கை களையும் முன்வைத்து, இதனுடன் இணைந் துள்ள 126 நாடுகளைச் சேர்ந்த 8 கோடியே 40 லட்சம் உறுப்பினர்கள் அக்டோபர் 3 அன்று உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் இறங்கிட இருக் கிறார்கள். இந்தியாவிலும், உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்துள்ள அத் துணை அமைப்புகளும் அன்றைய தினம் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடவுள்ளார்கள்.இவ்வியக்கத்தில் நம் சங்கத்தின் சார் பிலும் மிகப் பெரிய அளவில் பங்கேற்போம். நம் முடைய அடிப்படைக் கோரிக்கைகளாகவும் விளங்கிடும் இக்கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். மக்களுக்கு ஒரு நாகரிகமான வாழ்க்கையை உத்தரவாதப் படுத்துவதற்கான போராட்டத்திற்காக அவர் களையும் அணிதிரட்டிடுவோம்.

நமக்கான விடியல் நாளை மலரட்டும். கோரிக்கை வென்றெடுக்க கூட்டுப்போராட்டமே உகந்த வழி.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு - உரிமை மீட்பு போராட்டம் என்பது விழலுக்கு இரைத்த நீராக போய் கொண்டிருப்பது வருத்தத்துக்குறியது. அனைத்து இயக்கங்களும் தனிச்சங்க நடவடிக்கை எடுத்த பின்பும் கூட தமிழக அரசோ, கல்வித்துறையோ காது கேளாமல் இருப்பதென்பது நமது போராட்ட வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படவேண்டியது அவசியமாகிறது. உழைப்பவர்களின் உரிமைகள் எங்கு மதிக்கப்படுவதில்லையோ அந்த தேசம் உருப்பட்டதாக வரலாறு இல்லை.
தவறுதலாக கதவை தட்டிய கையைத் தான் வெட்டிக்கொண்டதால் பொற்கைப் பாண்டியன் எனப் பாராட்டப்பட்டான் பாண்டிய மன்னன் ஒருவன் என்பது பண்டையத் தமிழ் நூல் காட்டும் பண்பாட்டுச்செய்தி. அவசரப்பட்டுக் கோவலனைக் கொல்ல தானே காரணம் எனக் கூறித் தன்னுயிர் நீத்தான் பாண்டிய மன்னன் என்பது சிலப்பதிகாரம் காட்டும் செய்தி.  அதன்பின் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி அன்னல் காந்தியின் அறவழி போராட்டத்தினால் விடுதலை கிடைத்தது.
இனறைய நிலையை நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஆட்சியாளர்கள் வாய்மூடி மௌனம் சாதிக்கும் நோக்கம் என்ன? ஆசிரியப் பேரினம் இவ்வளவு எழுச்சி மிகு போராட்டங்களை நடத்திய பின்பும் ஒரு சிறு அதிர்வு கூட அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. உண்மை உணர்ந்த பின்பும் இயக்கங்கள் தங்கோளோட போராட்ட நடவடிக்கைகளில் இன்னும் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். அது ஆசிரியர ; இயக்கங்களின் கூட்டு போராட்டமாக அமைய வேண்டும். கடந்த கால சாதனைகள் நமது கூட்டு முயற்சியல் விளைந்தவை என்பதை மறக்க - மறைக்க இயலாது.
துன்பங்கள் தொடர்கதைகளா? முடிவே இல்லையா? என ஏங்வோர் சிலர் பலராகி ஒன்றுபட்டு ஓரணி நிற்பது உறுதியாகிவிட்டால் தன்னலப்பார்வை ஒழித்து பொதுநலச் சிந்தணை மேலோங்கும்பொழுது நமக்கான விமோச்சனம் உறுதியாகிவிடும். எனதருமை தோழர்களே உயிர் முடிச்சின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். இங்கே ஈகோ பார்த்தால் எல்லாம் நிர்கதியாகிவிடும். கூட்டு போராட்டத்திற்கு தங்கள் தலைமைகளை நிர்பந்தியுங்கள். விமர்சனம் இல்லாமல் ஒருவன் வளர இயலாது. விமர்சியுங்கள் - விவாதியுங்கள். முடிவு பெறும் வழியை கண்டறியுங்கள்.
'உச்சிமலையில் ஊறும் அருவிகள்
ஒரே வழியில் கலக்குது
ஒற்றுமை யில்லா மனிதகுலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது
பச்சைக் கொடிகள் வேலியிலே
பாகுபாடின்றித் தழைக்குது - அதைப்
பார்த்திருந்தும் சிலபத்தாம் பசலிகள்
பக்கம் ஒண்ணாய் பறக்குது - அன்பு
பாலம் பழுதாய்க் கிடக்குது' என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வேறுபட்டு நிற்கும் மக்களை வீறு கொண்டெழுந்து விடியல் காண அழைப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தோழர்களே ஆண்டவர்களுக்கும் - ஆட்சியாளர்களுக்கும் அடங்கி ஒடுங்கி அகப்பட்டதை சுருட்டும் தலைமைகளை புறந்தள்ளுவோம். எது நடந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் நடைபிணங்களை, வருங்கால சந்ததியின் வருத்தத்தை எண்ணிப் பார்க்காது வாழ்நாளை வீணாக்கும் வீணர்களை, உண்டு, உறங்கி, ஊர்வம்பு பேசும் திண்ணைப் பேச்சு வீரர்களின் அலட்சிய போக்கினைச் சுட்டிக்காட்டி இயக்க உணர்வாளார்களாக மடை மாற்றுவோம். வீடு திருந்தின் தெரு திருந்தும். தெரு திருந்தின் ஊர் திருந்தும். ஊர் திருந்தின் நாடு திருந்தும். நாடு திருந்தின் உலகம் திருந்தும். முதலில் நாம் நம்மையும் நம்மை சுற்றியுள்ளோரையும் திருத்துவோம். சுயநலம் முழுதாக ஒழிக்கப்பட்டு பொதுநலம் மலரட்டும். நமக்கான விடியல் நாளை மலரட்டும்.

9/27/2013

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்படுத்துதல்


    

34 பள்ளிகளில் விற்பனையாளர் இல்லாத கடைகள்:

34 மாதிரி பள்ளிகளில் காந்தி பிறந்தநாளில் விற்பனையாளர் இல்லாத கடைகள் தொடங்கப்படுகிறது. இதில் மாணவர்கள் பணம் போட்டுவிட்டு, தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாநில இயக்குனர் ஆ.சங்கர், இணை இயக்குனர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுயகட்டுப்பாடு
சாதி, மத பேதமற்ற ஆரோக்கியமான உயர்ந்த சமுதாயத்தை உருவாக்க கல்வியை சுயசிந்தனை, சுயகட்டுப்பாடு, தன்னம்பிக்கை, பொதுநலன், விடாமுயற்சி போன்ற குணங்களை கொண்ட குடிமகனது கடமையாகிறது. இத்தகைய குடிமக்களை உருவாக்குவதில் பள்ளிக்கூடமானது முதன்மையாக திகழ்கிறது.
பள்ளிக்கூட சூழல் மட்டுமே இவை அனைத்தையும் ஒரு சேர வழங்குகிறது. குறிப்பாக அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரிப்பள்ளிகள் மாணவர்களின் கற்றல் திறன், விளையாட்டு, ஆளுமைத்திறன் போன்ற திறன்களை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேர்மை கடைகள்
இதன் ஒரு அங்கமாக மாணவர்களிடம் நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் பொருட்டு பள்ளிகளில் நேர்மை அங்காடி என்ற ஒன்றை காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி தொடங்குவது பொருத்தமாக அமையும்.
நேர்மை அங்காடி என்பதுயாருடைய மேற்பார்வை (விற்பனையாளர்) இல்லாமல் இயங்கக்கூடிய ஒன்றாகும். இந்த கடைகளில் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், அதனுடைய விலையை குறிப்பிட்டு வைக்கப்பட்டிருக்கும். தேவையான பொருட்களை மாணவர்கள் அதற்கான பணத்தை அவர்களே அங்குள்ள பணப்பெட்டியில் போட்டுவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.
பேப்பர், பேனா
இந்த கடைகளை தொடங்க அனைத்து மாதிரிப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். கடையின் ஆரம்ப முதலாக ரூ.500ஐ பள்ளி மேலாண்மை நிதியில் இருந்து பயன்படுத்தவேண்டும்.
பாதுகாப்பான ஒரு அறையை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கடையை ஆரம்பித்தல் வேண்டும்.
மாணவர்களுக்குள்ளேயே நபர்களை தேர்ந்தெடுத்து கடையை வழிநடத்த வேண்டும். பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்யவேண்டும். உணவுப்பொருள் விற்கக்கூடாது.
லாப நோக்கின்றி
பொருட்களின் விலை பட்டியலை கடையின் முன் தெளிவாக வைக்க வேண்டும். விலையை எக்காரணம் கொண்டும் லாபநோக்கோடு நிர்ணயிக்கக்கூடாது. இதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தினசரி விற்பனை விவரத்தை இறை வழிபாட்டுதலத்தில் படித்து காண்பிக்க வேண்டும்.
இந்த கடைகளை அனைத்து மாதிரிப்பள்ளிகளிலும் தொடங்குவதை மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்யவேண்டும். இதுபோல பிற பள்ளிகளிலும் தொடங்க முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பருவத்துக்கு 1.56 கோடி இலவச புத்தகங்கள் விநியோகம்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1.56 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள இலவசப் புத்தகங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்களிலிருந்து பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளுக்காக 81 லட்சத்து 75 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பாடநூல் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி, வட்டார அலுவலகங்களிடமிருந்து மெட்ரிக் ஆய்வாளர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் மூலம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள சிறப்பு விற்பனை நிலையம் மூலமாகவும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கணித ஆய்வு கூடம் நிறுவ ஏற்பாடு

அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி

SSA நிதி குறைப்பு -திட்டங்கள் ?

தலைமையாசிரியர் பதவி வேண்டாம் - கற்பித்தல் பணிக்கு திரும்ப விருப்பம்

9/26/2013

தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி மறு தேர்வு நடத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

மதுரை கே.புதூரை சேர்ந்த விஜயலெட்சுமி, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில், பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெயகுமரன் ஆஜராகினர். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் தங்கமாரி, அறிவொளி ஆஜராகினர். அவர்களிடம், தேர்வுக்கு முதல் நாள் கேள்வித்தாள் வெளியானால், தேர்வு அன்று வழங்குவதற்கு மாற்று கேள்வித்தாள் தயாராக வைத்து இருப்பீர்கள். அதேப்போல் இந்த கேள்வித்தாளுக்கு மாற்று கேள்வித்தாள் வைத்துள்ளீர் களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், மாற்று கேள்வித்தாள் உள்ளது என இருவரும் பதிலளித்தனர்.

பின்னர், பொதுவாக ஒரு கேள்வித்தாள் அச்சடிக்க எவ்வளவு நாள் ஆகும். தேர்வு தாளை திருத்துவதற்கு எவ்வளவு நாளாகும் என நீதிபதி கேட்டார். அதற்கு கேள்வித்தாள் அச்சடிக்க நான்கு வாரமும், திருத்துவதற்கு 3 வாரமும் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்படியெனில், ஏற்கனவே கூறியபடி 150 கேள்விகளில் 40 கேள்விகளை நீக்கி, 110 மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக கருத, கம்ப்யூட்டரில் மாற்றம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் புதிய கேள்வித்தாளை தயாரித்து விட முடியும்.மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என கோர்ட் நினைக்கிறது. ஏற்கனவே, ஹால்டிக்கெட் வழங்கியிருப்பீர்கள், கிடைக்காதவர்களுக்கு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். கேள்வித்தாள் மட்டுமே தயாரிக்க வேண்டும். இது தொடர்பாக அரசிடம் மீண்டும் கேட்டு, மாற்றுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அடுத்த விசாரணை நடத்துவது தொடர்பாக செப். 30க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை

 
ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network
Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.


வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

இரட்டைப்பட்டம் வழக்கு

இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு வருகிற 7.10.2013 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
____________MP@TNPTF________________

பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.

காலாண்டு தேர்வுவிடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.கல்வித்துறையின் அனைத்து வேலை நாட்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவசியம் பணியில் இருக்கவேண்டும்என்ற அரசாணை ஏற்கனவே உள்ளது. சில தவிர்க்க, முடியாத காரணத்தால் மட்டுமே பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.தற்போது காலாண்டு விடுமுறை துவங்கிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை கேட்கும் புள்ளி விவரங்களை சேகரிப்பதில் கல்வித்துறை ஊழியர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி சி.இ.ஓ.,க்கள் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். சில பள்ளிகளுக்கு டெலிபோனிலும் பேசி, பணியில் இருக்கிறார்களாக என, உறுதிப்படுத்த முயன்றனர்.சிவகங்கை உட்பட சில மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பலர் பணியில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் இலவச பொருட்களின் வினியோகம், கல்வி உதவித்தொகை, தேர்வு பெயர் பட்டியல்களை பெற முடியவில்லை.அரசின் விதிமுறையை மீறி பணிக்கு வராத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பள்ளி திறக்கும்பொழுது மாணவர் கையில் பாடப்புத்தகம்

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (26.9.2013) இறுதி விசாரணை.

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 40ல் இடம்பெற்றுள்ளது. 39 வழக்குகள் புதிய வழக்காக பதிவு பெறும் நிலையில் இவ்வழக்கு 40வது அயிட்டமாக வருகிறது. இறுதி கட்டத்திற்கு சென்றுள்ள வழக்கு இன்று அல்லது நாளை நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையை நேரில் காண இரு தரப்பையும் சேர்ந்த ஆசிரியர்கள் பெருமளவில் நீதி மன்றத்தில் கூடியுள்ளனர். அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பை தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கல்வித்துறையும் கூர்ந்து கவனித்து வருகிறது. உடனடி மற்றும் மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து நமது வலைத்தளத்துடன் (www.mptnptf.blogspot.com)  தொடர்பில் இருக்கவும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு கிடையாது: தமிழக அரசு

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, தெரிவித்துள்ளது.வழக்கறிஞர் பழனிமுத்து என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கூறியுள்ளதாவது:"ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிக்கையில், ஏற்கனவே மாநில அரசுகள் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் ஆந்திரா, ஒடிசாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் இந்த முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான பாகுபாடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது. எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதி தேர்வில் மதிப்பெண் வழங்க தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோர் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

9/25/2013

தூக்கம் குறைந்தால் கற்றல் திறனும் குறையும்

இரவில் நேரத்துடன் படுக்கைக்குச் செல்லாத குழந்தைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

இரவு அதிக நேரம் வரை விழித்திருக்கும் மூன்று வயது குழந்தைகள், பிற்காலத்தில் கணிதம், புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபட சிரமப்படுகிறார்கள் என லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தூக்கத்தின் அளவு குறைந்துபோவதால் உடலின் இயற்கையான செயல்வேகம் பாதிக்கப்படுகிறது. இதனால் புதிய தகவல்களை எளிதாக கிரகித்துக்கொள்ளும் மூளையின் திறன் பாதிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேலும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளே, பொதுவாக நேரத்துக்கு தூங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

குரூப் 1 உட்பட புதிய தேர்வுகள் எதற்கும் அறிவிப்பு இல்லை முடங்குகிறதா டி.என்.பி.எஸ்.சி?

அரசுத் துறைகளில் ஏற்படும் காலியிடங்களை, உடனுக்குடன் பெற்று, தேர்வுகளை நடத்தி, வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டிய டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு, முடங்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்–1 உட்பட எந்த தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.

29 ஆயிரம் வேலை:கடந்த ஆண்டு, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப்–1 பதவிகளில் மட்டும், 116 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. குரூப்–4, குரூப்–2 பணியிடங்கள் உட்பட,29 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன.ஆனால், இந்த ஆண்டு, இதுவரை, 300 வேலை வாய்ப்புகள் கூட அளிக்கப்படவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடவடிக்கையில் உள்ள குரூப்–4, குரூப்–2 தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும், கடந்த ஆண்டு தேர்வு கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டவை.

இந்த ஆண்டு, இதுவரை, குரூப்–1 தேர்வு அறிவிக்கப்படவில்லை. அரசுத் துறைகளில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப்–1 பணிகள், மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆண்டுதோறும், பட்டப்படிப்பை முடித்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். இவர்கள்,
குரூப்–1, குரூப்–2 தேர்வை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், குரூப்–1 பதவிகளுக்கான காலி பணியிடங்களை, அரசுத் துறைகளில் இருந்து கேட்டுப் பெறுவதில், டி.என்.பி.எஸ்.சி., அக்கறை காட்டவில்லை என, கூறப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், முதல்வர் மற்றும் தலைமை செயலரை சந்தித்து, வேலை வாய்ப்புகளை அதிகம் அளிக்க வேண்டியது குறித்தோ, காலி பணியிடங்களை கேட்டுப் பெறுவது குறித்தோ விவாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பதவி உயர்வு:அரசுத் துறைகளில், உள்ள காலி பணியிடங்களில், 1:2 என்ற அளவில், நியமன முறை வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, இரு பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டால், ஒரு பணியிடம், நேரடி போட்டித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். இந்த நடைமுறை,தற்போது, முற்றிலும் கடைபிடிக்கப்படுவதில்லை எனவும், அனைத்து காலி பணியிடங்களையும், பதவி உயர்வு மூலமே நிரப்பிவிட்டால், படித்து வேலையற்று இருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆவது என்றும், போட்டித் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளே ஆர்வம் காட்டாததால், அரசுத் துறைகள், நமக்கென்ன என்ற மனோ நிலையில் இருக்கின்றன. குறிப்பாக, வருவாய்த் துறையில் இருந்து தான், கணிசமான
காலி பணியிடங்கள் வரும். ஆனால், இதுவரை, குரூப்–1 காலி பணியிட பட்டியலை, தேர்வாணையம் பெறவில்லை என, கூறப்படுகிறது.வழக்கமாக, தேர்வு அறிவிப்பை வெளியிட்டு, முதல்நிலை தேர்வை நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆண்டு முடியப்போகும் நிலையில், இதுவரை அறிவிப்பே வரவில்லை. குரூப்–2, குரூப்–4, குரூப்–6 உட்பட எந்த தேர்வுகளுக்கும், நடப்பு ஆண்டு அறிவிப்பு இல்லை.தேர்வு கால அட்டவணைப்படி, குரூப்–2 நிலையில், 789 பணியிடங்களுக்கு, கடந்த ஜூலை மாதம், அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். செப்., 1ம் தேதி தேர்வு நடத்தி, அக்டோபரில், தேர்வு முடிவை வெளியிட்டிருக்க வேண்டும். அக்டோபரிலேயே, நேர்முகத் தேர்வும் நடத்த வேண்டும். ஆனால், இதற்கான எந்தஅறிகுறியும் இல்லை.நடராஜ், தலைவராக இருந்தபோது, 2013–14ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

24 வகையான தேர்வுகள் முடக்கம்:

அதில், குரூப்–1, குரூப்–2 உட்பட, 24 வகையான தேர்வுகளும், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு தேதி, தேர்வு தேதி, முடிவு வெளியிடும் தேதி என, அனைத்திற்கும் கால வரையறையை நிர்ணயம் செய்திருந்தார். இதில், குரூப்–1 நிலையில், 25 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மட்டும் நடக்கின்றன. மற்ற தேர்வுகளை நடத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டால் மட்டுமே, தேர்வாணையம், மீண்டும் வேகம் பெறும். இல்லையெனில், ஒரு கட்டத்தில், முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் உள்ளதாக, துறை வட்டாரங்கள் எச்சரிக்கை மணியை அடித்துள்ளன.

7வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் : சிதம்பரம் தகவல்

மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் தனது ஒப்புதலை அளித்துள்ளார். இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகள் அளிக்க சராசரியாக 2 ஆண்டுகள் வழங்கப்படும். ஊதியக் குழு அறிவிக்கும் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

6வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி மையத்தில் முதுகலை பாட வகுப்பில் பயின்று கடந்த மே மாதம் தேர்வு எழுதிய 43 முதுகலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 25ந் தேதியன்று வெளியிடப்படும் என்று பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது தேர்வு முடிவுகளை

http://annamalaiuniversity.ac.in/results/

இணைய முகவரிகளில் தெரிந்து கொள்ள லாம். மேலும் வாய்ஸ் நெட் முறையில் 04144-237357, 237358, 237359. என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

கொசுக்களால் பரவும் நோய்கள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த உத்தரவு

பள்ளிகளில், "டெங்கு' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதுரை "விசாகா' பள்ளி மாணவி ஒருவர், "டெங்கு' பாதித்து பலியானதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்: பள்ளி வளாகத்தில், நீர்தேங்கும் பள்ளங்கள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர், குடிநீர் தொட்டிகள் மூடியிருக்க வேண்டும். கழிவறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். பயனற்ற கிணறு, குழிகளை மூட வேண்டும்.

திறந்த நிலையில், கழிவுநீர் கால்வாய்கள் இருப்பின், கொசு மருந்து தெளிக்க வேண்டும். கொசுக்கள் மூலம் "டெங்கு', சிக் குன்- குனியா, மலேரியா, நோய்கள் பரவுவது குறித்து, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை அப்புறப்படுத்த வேண்டும். கட்டட மேற்கூரையில் மழை நீர் தேங்காமல் அகற்ற வேண்டும். பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள சிறு பள்ளங்கள், பயன்படுத்தாத கிணறுகள் குறித்த விபரங்களை, சுகாதாரத்துறையினருக்கு, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

9/22/2013

ஆசிரியர் பணிநிரவல் தமிழக அரசு உத்தரவு

ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்
பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித்
தலைமை ஆசிரியர் பணியிடங்கள்
உருவாக்கப்படுகிறது.
புதியதாக உருவாக்கப்பட உள்ள
அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் மற்றும் 50
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக்
கொள்ளப்பட வேண்டும்.
தரம் உயர்த்த கருதப்படும் 50 பள்ளிகளுக்கு,
புதியதாக உருவாக்க அல்லது நிலை உயர்த்திட
50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் மற்றும் 250 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான
செலவினை ரெட்ரோ பன்டிங் அடிப்படையில்
மத்திய அரசின் உதவியை பெற அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநரால்
நடவடிக்கை மேற்கொள்ளப்பட
வேண்டும்.

புதிய பென்சன் மசோதா சந்தை திவாலானால் அனைத்தும் பறிபோகும் : மக்களவையில் சிபிஎம் தலைவர் எச்சரிக்கை

ஒருவர் ஓய்வுபெறும்போது, தான் இவ் வளவுதான் ஓய்வூதியம் பெறப்போகிறோம் என்று சொல்லமுடியாத அளவில் உள்ள ஓர் ஓய்வூதியத் திட்டம் நாட்டிற்கு தேவையா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் புதனன்று ஓய்வூதிய சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பாசுதேவ் ஆச்சார்யா பேசியதாவது:

ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சி உறுதியாக எதிர்க்கிறது. 2004 ஜனவரி 1 முதல் இதனை ஐ.மு.கூட்டணி அரசு அமல் படுத்தி வருகிறது. அதனைச் சட்டரீதியாக மாற்று வதற்காக இச்சட்டமுன்வடிவினை இப்போது கொண்டு வந்திருக்கிறது. இதற்காக ஓர் ஆணை யம் உருவாக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ள பிரதமர், மேலும் சில கடினமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த புதிய ஓய்வூதிய முறை யாகும்.

நம்முடைய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் அமெரிக்க அரசாங்கத்தின் கட்ட ளைப்படிதான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓய்வூதிய நிதியச் சட்டமுன்வடிவும் அதன் கட் டளைப்படிதான் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இவ்வாறு இதனை மாற்றவேண்டும் என்று அமெரிக்காவும், உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஏன் துடிக்கின்றன? பழைய ஓய்வூதிய அமைப்பு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் என்பது ஒன்றும் கருணைத் தொகை அல்ல. நாம் சுதந்திரம் பெற்றபின் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு ஊதியக்குழுக்களைப் பார்த்து விட்டோம். இந்த ஆறு ஊதியக்குழுக்களுமே ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் மற்றும் தொழி லாளர்களின் பிரிக்கமுடியாத உரிமை என்று ஒரே சீராகப் பரிந்துரைத்திருக்கின்றன.

எனவே. இது அவர்களுக்கு அளிக்கப்படும் கருணை அல்ல. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஊழியர்களுக்கு உறுதியானமுறையில், பயன் பாடுகள் அளிக்கப்படவில்லை. ஊழியர்களின் சேமிப்பு பங்குச் சந்தையில் போடப்படவிருக் கின்றன. அது என்னாகும்? இது தொடர்பாக எந்த உறுதிமொழியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வில்லை. புதிய ஓய்வூதியச் சட்டத்தில் பாஜக திருப்தி கொண்டிருப்பது எப்படி? என்று எனக்குத் தெரியவில்லை. தொழிலாளர்களின் தொகை பங்குச்சந்தை யில் போடப்பட்டு, அதில் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற் பட்டால், ஊழியர்களுக்கு எந்தத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்படி உள்ள ஒரு சட்ட முன்வடிவை எப்படி பாஜகவினர் ஆதரிக் கிறார்கள்? மேலும் பொருளாதாரத்தில் பண வீக்கத்தின் அழுத்தத்திற்கு ஏற்ப ஊழியர்கள் பெறும் உண்மை ஓய்வூதியத்தின் மதிப்பும் குறையும். பல நிறுவனங்கள் ஆசைகாட்டி ஊழியர்களை மோசம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

குறிப்பாக நான்காம் நிலை ஊழியர்கள் ஏமாற்றப்படுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி 10 விழுக் காடு ஊதியம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இவ்வாறு 2004 ஜனவரி 1லிருந்தே பிடித்தம் தொடங்கிவிட்டது. இதே அளவு தொகையை அரசும் செலுத்த வேண்டும். இவ்விரண்டு தொகையை வைத்து ஒரு நிதியம் உருவாக்கப்படுகிறது. இதனை நிதிய மேலாளர் எனப்படும் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார்கள். ஒரேயொரு மேலாளரைத் தவிர மற்ற அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். மாபெரும் தொகை இவர்களிடம் தூக்கிக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதன் பொருள், அரசாங்கத்தின் பணம், தனியார் நலன்களுக்காகப் பயன்படுத்தப் பட விருக்கிறது என்பதே. புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப் படுவதன் மூலம் இருவித ஊழியர்களும் உரு வாக்கப்பட விருக்கிறார்கள். ஒரு பகுதியினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உத்தர வாதமான வருமானத்தைப் பெறுவார்கள். புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தில் மாதந்தோறும் பத்து விழுக்காடு சம்பளத்தைத் தரும் ஊழியர்கள். ஆனால், இவர்கள் ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசாங்கத்தால் இவர்களுக்குச் சொல்ல முடியாது.

ஐ.மு.கூட்டணி 1 அரசாங்கக் காலத்தில் இக்கேள்வி யைப் பலமுறை நான் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டேன். அவர்களின் தொகை சந்தை நிலவரத்தைச் சார்ந்திருக்கும் என்பதால் ஓய்வூதியம் எவ்வளவு பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை என்று பதிலளித்தார். சந்தை திவாலாகிப்போனால், ஊழியர்கள் அனைத்தையும் இழந்து விடுவார்கள். இவ்வளவு மோசமான சட்டத்தை நாம் ஏன் கொண்டுவர வேண்டும்? நாட்டில் ஒரு கோடிக் கும் மேல் ஊழியர்கள் மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும், வங்கி மற்றும் இதர நிறுவனங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இவர்களின் எதிர்கால வாழ்வை ஏன் கேள்விக்குறியாக்குகிறீர்கள்? இது அரசிய லமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவிற்கு எதிரான தாகும்.

யாருடைய கட்டளைப்படி, யாருடைய நோக்கம் நிறைவேறுவதற்காக இதனைக் கொண்டுவருகிறீர்கள்? இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். அந்த ஒன்று என்ன? அதுதான் மிகவும் முக்கியமான பரிந்துரையாகும். நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையில், ‘‘சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெறுவதை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்தில் ஒரு ஏற்பாட்டை அரசு உருவாக்கிட வேண்டும். அதன் மூலம் இதர ஓய்வூதியதாரர்களுக்கு எதிராக எந்தவிதமான பாதகமும் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிலைக்குழு விரும்புகிறது’’ என்று கூறியிருந்தது. மற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய ஓய் வூதியதாரர்களுக்கும் இடையே பாகுபாடு இல் லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்று நிலைக்குழு கோரியிருந்தது. இந்த பரிந்துரை யைத்தான் அரசு கண்டுகொள்ளவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வர லாற்றுச் சிறப்புமிக்க இரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாட்டிலுள்ள 11 மத்திய தொழிற்சங் கங்கள் இணைந்து கடந்த பிப்ரவரி 20, 21 தேதி களில் நடைபெற்ற மேற்படி வேலைநிறுத்தத் திற்கான அறைகூவலை விடுத்தன. ஐஎன்டியுசி முதல் பிஎம்எஸ் உட்பட அனைத்துத் தொழிற் சங்கங்களும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. ‘‘அரசாங்கம் புதிய ஓய்வூதியத்திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது பெரும்பகுதி ஊழியர்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறது. இது, ஓய்வூதியப்பயன்களைப் பெறுவதை ஊழியர்களிடமிருந்து பறித்துவிடு கிறது’’ என்று கூறித்தான் இவ்வேலை நிறுத்தம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டம் சட்டமானால், அடுத்த 34 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளி யேறும் பணத்தின் மதிப்பு தற்போதுள்ள 14 ஆயி ரத்து 284 கோடி ரூபாயிலிருந்து 57 ஆயிரத்து 088 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது நாட்டிலுள்ள ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரா னது. எனவே அரசு, வழக்கத்திலிருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஓய்வூதிய தாரர் இறந்தால் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடை யாது. பணிக்கொடைக்கும் எந்த வாய்ப்பும் கிடையாது. எனவே இச்சட்டமுன்வடிவை நாங்கள் உறுதிபட எதிர்க்கிறோம். அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும்.

நன்றி- தீக்கதிர்

பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்

திருநெல்வேலி: பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியின் மூலம் பள்ளிகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளும் தலா 3 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகள் 5 ஆயிரம் ரூபாய் டி.டியாக எடுத்து சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் தலைமை ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இந்த டி.டிக்களை அனுப்ப வேண்டாம் என்றும், இக்கட்டணத்தை பள்ளி மானிய தொகையில் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கமிஷன் தொகையுடன் டி.டி எடுத்தவர்கள் மீண்டும் மானிய தொகையில் செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
எனவே, வருங்காலங்களில் இதுபோன்ற குளறுபடிகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு, "கல்வி தகவல் மேலாண்மை" முறையில், மாணவர்களின் விபரம் பதிவு செய்யப்பட்டது."ஆன் லைன்" மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட 14 தகவல்கள் பதிவுசெய்யப்பட்டன.இதன்படி, 1 ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு, நிரந்தர அடையாள எண் வழங்கப்படும். வேறு பள்ளிக்கு மாறினாலும், அடையாள எண்ணை காட்டி, தகவல்களை உறுதி செய்யலாம். இதற்காக, பதிவு செய்யப்பட்ட விபரங்களை, மீண்டும் சரி பார்த்து இறுதி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டு உள்ளது.தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இப்பணிகள் நடக்கின்றன.

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும் "பார்கோடிங்" முறை அமல்

பிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும், "டம்மி எண்" வழங்கி விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், "பார்கோடிங்" முறை அமல்படுத்தப்பட உள்ளது.இந்த முறையால், தேர்வுகளில், இனி முறைகேடுகளுக்கு முற்றிலும் இடம் இருக்காது என, ஆசிரியர் தெரிவிக்கின்றனர். தேர்வுத் துறையில், கடந்த ஒரு மாதமாக, பல்வேறு சீர்திருத்தங்கள் வந்தபடி உள்ளன. இதில், 18 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான நடவடிக்கைகள், மிகவும் முக்கியமானதாக உள்ளது.கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 தேர்வில், அறிவியல், கணித பாடங்களுக்கு மட்டும், பதிவெண்களுக்கு மாற்றாக, "டம்மி எண்" வழங்கப்பட்டு, விடைத்தாள் திருத்தப்பட்டு வந்தது. "டம்மி எண்கள்" நேரடியாக, விடைத்தாள் மீது எழுதப்படும். இதனால், குறிப்பிட்ட பள்ளியின் விடைத்தாள் எங்கே செல்கிறது என்பதையும், குறிப்பிட்ட மாணவ, மாணவியரின், "டம்மி எண்" எது என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.தற்போது, "டம்மி" எண்களையும், நேரடியாக தெரியும்படி பதிவு செய்யாமல், "பார்கோடிங்" முறையில், பதிவு செய்யப்பட உள்ளன. அத்துடன், குறிப்பிட்ட பாட தேர்வுகள் என்றில்லாமல், மொழித்தாள் தேர்வில் ஆரம்பித்து, முக்கிய பாட தேர்வுகள் வரை, அனைத்து விடைத்தாள்களுக்கும், "பார்கோடிங்" முறை, வரும் பொதுத் தேர்வில் அமலுக்கு வருகிறது.பிளஸ் 2 தேர்வுகளுக்கு மட்டுமில்லாமல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும், இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. "பார்கோடிங்" முறையால், குறிப்பிட்ட விடைத்தாளை, அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது.ஏனெனில், 100 விடைத்தாள்கள் இருக்கிறது என்றால், 100 விடைத்தாள்களையும், "ஸ்கேன்" செய்தால் தான், அதற்கான, "டம்மி" எண்கள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும். அப்படியே, "டம்மி&' எண் கண்டுபிடித்தாலும், அதற்கான உண்மையான பதிவு எண் என்ன என்பதை, கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், விடைத்தாள்களை கலந்து, வெவ்வேறு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவதற்கு முன், மாணவர்களின் அசல் பதிவு எண்கள் விவரம் அடங்கிய சீட்டு, டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும்

அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும் : குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பேட்டி

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாது காப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தஞ்சாவூர் பள்ளி ஒன்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள் ளது சம்பந்தமாக தொடர்புடைய பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி, உடனிருந்த மாணவிகள், தாயார் மற்றும் உறவினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், கல்வித்துறை முதன்மை அலுவலர், காவல்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில், நடந்த பாலியல் வன்கொடுமை உண்மைதான் என்று கண்டறியப்பட்டது.பாதிக்கப்பட்ட சிறுமியின் மேல்படிப்புக்கும் எதிர்கால திருமண வாழ்விற்கும் அரசின் உத விக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிவித் தார். குற்றம் செய்துள்ள ஆசிரியர் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.வேலியே பயிரை மேயும் நிலையில் ஆசிரி யர்கள் இச்செயலில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது. இத்தகையவர்களுக்கு கடும் தண்ட னை வழங்கிட அரசிற்கு பரிந்துரை செய்வோம் என்றார். அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க முதன்மை கல்வி அலுவலருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. புகார் பெட்டியின் மூலம் பெறப்படும் புகார்களை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கும் வகையில் தீர்வு காணப்படவேண்டும்.

மேலும் அனைத்துப் பள்ளிகளிலும் இது சம்பந்தமாக வகுப்புகள் நடத்திட வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 65 புகார்கள் பெறப்பட்டதில் இதுவரை 2 பேருக்கு நிவாரணம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேருக்கு நிவாரணத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்தார்

ஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு? ரூ.பல லட்சம் கையாடல்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் ஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கங்களில், பல லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், கிளை வங்கிகள், 140க்கும் மேற்பட்ட தொடக்க கூட்டுறவு வங்கிகள் செயல்படுகிறது. இது தவிர, அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் செயல்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தற்போது முடிந்து, நிர்வாகிகள் பதவியேற்றுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக சங்கங்களுக்கான தேர்தல் நடக்கவில்லை. இக்கால கட்டத்தில், தனி அலுவலர், செயலர்களே வங்கிகள், கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களை நிர்வகித்து வந்தனர். அக்கால கட்டத்தில், சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள ஆசிரியர், பணியாளர் கூட்டுறவு சங்கங்களில்,பல லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக,காரைக்குடி சரகத்தில் உள்ள சில ஆசிரியர்/ பணியாளர் சிக்கன நாணய சங்கங்களில்,கூட்டுறவு விதிகளை மீறி, 2 அல்லது 3 சங்கங்களை,ஒரு தனி அலுவலரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்துள்ளனர். இதன் மூலம், ரூ.40 லட்சம் வரை முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதேபோன்று, ஆசிரியர்/ பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில், கடன் பெற்று திரும்ப செலுத்தாத, உறுப்பினர்களுக்கு, மாற்று சங்கத்தில் கடன் கொடுத்துள்ளனர். உறுப்பினர்களிடம் இருந்து பிடித்த செய்த, கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல், அதிகாரிகள் கையாடல் செய்துள்ளதாக,ஆசிரியர்/ பணியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் உமாமகேஸ்வரி கூறுகையில்,"" முறைகேடு புகார் எனக்கு வரவில்லை. அதே நேரம், ஒரு சங்க உறுப்பினருக்கு, மற்ற சங்கத்தில் கடன் தர முடியாது. இது தவறான புகார். உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்த, கடன் பாக்கியை வங்கியில் செலுத்தாத, சங்கங்கள் குறித்து விசாரணை செய்யப்படும்,'' என்றார்.

இலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு நிதி வழங்காததால் ஆசிரியர்கள் அவதி

உத்தமபாளையம், : தமிழக அரசு வழங்கும் இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் செலவு கணக்கு நிதி முறையாக வந்து சேராததால் ஆரம்ப பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு அரசின் இலவச திட்டங்களான சீருடை, புத்தகம், நோட்டுகள், காலணிகள், ஜாமன்டரிபாக்ஸ், அட்லஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. முன்பெல்லாம் ஒரே நேரத்தில் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். தற்போதோ மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இதனை எடுத்துச் சென்று பள்ளிகளில் பயி லும் மாணவர்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 60க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒவ்வொருமுறையும் இலவச திட்டத்தின் பொருட்கள் வரும்போது இதனை ஆசிரியர்களே எடுத்துச் செல்கின்றனர். கிராமங்களில் இருந்து ஆசிரியர்கள் தலைமையிட மான உத்தமபாளையத்திற்கு வந்து செல்லும் போது, பல்வேறு சிரமங்களை அடைகின்றனர். குறிப்பாக புத்தகம் உள்ளிட்ட பொ ருட்களை எடுத்துசெல்லும் போது வாகனங்களை அமர்த்த வேண்டியது உள்ளது.
பள்ளிகளுக்கு சென்று இறக்குவதற்கு கூலிஆட்களை நியமிக்கவேண்டியது உள்ளது. இதற்காக செலவு ரூ.200 முதல் 500 வரை ஆகிறது. இந்த செலவுகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கிட தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. குறிப் பாக தொடக்ககல்விஅலுவலகங்களில் இருந்து இதன் தொகை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றடையவேண் டும். ஆனால் இவை முறையாக பிரித்து வழங்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளது.
இதனால் ஆசிரியர்களே சொந்தமாக பணத்தை செலவழிக்கும் நிலை இருந்து வருகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் செலவு ஆவதால் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரடியாக சென்று செலவு பணத்தை கேட்பதற்கு ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இலவச பொருட்கள் வரும்போது அதனை நேரடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று இறக்கிவிட்டால் இத்தகைய பிரச்சனைகள் எழாது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘தமிழகஅரசு வழங்கக்கூடிய இலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு தொகை ஒவ்வொரு தொடக்ககல்வி அலுவலகங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. இதனை சில அலுவலர்கள் மட்டும் முறையாக பிரித்து தந்துவிடுகின்றனர். ஆனால் பல பள்ளிகளுக்கு இவை கிடைப்பதில்லை. இதனால் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. எனவே நேரடியாக இலவசபொருட்கள் வந்தவுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே சென்று இறக்கிவிட்டால் சிக்கல்கள் வராது’, என்றனர்.

9/21/2013

25 பேர் உள்ள சத்துணவு மையங்கள் இணைப்பு : காலிப்பணியிடம் நிரப்பிய பின் நடவடிக்கை.

அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையத்தை, அருகில் உள்ள மையத்துடன் இணைக்கப்பட உள்ளது. இம்மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், இணைக்கும் பணி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
25 குழந்தைகளுக்கு குறைவான மையங்களிலும், இந்த மூன்று பேர் பணியாற்றுவதால், பணியிடம் காலியாக உள்ள மையத்தில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், சமையலர் அல்லது அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள், சத்துணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள மையங்களை, அருகில் உள்ள மையத்துடன் இணைத்து விட்டால், ஆள் பற்றாக்குறை சமன் செய்வதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்க முடியும், என அரசு கருதுகிறது.

முதல்வர் சிந்திப்பாரா?

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளில் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்பது புரியதா புதிராக உள்ளது. தனது தேர்தல் அறிக்கையில் அவர் உச்சரித்த வார்த்தைகளை கேட்ட எம் இனம் கொண்டாடிய மகிழ்விற்கு அளவே இல்லை. நான் முதலமைச்சர் ஆனால் 6வது ஊதியக்குழுவின் குறைபாடுகளை களைய இயக்க பொறுப்பாளர்களை அழைத்து பேசுவேன் என்றும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிடுவேன் என்றும் அவர் உச்சரித்த வார்த்தைகள் காட்டு தீயாய் தமிழகம் முழுமையும் பரவியது. அனைத்து அரசு ஊழியர் இல்லங்களிலும் விழாக் கோலம் பூண்டது. அதன் எதிரொலிதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தபால் ஓட்டு அ.இ.அ.தி.மு.கவிற்கு எகிறயது என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் பின் அமோக வெற்றியடைந்து முதல்வரான பின்பு இந்த உறுதி மொழி குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாதது எங்களைப் போன்ற இடைநிலை ஆசிரியர்களின் மனதை மிகவும் வருத்துகிறது. இத்தகவல் முதல்வருக்கு தெரியாது என்று சொன்னால் சிறு பிள்ளை கூட நம்பாது. ஒரு வேளை முதல்வர் கவனத்துக்கு செல்லாமல் தடுக்கும் தீய சக்தி எது? ஆராய வேண்டாமா? எத்தனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், இறுதியில் மாவட்ட நிர்வாகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மறியல். மற்ற தோழமை இயக்கங்களும் தனிச்சங்க நடவடிக்கைகள என தொடர் கதையாய் தொடர்ந்தும் முதல்வர் மௌனம் சாதிப்பது எங்களை நம்ப வைத்து பலிகடவாக்கியது போல் உள்ளது. உளவுத்துறை நண்பர்கள் இவ்விசயத்தை முதல்வரிடம் கொண்டுபோக வேண்டும். இதைவிட்டு சகோதர இயக்கம் நடத்தப்போகும் மறிலுக்கான பேருந்து முன் பதிவை இரத்து செய்ய தனியார் பேருந்து நிர்வாகிகளை நிர்பந்திப்பது முதல்வரின் ஆட்சி மீது அவப்பெயரையே ஏற்படுத்தும். ஜனநாயக நாட்டில் உரிமைக்காக போராடுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. எனவே மதிப்புமிகு முதல்வர் அவர்கள் இயக்க பொறுப்பாளர்களை அழைத்து அந்த பதட்டம் மிகுந்த செயலுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்ய முன் வந்தால் அவரது புகழை வரலாறு உள்ள வரை பேசும். சிந்திப்பாரா முதல்வர்?
______________MP@TNPTF_______________________
www.mptnptf.blogspot.com

தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிக் கூடங்களாக தரம் உயர்வு: அரசு ஆணை வெளியீடு

சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

9/20/2013

CPS பற்றி மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஏங்கல்ஸ் கேட்ட வினாவும் PFRDA பதிலும்

     






பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் பதிவு

வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வுத் துறை இயக்குனராக, தேவராஜன் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத் தேர்வுக்குப் பின், தேர்வு விவரங்களிலும், பெயர்களிலும் பிழைகள் இருப்பதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மாணவர், தேர்வுத் துறைக்கு வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில், தேர்வுத் துறை இயக்குனர், புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளுக்கும், மாணவ, மாணவியர் விவரங்கள் அடங்கிய படிவத்தை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது. மாணவர் பெயர், தாய், தந்தை பெயர், தலைப்பு எழுத்து, பிறந்த தேதி, பள்ளி பெயர், முகவரி, பெற்றோரின் மொபைல் எண், மாணவர் படிக்கும், "குரூப்" விவரம், பாடங்களின் பெயர் என, 11 வகையான விவரங்கள், அந்த படிவத்தில் கேட்கப்பட்டன.

இதை பூர்த்தி செய்து, மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் என, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும் என, இயக்குனர் கூறியுள்ளார். இந்த விவரங்கள் அடிப்படையில் தான், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும் என்றும், படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுக்குப் பதிலாக, வேறு திருத்தம் கோரி, தேர்வுக்குப் பின் வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்துபாத் கதையாக தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு.

இன்று(20.9.2013) முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள் வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது. அதன்பின் நீதியரசர்கள் இவ்வழக்கை 26.9.2013 அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது. தினத்தந்தி சிந்துபாத் கதைக்குகூட முடிவு தெரியும்போல. ஆனால் இந்த வழக்கில்,,,,,,,,,,?

குரூப்-1 மெயின் தேர்வு தள்ளி வைப்பு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: "வரும், 27 முதல், 29ம் தேதி வரை நடக்க இருந்த, குரூப்-1 மெயின் தேர்வு, அக்டோபர், 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: மேற்கண்ட தேதிகளில், வேறு போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. அந்த தேர்வுகளிலும், தேர்வர் பங்கேற்பதற்கு வசதியாக, குரூப் - 1 மெயின் தேர்வு, அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குரூப்-8ன் கீழ், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தேர்வு, வரும், அக்டோபர், 26ல் நடக்க இருந்தது. இத்தேர்வு, நவம்பர், 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஷோபனா அறிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இந்திய வனத்துறை பணிக்கான தேர்வை, அடுத்த வாரத்தில் நடத்துகிறது. குரூப் -1 மெயின் தேர்வை எழுத உள்ள, 1,330 பேர், மத்திய அரசு தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாகவே, மெயின் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி., துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, குரூப் - 1 மெயின் தேர்வு நடக்க உள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்: 30ம் தேதிக்குள் வெளியீடு?

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளை வெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.
இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க, அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால், இதர பாடங்களுக்கான முடிவை வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில், விரைவில், ஒரு முடிவை எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம். எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியாகும்" என தெரிவித்தது.

பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி

புதுடில்லி: "எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்" என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு எம்.பி.,க்கும், ஆண்டுதோறும், 5 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு எம்.பி.,யும், தன் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
லோக்சபா எம்.பி.,க்களுக்கு, அவர்கள் சார்ந்துள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரிந்துரைக்கலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளில், எந்தெந்த பணிகளுக்கு, பரிந்துரை செய்யலாம் என்பது ஏற்கனவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், புதிதாக, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்களை வாங்க பரிந்துரை செய்யலாம். ஆரம்பப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், மேஜை, நாற்காலிகள் வாங்க பரிந்துரை செய்யலாம். இந்த வகையில், ஆண்டொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய் அனுமதிக்கலாம்.
அதிலும் ஒரு பள்ளிக்கு, ஆயுட்கால அதிகபட்ச அளவு, 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுமதிக்க முடியும். அதே போல், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டடம் போன்ற கட்டுமான வசதிகளை ஏற்படுத்த பரிந்துரை செய்யலாம். ஆனால், எம்.பி.,யோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ, அந்த சங்கத்தில் உறுப்பினர்களாகவோ, நிர்வாகிகளாகவோ இருக்கக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தோழர் சகாய தெனேஸ் அவரக்ளின் புதல்வர் பாஸ்டின் லியோ அவர்களின் இறை உணவு ஏற்பு விழாவில் இயக்க வளர்ச்சி அளித்தல்

1440 கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை பணி நீக்கம் செய்தது சரியே.

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று தொடுமா?

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (20.09.2013) முதல் அமர்வில் 36வர் வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலும் மதிய உணவு இடைவேளைக்கு பின்பு முதல் அமர்வு செயல்படுவதில்லை. எனவே காலயிலே வந்தால்தான். இல்லையென்றால் இன்றும் ஏமாற்றமே மிஞ்சும். அப்படியே வழக்கு வந்தாலும் இரண்டு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் நிறைவடைய நேரம் போதாது. எனவே இன்றும் பூச்சாண்டி காண்பிக்குமோ? என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.

36.    WA.529/2013            M/S. G. SANKARAN              M/S.ROW AND REDDY                     
       (W.A.)                 E.RANGANAYAKI                 S.SATISHKUMAR                 
                              B.THINGALAVAL                 V.GOVARDHANAM                 
                                                            L.PARVIN BANU FOR R
1.         
                                                            M/S. J.NEDUNCHEZHIYAN         
                                                            FOR RR 42 TO 111              
                                                            M/S.DAKSHAYANI REDDY          
                                                            FOR RR 112 TO 189             
                                                            M/S.C.S.ASSOCIATES FOR R190   
                                                            PETITION AFFIDAVIT DUE REG.   
                                                            R2 TO R41           

9/19/2013

இரட்டைப்பட்டம் வழக்கு? உலாவும் வததந்திகள்

இரட்டைப்பட்டம் வழக்கு 18.9.2013 அன்று நீதிமன்றத்தில் வந்தது. அவ்வாறு வந்தபொழுது இரட்டைப்பட்டம் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்களின் வாதம் நிறைவடைந்து விட்டதாக இணையதளங்களில் வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். வழக்கு வந்தது உண்மை ஆனால் வாதங்கள் நிறைவடையவில்லை என்பதுதான் உண்மை. நாளை 20.09.2013 அன்று ஒரு வேளை வழக்கு விசாரணை எல்கையைத் தொட்டால் இரண்டு தரப்பு வழக்கறிஞர்களின் சூடான விவாதம் கட்டாயம் உண்டு. மூத்த வழக்குறைஞர்கள் வாதிடும் இவ்வழக்கில் அவர்களது வாதம் முழுமையாக நிறைவடைந்த பின்பே நீதியரசர்கள் இராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் சத்தியநாரயணா தங்களது தீர்ப்பை அளிப்பார்கள். தொடர்ந்து நம் இணையதளத்துடன்  ( www.mptnptf.blogspot.com )தொடர்பில் இருக்கவும்.

பெப்பப்பே காட்டிய இரட்டைப்பட்டம் வழக்கு.

இன்று(19.09.2013) விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் முக்கியமான கூட்டத்தால் விசாரணைக்கு வராமலே காணாமல் போனது. நீதியரசர்கள் 3.00 மணிக்கு மேல் கூட்டத்திற்கு சென்றதால் நீதிமன்றம் செயல்படவில்லை. ஆவலோடு எதிர்பார்த்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாளை பட்டியலில் 36வதாக வரும் இவ்வழக்கு எல்கை கோட்டை தொடுமா? என்பதுதான் மில்லியன் மில்லியன் கேள்வி. நாமும் அவ்வாறே காத்திருக்கிறோம். 

இரட்டைப்பட்ட வழக்கு இன்றும் விசாரணை

இரட்டைப்பட்டம் வழக்கு இன்றும்(19.9.2013) விசாரணைக்கு முதல் கோர்ட்டில் 34வது அயிட்டமாக வருகிறது. மாலை முடிவுகள் தெரிய வாய்ப்புள்ளது.


34.    WA.529/2013            M/S. G. SANKARAN              M/S.ROW AND REDDY                    
       (W.A.)                 E.RANGANAYAKI                 S.SATISHKUMAR                
                              B.THINGALAVAL                 V.GOVARDHANAM                
                                                            L.PARVIN BANU FOR R
1.        
                                                            M/S. J.NEDUNCHEZHIYAN        
                                                            FOR RR 42 TO 111            
                                                            M/S.DAKSHAYANI REDDY        
                                                            FOR RR 112 TO 189            
                                                            M/S.C.S.ASSOCIATES FOR R190  
                                                            PETITION AFFIDAVIT DUE REG.  
                                                            R2 TO R41       

9/18/2013

போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்கள் 9 பேர் விரைவில் பணி ­நீக்கம் ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை

போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்து மாந­க­ராட்சி பள்­ளி­களில் ஆசிரியர்க­ளாக உள்ள ஒன்­பது பேர் விரைவில் பணி நீக்கம் செய்­யப்­பட உள்ளனர். ஓரிரு நாளில் அவர்கள் கைது செய்­யப்­ப­டுவர் என, மாந­க­ராட்சி வட்டாரங்கள் தெரி­வித்­தன.

சென்னை மாந­க­ராட்சி பள்­ளியில் பணி­பு­ரியும் இடை­நிலை ஆசி­ரி­யர்கள் பலர் போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்­தி­ருக்கும் அதிர்ச்சி தகவல் சமீ­பத்தில் வெளி­யா­னது.
இது­கு­றித்து எழுந்த புகாரை தொடர்ந்து மாந­க­ராட்சி கல்வி துறை அதி­கா­ரிகள் விசாரித்தனர். இதில், முதல்­கட்­ட­மாக சந்­தேக வலையில் இருந்த 76 ஆசி­ரி­யர்­களின் சான்­றி­தழ்கள் ஆய்வு செய்­யப்­பட்­டன. அவற்றில், ஒன்­பது பேரின் சான்­றி­தழ்கள் போலி என, உறு­தி­யா­னது.
இந்த ஒன்­பது பேரும் 10ம் வகுப்பு பொதுத்­தேர்வு சான்­றிதழ் முதல் ஆசிரியர் பயிற்சி சான்­றிதழ் வரை பல்­வேறு கட்டங்­களில் போலி சான்­றி­தழ்­களை வழங்­கி­யுள்­ளனர். ஐந்து ஆசி­ரி­யர்கள், 10ம் வகுப்பு பொதுத்­தேர்வில் தேர்ச்சி பெற­வில்லை. மறு­தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெறாமல், தேர்ச்சி பெற்றதாக போலி சான்­றிதழ் வழங்­கி­யுள்­ளனர்.
பிளஸ் 2 தேர்வில் நான்கு ஆசி­ரி­யர்கள் தேர்ச்சி பெற­வில்லை. ஆனால், தேர்ச்சி பெற்­ற­தாக போலி சான்­றிதழ் வழங்­கி­உள்­ளனர். ஆறு ஆசி­ரி­யர்கள் ஆசி­ரியர் பட்­டய பயிற்சி பெற்­ற­தாக வழங்­கி­யுள்ள சான்­றி­தழ்கள் போலியானவை.
இதை­ய­டுத்து, மாந­க­ராட்சி நிர்­வாகம் கல்வி அதி­காரி ரவிச்­சந்­திரன் மூலம் கடந்த சில தினங்­க­ளுக்கு முன் போலீஸ் கமி­ஷ­ன­ரிடம் புகார் அளித்­தது.
அதன் அடிப்­ப­டையில் ஆசி­ரி­யர்கள் ஒன்­பது பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இதற்­கி­டையே, அவர்­க­ளுக்கு நோட்டீஸ் வழங்கி, பணி நீக்கம் செய்ய முடிவு செய்து, அதற்­கான பணியில் மாநக­ராட்சி இறங்­கி­யுள்­ளது. ஒன்­பது போலி ஆசி­ரி­யர்கள் பெயரை மாநகராட்சி அதிகா­ர­பூர்­வ­மாக வெளியிட­வில்லை.
தொடர் விசா­ர­ணையில் போலி சான்றிதழ் ஆசி­ரி­யர்கள் இன்னும் சிலர் சிக்குவர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும், தற்­போது சிக்­கி­யுள்­ள­வர்கள் அனை­வரும், 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்­டுக்குள் பணியில் சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு கணி­ச­மான தொகையை லஞ்­ச­மாக கொடுத்து பணியில் சேர்ந்­தி­ருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கி­றது.
இதனால் அப்­போது மாந­க­ராட்சி கல்வி துறையில் யார், யாரெல்லாம் அதிகாரி­க­ளாக பணி­பு­ரிந்­தார்­களோ அவர்­களும் விசா­ரணை வளை­யத்­திற்குள் வருவார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு

இன்று ( 18.9.2013) விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு இரட்டைப்பட்டம் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர். தொடர் விசாரணை நாளையும் தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது. பொறுத்திருப்போம் நாளை வரை...........

MPhil 3 rd Incentive Regarding

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது. 

நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 80%ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 90%ஆக உயர்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு தற்போதும் 10% உயர்த்தப்படுகிறது. 

இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் 30 லட்சம் ஒய்வு ஊதியத் தாரர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் அகவிலைப்படியிலிருந்து குறிபிட்ட தொகை அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அக்., 4ம் தேதியுடன் முடியும் நிலையில், இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், குரூப் - 2 நிலையில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன. டிசம்பர், 1ம் தேதி, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தேர்வாணைய இணையதளம் வழியாக, கடந்த, 5ம் தேதி முதல், பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
அக்., 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி தேதி முடிவதற்குள், மேலும், மூன்று லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.

அங்கன்வாடி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு புதிய பாட திட்டம் : மாற்றப்பட்ட கல்வித்திட்டம் எளிமையானது

கோவை:கோவை மாவட்டத்திலுள்ள அங்கன் வாடி குழந்தைகளுக்கு, கற்பிக்கும் முறையில், மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1,688 அங்கன் வாடிமையங்கள் செயல்படுகின்றன. இங்கு 10,000க்கும் மேற்பட்ட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பிக்கப்படுகிறது. இதில் மொழியறிவு, கணிதம் மற்றும் அறிவியல் பாடம் கற்றுத்தரப்பட்டது. 
இது வரை ஒரே மாதிரியான பாடத்திட்டத்தில் கல்வி பயிற்றுவிப்பதற்கான உபகரணங்களை கொண்டு அங்கன்வாடிப்பணியாளர்கள், குழந்தைகளுக்கு கல்வி போதித்து வந்தனர். கல்வி பயிற்றுவிக்கப்பட்டபின் மீதமுள்ள நேரங்களில், விளையாட்டுகள் கற்றுத்தரப்பட்டது. இவற்றோடு ஆடல், பாடல், நடனம் ஆகியவைவும் கற்றுத்தரப்பட்டது.இந்நடைமுறையை மாற்ற அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பாடத்தை முழுமையாக குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது. 
அதன் படி வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளையும், காணும் காட்சிகளையும் விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் செயல்முறை கருவிகளுடன் மாதம் தோறும் ஒவ்வொரு தலைப்புகளுடன் அங்கன் வாடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.முதல் மாதமான ஜனவரில் முக்கிய திருவிழாக்கள் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில், உபகரணங்களோடு கற்றுத்தரப்படுகிறது. பொங்கல் விழாவை , சிறு மண் பானையில் பஞ்சினை வைத்து பொங்கல் பானை போல் குழந்தைகள் அலங்கரித்து பொங்கல் விழாவை நினைவூட்டுகின்றனர். பிப்., யில் பருவகாலங்கள் குறித்தும், மார்ச்சில் மிருகக்காட்சி சாலை மற்றும் விலங்குகள் குறித்தும், ஏப்ரல் மாதத்தில் பூச்சிகளை பற்றியும், மே மாதத்தில் நாம் உட்கொள்ளும் உணவுகளை பற்றியும், ஜூன் மாதத்தில் என் கிராமம் என்ற தலைப்பில் கிராம சூழல் குறித்தும், ஜூலை மாதத்தில் பழங்கள், காய்கறிகளை பற்றியும், ஆகஸ்ட் மாதத்தில் மரம், செடி, கொடி பற்றியும் செப்., மாதத்தில் உள்ளூர் திருவிழா பற்றியும், அக்டோபர் மாதத்தில் பொம்மைகளை பற்றியும், நவம்பர் மாதத்தில் போக்குவரத்து பற்றியும், டிசம்பரில் உள் மற்றும் வெளி விளையாட்டரங்கம் குறித்து கற்றுத்தரப்படுகிறது. இந்நடைமுறை கோவையிலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட திட்டஅலுவலர் (சத்துணவு) மணிமேகலை கூறியதாவது: மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகள் அனைத்து தகவல்களையும் ஒருங்கே பெற வேண்டும். பள்ளிப்பருவத்துக்கு முன்பே, கல்வியில் நல்ல வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக அரசு இப்புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு படிப்புடன், நடைமுறை வாழ்க்கையை பற்றிய, கல்வி முறையை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
Click Here

பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம்
ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் மீதான உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வுப் பயிற்சி, குழந்தைகளும் ஆசிரியர்களும் அதிக விழிப்போடு இருக்க உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 60 பேருக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பயிற்சி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

இவர்கள் கருத்தாளர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் மாதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துளிர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியை வழங்குகின்றனர்.

என்ன பயிற்சி?

எது பாலியல் வன்கொடுமை, பாலியல் கொடுமைக்கான அறிகுறிகள், சாதாரணமாக தொடுவதற்கும், தவறான நோக்கத்தில் தொடுவதற்கும் உள்ள வேறுபாடு, பாதிக்கப்படும் குழந்தைகளின் அச்சத்தைப் போக்குதல், தவறிழைத்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தருதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

குறிப்பாக பள்ளிகளிலோ, வெளியிலோ தனியான இடத்துக்கு யாரேனும் அழைத்தால் போகக் கூடாது உள்ளிட்ட பொதுவான ஆலோசனைகளும் ஆசிரியர்களின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மண்டலத்துக்கான பயிற்சியில் பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என பயிற்சியாளர் கூறியது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியர்களுக்கே இது குறித்து பேசுவதில் தயக்கம் இருக்கிறது. இந்தத் தயக்கத்தைப் போக்கி அவர்களை குழு விவாதத்துக்கு தயார் செய்யவே ஒருநாள் தேவைப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை குறித்த விழிப்புணர்வு பெற்றுச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் லேப்டாப்பை சொந்த வேலைக்கு பயன்படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் புகார்

மேலூர்: அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வழங்கப்பட்ட லேப்டாப் கள் ஆசிரியர்களின் சொந்த தேவைகளுக்குப் பயன்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பல பள்ளிகளில் லேப்டாப் திருடுபோனதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
மேலு£ர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி சம்பந்தமான அடிப்படை கல்வி கற்று கொடுக்க தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கியுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு கணினி சம்பந்தமான படிப்பு சொல்லி கொடுக்காமல் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளுக்குச் எடுத்து செல்வதாக மாணவர்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
ஏற்கெனவே பட்டூர் பள்ளியில் லேப்டாப் காணாமல் போனதாக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. அடுத்த சம்பவம் புலிப்பட்டி பள்ளியில் அரங்கேறியுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, Ôஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடல், கதை மற்றும் படிப்பு சம்பந்தமான கணினி சம்பந்தமான அடிப்படை கல்வி சொல்லி கொடுப்பதற்காக அரசு லேப்டாப் வழங்கி உள்ளது. ஆனால், சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக வீட்டிற்கு கொண்டு செல்வதாக தெரியவருகிறது. மேலும் புலிப்பட்டியில் காணாமல் போன மடிக்கணினி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்Õ என்றனர்.

தலைமை ஆசிரியர் தேசிய திறன் தேர்வு: விண்ணப்பம் வினியோகம்

சென்னை: "பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான விண்ணப்பங்களை, இன்று காலை 11 மணி முதல் பெறலாம்" என அரசு துறைகளுக்கான தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, தேசிய திறன் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, 17ம் தேதி (இன்று) முதல், 24ம் தேதி வரை, www.tngde.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதள "பாஸ்வேர்டு"களை, அந்தந்த பள்ளி மண்டல கல்வி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

9/17/2013

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு

முதுகலை ஆசிரியர் பணி
             மதுரை கோ.புதூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
             ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. எனவே, அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
           இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, இதுபோன்று ஏராளமான எழுத்துப்பிழைகளுடன் கேள்வித்தாள் தயாரித்து இருப்பதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 அர்த்தம் மாறும் வகையில் இல்லை
         விசாரணையின் போது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-
          “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்காக தயாரிக்கப்படும் கேள்விகள் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற அச்சகங்களில் மிகவும் ரகசியமாக தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் கேள்வித்தாள்கள் தேர்வு தினத்தன்று தான் பிரித்துப் பார்க்கப்படும். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. அச்சகத்தில் கேள்வித்தாளை உருவாக்கும் போது எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது.
               ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், கேள்வித்தாளில் ஏற்பட்டுள்ள எழுத்துப் பிழைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. யார் அச்சடிக்கிறார்களோ, அவர்கள் தான் எழுத்துப்பிழைக்கு முழு பொறுப்பாவார்கள். கேள்வித்தாளில் உள்ள எழுத்துப்பிழை சம்பந்தமாக ஆராய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கேள்விகளில் எழுத்துப்பிழை இருந்த போதிலும், அதன்காரணமாக கேள்விகளின் அர்த்தம் மாறும் வகையில் இல்லை. புரிந்து கொண்டு எழுதும் அளவுக்கு தான் கேள்விகள் உள்ளன என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.
           எனவே, கருணை மதிப்பெண் கொடுக்க முடியாது. முதல் 10 ரேங்குகளை பெற்றவர்களில் 6 பேர் ‘பி’ சீரியல் கொண்ட கேள்வித்தாள் மூலம் தேர்வு எழுதி உள்ளனர். மறுதேர்வு நடத்தப்பட்டால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.”
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கடமை
                அதன் பின்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொழி, தங்கம்மாள் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். விசாரணையின் போது நடந்த விவாதம் வருமாறு:-
           கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- பிரிண்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டுள்ளது.
               நீதிபதி:- பிரிண்டர் கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல. ஒரு தேர்வை நடத்தும் போது கேள்வித்தாளில் எந்தவித குளறுபடியும் இல்லாத அளவுக்கு கேள்வித்தாளை தயார் செய்து தேர்வை சரியாக நடத்த வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கடமை. பிரிண்டர் கோளாறு காரணமாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படலாமா?.
அதிருப்தி
           தேர்வு தொடங்கியதும் கேள்வித்தாளில் தவறு இருப்பதை பார்த்து ½ மணி நேரத்துக்குள் அத்தனை தேர்வு மையங்களுக்கும் பிழையை சரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கலாமே?. ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குளறுபடி குறித்து ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போது, ஐகோர்ட்டு தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்து இருந்தது. இருந்த போதிலும் தொடர்ந்து தவறு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக இந்த கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஏன் வரவில்லை?
கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- முக்கிய வேலை காரணமாக அவரால் வர இயலவில்லை.
நீதிபதி:- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே நாங்கள்(நீதிபதிகள்) இங்கு இருக்கிறோம். இது முக்கியமான வேலை இல்லையா?.
இவ்வாறு விவாதம் நடந்தது.
             அதன்பின்பு, “இந்த வழக்கு சம்பந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கருத்தை அறிய இந்த கோர்ட்டு விரும்புகிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நாளை(18-ந் தேதி) நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.